வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: ரெயிலில் சிகரெட் புகைத்த நபரை கண்டித்த கர்ப்பிணி பெண் அடித்து கொலை
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Sunday, November 11, 2018

ரெயிலில் சிகரெட் புகைத்த நபரை கண்டித்த கர்ப்பிணி பெண் அடித்து கொலைரெயிலில் சிகரெட் புகைத்த நபரை கண்டித்த கர்ப்பிணி பெண் அடித்து கொலை செய்யப்பட்டு உள்ளார்.


பீகாரில் பிரசித்தி பெற்ற சத் பூஜையில் கலந்து கொள்ள பஞ்சாபில் இருந்து பீகார் செல்லும் ஜாலியன்வாலா எக்ஸ்பிரெஸ் ரெயிலில் சின்னத்தேவி (வயது 45) என்பவர் தனது குடும்பத்துடன் பயணம் செய்து கொண்டு இருந்துள்ளார்.
(தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!
அந்த பெட்டியில் பயணம் செய்த சோனு யாதவ் என்ற நபர் சிகரெட் புகைத்து உள்ளார்.  இதற்கு கர்ப்பிணியான அந்த பெண் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.

இதனை தொடர்ந்து ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில் அந்த பெண்ணை சோனு அடித்து தாக்கியுள்ளார்.  இதனை அடுத்து ஷாஜகான்பூரில் ரெயில் நிறுத்தப்பட்டது.  உடனடியாக அந்த பெண் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
ஆனால், அவர் உயிரிழந்து விட்டார் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.  இதுபற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு குற்றவாளியான சோனுவை கைது செய்துள்ளனர்.

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts

No comments:

Post a Comment