வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: [வேலை வாய்ப்பு] சமையலர், ஓட்டுநர் காலி பணியிடங்கள்: டிச.2-க்குள் விண்ணப்பிக்கலாம்
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Wednesday, November 21, 2018

[வேலை வாய்ப்பு] சமையலர், ஓட்டுநர் காலி பணியிடங்கள்: டிச.2-க்குள் விண்ணப்பிக்கலாம்சென்னை சமூக மகப்பேறியல் நிலையம், அரசு கஸ்தூர்பா காந்தி தாய்சேய் நல மருத்துவமனையில் காலியாக உள்ள சமையலர், ஓட்டுநர், சலவையாளர் பணியிடங்களுக்கு டிச.2-க்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.


இதுகுறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் அ.சண்முகசுந்தரம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள சமூக மகப்பேறியல் நிலையம், அரசு கஸ்தூர்பா காந்தி தாய் சேய் நல மருத்துவமனையில் காலியாக உள்ள 3 சமையலர்கள், 2 ஓட்டுநர்கள், 2 சலவையாளர்கள் பணியிடங்களுக்கு காலமுறை ஊதிய அடிப்படையில் நியமிக்கப்பட உள்ளனர்.
 
இதில், சமையலர், சலவையாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்போர் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
ஆதிதிராவிடர் 35 வயதுக்கு மிகாமலும், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் 32 வயதுக்கு மிகாமலும், இதரப் பிரிவினர் 30 வயதுக்கு மிகாமலும் இதரப் பிரிவினர் 30 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். குறைந்தபட்ச அடிப்படை ஊதியமாக ரூ. 15,700 வழங்கப்படும்.
(தொடர்ச்சி கீழே...)

இதையும் படிக்கலாமே !!!

ஓட்டுநர் பணியிடத்துக்கு விண்ணப்பிப்போர் 8-ஆம் வகுப்புத் தேர்ச்சி பெற்றுள்ளதுடன், ஓட்டுநர் உரிமத்துடன் குறைந்தது 2 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
ஆதிதிராவிடர் 35 வயதுக்கு மிகாமலும், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் 32 வயதுக்கு மிகாமலும், இதர பிரிவினர் 30 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். குறைந்தபட்ச அடிப்படை ஊதியமாக ரூ. 19,500 வழங்கப்படும்.
 
தொடர்புக்கு: 

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள சமூக மகப்பேறியல் நிலையம், அரசு கஸ்தூர்பா காந்தி தாய் சேய் நல மருத்துவமனையில் நவம்பர் 26-ஆம் தேதி முதல் டிசம்பர் 2-ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் வழங்கப்படும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை டிசம்பர் 10-ஆம் தேதிக்குள் சமூக மகப்பேறியல் நிலையம், அரசு கஸ்தூர்பா காந்தி தாய் சேய் நல மருத்துவமனை, சேப்பாக்கம், சென்னை-5 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். மேலும் தகவல்களுக்கு 044 28545123 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts

No comments:

Post a Comment