வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: ஓடிப் போன மாப்பிள்ளை.. கண்ணீர் அஞ்சலி போஸ்டர் போட்ட பெண் வீட்டார்.. குமரியில் களேபரம்
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Tuesday, November 13, 2018

ஓடிப் போன மாப்பிள்ளை.. கண்ணீர் அஞ்சலி போஸ்டர் போட்ட பெண் வீட்டார்.. குமரியில் களேபரம்கல்யாணத்தன்று மாப்பிள்ளை ஓடிவிட்டதால், அவரது புகைப்படத்துடன் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி விட்டது. தக்கலை அருகே பாலப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் சதீஷ். வெளிநாட்டில் பணிபுரிந்து வரும் இவருக்கு என்ஜினியிரிங் காலேஜ் பேராசிரியை சோபிணி என்பவருக்கும் கல்யாணம் நிச்சயிக்கப்பட்டது. நேற்று முன்தினம் இந்த திருமணம் நடைபெறுவதாக இருந்துது.


தங்க சங்கிலி 
இதற்காக ஊரெல்லாம் கல்யாண பத்திரிகையை இரு வீட்டாரும் கொடுத்து வந்தார்கள். திருமணத்திற்கு எல்லா ஏற்பாடுகளும் தயாராகிவிட்டது. விடிந்தால் கல்யாணம். ஆனால் நடுராத்திரி மாப்பிள்ளையை காணோம். அவரது ரூமிற்கு சென்று பார்த்தால், அங்கே டேபிள் மீது நிச்சயதார்த்தத்திற்கு பெண் வீட்டார் தனக்கு போட்ட9 பவுன் தங்கச் சங்கிலி மட்டும் இருந்தது.
(தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!
ஏமாற்றம் அடைந்தனர் 
வெளியே ஓடிவந்து பார்த்தால் மாப்பிள்ளையின் பைக்கும் காணோம். அதனால் பதட்டமான உறவினர்கள் எல்லா இடங்களிலும் தேடினார்கள். போலீசிலும் புகார் அளித்தார்கள். கடைசியில் மாப்பிள்ளை பைக் மட்டும் பஸ் ஸ்டாண்டில் கிடைத்தது. மாப்பிள்ளை மாயமாகிவிட்டார். இதனால் கல்யாண பெண் ரொம்ப அதிர்ச்சி அடைந்தார். கல்யாணத்துக்கு வந்தவர்கள் எல்லாரும் ஏமாற்றம் அடைந்தனர்.


கண்ணீர் அஞ்சலி 
கடைசியில் வேறு ஒரு இளைஞரிடம் மணப்பெண்ணை கல்யாணம் பண்ணிக்க சம்மதா என்று கேட்க, அவரும் சரி என்று சொல்ல, அதே மண்டபத்தில் அன்றைய தினம் மாலையில் கல்யாணம் நடந்தது. இந்த நிலையில் ஓடிப்போன மாப்பிள்ளை சதீஷின் போட்டோவுடன் கூடிய கண்ணீர் அஞ்சலி போஸ்டரை பெண் வீட்டில் ஒட்டிவிட்டார்கள். தக்கலை சுற்றுவட்டார பகுதிகளில் முழுவதும் கண்ணீர் அஞ்சலி போட்டோ ஒட்டப்பட்டுவிட்டது.

புகார் அளித்தார்
 இதனால் சதீஷின் தங்கை உள்ளிட்ட உறவினர்கள் தக்கலை போலீஸ் ஸ்டேஷனில், கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளித்தார். அத்துடன் ஓடிப்போன தன் அண்ணனை மீட்டுத்தர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். திருமண நாளில் மாயமான இளைஞர் புகைப்படத்துடன் அவரது பெயரில் மர்ம நபர்கள் தக்கலை பகுதியில் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிகம் படிக்கப்பட்டவை : Popular PostsNo comments:

Post a Comment