வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: காரின் பின் சீட்டில் ஒரு பெட்டி.. நெளிந்து வளைந்த புழுக்கள்.. உள்ளே பார்த்தால்!
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Monday, November 19, 2018

காரின் பின் சீட்டில் ஒரு பெட்டி.. நெளிந்து வளைந்த புழுக்கள்.. உள்ளே பார்த்தால்!காருக்குள் குழந்தையை மறைத்த பெண்

காரை ரிப்பேர் பண்ண வந்த அந்த மெக்கானிக் கார் கதவை திறந்தவுடன் நாத்தம் குடலை புரட்டி கொண்டு வந்தது. அந்த காரில் அப்படி என்ன இருந்தது தெரியுமா?


பிரான்சில் வாழ்ந்து வரும் பெண் ரோசா மரியா. இவருக்கு கணவரும் 3 குழந்தைகளும் உள்ளனர். கடந்த 2013-ஆம் ஆண்டு ரோசாவின் கார் ரிப்பேர் ஆகிவிட்டது. அதனால் மெக்கானிக்கை வரவழைத்திருந்தார்.
மெக்கானிக் வந்து கார் கதவை திறந்ததும் நாத்தம் குப்பென்று அடித்தது. சுற்றுமுற்றும் பார்த்தார் மெக்கானிக்.
(தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!

சீட்டில் எதுவுமே இல்லை. அப்பறம் எங்க இருந்து நாத்தம் வருகிறது என்று காரின் பின்பக்கமாக எட்டி பார்த்தால் ஒரு பெட்டி இருந்தது. அந்த பெட்டியில் பார்த்தால் எக்கச்சக்கமான புழுக்கள் நெளிந்து ஊர்ந்து கொண்டிருந்தன. அந்த புழுக்களுக்கு நடுவில் ஒரு குழந்தை உயிரோடு படுத்து கிடந்தது இருந்தது ஷாக்கில் உறைந்து போய் நின்றார்.
 

போலீசில் புகார்

ஒரு செகண்ட் கூட அங்கே மெக்கானிக்கால் நிற்க முடியவில்லை. புழுக்கள் நிறைந்த இடத்தில் குழந்தையை கொண்டு போய் போட்டதை பார்த்து அலறி அடித்து கொண்டு ஓடினார். நேராக போலீஸ் ஸ்டேஷன்தான் போனார். பீதியுடனேயே எல்லா விஷயத்தையும் சொல்லி முடித்தார்.

மீண்டும் வழக்கு

இது சம்பந்தமான போலீசார் விசாரணை நடத்தியது. ரொம்ப நாள் இந்த கேஸ் கோர்ட்டில் நடந்தது. பிறகு போன வாரம் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. ரோசாவை கூப்பிட்ட நீதிபதி, "ஏம்மா குழந்தையை தூக்கிட்டு போய் காருக்கு பின்னாடி போட்டிருந்தே" என்று விசாரித்தார்.
 


23 மாதங்கள்

அதற்கு ரோசா, "ஏற்கனவே எனக்கு 3 குழந்தைங்க இருக்காங்க. திரும்பவும் நான் கர்ப்பம் ஆனேன். இது என் புருஷனுக்கு பிடிக்கல. அதனால குழந்தை பிறக்கற வரைக்கும் அவர் கண்ணில படாம இருந்தேன். குழந்தை பிறந்ததும் அதை மறைக்க வைக்க ஆரம்பிச்சுட்டேன். இப்படியே 23 மாதங்களும் காரில்தான் என் குழந்தையை வெச்சிருந்தேன்" என்றார்.

நீதிபதி உத்தரவு

இதைக் கேட்ட நீதிபதி கடும் அதிர்ச்சி அடைந்தார். பிறகு ரோசாவுக்கு 5 வருஷம் கடுங்காவல் தண்டனை அளித்தார். 5 வருஷம் ஜெயில் தண்டனை முடிச்சப்பறம், ரோசா சமூக சேவைகளில் ஈடுபட வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.
 

உணர்ச்சியே இல்லை

இந்த சம்பவம் என்றோ நடந்தது. ஆனால் அந்த குழந்தைக்கு வயது இப்போது 7 ஆகிறது. பெயர் செரினா என்று ரோசாவே வைத்திருக்கிறார். இப்போது செரினா எப்படி இருக்கிறாள் தெரியுமா? எந்த உணர்ச்சியும் இல்லாமல்... உடை எதுவும் இல்லாமல்... முழுக்க முழுக்க பலவீனம் நிறைந்து... எல்லாவற்றிற்கும் மேலாக ஆட்டிஸம் குணத்தோடு காணப்படுகிறாள்.

செரினாவுக்கு சிகிச்சை

காருக்குள்ளேயே மறைத்து மறைத்து சுகாதாரம் உட்பட எதுவுமே இல்லாமல் 23 மாதங்கள் இருந்ததால் செரினா நிலைமை மோசமாகி விட்டது. தற்போது அவளை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். செரினாவுக்கு சிகிச்சை நடந்து வருகிறது.


அதிகம் படிக்கப்பட்டவை : Popular PostsNo comments:

Post a Comment