வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: செங்கை, காஞ்சியில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட தி.மு.க. சார்பாக சுமார் 7000 பேர் விருப்பமனு - அமைச்சர் தா.மோ.அன்பரசன்..!
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Saturday, January 22, 2022

செங்கை, காஞ்சியில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட தி.மு.க. சார்பாக சுமார் 7000 பேர் விருப்பமனு - அமைச்சர் தா.மோ.அன்பரசன்..!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மாங்காடு, குன்றத்தூர் ஆகிய நகராட்சிகளுக்கும், செங்கல்பட்டு மாவட்டத்தில் தாம்பரம் மாநகராட்சி, நந்திவரம் கூடுவாஞ்சேரி நகராட்சிகளுக்கும் உறுப்பினர் பதவிக்கு போட்டியிட விரும்பும் திமுகவினரிடம் இருந்து விருப்பமனு பெறும் நிகழ்ச்சி தாம்பரம், பம்மல், கூடுவாஞ்சேரி மாங்காடு, குன்றத்தூர் ஆகிய இடங்களில் நேற்று நடைபெற்றன.


இதில் மாநகராட்சி பகுதியில் போட்டியிட ரூ. 10 ஆயிரமும், நகராட்சி பகுதியில் போட்டியிட ரூ. 5 ஆயிரமும் விருப்பமனு கட்டணமாக வசூலிக்கப்பட்டது.

தாம்பரம் மாநகராட்சியில் தாம்பரம் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் குன்றத்தூர் தெற்கு ஒன்றிய செயலாளர் படப்பை ஆ. மனோகரன், மாவட்ட ஆதிதிராவிடர் நலக் குழு அமைப்பாளர் தி. க. பாஸ்கரன் மற்றும் தாம்பரம் மாநகராட்சி பல்லாவரம் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் திருப்போரூர் வடக்கு ஒன்றிய செயலாளர் எல். இதயவர்மன், மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை துணை அமைப்பாளர் டி. எஸ். எம். ஜெயகரன், குன்றத்தூர் நகராட்சிக்கு தொமுச பேரவை செயலாளர் இரா. பொன்னுரங்கம், மாங்காடு நகராட்சியில் பெரும்புதூர் தெற்கு ஒன்றிய செயலாளர் நா. கோபால், நந்திவரம் கூடுவாஞ்சேரி நகராட்சியில் திருப்போரூர் தெற்கு ஒன்றிய பொறுப்பாளர் பையனூர் சேகர் ஆகியோர் மனுக்களை பெற்றுக் கொண்டனர். இதில் சுமார் 7 ஆயிரம் விருப்பமனுக்கள் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திமுக வேட்பாளர் தேர்வு தீவிரம்:

திமுக சார்பில், சென்னை மாநகராட்சி ஆலந்தூர் மண்டலத்தில் உள்ளாட்சித் தேர்தலில் கவுன்சிலர் பதவிக்குபோட்டியிட விண்ணப்பித்தவர்களுக்கான நேர்காணல் நேற்று நடைபெற்றது.

காஞ்சி வடக்கு மாவட்ட செயலாளரும், ஆலந்தூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான தா. மோ. அன்பரசன், ஆலந்தூர் தெற்கு பகுதி செயலாளர் சந்திரன், வடக்கு பகுதி செயலாளர் குணாளன் ஆகியோர் விருப்பமனு அளித்தவர்களிடம் நேர்காணல் நடத்தினர். காலை தொடங்கி முற்பகல் வரை நேர்காணல் நீடித்தது.

📮டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews

செங்கல்பட்டு மாவட்ட செய்திகள் 


முந்தைய செங்கல்பட்டு மாவட்ட செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்

சமீபத்திய செய்திகள் 
சமூக சீரழிவு செய்திகள்

முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும் 

ஆன்மீக செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

வேலைவாய்ப்பு செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

சினிமா செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

தலைப்பு வாரியாக செய்திகள்

No comments:

Post a Comment