வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: 3 வருடத்தில் 9 சிறுமிகளை வன்புணர்ந்து கொலை.. ராட்சசன் பாணியில் நடுங்க வைக்கும் சைக்கோ கில்லர்!
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Thursday, November 22, 2018

3 வருடத்தில் 9 சிறுமிகளை வன்புணர்ந்து கொலை.. ராட்சசன் பாணியில் நடுங்க வைக்கும் சைக்கோ கில்லர்!டெல்லியை சேர்ந்த 20 வயது சைக்கோ கொலைகாரன் 9 சிறுமிகளை கடத்தி கொலை செய்த சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இவன் ராட்சசன் பட பாணியில் கொலை செய்தது தெரிய வந்துள்ளது.
இவன் பெயர் சுனில் குமார் என்றும், இவன் சொந்த ஊர் ஹரியானா அருகே இருக்கும் குருகிராம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கொலை செய்யும் முன், இவன் அந்த சிறுமிகளை வன்புணர்வு செய்து இருக்கிறான் என்று அதிர்ச்சி அளிக்கும் விவரங்கள் வெளியாகி உள்ளது.கைது செய்தார்
கடந்த நவம்பர் 11ம் தேதி குருகிராம் பகுதியில் இவனை போலீசார் கைது செய்தனர். அங்கு 3 வயது சிறுமி காணாமல் போன வழக்கில் சந்தேகத்தின் பேரில் இவன் கைது செய்யப்பட்டான். அதன்பின் போலீஸ் விசாரணையில் இவன் சைக்கோ கொலைகாரன் என்று தெரிய வந்துள்ளது.
(தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!
கொலையை ஒப்புக்கொண்டான் 
போலீஸ் விசாரணையில் இவன் சிறுமிகளை கொலை செய்தது குறித்து உளறி இருக்கிறான். அவன் வாக்குமூலத்தின்படி கடந்த மூன்று வருடமாக இவன் கொலை செய்து வந்துள்ளான். மொத்தம் இதுவரை 9 சிறுமிகளை கொலை செய்துள்ளதாக தெரிவித்துள்ளான்.


எத்தனை இவன் டெல்லியில் 4 சிறுமியை இப்படி கொலை செய்துள்ளான். ஜான்சி, குவாலியர், குருகிராம் ஆகிய பகுதிகளில் மீதி கொலையை செய்துள்ளான். பழைய கொலை வழக்குகளை தேடி, அவர்களின் பெற்றோர்களிடம் இந்த விவரங்கள் தற்போது தெரியப்படுத்தப்படுகிறது.

எப்படி செய்வான் 
இவன் குழந்தைகளை கொலை செய்யும் முன் காலை உடைப்பதை வழக்கமாக வைத்துள்ளான். அதன்பின் வன்புணர்வு செய்துவிட்டு கொலை செய்துள்ளான். மேலும் சிறுமிகளை அதிகமாக சித்ரவதை செய்வான் என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


சைக்கோ கொலை
கொலை செய்யாத மற்ற நேரங்களில் சாதாரண நபர் போல கூலி வேலை பார்த்துள்ளான். சாப்பாடு கொடுப்பதாக சிறுமிகளை மயக்கி கொலை செய்துள்ளான். இவனுக்கு பெரிய மனநல பிரச்சனை இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts

No comments:

Post a Comment