வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: சென்னையில் மீண்டும் லாக்டவுனா..? தலைநகரில் தலைகாட்டிய ஒமைக்ரான்...! வெளியான அறிவிப்பு.!!!
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Sunday, December 19, 2021

சென்னையில் மீண்டும் லாக்டவுனா..? தலைநகரில் தலைகாட்டிய ஒமைக்ரான்...! வெளியான அறிவிப்பு.!!!

சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்துவதற்கு கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் தீவிரமாக பரவி வந்த கொரோனா தொற்றின் இரண்டாம் அலை பல்வேறு முயற்சிகளுக்கு பிறகு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. மக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுகொண்டதால் பெரும்பாலான உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டது. 


தற்போது தான்மக்கள் மெல்ல மெல்ல தங்களின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி உள்ளனர். இது போன்ற சூழ்நிலையில் டெல்டா வைரஸ் என்ற உருமாறி கொரோனா தற்போது ஓமைக்ரானாக மீண்டும் உருமாற்றம் பெற்று பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் நைஜீரியாவில் இருந்து சென்னை வந்த ஒருவருக்கு ஒமைக்ரான் உறுதி செய்யப்பட்டது. அதுமட்டுமல்லாமல் டெல்லி, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகின்றது.

இந்நிலையில் ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்துவதற்கு கூடுதல் கட்டுப்பாடுகளை விதிக்க அனுமதி கோரி தமிழக அரசு மத்திய அரசுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளது. அந்த கடிதத்தில் "தமிழகத்தில் ஒருவருக்கு ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்ட நிலையில் மீதி உள்ள 28 பேருக்கு எஸ் வகை மரபணு மாற்றம் அடைந்துள்ளது. இதில் 4 பேர் மட்டுமே பாதிப்பு அதிகமாக உள்ள நாடுகளில் இருந்து வந்துள்ளனர். மீதி 24 பேர் மற்ற நாடுகளிலிருந்து வந்தவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள்.

இதனால் இனி அனைத்து நாடுகளில் இருந்து வருபவர்களுக்கும் பரிசோதனை கட்டாயமாக்கப் வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே ஒமைக்ரான் பரவலை கட்டுபடுத்த முடியும் என்று அந்தக் கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார். மேலும் அனைத்து வெளிநாட்டு பயணிகளும் வீட்டில் அல்லது அரச அமைந்துள்ள மையங்களில் கட்டாயம் ஏழுநாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள நடவடிக்கை எடுப்பதோடு, எட்டாவது நாளில் பரிசோதனை மேற்கொள்ளும் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்" தெரிவிக்கப்பட்டுள்ளது . தமிழகத்தில் குறிப்பாக சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் கொரோனா மூன்றாவது அலை எனப்படும் ஒமைக்ரான் பரவலை தடுக்க வேண்டும் என்பதற்காக கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews


சமீபத்திய செய்திகள் 

No comments:

Post a Comment