வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: அடி ஒவ்வொன்னும் சும்மா அம்மி மாதிரி விழுது பாருங்க.. கான்பூரிலும் ஒரு "கோவை சரளா"!
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Saturday, November 17, 2018

அடி ஒவ்வொன்னும் சும்மா அம்மி மாதிரி விழுது பாருங்க.. கான்பூரிலும் ஒரு "கோவை சரளா"!நம்ம ஊர் கோவை சரளா மாதிரி நாடெல்லாம் அங்கங்கே இருப்பாங்க போல! வம்பு பண்ணும் ஆண்களுக்கு அடி ஒவ்வொன்னும் சும்மா அம்மி மாதிரி விழுது! உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஈட்டா என்ற பகுதி உள்ளது. 

இதன் அருகே உள்ள கிராமத்துக்கு இளம் பெண் ஒருவர் தனியாக நடந்து போய் கொண்டிருந்தார். அப்போது அவரை 2 ஆண்கள் கேலி கிண்டல் செய்திருக்கிறார்கள். ஆனால் அந்த பெண் அதை பொருட்படுத்தாமல் அமைதியாக சென்று கொண்டிருந்தார். அமைதியாக போவதை கவனித்த 2 பேரும் இளம்பெண்ணை திடீர் என வழிமறித்துள்ளனர். அதோடு அவரை கற்பழிக்கவும் முயன்றனர்.


சந்திரமுகியாக மாறினார் 
அதுவரை அமைதியாக இருந்த அந்த பெண் அப்போதுதான் சந்திரமுகியாக மாறினார். 2 பேரையும் இழுத்து பிடித்து நடுரோட்டிலேயே அடிக்க ஆரம்பித்துவிட்டார். 
(தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!
சரிமாரியாக பெண் தாக்குவதை அந்த இளைஞர்கள் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. இருவரையும் மாறி மாறி தெருவிலேயே கைகளாலும், கால்களாலும் புரட்டி புரட்டி எடுத்தார்.


செருப்பால் அடித்தார் 
பிறகு விட்டுவிடுவார் என்று பார்த்தால், அப்போதுதான் அந்த பெண் அவரது செருப்பையே கழட்டுகிறார். கொஞ்ச நேரம் செருப்பால் இளைஞர்களை இன்னும் வெளுத்தார். "எங்களை விட்டு விடு.. தெரியாம பண்ணிட்டோம்.." என்று இருவரும் அந்த பெண்ணிடம் கெஞ்ச ஆரம்பித்து விட்டார்கள். இத்தனைக்கும் இந்த சம்பவம் நடந்தது பகல் நேரம் என்பதால் ஊரே ஒன்றுகூடி விட்டது.

சிறை பிடித்தனர்
எல்லோரும் வேடிக்கை பார்க்க பார்க்க இளைஞர்களால் எதுவுமே செய்யவில்லை. அடி தடி காட்சிகள் எல்லாம் முடிந்த பிறகு ஊர் மக்கள் அந்த பெண்ணுக்கு உதவ முன்வந்தார்கள். இளைஞர்களை சிறைபிடித்து கட்டி போட்ட மக்கள், போலீசுக்கு தகவல் அளித்தார்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


No comments:

Post a Comment