வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: பெண்களை பாதிக்கும் இரத்த சோகையின் வகைகளும் காரணங்களும்
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Thursday, November 08, 2018

பெண்களை பாதிக்கும் இரத்த சோகையின் வகைகளும் காரணங்களும்


இரத்தசோகை ஏன் ஏற்படுகிறது? அதன் அறிகுறிகள், அதனால் ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன? இரத்த சோகையிலிருந்து மீள என்ன செய்ய வேண்டும் என்பது விரிவாக பார்க்கலாம். இந்தியாவில் பாதிக்கும் மேற்பட்ட அதாவது 51 சதவிகிதம் பெண்கள் இரத்த சோகையால் பாதிக்கப்பட்டுள்ளனர். 15 வயதில் இருந்து 49 வயது வரை (மாதவிடாய் தொடங்கும் பருவகாலத்தில் இருந்து மெனோபாஸ் கால கட்டம் வரை) இந்தப்பிரச்னை பெண்களை அதிகமாக பாதிக்கிறது.


சில பெண்களுக்கு முகம், நகம் எல்லாம் வெளுத்துப்போயிருக்கும். சிலர் எப்போது பார்த்தாலும் சோர்வாக இருப்பாங்க. காரணம் இரத்தசோகை. இந்த இரத்தசோகை ஏன் ஏற்படுகிறது? அதன் அறிகுறிகள், அதனால் ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன? இரத்த சோகையிலிருந்து மீள என்ன செய்ய வேண்டும் என்பது விரிவாக பார்க்கலாம். (தொடர்ச்சி கீழே...)

இதையும் படிக்கலாமே !!!

இரத்த சோகைக்கான அறிகுறிகள்

சோர்வு, தோல் வெளுத்துப்போதல், மூச்சு வாங்குதல், இதய படபடப்பு, மயக்கம், தலைவலி, நெஞ்சு வலி, குளிர்ந்த கைகள் மற்றும் பாதங்கள்.இரும்புச்சத்து குறைவாக உள்ள குழந்தைகள் சுண்ணாம்பு, சாக்பீஸ் போன்றவற்றை சாப்பிடுவார்கள். இரத்த சோகையின் ஆரம்ப அறிகுறிகளை யாரும் பெரிதாக கண்டுகொள்வதில்லை. இந்த அறிகுறிகள் அதிகமாகும் போது இரத்த சோகைப் பிரச்னையும் அதிகமாகி விடுகிறது.


இரும்புச்சத்து குறைபாடினால் ஏற்படும் இரத்தசோகை- தேவையான அளவு இரும்புச்சத்துள்ள உணவை உட்கொள்ளாமல் இரும்புச்சத்துக் குறைபாடினால் ஏற்படும் இரத்தசோகை தான் உலகத்தில் அதிகபட்ச இரத்த சோகைக்கான காரணமாக இருக்கிறது. தேவையான அளவு இரும்புச்சத்து இல்லையென்றால் இரத்த சிவப்பணுக்களுக்கான ஹீமோகுளோபினை எலும்பு மஜ்ஜையால் உருவாக்க முடியாது.ஊட்டச்சத்துக் குறைபாடினால் ஏற்படும் இரத்தசோகை- ஆரோக்கியமான ஹீமோகுளோபின்கள் உருவாக இரும்புச்சத்தை தவிர ஃபோலேட் மற்றும் வைட்டமின் பி12 ஆகியவை தேவை. இந்த சத்துக்கள் உணவில் குறையும் போது ஹீமோகுளோபின் உற்பத்தியும் குறைகிறது. குடல் பிரச்னைகள்- இரத்த அணுக்கள் உருவாக தேவையான சத்துக்களை உறிஞ்சும் சக்தியினை தடை செய்யும் குடல் பிரச்னைகள்.


மாதவிடாய் - இரத்த போக்கை ஏற்படுத் தும் மாதவிடாயானது பெண்களுக்கு ஆண்களை விட இரத்த சோகை அதிகம் ஏற்பட முக்கியக் காரணமாக இருக்கிறது. கர்ப்ப காலம்- கர்ப்ப காலங்களில் இரு உயிருக்கு தேவையான அளவு ஹீமோகுளோபின் கர்ப்பிணி பெண்களுக்கு வேண்டும். அதற்கேற்ற அளவு இரும்புச்சத்துள்ள உணவை உட்கொள்ளாத போது கர்ப்பிணி பெண்களுக்கு ஹீமோகுளோபின் தட்டுப்பாடு ஏற்படுவதால் இரத்தசோகை ஏற்படுகிறது. கர்ப்பிணி பெண்கள் போலிக் அமில மாத்திரைகளை எடுத்துக்கொள்ளாத போது இரத்தசோகைக்கான ரிஸ்க் அதிகரிக்கிறது. நாட்பட்ட நோய்களினால் ஏற்படும் இரத்தசோகை- கேன்சர், சிறுநீரகக்கோளாறு, கல்லீரல் கோளாறு போன்ற நாட்பட்ட நோய்களின் காரணமாக இரத்தசோகை ஏற்படுகிறது.


நாட்பட்ட நோய்கள் மற்றும் வலி நிவாரண மருந்துகளால் ஹீமோகுளோபின் உருவாவது தடைபடுவதால் இரத்த சோகை ஏற்படுகிறது.எலும்பு சம்பந்தப்பட்ட நோய்கள்- லுகோமியா மற்றும் மைலோஃபைப்ரோஸ் போன்ற எலும்பு சம்பந்தமான நோய்களின் காரணமாக இரத்த சிவப்பணுக்களின் உருவாக்கம் குறையும். தேவையான அளவு இரத்த சிவப்பணுக்கள் உருவாகாதது.இரத்த சிவப்பணுக்கள் விரைவில் அழிந்து போதல் - இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தி வேகத்தை விட அதன் அழிவு விகிதம் அதிகமாக இருக்கும் போது இரத்த சோகை பிரச்னை ஏற்படும். இதனை ஹீமோலிடிக் அனீமியா என்பார்கள். மரபு வழியாக ஏற்படும் சில இரத்த நோய்களினால் இந்தப் பிரச்னை ஏற்படும்.  

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


No comments:

Post a Comment