வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: எச்சரிக்கை: மதுராந்தகம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பால் அவசரகால மதகு ஷட்டர் திறப்பு | Emergency Shutter Opened in Madurantakam Lake | வில் அம்பு செய்திகள் | Vil Ambu News
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Sunday, November 28, 2021

எச்சரிக்கை: மதுராந்தகம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பால் அவசரகால மதகு ஷட்டர் திறப்பு | Emergency Shutter Opened in Madurantakam Lake | வில் அம்பு செய்திகள் | Vil Ambu News

மதுராந்தகம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பால் அவசரகால மதகு மூலம் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. 

சுமார் இருபத்தி ஒன்பது புள்ளி தண்ணீர் அதாவது 500 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. 

செங்கல்பட்டு மாவட்டம் மாவட்டத்தின் மிகப்பெரிய ஏரியான மதுராந்தகம் ஏரி அதன் முழு கொள்ளளவான 23.3 அடியை எட்டியது.  

தற்போது ஏரிக்கு நீர்வரத்து வினாடிக் 27200 கன அடி வந்து கொண்டிருப்பதால் அவசரகால ஷட்டர் மூலம் உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது.

தற்போது தானியங்கி ஷட்டர் மற்றும் கலங்கல் வழியாக 27200 கனஅடியும் அவசரகால ஷட்டர் மூலம் 2300 கனஅடி தண்ணீரும் ஆக மொத்தம் வினாடிக்கு 29500 கன அடி தண்ணீர் உபரிநீராக கிளி ஆற்றில் வெளியேற்றப்படுகிறது.

இதன் காரணமாக ஆற்று கரையோரம் உள்ள கத்திரி சேரி, தோட்டநாவல், இருசமாநல்லூர், சகாய நகர் உள்பட 21 கிராமப்புறங்களுக்கு மாவட்ட நிர்வாகம் ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை செய்து மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி வலியுறுத்தி உள்ளது.

மேலும் கிராமத்திற்குள் தண்ணீர் புகும் நிலை ஏற்பட்டால் அப்பகுதி மக்களை வெளியேற்றி பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்க மாவட்ட நிர்வாகம் துரித நிலையில் ஏற்பாடுகளை செய்து வருகிறது.

No comments:

Post a Comment