வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: நகை பறிப்பில் ஈடுபட்டு சிக்கிய காதலர்கள்..! என்ஜினீயரிங் மாணவர்கள் கைது!!
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Tuesday, May 03, 2022

நகை பறிப்பில் ஈடுபட்டு சிக்கிய காதலர்கள்..! என்ஜினீயரிங் மாணவர்கள் கைது!!

கோவை தொண்டாமுத்தூரை சேர்ந்தவர் காளியம்மாள் (வயது 65). இவர் கடந்த மாதம் 28-ந் தேதி தொண்டாமுத்தூர் தீயணைப்பு நிலையம் அருகே வழக்கம்போல ஆடு மேய்த்து கொண்டிருந்தார். 


அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வாலிபர் ஒருவர் இளம்பெண்ணுடன் வந்தார். தொடர்ந்து அந்த வாலிபர் காளியம்மாளிடம் பேச்சு கொடுத்து, ஒரு முகவரியை கேட்டுள்ளார். இந்த நிலையில் திடீரென அந்த வாலிபர் கண்ணிமைக்கும் நேரத்தில் காளியம்மாள் கழுத்தில் கிடந்த 5½ பவுன் தங்க நகையை பறித்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் இளம் பெண்ணுடன் தப்பி சென்றார். இந்த சம்பவம் காளியம்மாள் அளித்த புகாரின் பேரில் தொண்டாமுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அந்த பகுதியில் குடியிருப்புகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.

தனிப்படைகள்  

இதில் மூதாட்டியிடம் நகையை பறித்து சென்றது வடவள்ளி சோமையம்பாளையம் அருகே உள்ள காஸ்மா கார்டனை சேர்ந்த பிரசாத் (20) என்பதும், கோவை சுங்கம் ரோடு ஸ்ரீ நகர் முதல் வீதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி தேஜாஸ்வினி (20) என்பதும், இவர்கள் இருவரும் கோவையில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 3-ம் ஆண்டு பி.டெக் படித்து வருவதும் தெரியவந்தது.

மேலும் அவர்கள் 2 பேரும் காதலித்து வந்துள்ளனர். இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.சொகுசு வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு காதல் ஜோடி திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

📮டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews

கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள் 


கோயம்புத்தூர் மாவட்டத்தின் முந்தைய செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்

 
சமீபத்திய செய்திகள் 
         
சமூக சீரழிவு செய்திகள்

முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும் 

 

ஆன்மீக செய்திகள் 


   

 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

வேலைவாய்ப்பு செய்திகள் 


   

 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

சினிமா செய்திகள் 


 

 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

தலைப்பு வாரியாக செய்திகள்

No comments:

Post a Comment