வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: பெண்களே! உங்கள் உடலில் இந்த துர்நாற்றங்கள் இருந்தால் எச்சரிக்கையாக இருங்கள்
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Monday, November 19, 2018

பெண்களே! உங்கள் உடலில் இந்த துர்நாற்றங்கள் இருந்தால் எச்சரிக்கையாக இருங்கள்



உடலமைப்பை பொறுத்தவரையில் ஆண்களும், பெண்களும் பார்ப்பதற்கு கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக இருக்கலாம். ஆனால் அவர்களுக்கு ஏற்படும் ஆரோக்கியம் தொடர்பான பிரச்சினைகளில் பெரும்பாலும் பல வேறுபாடுகள் இருக்கும். பெரும்பாலும் ஆண்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளை அவர்களின் சிறுநீரின் நிறத்தை வைத்தே கண்டறிந்துவிடலாம். ஆனால் பெண்களுக்கு அப்படி கண்டறிவது சற்று கடினமான ஒன்று.


பெண்களுக்கு ஏற்படும் ஆரோக்கிய பிரச்சினைகளை கண்டறிய மிக சுலபமான வழி அவர்கள் உடலில் இருந்து வாசனையாகும்.
(தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!
ஆம் அவர்கள் உடலில் இருந்து வரும் வாசனைகளை வைத்தே அவர்களுக்கு என்ன ஆரோக்கிய பிரச்சினை இருக்கிறது என்பதை கண்டறிந்து விடலாம். அதன்படி பெண்களின் உடலில் ஏற்படும் என்னென்ன வாசனை எந்தெந்த பிரச்சினைகளை குறிக்கிறது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.


வாய் துர்நாற்றம் 
காலை எழுந்தவுடன் வாயில் துர்நாற்றம் இருப்பது சாதாரணமான ஒன்றுதான். அதேபோல பூண்டு ஆழ்ந்து வெங்காயம் போன்ற உணவுகள் சாப்பிட்ட சில மணி நேரங்களுக்கு வாயில் துர்நாற்றம் ஏற்படுவது சகஜம்தான். ஒருவேளை நீங்கள் பல் துலக்கிய பிறகும், வாயை சுத்தம் செய்த பிறகும் இந்த வாசனை தொடர்ந்தால் உங்களுக்கு வாய் தொடர்பாகவோ அல்லது ஈறுகள் தொடர்பாகவோ சில பிரச்சினைகள் இருக்கிறது என்று அர்த்தம். மேலும் தொண்டை தொற்றுகள், கீழ் சுவாச நோய்கள் மற்றும் நுரையீரல் தொற்றுகளால் கூட இந்த பிரச்சினை ஏற்படலாம்.

இனிப்பான பழ வாசனை 
சிலர் பேசும்போது அவர்கள் வாயில் இருந்து ஒருவித இனிமையான வாசனை வரும். ஆனால் இது நல்லதற்கான அறிகுறி அல்ல. இவ்வாறு வாசனை வருவது உங்களுக்கு சர்க்கரை வியாதி இருப்பதற்கான வலிமையான அறிகுறி ஆகும். மூச்சி விடும்போது அசிட்டோனை போன்ற பழ வாசனை வந்தால் உங்கள் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரித்திருப்பதையும், உங்கள் உடல் அதிகமாக உள்ள சர்க்கரையை கீட்டோனாக மாற்ற தொடங்கிவிட்டது என்பதை புரிந்துகொள்ளுங்கள். இந்த சூழ்நிலையில் உடனடியாக மருத்துவரை பார்க்க வேண்டியது அவசியம்.


பாதத்தில் துர்நாற்றம் 
அடிப்படை சுகாதாரமின்மையால் உங்கள் பாதத்தில் துர்நாற்றம் ஏற்படலாம். ஆனால் நன்கு குளித்து பாதத்தை தேய்த்து சுத்தம் செய்தபின் அந்த வாசனை போய்விடும். சுத்தம் செய்தபின்னும் பாதத்தில் துர்நாற்றம் போகாமல் இருந்தால் அது உங்களுக்கு பூஞ்சை தொற்று ஏற்பட்டுள்ளதற்கான அறிகுறி ஆகும். ஈஸ்ட், பூஞ்சை, மில்ட்யூஸ், மற்றும் சில பாக்டீரியாக்கள் சூடான, ஈரமான, இருண்ட சூழல்களில் வாழ விரும்புகின்றவை எனவே அவை உங்கள் காலணிகளை குறிவைக்கும். கடுமையான துர்நாற்றத்துடன் பாதங்களில் அரிப்பு, எரிச்சல் மற்றும் வெடிப்பு போன்றவை இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகவும்.

பிறப்புறுப்பு துர்நாற்றம் 
பிறப்புறுப்பில் துர்நாற்றம் எப்பொழுது இருக்கக்கூடிய ஒன்றுதான். ஆனால் அதுவழக்கத்தை இவ்வித அதிகமாகும் போது மருத்துவரை அணுகவேண்டியது அவசியம். உங்கள் யோனி பகுதியில் இருந்து துர்நாற்றம் வந்தால் அது ஈஸ்ட் அல்லது பாலியல் மூலம் பரவக்கூடிய ஒரு தொற்றாக இருக்கலாம். பிறப்புறுப்பில் இருந்து மீன் நாற்றம் வந்தால் அதற்கு காரணம் நிச்சயம் பாக்டீரிய தொற்றுகள்தான். இதற்கு நீங்கள் உபயோகிக்கும் வாசனை திரவியங்கள் மற்றும் சோப்புகள் போன்றவை காரணமாக இருக்கலாம்.


வாயுக்கோளாறு 
அனைவருமே வாயுவை வெளியிடுவார்கள், குறிப்பாக சாப்பிட்ட பின். எனவே அதைப்பற்றி நீங்கள் கவலைப்பட தேவையில்லை. ஆனால் வழக்கத்திற்கு மாறாக அதிகமுறை வாயு வெளியேறினாலோ அல்லது அதிக துர்நாற்றத்துடன் வெளியேறினாலோ நிச்சயம் அது கவனிக்கப்பட வேண்டிய பிரச்சினைதான். இதற்கு முக்கிய காரணம் உங்கள் குடல் மற்றும் செரிமான மண்டலத்தின் ஒழுங்கற்ற செயல்பாடுகள்தான்.

கை கீழ்ப்பகுதி 
வாயுக்கோளாறை போலவே இந்த இடங்களிலும் துர்நாற்றம் ஏற்படுவது சகஜம்தான். நாள்முழுவதும் உங்கள் உடலில் இருந்து வெளியேறும் வியர்வை உங்கள் கைக்கு கீழ் பகுதியில் பாக்டீரியாக்களை தோற்றுவிக்கும். குளித்த சில மணி நேரங்களுக்கு பிறகு அந்த இடத்தில் துர்நாற்றம் ஏற்படுவதால் பயப்பட தேவையில்லை. ஆனால் சிலருக்கு குளித்து முடித்த உடனேயும், வாசனை திரவியம் அடித்தால் கூட அந்தத் துர்நாற்றம் போகாது. அதற்கு காரணம் ப்ரொம்ஹிட்ராஸிஸ். உடலில் உள்ள டெஸ்டிஸ்ட்ரோன் மற்றும் கொழுப்பு அமிலங்கள் பாக்டீரியாவுடன் சேர்ந்து ஏற்படுத்துவதுதான் இந்த துர்நாற்றம். இது கையின் கீழ் பகுதியில் மட்டுமின்றி உடலில் அதிகம் வியர்க்கும் அனைத்து இடங்களிலும் ஏற்படக்கூடும். இதனால் உங்களுக்கு பல தர்மசங்கடங்கள் ஏற்படலாம். எனவே இதற்கு உரிய சிகிச்சைகள் எடுக்கவேண்டியது அவசியம்.


உச்சந்தலையில் துர்நாற்றம் 
ஒவ்வொருவருக்கும் ஒரு தனி வாசனை உள்ளது. குறிப்பாக அவர்கள் உச்சந்தலைக்கும், முடிக்கும் தனித்துவமான வாசனை இருக்கும். எனவே அதனை பற்றி நீங்கள் கவலைப்பட தேவையில்லை. ஆனால் ஷாம்பூ உபயோகித்து குளித்த பின்னரும் அந்த வாசனை போகவில்லை என்றால் அதனை பற்றி நிச்சயம் கவலைப்பட்டுதான் ஆகவேண்டும். இந்நிலை தொடர்ந்தால் மருத்துவரை அணுகவேண்டியது அவசியம். இது பாக்டீரிய மற்றும் பூஞ்சை தொற்றால் கூட ஏற்படலாம். இந்நிலைக்கு செபோர்ஹெய்க் டெர்மடிசிஸ் என்று பெயர். இதுவும் சொரியாசிஸ் போன்ற நோய்தான். இதனால் பெரிய பாதிப்புகள் இல்லை என்றாலும் அதிக அரிப்பை ஏற்படுத்தக்கூடும்.

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts

No comments:

Post a Comment