வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: தென்திருப்பதி திருமலைவையாவூரில் ஆங்கில புத்தாண்டையொட்டி படி உற்சவம் | Malaimaiyavur Temple New year celebration news 2020
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Wednesday, January 01, 2020

தென்திருப்பதி திருமலைவையாவூரில் ஆங்கில புத்தாண்டையொட்டி படி உற்சவம் | Malaimaiyavur Temple New year celebration news 2020


செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், வேடந்தாங்கல் செல்லும் வழியில் தென்திருப்பதி என்றழைக்கப்படும் திருமலைவையாவூர் மலை மீது  ஸ்ரீபிரசன்ன வெங்கடேச பெருமாள் திருக்கோயில் அமைந்துள்ளது. 
இத்திருத்தலத்தில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு படி உற்சவம் நடைபெற்றது. இதனை முன்னிட்டு திருக்கோயில் முழுவதும் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மலை மற்றும் திருக்கோயில் முழுவதும் வண்ண வண்ண மின் விளக்குகளால் ஜொலித்தது.  
மூலவர் ஸ்ரீ வெங்கடேச பெருமாள் வஜ்ராங்கி சேவையிலும், உற்சவர் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீநிவாச பெருமாள் முத்தங்கி சேவையிலும், மற்றொரு உற்சவரான ஸ்ரீதேவி பூதேவி சமேத கள்ளபிரான் சுவாமி பரமபதநாதன் திருக்கோலத்திலும் அருள்பாலித்தனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்திருந்து வரிசையில் சென்று பெருமாளை வழிபட்டனர்.  
உற்சவ ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை வேலூர் இணை ஆணையர் செ.மாரிமுத்து,  உதவி ஆணையர்  கே.ரேணுகாதேவி, கோயில் ஆய்வாளர் ஜீவா, கோயில் நிர்வாக அதிகாரி  சோ. செந்தில்குமார் ஆகியோர் வெகுசிறப்பாக செய்திருந்தனர்.

No comments:

Post a Comment