வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: அத்திம்பேரிடம் செருப்புக்கு ரூ. 36.4 கோடி கேட்கும் நடிகை: இதெல்லாம் டூ டூ மச்
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Monday, November 12, 2018

அத்திம்பேரிடம் செருப்புக்கு ரூ. 36.4 கோடி கேட்கும் நடிகை: இதெல்லாம் டூ டூ மச்ப்ரியங்கா சோப்ராவின் தங்கை பரினீத்தி நிக் ஜோனஸிடம் ரூ. 36 கோடியே 47 லட்சம் கேட்டுள்ளார். பாலிவுட் நடிகை ப்ரியங்கா சோப்ரா தனது காதலரான அமெரிக்க பாடகர் நிக் ஜோனஸை வரும் டிசம்பர் மாதம் 1ம் தேதி ஜோத்பூர் அரண்மனையில் வைத்து திருமணம் செய்து கொள்கிறார். கல்யாண வேலைகள் தீவிரமாக நடந்து வருகிறது.


நிக் ஜோனஸ்

திருமணத்தின்போது மாப்பிள்ளையின் காலணியை மறைத்துக் வைத்துக் கொண்டு அவரிடம் பணம் பெறுவது வழக்கமான விஷயம். ஆனால் நிக் ஜோனஸின் காலணியை மறைத்து வைத்தால் ரூ. 36 கோடியே 47 லட்சம் கொடுத்தால் தான் திருப்பிக் கொடுப்பேன் என்கிறார் ப்ரியங்காவின் தங்கையான நடிகை பரினீத்தி சோப்ரா.(தொடர்ச்சி கீழே...)

இதையும் படிக்கலாமே !!!

மீடியா 
ப்ரியங்காவின் திருமண தேதி முடிவானதில் இருந்து அவரை பற்றிய செய்திகள் தான் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. தீபிகா படுகோனேவுக்கு வரும் 14ம் தேதி திருமணம் நடைபெற உள்ளது. ஆனால் அவரை விட ப்ரியங்கா சோப்ரா, நிக் ஜோனஸ் பற்றி தான் அதிக அளவில் செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கிறது.


இத்தாலி  
தீபிகாவுக்கும், ப்ரியங்காவுக்கும் இடையே தொழிலில் மட்டும் அல்ல திருமண விஷயத்திலும் போட்டி என்று பாலிவுட்டில் பேசிக் கொள்கிறார்கள். அந்த போட்டியில் கிட்டத்தட்ட ப்ரியங்கா சோப்ரா தான் வெற்றி பெற்றுள்ளார். தான் எது செய்தாலும் அதை சமூக வலைதளத்தில் தெரிவித்து அனைவரையும் தன்னை பற்றியே பேச வைக்கிறார்.

வெளிநாடு  
ப்ரியங்கா சோப்ராவுக்கு நியூயார்க் மற்றும் ஆம்ஸ்டர்டாம் ஆகிய நகரங்களில் பேச்சுலர் பார்ட்டி கொடுக்கப்பட்டது. நிக் ஜோனஸுக்கு தனியாக பேச்சுலர் பார்ட்டி கொடுக்கப்பட்டது. திருமணத்திற்கு பிறகு ப்ரியங்கா அமெரிக்காவில் செட்டில் ஆகிவிடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

அதிகம் படிக்கப்பட்டவை : Popular PostsNo comments:

Post a Comment