வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: புருஷனால் பெரிய இடைஞ்சல்.. தோசைக் கல்லால் அடித்தே கொன்ற ஐஸ்வர்யா!
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Tuesday, November 20, 2018

புருஷனால் பெரிய இடைஞ்சல்.. தோசைக் கல்லால் அடித்தே கொன்ற ஐஸ்வர்யா!"என் கள்ளக்காதலுக்கு என் புருஷன் இடைஞ்சலாவே இருந்தார்... அதான் தோசை கல்லால் அடிச்சே கொன்னுட்டேன்" என்று மனைவி போலீசில் வாக்குமூலம் கொடுத்துள்ளார். சேலம் கருப்பூர் அருகே உள்ள உப்புகிணறு பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார். இவருடைய மனைவி ஐஸ்வர்யா. இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். 

ஐஸ்வர்யாவுக்கு 38 வயதாகிறது. கிரானைட் ஃபேக்டரியில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்த செல்வகுமார் ஒரு மாசத்துக்கு முன்பு வேலையை விட்டு நின்று விட்டார். இந்நிலையில் கடந்த 10-ந்தேதியிலிருந்து
(தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!
செல்வகுமாரை காணவில்லை. இதுகுறித்து அவரது பெற்றோர் ஐஸ்வர்யாவிடம் வந்து தன் மகனை பற்றி கேட்டார்கள். எங்கோ வேலையாக போய் இருக்கிறார் என்று சாக்கு சொல்லி அனுப்பிவிட்டார். ஆனால் நேற்று முன்தினம் வீட்டு பக்கத்தில் இருந்த ஒரு கிணற்றிலிருந்து நாற்றம் அடித்தது.கிணற்றில் சடலம் 
அதனால் சொந்தக்காரர்களும், அருகிலிருந்தவர்களும் கிணற்றுக்கு உள்ளே எட்டி பார்த்தால் செல்வகுமார் பிணமாக கிடந்தார். இதைகண்டு அதிர்ச்சியான அவர்கள் உடனடியாக கருப்பூர் போலீசாருக்கு தகவலை சொல்ல, அவர்கள் வந்து உடலை மீட்டனர். இது சம்பந்தமான விசாரணையை ஆரம்பிக்கும் முன்னரே, ஐஸ்வர்யா நேராக ஸ்டேஷனுக்கு வந்து சரணடைந்து விட்டார். அப்போது அவர் போலீசில் சொன்னதாவது:


பணம் வாங்கினேன்
 
எனக்கு கல்யாணம் ஆகி 12 வருஷமாச்சு. ஆனால் என் புருஷனுக்கு சரியான வருமானம் இல்லை. 2 பெண் குழந்தைகளை படிக்க வெக்க ரொம்ப கஷ்டப்பட்டேன். மாமனார், மாமியார் கிட்டதான் அடிக்கடி பணம் வாங்கி குடும்பத்தை ஓட்டி வந்தேன். சம்பளம் ரொம்ப கம்மியா இருப்பதால்,அந்த வேலையை விட்டுட்டு வேற வேலைக்கு போகுமாறு என் புருஷனிடம் சொன்னேன். அவரும் வேலை வேண்டாம் என எழுதி கொடுத்துவிட்டு வந்துவிட்டார். வேலைவிட்டு ஒரு மாசம் ஆகியும் எங்கியும் அவருக்கு வேலை கிடைக்கல. அந்த நேரத்தில்தான் டூ வீலர் மெக்கானிக் ரவி என்பவருடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது.


இடைஞ்சலாக இருந்தார்
என் பிரச்சனை எல்லாம் அவருகிட்ட சொல்வேன், அவரும் எனக்கு ஆறுதல் சொல்வார், கொஞ்ச நாளில் அது கள்ளக்காதலாக போய்விட்டது. நிறைய நேரம் போனில் அவருகிட்ட பேசினேன். இதை பார்த்துட்டு என் புருஷன் கண்டித்தார். அவன் சரியில்லை, அவன்கூட சேராதே, பேசாதே என்று சொன்னார். ஆனால் நான்தான் கேக்கலை. இந்த கோபத்துல என் புருஷனுக்கு வீட்டில் சரியாக சமைத்து சாப்பாடு கூட போடாமல் பட்டினி போட்டேன். இதனாலும் சண்டை அதிகமானது. அதனால கொன்னுட்டா எந்த தொல்லையும் வராதுன்னு நினைச்சு முடிவு பண்ணேன்.

தோசைக்கல் 
இதை போய் ரவி கிட்ட சொன்னேன். அவரும் சரின்னு சொல்லி, அதுக்கு பிளான் பண்ணினோம். வழக்கம்போல சண்டை வீட்டில் ஆரம்பித்தது. அப்போ ரவியும் சொன்ன மாதிரி வந்துட்டார். தோசை சுடும் இரும்பு சட்டியை எடுத்து வந்த என் புருஷனின் தலையில் தலையில் ஓங்கி அடித்தோம். மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது.. உயிருக்கு போராடினார். அப்படியே தூக்கி கொண்டு போய் வீட்டு பக்கத்துல இருந்த கிணத்துல போட்டுட்டு வந்துட்டோம்.


டிராமா பண்ணினேன் 
அப்புறம் தண்ணியில முக்கியே அவர் துடிதுடிச்சு செத்து போயிட்டார். எதுவும் தெரியாமல் வீட்டுக்குள் வந்து கமுக்கமா உட்கார்ந்துட்டேன். புருஷனை காணோம் என்று போலியா ஒரு புகாரும் தந்து டிராமா பண்ணினேன்" இவ்வாறு அவர் கூறினார். இந்த வாக்குமூலத்தை அடுத்து தலைமறைவாகி இருந்த ரவியையும் போலீசார் பிடித்து கைது செய்தனர். தற்போது இருவரிடமும் தீவிர விசாரணை நடந்து கொண்டிருக்கிறது.

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


No comments:

Post a Comment