வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: 2019-03-31
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Sunday, April 07, 2019

சன் டிவியில் ஜோதிடபலன் சொன்ன இவங்க இப்போ எங்க இருக்காங்க தெரியுமா?சன் தொலைக்காட்சியில் காலையில் தினமும் இவரது குரலை கேட்காதவர்கள் எவரும் இருக்க முடியாது.


ராசியான நிறம், அனுகூலமான திசை என்று அணைத்து ராசிகளின் நேரத்தை தினமும் என்று புட்டு வைத்தவர் வே ஜே விஷால். தற்போது இவர் என்ன செய்து கொண்டிருக்கிறார் தெரியுமா.சன் டிவியில் ஜோதிடபலன் நிகழ்ச்சியைப் பல வருஷங்களாகத் தொகுத்து வழங்கியவர் வீஜே விஷால்.


ஐ.டி வேலை பார்த்துக்கொண்டு, பகுதி நேரமாக மீடியாவில் வலம் வந்தவர். அவருடைய நேரமாக காரணமாக மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஜோதிடபலன் நிகழ்ச்சியிலிருந்து விலகினார். சமீபத்தில் பிரபல பத்திரிகைக்கு பேட்டியளித்துள்ள இவர், வேலையின் காரணமாக லண்டனில் மூன்று வருஷம் இருக்க வேண்டியதாக இருந்துச்சு. லண்டனில் இருந்து வந்ததுக்கு அப்புறம் பார்ட் டைமாக இருந்து பண்ணலாம்னு டெஸ்ட் ஷூட் போயிருந்தேன்.


இப்போ வரை எந்த ரிசல்ட்டும் வரலை. மீடியா எனக்கு அதிகமாக பேம் கொடுத்துச்சு. ஐ.டி கம்பெனி எனக்கான வளர்ச்சியைக் கொடுத்துச்சு. பல விஷயங்கள் கத்துக்கிட்டேன். எதுக்காகவும், யாருக்காகவும் என் ஐ.டி வேலையை விடக்கூடாது, விட மாட்டேன் என்பது என்னுடைய எண்ணம். இப்பவும் பல இடங்களில் என்னைப் பார்க்கிற என் ரசிகர்கள் ஆசையா என்னைப் ரொம்ப சந்தோஷமா இருக்கு.


பல நாளிதழ்களில் லைப் ஸ்டைல் பற்றி ஆர்ட்டிகிள் எழுதியிருக்கேன். இனிமேல், எழுத்தில் கவனம் செலுத்தலாம்னு முடிவு பண்ணியிருக்கேன். இன்னொன்னு சொல்ல மறந்துட்டேன்.. மறுபடியும் வேலை காரணமா லண்டன் போறேன் என்று கூறியுள்ளார்.

பொள்ளாச்சியில் மீண்டும் இரத்த வெறியாட்டம்: அரைநிர்வாணமாக பலாத்காரம் செய்யப்பட்ட மாணவி!பொள்ளாச்சியில் கல்லூரி மாணவி ஒருவர் கழுத்தறுக்கப்பட்ட நிலையில், பலாத்காரம் செய்யப்பட்டு அரை நிர்வாணமாக சாலையோரத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


பொள்ளாச்சியில் கடந்த 2 ஆண்டுகளில் 200க்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டதாக பெரிய சர்ச்சை ஒன்று எழுந்து அதற்கான தீவிரமான விசாரணை நடைபெற்று வரும் நிலையில், துடியலூரை சேர்ந்த 6 வயது சிறுமி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டிருந்தார்.
இந்த இரு சம்பவங்களால் தமிழகமே பெரும் பரபரப்பில் இருந்து வரும் நிலையில், தற்போது மேலும் ஒரு கொடூர சம்பவம் நடந்துள்ளது. ஒட்டன்சத்திரத்தைச் சேர்ந்தவர் பிரகதி என்பவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் இரண்டாம் ஆண்டு பட்டப் படிப்பு படித்து வருகிறார்.


நேற்று முன்தினம் கல்லூரிக்கு சென்ற பிரகதி வீடு திரும்பவில்லை. இதையடுத்து பிரகதியின் பெற்றோர் இன்று காலையில் கோவை காந்திபுரம் காட்டூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். அதன்பேரில் போலிஸார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.


இந்நிலையில் பொள்ளாச்சியில் இருந்து தாராபுரம் ரோட்டில் முட்புதருக்குள் பிரகதி அரைநிர்வாணமாக கழுத்தறுக்கப்பட்ட நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். இது குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.


இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், கொலை செய்த நபர்களை பிடிக்க நான்கு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக எஸ்பி சுஜித் குமார் தெரிவித்துள்ளார்.

Friday, April 05, 2019

கோடை வெப்பத்தை தணிக்க சாப்பிட வேண்டியவை...

கோடை வெப்பத்தை சமாளிக்க சில உணவுகளை கண்டிப்பாக சாப்பிட வேண்டும். அதே போல் சில உணவுகளை தவிர்க்கவும் வேண்டும். அவை என்னவென்று பார்க்கலாம்.
தண்ணீருக்குப் பதிலாக தாதுக்கள் சேர்க்கப்பட்ட, உப்பு சேர்க்கப்பட்ட தண்ணீரை குடிக்கலாம்.

அசதியாக இருப்பவர்கள் குளுக்கோஸ் கலந்த நீர் பருகலாம்.

எலுமிச்சை, கிர்ணி, தர்பூசணி, ஆப்பிள், ஆரஞ்சு போன்ற பழங்களின் பானங்களை பருகலாம்.

இளநீர் பருகலாம். வெள்ளரிக்காய், நுங்கு சாப்பிடலாம்.

காலையும், மாலையும் தலைக்கு குளியல் போடலாம்.

வாரத்தில் ஒரு முறையாவது மூலிகை எண்ணெய் தேய்த்து குளித்து உடல் சூட்டை தணிக்கலாம்.

உடலில் சந்தனம் பூசிக் கொள்ளலாம். மஞ்சளும் பூசலாம்.

பழங்களையும் அதிகமாக சாப்பிடலாம்.

தண்ணீருடன் சேர்ந்த பழஞ்சோறு நல்லது. கூழ்- களி வகைகளை சாப்பிடலாம்.

வெயிலில் செல்ல நேர்ந்தால் தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெயை உடலில் தேய்த்துக் கொள்ளலாம்.

சாப்பிடக்கூடாதவை

மாம்பழம் சாப்பிடுவது உடல் சூட்டை அதிகரிக்கும். குறைவாக ஜூஸ் போட்டு பருகலாம்.

சிக்கன் உணவும் உடல் உஷ்ணத்தை அதிகரிக்கும். கோடை நேரத்தில் இதை தவிர்க்கலாம்.

அளவுக்கு அதிகமாக சாப்பிட வேண்டாம். சாப்பிட்டவுடன் மற்ற பானங்களை பருக வேண்டாம்.

கார உணவுகள் வெயில்காலத்திற்கு நல்லதல்ல.

செயற்கை குளிர்பானங்கள், நிறமூட்டப்பட்ட உணவுகளை தவிர்க்க வேண்டும்.

ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 12 ஆம் தேதி வரை அவகாசம்

ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 12 ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.


ஆசிரியர் தகுதி தேர்வான டெட் (TET) தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் கடந்த மார்ச் 15 ஆம் தேதி துவங்கியது. விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் முடிவடையும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால்,  இந்த தேர்வுக்கு ஆன்லைன்  மூலம் விண்ணப்பிக்க முயற்சித்தவர்கள் பலர் விண்ணப்பிக்க முடியாமல் சிரமப்பட்டனர்.ஒடிபி என்னும் ஒருமுறை கடவுச்சொல்லும் மின்னஞ்சலுக்கு வரவில்லை என பரவலாக விண்ணப்பதாரர்கள் தரப்பில் குறை சொல்லப்பட்டது. கடந்த மூன்று நாட்களாக, டெட் தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியாமல் விண்ணப்பதாரர்கள் மன உளைச்சலுக்கு ஆளானார்கள். இந்த நிலையில், ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 12 ஆம் தேதி வரை அவகாசம் வழங்கி தமிழ்நாடு ஆசிரியர் தகுதி தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Thursday, April 04, 2019

சற்றுமுன்...! ஓபிஸ் பிரச்சார வாகனம் நீலகிரி அருகே விபத்து!தமிழகத்தில் உள்ள 39 பாராளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரி பாராளுமன்ற தொகுதிக்கும் வரும் ஏப்ரல் 18-ந் தேதி  தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலை௭யில் தேர்தல் பணிகளில் அனைத்து கட்சிகளும் மும்முரமாக ஈடுபட்டுள்ளது.


மேலும் கொளுத்தும் வெயிலிலும் கட்சியினர் தங்களது வேட்பாளர்களை அறிவித்து அனல் பறக்கும் பிரசாரம் செய்து வருகின்றன. பரபரப்பாக போய்க்கொண்டிருக்கும் மக்களவை தேர்தலையொட்டி அனைத்து கட்சி தலைவர்களும், வேட்பாளர்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுவருகின்றனர்.


இந்நிலையில், இன்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் நீலகிரி மக்களவை தொகுதியில் பிரச்சாரம் மேற்கொள்ள இருந்தார். அங்கு நடக்கவிருக்கும் பிரச்சாரத்திற்காக, ஓட்டுநர் வாகனத்தை ஊட்டியிலிருந்து கூடலூருக்கு எடுத்துச் செல்லும் போது நடுவட்டம் என்ற இடத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.  இதில், ஓட்டுநர் மற்றும் உடன் சென்ற இருவருக்கு சிறு காயம் காயம் ஏற்பட்டது.

`கைவிட மாட்டேன்னு சொன்னாரு; இப்போ போனையே எடுக்க மாட்டேங்காரு’ - தர்மபுரி எஸ்.ஐ-யால் குமுறும் கர்ப்பிணி!
காதலித்து, ரகசியமாகத் திருமணம் செய்து குடும்பம் நடத்திவிட்டு, வேறு பெண்ணைத் திருமணம் செய்துகொண்டு தன்னை ஏமாற்றி விட்டதாகத் தர்மபுரி சப்-இன்ஸ்பெக்டர் மீது இளம்பெண் கொடுத்துள்ள புகார் காக்கிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கிருஷ்ணகிரியைச் சேர்ந்த சத்யா என்பவர் கொடுத்துள்ள புகார் மனுவில், ``தர்மபுரி ஸ்பெஷல் டீமில் சப்-இன்ஸ்பெக்டராகப் பணியாற்றி வரும் சீனிவாசனும் நானும் 2007-ம் ஆண்டு முதல் காதலித்து வந்தோம். அடுத்த ஆண்டே வீட்டில் யாருக்கும் தெரியாமல் ரகசியமாகக் கிருஷ்ணகிரி முருகன் கோயிலில் திருமணமும் செய்துகொண்டு இருவரும் குடும்பம் நடத்தி வந்தோம். ஆனால், சீனிவாசன் 2010-ம் ஆண்டு உமா என்ற பெண்ணுடன் ஊரறியத் திருமணம் செய்ய ஏற்பாடு செய்தார். அதை அறிந்து அதிர்ந்துபோய் என் பெற்றோரிடம் தெரிவித்தேன். என் பெற்றோர் சீனிவாசனை அழைத்து விசாரித்தனர். அதற்குச் சீனிவாசன் உண்மைதான், எங்கள் இருவருக்கும் குழந்தை இல்லை. அதனால் வேறு திருமணம் செய்துகொள்கிறேன். சத்யாவை நான் கைவிட மாட்டேன், கடைசி வரை பார்த்துக் கொள்கிறேன் என்று அப்போது உறுதி அளித்தார். அதேபோல என்னைக் கவனித்தும் வந்தார். இந்த நிலையில், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நான் கர்ப்பமடைந்தேன். இந்தத் தகவலை ஆசையுடன் கணவர் சீனிவாசனிடம் தெரிவித்தேன். ஆனால், அப்போது முதல் சீனிவாசன், என்னை முழுவதுமாகத் தவிர்க்க ஆரம்பித்துவிட்டார். அதன் பிறகு தொலைபேசியில் அழைத்தாலும் என் அழைப்பை ப்ளாக் செய்து வைத்துவிட்டார். நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் என்னைத் தன்னந்தனியாகத் தவிக்க விட்டதால், என்னால் வீட்டு வாடகை கூடச் செலுத்த முடியாமல் தவித்து வருகின்றேன். ஆனால் அவரோ என்னைத் துளியும் கண்டுகொள்ளவில்லை"; எனப் புகார் தெரிவித்துள்ள சத்யா... சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசனுடன் நெருக்கமாக இருக்கும் சில புகைப்படங்களையும், காவல்துறையில் சீனிவாசனுக்கு வழங்கியுள்ள அடையாள அட்டை, வாக்காளர் அட்டை, ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவணங்களை ஆதாரமாகக் கொடுத்துள்ளார்.இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசனிடம் விளக்கம் கேட்டோம், ``சத்யா என் அத்தை மகள்தான். எனக்கு முன்பே திருமணம் நடந்து முடிந்து குழந்தைகள் உள்ளது. சத்யாவின் நடவடிக்கை சரியில்லை, என் தாயிடம் எனது காவலர் அடையாள அட்டையை ஏமாற்றிப் பெற்றுச் சென்றுள்ளார். மற்ற ஆவணங்கள் எல்லாம் ஜோடிக்கப்பட்டது. அவரது வயிற்றில் வளரும் குழந்தைக்கும் எனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை"; என்று மறுப்பு தெரிவித்தார்.
இது சம்பந்தமாகத் தர்மபுரி பி-1 இன்ஸ்பெக்டர் ரத்னகுமாரிடம் பேசினோம், ``சத்யா கொடுத்துள்ள புகார் தொடர்பான விசாரணைக்குச் சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசன் ஒத்துழைப்புக் கொடுக்கவில்லை. சத்யா தெரிவித்துள்ள குற்றச்சாட்டுகளும் ஆவணங்களும் நம்பகத் தன்மையுடன் உள்ளது. இந்தப் புகாரில் சீனிவாசனிடம் விசாரணை மேற்கொண்டால் மட்டுமே முழு விவரம் தெரிய வரும்"; என்கின்றார்.
சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் மீது நிறைமாத கர்ப்பிணிப் பெண் கூறியுள்ள குற்றச்சாட்டுகள் தருமபுரி மாவட்ட காவல்துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


குத்து பாடலுக்கு நடனமாடிய பெண் போலீஸ்கள் : சர்ச்சை வீடியோசினிமா பாடல் ஒன்றிற்கு பெண் காவலர்கள் மேடையில் ஆடிய நிகழ்ச்சி டெல்லி நடைபெற்றுள்ளது.
கடந்த சனிக்கிழமை அன்று டெல்லியில் அனைத்து பெண் காவலர்கள் சபா ஒன்றின் ஏற்பாட்டின் படி, டெல்லி தென்மேற்கு மாவட்ட பெண் காவலர்கள் பங்கேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது.


இந்த நிகழ்ச்சியில் சினிமா பாடல்களும் ஒலிக்கப்பட்டன. அப்போது பிரபல டான்ஸ் பாடலான ‘சப்னா சவுத்ரி’ என்ற பாடல் இசைக்கப்பட்டது. அந்தப் பாடலால் உற்சாகமடைந்த சில பெண் காவலர்கள் மேடை மீது ஏறி நடனமாட தொடங்கினர். இதனை கீழே இருந்த பெண் காவலர் ஒருவர் வீடியோவாக படம் பிடித்தார்.


அவர் மட்டுமின்றி அங்கிருந்த பல பெண் காவலர்கள் வீடியோ எடுத்தனர். பெண் காவலர்கள் நடமாடிக்கொண்டிருந்தபோது அங்கிருந்த பெண் ஐபிஎஸ் அதிகாரி பெனிடா மேரி ஜெய்கர் தனது காலல் ஒரு நடன ஸ்டெப் போட்டார். அந்தச் சமயத்தில் எடுக்கப்பட்ட வீடியோ இப்போது சமூக வலைத்தளங்களில் பரவி, சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.

Wednesday, April 03, 2019

வேலை, வேலை, வேலை.! ரூ.1.80 லட்சத்தில் அரசாங்க வேலை..! - விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 09.04.2019

ஆயில் அண்ட் நேச்சுரல் கேஸ் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் (ஓஎன்ஜிசி) காலியாக உள்ள உதவி சட்ட ஆலோசகர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 


தற்போது மொத்தம் 09 காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


மொத்த காலியிடங்கள் :  09
 நிறுவனம் :  

ஆயில் அண்ட் நேச்சுரல் கேஸ் கார்ப்பரேஷன் நிறுவனம் (ஓஎன்ஜிசி) 

பணி : 

உதவி சட்ட ஆலோசகர் 

கல்வித் தகுதி : 

சட்டத்துறையில் இளங்கலை பட்டம் பெற்று, வழக்குரைஞராக 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

வயது வரம்பு : 

01.01.2019 தேதியின்படி 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும். 

ஊதியம் : 

மாதம் ரூ.60,000 முதல் ரூ.1,80,000 வரையில்

தேர்வு முறை : 

Common Law Admission Test(CLAT)-2019 என்னும் தேர்வின் அடிப்படையில், மதிப்பெண்கள் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

விண்ணப்பக் கட்டணம் :  

பொது மற்றும் ஓபிசி விண்ணப்பதாரர்களுக்கு - ரூ.370 எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்குக் கட்டணம் கிடையாது. 

கட்டணம் செலுத்தும் முறை :  

ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை : 

www.ongcindia.com என்னும் இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி :  

09.04.2019 CLAT- தேர்வு நடைபெறும் தேதி : 12.05.2019

Tuesday, April 02, 2019

காஞ்சிபுரத்தில் கோயிலுக்கு சென்ற 16 வயது சிறுமி கூட்டு பலாத்காரம்... ஆட்டோ ஓட்டுநர்கள் வெறிச்செயல்

காஞ்சிபுரத்தில் கோயிலுக்கு சென்ற 16 வயது சிறுமியை கடத்தி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த ஆட்டோ ஓட்டுனர்கள் இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர். 


ஒரு ஆட்டோ ஓட்டுநரை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள். காஞ்சிபுரம் அருகே விஷ்ணு காஞ்சி பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி, ஜெயின் சமூகத்தைச் சேர்ந்தவர். இவர் தனியாக அந்த பகுதியில் உள்ள கோயிலுக்கு ஆட்டோவில் சென்றுள்ளார்.
(தொடர்ச்சி கீழே...)
 இதையும் படிக்கலாமே !!!

அப்போது சிறுமி விரும்பி சென்ற கோயில் நடை சாத்தப்பட்டு இருந்தது. சிறுமியை அழைத்து வந்த ஆட்டோ ஓட்டுநர், வேறு கோயிலுக்கு அழைத்து செல்வதாக சிறுமியிடம் நைசாக பேசியுள்ளார். 

இதனை நம்பி அச்சிறுமி, அவருடைய ஆட்டோவில் சென்றுள்ளார். அந்த சிறுமியை ஆட்டோ ஓட்டுநர். காஞ்சிபுரம் ராஜாஜி மார்க்கெட் பின்புறம் உள்ள காலியிடத்துக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு தனது நண்பர்களான இரண்டு ஆட்டோ ஓட்டுநர்களை வரவழைத்துள்ளார். அவர்கள் மூன்று பேரும் சிறுமிக்கு மயக்க மருந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். 

இதையடுத்து பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் விஷ்ணு காஞ்சி காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.
இந்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீசார், தேவா மற்றும் ராஜா ஆகிய இரண்டு ஆட்டோ ஓட்டுநர்களை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள மற்றொரு ஆட்டோ ஓட்டுநரை போலீசார் தேடி வருகிறார்கள். கோயிலுக்கு சென்ற 16 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் காஞ்சிபுரம் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Monday, April 01, 2019

காஞ்சிபுரம் மாவட்டத்தில் சுமார் 20 கோடி ரூபாய் பறிமுதல் - தேர்தல் பறக்கும் படையினர் அதிரடிகாஞ்சிபுரம் மாவட்டத்தில், 8.56 கோடி ரூபாய், 9.40 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள், தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள, 11 சட்டசபைதொகுதியிலும், 33 பறக்கும் படையினர், 33 நிலையான கண்காணிப்பு குழுவினர், கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.பணப்பட்டுவாடா தொடர்பான புகார் வந்தால், நிலையான கண்காணிப்பு குழுவினர் விரைந்து சென்று நடவடிக்கை எடுப்பர்.அந்த வகையில், 14ம் தேதி முதல், பணம் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. மாவட்டம் முழுவதும், நேற்றைய நிலவரப்படி, 53 இடங்களில், 8.56 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.இது தவிர, 9.40 கோடி ரூபாய் மதிப்பில், தங்கம், வெடி பொருள், குட்கா உள்ளிட்ட பொருட்களை, பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.