வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: அடடே.! இது அது ல..? சொல்வதெல்லாம் உண்மையில் டிரெண்ட் ஆன அன்னபூரணி தற்போது ஆதிபராசக்தி அவதாரமா..?
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Monday, December 27, 2021

அடடே.! இது அது ல..? சொல்வதெல்லாம் உண்மையில் டிரெண்ட் ஆன அன்னபூரணி தற்போது ஆதிபராசக்தி அவதாரமா..?

அன்னபூரணி அரசு தொடர்பான வீடியோக்கள் இணையம் முழுக்க வைரலாகி வரும் நிலையில் அவர் கலந்து கொண்டதாக சொல்லப்படும் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி தொடர்பான வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது. 


தமிழ்நாடு முழுக்க தற்போது டிரெண்ட் ஆகி வரும் புது சாமியார்தான் அன்னபூரணி அரசு என்ற இயற்பெயர் கொண்ட ஆதி பராசக்தி அவதாரம். செங்கல்பட்டில் எழுந்தருளி இருப்பதாக தன்னை தானே சொல்லிக்கொள்ளும் அன்னபூரணி அரசு தன்னை ஆதிபராசக்தியின் அவதாரம் என்று அறிவித்துள்ளார். 


செங்கல்பட்டில் நியூ இயர் அன்று மக்களுக்கு அருள் வாக்கு வழங்க போவதாக இவர் அறிவித்து வெளியான போஸ்டர்கள் எல்லாம் இணையம் முழுக்க வைரலான நிலையில்தான் அன்னபூரணி பேஸ்புக், ட்விட்டர் டிரெண்டிங்கில் வந்தார். இவரை பற்றி சின்ன அறிமுகம் சொல்ல வேண்டும் என்றால், அன்னபூரணி செங்கல்பட்டில் மடம் ஒன்றை தொடங்கி உள்ளார். சின்ன மடம் வைத்து இருக்கும் இவர் அருகே இருக்கும் கல்யாண மண்டபத்தை பிடித்து அங்கு பக்தர்களுக்கு (அப்படிதான் சொல்றாங்க) அருள்வாக்கு வழங்கி வருகிறார். 


இங்கு கூட்டம் கூட்டமாக கடந்த சில நாட்களாக ஆயிரக்கணக்கில் பக்தர்கள் வந்து அருள்வாக்கு வாங்கிக்கொண்டு செல்கிறார்கள். எங்கிருந்து எல்லாமோ அன்னபூரணியை சந்திக்க பலர் வருவதாக அவரின் பக்தர்கள் சொல்கிறார்கள். பல நோயாளிகள் தீராத நோய்களோடு வந்து, "டாக்டர் படிக்காத எம்பிபிஎஸ்" அன்னபூரணியிடம் அருள்வாக்கு பெற்றதும் குணமடைந்து வீட்டிற்கு சென்றதாக அவரின் பக்தர்கள் தெரிவிக்கிறார்கள். மாரடைப்பு தொடங்கி பல பாதிப்புகள், நோய்களை இவர் குணப்படுத்தி உள்ளதாக பக்தர்கள் சீரியஸாக சொல்லி உள்ளனர். இப்படிப்பட்ட நிலையில்தான் சொல்வதெல்லாம் உண்மையில் அன்னபூரணி கலந்து கொண்டதாக வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. 


இந்த வீடியோவில் அன்னபூரணி தனது எதிர்வீட்டில் இருக்கும் லட்சுமி என்ற பெண்ணின் கணவர் அரசு என்பவருடன் திருமணத்திற்கு அப்பாற்பட்ட உறவில் இருந்ததாக கூறப்படுகிறது. அன்னபூரணி அப்போது ஷங்கர் என்ற தனது கணவருடன் வாழ்ந்து வந்துள்ளார். இந்த பிரச்சனை வெளியே வந்த நிலையில், கணவர் ஷங்கரை பிரிந்துவிட்டு எதிர்வீட்டு லட்சுமியின் கணவர் அரசுடன் அன்னபூரணி தனியாக வீடு எடுத்து தங்கி உள்ளார். இதைத்தான் தனியார் தொலைக்காட்சியான ஜீ தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த நிகழ்ச்சி சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில் விவாதித்து உள்ளனர். நடிகை லட்சுமி ராமகிருஷ்னன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி இருந்தார். இதில் லட்சுமியின் மனைவி அரசுவுடன்தான் தான் இருப்பேன் என்று அன்னபூரணி விடாப்பிடியாக குறிப்பிட்டு இருந்தார். இப்போது திடீரென அன்னபூரணி அம்மா அவதாரம் எடுத்துள்ள நிலையில் இந்த வீடியோ வைரலாகி வருகிறது. சொல்வதெல்லாம் நிகழ்ச்சிக்கும் - அம்மன் அவதாரத்திற்கு இடையில் நடந்த transitionதான் இன்னும் குழப்பாக இருக்கிறது. "என்ன அன்னபூரணி அம்மன் அவதாரமா. நீங்கள் எல்லாம் முட்டாள்களா" என்று கூறி நேற்று லட்சுமி ராமகிருஷ்ணனும் கடுமையாக பேட்டி அளித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில்தான் தெரிந்த வட்டாரத்தில் விசாரித்ததில், அன்னபூரணிதான் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டது, அவர்தான் உண்மையில் அந்த நிகழ்ச்சியில் இடம்பெற்றார் என்று உறுதி செய்யப்பட்டது. அரசு என்ற அந்த நபர் இப்போதும் அன்னபூரணியுடன்தான் இருக்கிறார். இருவரும் ஒன்றாகவே இந்த பக்தி சாம்ராஜ்ஜியத்தை நிறுவி உள்ளனர் என்று நெருங்கிய வட்டாரத்தில் இருந்து தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக அன்னபூரணி தரப்பு விளக்கத்தையும் பதிவு செய்வதற்காக அவருக்கு போன் செய்தோம். ஆனால் அவரின் மூன்று போன் எண்களும் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. அன்னபூரணி இந்த கட்டுரைக்கும், தனது வீடியோக்கள் குறித்து மறுப்பு தெரிவிக்கவும் விரும்பினால் அதை பதிவு செய்ய தயாராக இருக்கிறோம்.

📮டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews

செங்கல்பட்டு மாவட்ட செய்திகள் 


முந்தைய செங்கல்பட்டு மாவட்ட செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்

சமீபத்திய செய்திகள் 
சமூக சீரழிவு செய்திகள்

முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும் 

ஆன்மீக செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

வேலைவாய்ப்பு செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

சினிமா செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

தலைப்பு வாரியாக செய்திகள்

No comments:

Post a Comment