வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: போனமோ, ஜாலியா இருந்தோமோ.. வந்தோமான்னு இல்லாம இருந்தா இப்படித்தான் ஆகும்!
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Friday, October 12, 2018

போனமோ, ஜாலியா இருந்தோமோ.. வந்தோமான்னு இல்லாம இருந்தா இப்படித்தான் ஆகும்!ஹனிமூனுக்கு வந்தோமோ.. ஜாலியாக இருந்தோமோ.. திரும்ப ஊர்போய் சேர்ந்தோமான்னு இல்லாம இப்படியா வேலை பண்ணி மாட்டிக்கிறது? இந்த ஹனிமூன் ஜோடி செய்த காரியத்தை பாருங்க!! மார்க் லீ - ஜினா லையான்ஸ்.. இவங்கதான் அந்த ஹனிமூன் பார்ட்டி. பிரிட்டனை சேர்ந்தவர்கள். கல்யாணம் ஆன ஜோர் என்பதால் ஹனிமூனுக்கு 3 மாசத்துக்கு முன்னாடி இலங்கை வந்தார்கள். அங்கே பீக் பக்கமா ஒரு ரிசார்ட்டில் வந்து தங்கினர்.

மதுபோதையில் தம்பதி 
 இந்த ரிசார்ட் ஓனர் ஒரு பாட்டி. அவங்கதான் இதை ரொம்ப வருஷமா நிர்வகித்து வருகிறார். இந்த புதுமண ஜோடிக்கு ரிசார்ட் ரொம்ப பிடித்துவிட்டது. அதனால் அங்கிருக்கும் ஊழியர்களிடம் ரொம்ப ஜோவியலாகவே பழக ஆரம்பித்தனர். பிறகு ஜோடி அடிக்கடி இருவரும் பீச்சில் போய் உட்கார்ந்து கொண்டு பொழுதை கழித்தார்கள். சும்மா இல்லை... இருவரும் தண்ணி அடித்து கொண்டே இருந்தனர். அதனால் பெரும்பாலும் போதையிலேயே காணப்பட்டனர்.
(தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!
ஷாக் ஆன தம்பதி 
 இப்படித்தான் ஒருநாள் இரவு பீச்சின் அழகை ரசித்துக் கொண்டே மது அருந்தி கொண்டிருந்தார்கள். நடுராத்திரி ஆகியும் இருவருமே தண்ணி அடிப்பதை நிறுத்தவில்லை. அந்த நேரத்தில் அவர்கள் தங்கியிருந்த அந்த ரிசார்ட்டின் குத்தகை காலம் பாட்டிக்கு முடிவடைய போகிறது என்ற தகவல் கிடைத்தது. இருவரும் ஷாக் ஆனார்கள். அந்த ரிசார்ட் மிகவும் பிடித்துபோனதால், வேறு யாருக்கும் குத்தகைக்கு அது போய்விடக்கூடாதே என இருவரும் பேசிக் கொண்டனர்.


போதையில் டீல்
 அதனால் அந்த ரிசார்டை தாங்களே விலை கொடுத்து வாங்கி கொள்ளலாம் என முடிவு செய்தனர். ஜோடி முடிவெத்த நேரம் நள்ளிரவு.. முழு போதை வேறு.. கொஞ்ச நேரத்தில் விடியவே போகிறது. அந்த விடுதி உரிமையாளரிடம்போய், நாங்களே இந்த ரிசார்ட்டை வாங்கிக் கொள்கிறோம் என்றனர். அந்த பாட்டிக்கு சந்தோஷம் தாங்க முடியல. பேரம் ஆரம்பமானது... ஆளாளுக்கு ஒருரேட் சொல்லி, கடைசியாக 3 வருஷத்துக்கு 30,000 பவுண்ட் என்று முடிவானது.


வயிற்றில் குழந்தை 
 பின்னர் முதல் தவணையாக 15,000 பவுண்ட், மீதி 15,000 மார்ச் 2019 தர ஒப்புதல் ஆனது. இது எல்லாமே காதல் ஜோடிகளின் மது மயக்கத்தில் நடந்து முடிந்து போயிற்று. ஹனிமூனை முடித்து கொண்டு பிரிட்டனுக்கும் வந்துவிட்டார்கள். வந்தபோதுதான் நாள் ஆக ஆக சிக்கல் இவர்களின் கண்ணுக்கு தெரிய ஆரம்பித்தது. குத்தகைக்கான தொகை மற்றும் புனரமைப்பு செலவுகள் இருவரின் கையை மீறிச்சென்றுவிட்டது. அதே நேரம் ஜினாவும் வயிற்றில் குழந்தையை சுமக்க ஆரம்பிக்க, அந்த நேரத்தில் தான் தாங்கள் எவ்வளவு பெரிய தவறு செய்துவிட்டோம் என தம்பதியர் உணர ஆரம்பித்துள்ளனர்.


சின்ன பிளாட் 
 இலங்கை வந்து போன 3 மாதத்திற்குள் கர்ப்பமான ஜினா இது பற்றி சொல்லும்போது, "ரெண்டு பேரும் பீச்சில் ரம் குடித்து கொண்டிருந்தோம். 12 கிளாஸ் தாண்டி குடிச்சிட்டோம். ரிசார்ட் பிரச்சனை தெரிந்ததும், விலை மலிவாக உள்ளதால் வாங்க அப்போதே முடிவும் செய்தோம். ஆனால் நாங்கள் இப்போ குடியிருப்பதோ ஒரு சின்ன பிளாட்டில்.


முட்டாள் தம்பதி 
 எங்களால் எப்படி அவ்வளவு பெரிய தொகையை தந்து ரிசார்ட் வாங்க முடியும்? ஏற்கனவே என் கல்யாணத்துக்கு ரொம்ப செலவாகிவிட்டது. இப்போ எனக்கு குழந்தை வேறு பிறக்க போகிறது. இன்னும் நிறைய செலவு இருக்கு. என் உறவினர்கள், நண்பர்கள் எல்லாம், 'உங்களை போல ஒரு முட்டாள் தம்பதியை பார்த்ததே இல்லை'-ன்னு எங்களை திட்டிக்கிட்டே இருக்காங்க." என்றார் வேதனையுடன்.


அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


No comments:

Post a Comment