வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: மசாஜ் பார்லர் பெயரில் விபச்சாரம்.. 60க்கும் மேற்பட்ட பெண்களை சீரழித்தவர்.. டெய்லர் ரவி கைது
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Tuesday, November 13, 2018

மசாஜ் பார்லர் பெயரில் விபச்சாரம்.. 60க்கும் மேற்பட்ட பெண்களை சீரழித்தவர்.. டெய்லர் ரவி கைது8 ஆண்டுகளில் 60-க்கும் மேற்பட்ட பெண்களை நாசம் செய்ததாக கூறப்பட்ட பாலியல் மன்னன் டெய்லர் ரவி அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். அண்ணாநகர் டவர் பார்க் அருகே உள்ள ஒரு அபார்ட்மெண்ட்டில் 8 ஆண்டுகளாக பாலியல் தொழில் நடத்தி வந்தவர்தான் டெய்லர் ரவி!! 58 வயதாகும் டெய்லர் ரவியின் முழு பெயர் ரவிச்சந்திரன். இவர் மீது விபச்சார வழக்குகள் நிறைய உள்ளன. மசாஜ் சென்டர் மற்றும் ஸ்பா என்ற பெயரில்தான் எல்லா விபச்சாரமும் நடக்கும். கடந்த 8 ஆண்டுகளாக போலீசில் சிக்காமல் மண்ணை தூவிவிட்டு விபசார புரோக்கராக வலம் வந்தவர்.

விபச்சார தடுப்பு பிரிவு  
கிட்டத்தட்ட பாலியல் தொழிலில் கன்னட பிரசாத்துக்கு இணையாக ஈடுபட்டவர். அதனால்தான் இதுவரை 60-க்கும் பெண்களை இந்த தொழிலில் ஈடுபடுத்தி நாசம் செய்து வந்தது தெரியவந்தது. அதிகாரிகளை சரிக்கட்டியே சென்னையில் இப்படி 60 பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்தி வந்ததாக சொல்லப்பட்டது.


பெரும் சலசலப்பு
மேலும் பல்வேறு அதிகாரிகள், அரசியல்வாதிகள் மற்றும் முக்கிய பதவிகளில் உள்ளவர்களை குஷிப்படுத்த, பெண்களை ஏற்பாடு செய்து வந்துள்ளார் என்றும் இதைதவிர ஒவ்வொரு மாதமும் மாமூலும் கொடுத்து வந்திருக்கிறார் என்றும் சலசலக்கப்பட்டது.
(தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!
தனிப்படை அமைப்பு 
இந்த நிலையில் போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன் டெய்லர் ரவியை கைது செய்தே ஆக வேண்டும் என்று கடந்த சில மாதங்களுக்கு முன்பு உத்தரவு பிறப்பித்தார். அந்த வேட்டையில் ரவி சிக்கி விட்டார். தற்போது துரிதமாக விசாரணை நடந்து வருகிறது.

உரிய ஆதாரங்கள் 
தீவிர விசாரணைக்கு பின்னரே டெய்லர் ரவி இதுவரை எத்தனை இளம் பெண்களை பாழாக்கி இருக்கிறார், இதில் யார் யாருக்கு தொடர்பு இருக்கிறது என தெரிய வரும். உரிய ஆதாரங்கள் கிடைத்த பிறகு சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts

No comments:

Post a Comment