வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: உலகின் முதல் நீண்ட தூர ஏர் ஆம்புலன்ஸ்.. 'தெறிக்க விட்ட' தல அஜீத்தின் டீம் தக்ஷா..
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Friday, October 12, 2018

உலகின் முதல் நீண்ட தூர ஏர் ஆம்புலன்ஸ்.. 'தெறிக்க விட்ட' தல அஜீத்தின் டீம் தக்ஷா..



நடிகர் அஜித்குமார், இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்களுடன் உருவாக்கிய ட்ரோனை உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக பயன்படும் ஏர் ஆம்புலன்ஸ்களாக மாற்ற ஆய்வுகள் நடந்து வருகிறது. சர்வதேச அளவில் நடந்த ட்ரோன் வடிவமைக்கும் போட்டியில் இரண்டாம் இடம் பெற்ற டீம் தக்ஷா குழுவே இந்த முயற்சியையும் செய்துள்ளது. இதன் மூலம் சென்னை - வேலூர் இடையே ட்ரோன்களை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.


உட்பட்ட எம்ஐடி கல்லூரி மாணவர்கள் ஆஸ்திரேலியாவில் நடந்த சர்வதேச ட்ரோன் வடிவமைக்கும் போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர். அந்த போட்டியானது மருத்துவ கால அவசர நேரங்களில் ஒரு இடத்தில் இருந்து வேறு ஒரு இடத்திற்கு பயணிக்க நீண்ட நேரம் அதிக தூரம் குறிப்பிட்ட டாஸ்க்களை செய்யும் திறன் கொண்ட ட்ரோன்களை வடிவமைக்க வேண்டும்.
இந்த போட்டியில் மாணவர்கள் அதற்கு சரியான ட்ரோன்களை செய்வதற்காக ஆலோசனைகளை வழங்க எம்ஐடி நிர்வாகம் நடிகர் அஜித்குமாரை அழைத்தது. அஜித்குமார் ஏற்கனவே ஆட்டோமொபைல் துறையில் அதிக ஆர்வம் கொண்டவர். ஒரு காலத்தில் கார் ரேஸ், பைக் ரேஸ் என்று கலக்கியவர். இன்று பறக்கும் விமானங்களின் பக்கம் தனது கவனத்தை திருப்பியுள்ளார்.


இந்நிலையில் எம்ஐடி கல்லூரி நிர்வாகம் விடுத்த கோரிக்கையை ஏற்று நடிகர் அஜித் மாணவர்களுக்கு ஆலோசகராக இணைந்தார். அந்த குழுவினற்கு தக்ஷா என பெயர் சூட்டப்பட்டது. அஜித்தின் ஆலோசனையின் கீழ் மாணவர்கள் வெற்றிகரமாக ஒரு ட்ரோனை உருவாக்கினர்.
அது கிட்டத்தட்ட அந்த போட்டிக்கு தேவையான அனைத்து தகுதிகளையும் பெற்றது. முன்னதாக இந்திய அளவில் நடந்த ஒரு ட்ரோன் போட்டியில் கலந்து கொண்டு சர்வதேச ட்ரோன் போட்டிக்காக ஒத்திகை பார்த்தனர். அதில் அவர்கள் முதலிடம் பிடித்தனர்.
இதை தொடர்ந்து கடந்த மாதம் சர்வதேச அளவிலோன போட்டி ஆஸ்திரேலியாவில் உள்ள குயின்ஸ்லேண்ட் என்ற பகுதியில் நடந்தது. இந்த போட்டியில் பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். ஆனால் சென்னையை சேர்ந்த டீம் தக்ஷாவும் அமெரிக்காவை சேர்ந்த மற்றொரு அணியும்தான் இந்த போட்டியை வெற்றிகரமாக முடித்தனர்.
இந்த போட்டி அறிவிக்கப்பட்டபோது, போட்டியை வெற்றிகரமாக முடித்தாலே வெற்றி என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இரு அணிகள் இதை முடித்தனர்.
இதனால் நடுவர் குழு யாரை வெற்றியாளராக தேர்வு செய்ய வேண்டும் என்று குழம்பியது. இதன்பின் அந்த விமானம் பறக்கும் விதம், அதன் திறன், கட்டுபடுத்தும் விதம் ஆகியவற்றை வைத்து புள்ளிகள் வழங்கப்பட்டன. இதில் சொற்ப புள்ளிகள் வித்தியாசத்தில் இந்திய மாணவர்கள் 2ம் இடத்தை பிடித்தனர்.


சர்வதேச போட்டியை நடத்திய குழு இரு அணிகளையும் பாராட்டியது. இந்த சம்பவம் இந்த மாணவர்களுக்கு பெரும் ஊக்கத்தை ஏற்படுத்தியது. அதன் பின் இந்த பறக்கும் ட்ரோன் ஆராய்ச்சியை மேலும் தொடர முடிவு செய்தனர். அதில் அவர்கள் நீண்ட தூரம், அதிக வேகத்தில் பறக்கும் ட்ரோன்களை தயாரித்தனர்.


தற்போது அந்த குழு வடிவமைத்த ட்ரோன் சுமார் 120 கி.மீ வேகத்திற்கு பயணிக்கும் என்றும், மேலும் 15 கிலோ எடையை எளிதாக சுமந்து செல்லும் என்றும் கூறப்படுகிறது. தற்போது இந்த ட்ரோன்களை சென்னை-வேலூர் இடையே உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக உடல் உறுப்புகளை ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு கொண்டு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.
(தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!

பொதுவாக தமிழகத்தில் நடக்கும் அதிக உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் வேலூர் மற்றும் சென்னையில்தான் நடக்கிறது. இந்த நேரங்களில் உடல் உறுப்புகளை குறிப்பிட்ட நேரத்திற்குள் ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு கொண்டு செல்வதில் சிரமம் உள்ளது.
பல திறமையான டிரைவர்கள் இருந்தாலும் ரோடு வழியாக அதை எடுத்துச்செல்லும்போது பெரிய அளவில் சிரமம் ஏற்படுவதாக கூறப்படுகிறது.
இதை தவிர்த்து உடல் உறுப்புகளை ஒரு இடத்தில் இருந்து வேறு ஒரு இடத்திற்கு எந்தவித சிரமமும் இல்லாமல் இந்த ட்ரோன் மூலம் உறுப்புகளை கொண்டு வருவதற்கான முயற்சி தற்போது நடந்து வருகிறது. அதாவது இந்த ட்ரோன்கள் ஏர் ஆம்புலன்ஸ்களாக பயன்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இந்த ஏர் ஆம்புலன்ஸ் நேரடியாக வேலூரில் இருந்து சென்னைக்கு பறந்து வந்து விட முடியுமா? வேலூரில் இருந்து குறிப்பிட்ட தூரத்திற்கு ஒரு ட்ரோனில் வந்து அங்கிருந்து மீண்டும் ஒரு ட்ரோனிற்கு மாற்றப்பட்டு அங்கிருந்து சென்னைக்கு கொண்டு வரலாமா? என்று திட்டமிட்டு வருகின்றனர்.
தற்போது அவர்கள் திட்டம் வெற்றியடையும் பட்சத்தில் அரசின் அனுமதியுடன் இந்த ட்ரோன்கள் ஏர் ஆம்புலன்ஸ்களாக பயன்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த ஏர் ஆம்புலன்ஸ் திட்டத்தை தமிழகம் முழுவதிலும் செல்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும் இந்த ட்ரோன்கள் சென்னையில் இருந்து வேலூருக்கு சென்று மீண்டும் சென்னைக்கே திரும்பி வரும்படி வடிவமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பயணித்தின்போது ட்ரோனை முழுவதுமாக சென்னையில் இருந்தே கட்டுப்படுத்த முடியும்.
தற்போது நடந்துவரும் இந்த ஆய்வு வெற்றிகரமாக முடிந்தால் சென்னையில் இனி உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு பதற்றப்பட வேண்டியதே இல்லை. உடல் உறுப்பு மாற்றிற்கு சென்னை மருத்துவமனைகள் பிரபலமாகி விடும் வாய்ப்புகளும் உள்ளது.

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts

No comments:

Post a Comment