வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: டிரைவர் மடியில் அமர்ந்து பஸ் ஓட்டி பழகிய குரங்கு
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Tuesday, October 09, 2018

டிரைவர் மடியில் அமர்ந்து பஸ் ஓட்டி பழகிய குரங்குகர்நாடகாவில், குரங்கை பஸ் ஓட்ட அனுமதித்த, அரசு போக்குவரத்துக் கழக ஓட்டுனர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.

கர்நாடகாவில், முதல்வர் குமாரசாமி தலைமையில், ம.ஜ.த., - காங்., கூட்டணி ஆட்சி நடக்கிறது.இங்குள்ள, தாவன்கரே மாவட்டத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ், 45. கர்நாடகா அரசு போக்குவரத்துக் கழகத்தில், ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். இவர், தாவன்கரே - பரமசாகரா வழித்தடத்தில், ஓட்டுனராக உள்ளார்.

இந்த வழித்தடத்தில், தினமும், குரங்காட்டி ஒருவர் பயணிப்பார். அவருடன், 'லங்கூர்' இனக் குரங்கையும், பஸ்சில் அழைத்து வருவார். மிருகங்கள் மீது ஆர்வம் உள்ள பிரகாஷ், தினமும் அந்த குரங்குக்கு வாழைப் பழம் கொடுப்பது வழக்கம். சில தினங்களுக்கு முன், பஸ்சில் ஏறிய அந்த குரங்கு, ஓட்டுனர் இருக்கையில் இருந்த பிரகாஷின் மடியில் அமர்ந்து கொண்டது.


இதை பார்த்த பிரகாஷ் குஷியானார். பஸ்சை மெல்ல இயக்கத் துவங்கினார். உடனே அந்தக் குரங்கு, 'ஸ்டியரிங்கை' பிடித்து இயக்க துவங்கியது. பிரகாஷ், கியரை மாற்றி, குரங்கு பஸ்சை இயக்க அனுமதித்தார்.இதைக் கண்ட பயணியர், பீதியில் அலறினர். (தொடர்ச்சி கீழே...)

இதையும் படிக்கலாமே !!!


ஓட்டுனர் இருக்கையில் இருந்து குரங்கை அப்புறப்படுத்தும்படி கெஞ்சினர். இதை பொருட்படுத்தாக பிரகாஷ், சற்று துாரம் வரை, குரங்கு பஸ் இயக்க அனுமதித்தார்.இந்தக் காட்சிகளை, பஸ்சில் வந்த பயணியர் தங்கள், 'மொபைல் போனில்' படம் பிடித்து, சமூக வலைதளங்களில், பதிவேற்றினர்.


இந்த, 'வீடியோ' வேகமாக பரவியது. இதையடுத்து, பிரகாஷை, கர்நாடக போக்குவரத்து துறையினர், 'சஸ்பெண்ட்' செய்தனர். இந்த சம்பவம் குறித்து, துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.


அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


No comments:

Post a Comment