வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: தீபாவளிக்கு சர்கார் படத்துடன் மோதும் ஐந்து படங்களின் பட்டியல் வெளியானது
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Saturday, October 20, 2018

தீபாவளிக்கு சர்கார் படத்துடன் மோதும் ஐந்து படங்களின் பட்டியல் வெளியானது



தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில் தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்கள் ரிலீஸ் ஆவது வழக்கமானது தான்.

குறிப்பாக இது போன்ற பண்டிகைகளுக்கு பெரிய நடிகர்களின் படங்கள் தான் ரிலீஸ் ஆகும். இந்த வருட தீபாவளிக்கும் தல அஜித்தின் விஸ்வாசம், தளபதி விஜய்யின் சர்கார், சூர்யாவின் NGK ஆகிய படங்கள் ரிலீஸாக இருந்தன. (தொடர்ச்சி கீழே...)  


இதையும் படிக்கலாமே !!!


ஆனால் விஸ்வாசமும், NGK வும் படப்பிடிப்புகள் முடிவடையாததால் தனியாக சர்கார் படம் மட்டுமே வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. அதன் பின்னர் போட்டிக்கு நாங்க இருக்கோம் என்று கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள எனை நோக்கி பாயும் தோட்டா படமும் களமிறங்கியது. அஜீத் ரசிகராக ஆர்.கே.சுரேஷ் நடித்துள்ள பில்லா பாண்டி திரைப்படமும் தீபாவளிக்கு ரிலீஸாக போவதாக தகவல் வெளியாகியுள்ளது.


இந்த படங்களுடன் விஜய் ஆன்டனி நடித்துள்ள திமிரு பிடிச்சவன், சசிகுமாரின் நாடோடிகள் 2 படம் ஆகியவையும் தீபாவளிக்கு வெளியிட திட்டமிடப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியானது. இதனால் மொத்தம் 5 படங்கள் தீபாவளி ரேஸில் இடம் மோதிகொள்ள போகின்றன.


அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


No comments:

Post a Comment