வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: டெல்லியில் 2 வயது பெண் குழந்தையை கடத்தி, சீரழித்த போதை வாலிபர்
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Monday, November 19, 2018

டெல்லியில் 2 வயது பெண் குழந்தையை கடத்தி, சீரழித்த போதை வாலிபர்டெல்லியில் 2 வயது பெண் குழந்தையை கடத்தி பலாத்காரம் செய்து ரயில் தண்டவாளம் அருகே விட்டுச் சென்ற வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வடக்கு டெல்லியில் ஒரு பெண் தனது 2 வயது மகளுடன் வெள்ளிக்கிழமை இரவு சாலையோரம் படுத்து தூங்கியுள்ளார்.


இரவு 2.30 மணி அளவில் கண் விழித்து பார்த்தபோது குழந்தையை காணாமல் பதறிப் போய் தேடியுள்ளார். குழந்தையை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால் சனிக்கிழமை காலை 10 மணிக்கு போலீசில் தகவல் அளித்துள்ளார்.
(தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!

மத்திய டெல்லியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் பெண் குழந்தை ஒன்று அனுமதிக்கப்பட்டுள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்று பார்த்தபோது காணாமல் போன குழந்தை தான் அது என்று தெரிய வந்தது.
விசாரணையில் போதைக்கு அடிமையான 24 வயது வாலிபர் அந்த குழந்தையை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்து ரயில் தண்டவாளம் அருகே விட்டுச் சென்றது தெரிய வந்தது.
 

போலீஸ்காரர் ஒருவர் குழந்தையை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ள குழந்தை தற்போது நலமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்து. சிசிடிவி கேமரா மூலம் அந்த வாலிபரை கண்டுபிடித்த போலீசார் அவரை கைது செய்தனர்.
குப்பை பொறுக்கும் அந்த நபர், திருமண சீசனில் வெயிட்டராக வேலை செய்து வந்துள்ளார். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருட்டு வழக்கில் அவர் கைது செய்யப்பட்டதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.


அதிகம் படிக்கப்பட்டவை : Popular PostsNo comments:

Post a Comment