வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: 2018-12-02
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Friday, December 14, 2018

முதலாளி உங்களுக்கு என்னாச்சு.. ஆஸ்பத்திரி வாசலில் கவலையுடன் காத்து கிடந்த 4 நாய்கள்தெருநாய்கள்தான்... ஆனால் எல்லோரையுமே கண்கலங்க வைத்துவிட்டன. பிரேசில் நாட்டில் நடந்த சம்பவம் இது. சீசர் என்ற நபர் தெருவில் போகும்போது அங்கிருக்கும் 4 நாய்களுக்கு சாப்பாடு தருவாராம். 

 
எப்பவும் இப்படி சாப்பாடு தருவது இல்லையாம். என்றைக்காவது அந்த வழியாக சென்றால், அதுவும் அந்த நேரத்தில் கையில் ஏதாவது சாப்பாடு இருந்தால் அந்த தெரு நாய்களுக்கு போடுவாராம். உடனே அந்த 4 நாய்களும் அதை சாப்பிட்டுவிட்டு வாலை ஆட்டுமாம். (தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!

தாங்க முடியவில்லை 
இந்த நிலையில் சீசருக்கு ஒரு நாள் உடம்பு சரி இல்லாமல் போய்விட்டது. அதனால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சீசர் இப்படி ஆஸ்பத்திரியில் நோயுற்று படுத்து கிடப்பதை இந்த 4 நாய்களால் தாங்கி கொள்ளவே முடியவில்லை.


காத்து கிடந்தன 
அதனால் ஆஸ்பத்திரி வாசற்படிக்கு வந்து 4 நாய்களும் நின்றுவிட்டன. சீசரை பார்ப்பதற்காக அவை காத்து கிடப்பதை மருத்துவமனை நிர்வாகம் ஆச்சரியத்துடன் பார்த்தது. இப்படியே ஒரு மணி நேரமாக நாய்களும் நின்று கொண்டே இருந்தன.

போட்டோ
இதை பார்த்த மருத்துவமனை ஊழியர்கள், சீசரை பார்க்க உள்ளே அனுமதித்து இருக்கிறார்கள். சீசரால் வளர்க்கப்படாத நாய்கள் இப்படி ஏக்கத்துடன் காத்து நிற்பதை ஆஸ்பத்திரி ஊழியர் ஒருவர், போட்டோ எடுத்து இணையத்தில் பதிவிட்டு இருக்கிறார்.


கண்கலங்குகிறது 
எந்தவித எதிர்பார்ப்பற்ற பாசமும்,புரிதலும், உள்ள தெருநாய்களின் ஏக்கமிகு முகத்தினை கண்டு எல்லோருமே கண்கலங்கி விடுகின்றனர். இந்த போட்டாதான் தற்போது வைரலாகி வருகிறது.

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts

கல்யாணம் முடிஞ்சாச்சு! ரகசியமாக நடந்த பாட்மிண்டன் ஸ்டார்ஸ் சாய்னா - காஷ்யப் காதல் திருமணம்!!இந்திய பாட்மிண்டன் நட்சத்திரங்கள் சாய்னா நேவால் - பாருபள்ளி காஷ்யப் திருமணம் வெளி உலகிற்கு தெரியாமல் இன்று எளிமையாக நடந்து முடிந்துள்ளது. 

 
ஹைதராபாத்தை சேர்ந்த பிரபல இந்திய பாட்மிண்டன் நட்சத்திரங்கள்  (தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!
சாய்னா நேவால் மற்றும் பாருபள்ளி காஷ்யப் இருவரும் பல ஆண்டுகளாக காதலித்து வருவதாகவும், இருவரும் திருமணம் செய்ய உள்ளனர் எனவும் கடந்த அக்டோபரில் செய்திகள் வெளியாகின.


டிசம்பர் 16 அன்று திருமண வரவேற்பு ஹைதராபாத் நகரில் நடைபெற உள்ளதாக செய்திகள் மற்றும் அழைப்பிதழ் இந்த மாத துவக்கத்தில் இணையத்தில் வெளியாகின. அதை தொடர்ந்து, இன்று சாய்னா நேவால் - பாருபள்ளி காஷ்யப் திருமணம் எளிமையாக நடந்து முடிந்துள்ளது. சாய்னா நேவால் ட்விட்டரில் "ஜஸ்ட் மேரீட்" என போட்டு திருமண புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.


இதன் மூலமே வெளி உலகிற்கு இந்த திருமணம் தெரிய வந்துள்ளது. இந்த நிகழ்வு குறித்து வெளியே அதிகம் தெரியவில்லை. பலரும் டிசம்பர் 16 அன்று தான் திருமணம் என எண்ணினர். அடுத்து சாய்னா - காஷ்யப் திருமண வரவேற்பு விளையாட்டு, அரசியல், மற்றும் சினிமா பிரபலங்கள் பங்கேற்க பிரமாண்டமாக ஹைதராபாத் நகரில், டிசம்பர் 16 அன்று நடைபெற உள்ளது.


அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts

மைசூருவில் கோவில் நிகழ்ச்சியில் பிரசாதம் சாப்பிட்ட 6 பேர் உயிரிழப்பு, 80-க்கும் மேற்பட்டோர் பாதிப்புமைசூருவில் கோவில் நிகழ்ச்சியில் பிரசாதம் சாப்பிட்ட 6 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


 

கர்நாடக மாநிலம் மைசூருவில் கோவில் நிகழ்ச்சியில் பிரசாதம் சாப்பிட்ட மக்கள் மயக்கமடைந்தனர்.
 (தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!

என்னவென்று தெரியாத நிலையில் 6 பேர் உயிரிழந்தனர். 80க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டனர்.
 

அவர்கள் உடனடியாக மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  பிரசாதம் சாப்பிட்ட 60க்கும் மேற்பட்ட காகங்களும் உயிரிழந்துள்ளது. உயிரிழப்புக்கான காரணம் என்னவென்று தெரியவரவில்லை. இதுதொடர்பாக விசாரணையும் தொடங்க உள்ளது. பிரசாதம் சாப்பிட்டவர்கள் உயிரிழந்த சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


அதிகம் படிக்கப்பட்டவை : Popular Postsநேபாளத்தில் இந்திய ரூபாய் நோட்டுகளுக்கு திடீர் தடை -இந்திய சுற்றுலா பயணிகள் அதிர்ச்சிஇந்திய அரசின் புதிய ரூ.2000, ரூ.500, ரூ.200 நோட்டுகளை நேபாள மக்கள் பயன்படுத்த அந்நாட்டு அரசு திடீர் தடை விதித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


 

நேபாளத்தில் இந்தியாவின் புதிய ரூபாய் நோட்டுகளான ரூ.2000 ரூ.500 ரூ.200  ஆகிய நோட்டுகளுக்கு தடை விதிக்கப்படுவதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. ஆர்.பி.ஐ யின் புதிய ரூபாய் நோட்டுகள் அந்நாட்டில் பயன்படுத்த சட்டமாக்கபடவில்லை.
(தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!
மேலும் 2020-ல் விசிட் நேபாள் என்ற திருவிழா நடத்தப்படுகிறது. இதனை முன்னிட்டு இந்திய ரூபாய் நோட்டுகளுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

இது குறித்து தி காத்மாண்டு போஸ்ட் பத்திரிக்கைக்கு நேபாள தகவல் மற்றும் தொடர்புத்துறை மந்திரி கோகுல் பிரசாத் பஸ்கோடா கூறியதாவது:-

நேபாளத்தில் இந்திய அரசின் ரூ.2000, ரூ.500, ரூ.200 நோட்டுகளை மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். அந்த உயர்ந்த மதிப்புள்ள நோட்டுகளைப் பயன்படுத்துவதை மக்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும். கையில் வைத்திருக்கவும் வேண்டாம். மாறாக, இந்திய அரசின் 100 ரூபாய் நோட்டுகள் மட்டும் புழக்கத்துக்கு பயன்படுத்தலாம் என்று அரசு முடிவு செய்துள்ளது.
 
இவ்வாறு அவர் கூறினார்.

நேபாள அரசின் இந்த முடிவால், இந்தியாவில் பணியாற்றும் நேபாள மக்களும், நேபாளத்துக்குச் சுற்றுலா செல்லும் இந்தியர்களும் கடுமையாக  பாதிக்கப்படுவார்கள்.

இதற்கிடையே கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதி மத்திய அரசு பணமதிப்பிழப்பு  நடவடிக்கையைக் கொண்டு வந்தபோது, நேபாளத்தில் கோடிக்கணக்கில் ரூ.500 , ரூ.1000 நோட்டுகள் தேங்கிவிட்டன. அந்த நோட்டுகளை இதுவரை மத்திய அரசு நேபாள ரிசர்வ் வங்கியிடம் இருந்து திரும்பப் பெற்றுக்கொள்ளவில்லை என்பதால், நேபாள அரசு கடும் அதிருப்தி அடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


எச். ராஜா உருவ பொம்மையை எரிக்க முயன்ற விசிக.. தூக்கி கொண்டு ஓடிய போலீஸ்..எச்.ராஜாவின் உருவ பொம்மையை கெட்டியாக பிடித்துகொண்டு நடுரோட்டில் போலீசார் ஓடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது. 


விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவனை இழிவுபடுத்தும் விதமாக பாஜக தேசிய தலைவர் எச்.ராஜா பேசியதாக கூறி அக்கட்சியினர் பல்வேறு வகையில் தங்கள் எதிர்ப்புகளை பதிவு செய்து வருகின்றனர். தலித் அல்லாத சமூகத்தினரை காயப்படுத்தும் வகையில் எச்.ராஜா பேசியிருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது என்று கூறி அவருக்கு எதிரான போராட்டங்களையும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் முன்னெடுத்து வருகின்றனர். (தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!

சமூக பதற்றம்  
அதன்படி இன்று திருச்சியிலும் எச்.ராஜாவுக்கு கண்டனம் தெரிவித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சமூகப்பதற்றத்தை உருவாக்கியுள்ள பாஜக தேசியச் செயலாளர் எச்.ராசாவை கண்டித்தும், அவர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க தமிழக அரசை வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.


எச்.ராஜா உருவ பொம்மை 
மத்திய பேருந்து நிலையம் பெரியார் சிலை அருகே திரண்ட அக்கட்சியினர் எச்.ராஜாக்கு எதிரான கண்டன முழக்கங்களை எழுப்பினர். பின்னர் திடீரென சாலை மறியலிலும் ஈடுபட்டனர். அப்போது அவர்களது கையில் எச்.ராஜா உருவபொம்மை இருந்தனர்.

தள்ளுமுள்ளு  
அதனை எரிக்க முயன்றபோது, அதற்குள் போலீசார் விரைந்து வந்துவிட்டனர். எச்.ராஜாவின் உருவ பொம்மையை போலீசார் பறிக்க முயன்றபோது, போராட்டக்காரர்களுடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.


பெரும் பரபரப்பு  
இதையடுத்து, போலீசார் உருவபொம்மையை பறித்ததுடன், அதை எடுத்து கொண்டு நடுரோட்டில் ஓடினார்கள். உடனே விடுதலை சிறுத்தைகள் கட்சியினரும் போலீசாரை துரத்த ஆரம்பித்தனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

கைது செய்தனர்  
எப்படியோ, கடைசியில் எச்.ராஜா உருவபொம்மையை போலீசார் காப்பாற்றியதுடன், போராட்டத்தில் ஈடுபட்டவர்களையும் கைது செய்தனர்.

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts