வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: உதயநிதிக்கு அமைச்சரவையில் அதிகரிக்கும் வாய்ஸ் | விரைவில் முடிவு.? - அமைச்சர் அன்பில் மகேஷ்
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Sunday, December 19, 2021

உதயநிதிக்கு அமைச்சரவையில் அதிகரிக்கும் வாய்ஸ் | விரைவில் முடிவு.? - அமைச்சர் அன்பில் மகேஷ்

சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏ உதயநிதியை அமைச்சரவையில் சேர்க்க வேண்டும் என பல்வேறு அமைச்சர்களும் வெளிப்படையாகப் பேசி வரும் நிலையில், இது தொடர்பாகப் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் முக்கிய கருத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.சென்னை தலைமைச் செயலகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது உதயநிதி அரசியலுக்கு வர வேண்டும் எனச் சட்டப்பேரவையிலேயே முதலில் கூறியது நான் தான் என்றும் இது குறித்து விரைவில் முடிவு எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.


அப்போது அப்போது பேசிய அவர், "நெல்லை மாவட்டத்தில் பள்ளிக் கட்டிடம் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் உயிரிழந்தது மிகவும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மிகவும் சங்கடத்துடன் இருக்கிறேன். ஆறுதல் கூறினாலும் இழப்பு என்பது இழப்பு தான். பள்ளி கழிவறைகளைச் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். அதனால்தான் ஆய்வுக்காகப் பள்ளிகளுக்குச் செல்லும்போது கழிவறையைத் தான் முதலில் பார்ப்பேன்.

3-4 மாதத்திற்கு ஒருமுறை மாவட்ட கல்வி அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொள்ளும் போதும் கூட பள்ளி கட்டிடங்களை ஆய்வு செய்ய வேண்டும் என்பதையே நான் தொடர்ந்து வலியுறுத்துவேன். நெல்லை சிஎஸ்ஐ பள்ளியில் முறையான அடித்தளம் இல்லாமல் கட்டிடம் அமைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாகச் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மாநிலம் முழுவதும் உள்ள பள்ளி கட்டிடங்களை ஆய்வு செய்து இம்மாத இறுதியில் அறிக்கை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

பள்ளிகளில் போதுமான இடம் இல்லை என்றால் வாடகைக்கு இடம் தேர்வு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஜனவரி 3ஆம் தேதி முதல் சுழற்சி முறையில் இல்லாமல் வழக்கம் போலப் பள்ளிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டதை அடுத்து, பள்ளி வாகனங்களை ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. ஓமிக்ரான் கொரோனா தொடர்பாக வரும் வாரங்களில் ஆய்வு மேற்கொள்ளப்படும். இது தொடர்பாகப் பள்ளிகளில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை குறித்து முதலமைச்சருடன் ஆலோசனை மேற்கொண்டு இறுதி முடிவு எடுக்கப்படும்.


உதயநிதி அரசியலுக்கு வர வேண்டும் எனச் சட்டப்பேரவையிலேயே முதலில் கூறியது நான் தான். அவரின் ஆர்வம், மக்கள் பணி பார்த்து தான் என்னுடைய ஆசையை வெளிப்படுத்தினேன். உதயநிதி ஸ்டாலின் அமைச்சராவது குறித்து முதலமைச்சர் தான் முடிவெடுக்க வேண்டும்" என்று அவர் தெரிவித்தார். உதயநிதியை அமைச்சரவையில் சேர்க்க வேண்டும் என்ற கருத்தை பல்வேறு அமைச்சர்களும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

முன்னதாக கடந்த சில நாட்களுக்கு முன் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ். உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக வேண்டும் என்பது அமைச்சர்கள் மட்டுமல்ல என்றும் ஒட்டுமொத்த தமிழர்களின் விருப்பமாக உள்ளது என்றும் குறிப்பிட்டிருந்தார். அமைச்சர் அன்பில் மகேஷ் தவிர வேறு சில அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்களும் கூட உதயநிதியை அமைச்சராக்க வேண்டும் என வெளிப்படையாக வலியுறுத்தத் தொடங்கியுள்ளனர். இதுவரை அமைச்சர்கள் எஸ்.எஸ் சிவசங்கர், கே.என். நேரு, செஞ்சி மஸ்தான், மூர்த்தி ஆகியோர் உதயநிதியை அமைச்சராக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews


சமீபத்திய செய்திகள் 

No comments:

Post a Comment