வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: விரும்பிய சேனல்களை தேர்வு செய்ய புதிய ஆப் வெளியிட்ட டிராய்
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Wednesday, January 23, 2019

விரும்பிய சேனல்களை தேர்வு செய்ய புதிய ஆப் வெளியிட்ட டிராய்

மத்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் டி.டி.ஹெச். மற்றும் கேபிள் பயனர்கள் அவரவர் விரும்பிய சேனல்களை தேர்வு செய்ய புதிய செயலியை வெளியிட்டுள்ளது.


மத்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் டி.டி.ஹெச். மற்றும் கேபிள் பயனர்கள் அவரவர் விரும்பும் சேனல்களை தேர்வு செய்ய புதிய செயலியை அறிமுகம் செய்துள்ளது. புதிய செயலியை கொண்டு பயனர்கள் அவரவர் விரும்பும் சேனல்களை தேர்வு செய்து, அவற்றுக்கான கட்டணத்தை அறிந்துகொள்ள முடியும்.

டிராய் உருவாக்கி இருக்கும் பிரத்யேக வலைதளத்தில் ஐந்து வழிமுறைகளை கடந்து, அவரவர் விரும்பும் சேனல்களை தேர்வு செய்து கொள்ளலாம். இந்த சேவையை கொண்டு விரும்பிய சேனல்களை தேர்வு செய்வதோடு அவற்றுக்கான கட்டணங்களையும் அறிந்து கொள்ள முடியும். 
புதிய வலைதளத்தில் விரும்பிய சேனல்களை தேர்வு செய்ய வாடிக்கையாளர்கள் தங்களது பெயர், வசிக்கும் மாநிலம், விரும்பும் சேனல் வகை அதன் பின் திரையில் சேனல்கள் பட்டியலிடப்பட்டு இருக்கும். பயனர்கள் அவரவர் விரும்பும் சேனல்களை தேர்வு செய்து மாதாந்திர கட்டணத்தை நிர்ணயித்துக் கொள்ளலாம். 

விரும்பிய சேனல்களை தேர்வு செய்த பின் அதற்கான கட்டணத்தில் இலவச சேனல்கள், கட்டண சேனல்கள், கட்டண சேனல்களுக்கு நீங்கள் செலுத்தும் கட்டணம், ஜி.எஸ்.டி. வரி மற்றும் டி.டி.ஹெச். சேவை வழங்கும் நிறுவனத்திற்கு நீங்கள் செலுத்த வேண்டிய நெட்வொர்க் கட்டணம் உள்ளிட்டவை தனித்தனியே பட்டியலிடப்பட்டிருக்கும். 
இவற்றின் கீழ் மொத்தமாக மாதாந்திர அடிப்படையில் நீங்கள் செலுத்த வேண்டிய தொகை இடம்பெற்றிருக்கும். புதிய விதிமுறையின் படி இலவச சேனல்களை கட்டாயம் வாங்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. சேனல் செலக்டர் வலைதளத்தில் ஹெச்.டி. மற்றும் எஸ்.டி. சேனல்களை, சேனல் வகைகள், ஒளிபரப்பும் நிறுவனம் மற்றும் மொழி உள்ளிட்டவற்றை தேர்வு செய்யலாம்.

புதிய விதிமுறைகளின் படி இலவச சேனல்களுக்கான கட்டணம் ரூ.130 (வரி உள்ளிட்டவற்றை சேர்த்து ரூ.153.40) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து வாடிக்கையளர்கள் தேர்வு செய்யும் சேனல்களுக்கு தனியே கட்டணம் செலுத்த வேண்டும்.

No comments:

Post a Comment