வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: 2 வயது சிறுமி.. தலையில்லாமல் முண்டமாக நடந்து வந்த அந்த நேரம்.. வைரலான வீடியோ!
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Thursday, November 01, 2018

2 வயது சிறுமி.. தலையில்லாமல் முண்டமாக நடந்து வந்த அந்த நேரம்.. வைரலான வீடியோ!2 வயது சிறுமி ஒருத்தி தலையில்லாமல் வெறும் முண்டமாக நடந்து வருவதை பார்த்த பெரும்பாலானோர் இன்னும் அந்த ஷாக்கிலிருந்து மீளவில்லை. தலையே இல்லாமல் நடந்து வரும் சிறுமியை பார்க்கும் எல்லோருக்குமே திக் திக்தான்! பிலிப்பைன்ஸ் நாட்டின் பாரானுக்குவே என்னும் நகரம் உள்ளது. இந்த நகரத்தில் வசித்து வருபவர் கிறிஸ்டல் ஹவாங் என்னும் இளம்பெண். இவருக்கு 2 வயதில் மாயா என்ற பெண் குழந்தை இருக்கிறாள். 

HALLOWEEN தினம் 
 
கிறிஸ்டலுக்கு எப்பவுமே எதையுமே வித்தியாசமா செய்யணும்தான் ஆசை. இப்படித்தான் தன் மகளும் இருக்க வேண்டும் என்று நினைப்பார். நேற்று பல்வேறு நாடுகளில் HALLOWEEN தினம் கொண்டாடப்பட்டது.
(தொடர்ச்சி கீழே...)
 
இதையும் படிக்கலாமே !!!


வெட்டிய தலை
 இந்த விழாவில் எதையாவது செய்து அசத்த வேண்டும் என்று கிறிஸ்டல் விரும்பினார். அதற்காக மாயாவை தயார் செய்தார். ஒரு வித்தியாசமான கெட்-அப் ரெடி பண்ணிவிட்டார். அதாவது, மாயா, தனது தலையை தனியே வெட்டி தன் கையில் எடுத்து வருவதுபோல மேக்-அப் செய்தார்.


கசாப்பு கடைக்காரர் 
 மாயா தன் தலையை தானே கையில் கொண்டு வரும் இந்த வித்தியாசமான காட்சியை வீடியோவாக எடுக்கப்பட்டது. அந்த வீடியோவில் மாயாவுடன் அவரது 6 வயது சகோதரி சார்ளியும் நடந்து வருகிறார். இவர்தான் மாயாவின் தலையை வெட்டிய கசாப்பு கடைக்காரராம். இந்த வீடியோவினை கிரிஸ்டல் ஹவாங் இணையத்தில் பகிர்ந்து, அது தற்போது வைரலாகி வருகிறது.ஆன்மா வீடியோ 
 இதை பார்ப்பவர்கள் எல்லோருமே வாயை பிளக்கிறார்கள், எப்படி இந்த கெட்-அப் போட முடிந்தது என்று மண்டையை குடைந்து கொண்டிருக்கிறார்கள். தலை துண்டாக்கப்பட்ட இந்த ஆன்மா வீடியோவை இதுவரை 18 மில்லியன் பேர் பார்த்துள்ளதுடன், லைக்ஸ், கமெண்ட்கள், ஷேர்கள் என ஒன்றுவிடாமல் உலகம் முழுதும் பறந்து கொண்டு வருகிறது.

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


No comments:

Post a Comment