வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: Thirunelveli District News
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...
Showing posts with label Thirunelveli District News. Show all posts
Showing posts with label Thirunelveli District News. Show all posts

Tuesday, January 11, 2022

மனைவி நடத்தையில் சந்தேகம்; கிரிக்கெட் மட்டையால் அடித்துக்கொன்ற கொடூர கணவன் கைது.!

நெல்லையில் மனைவியின் நடத்தையில் சந்தேகம் அடைந்து கிரிக்கெட் மட்டையால் அடித்து கொலை செய்த கணவன் கைது செய்யப்பட்டுள்ளார். நெல்லை மாவட்டம் காவல்கிணறு அருகே உள்ள பழவூர் தெப்பகுளம் தெருவை சேர்ந்தவர் சுடலையாண்டி. 


இவர் லாரி டிரைவர். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஜெயலட்சுமி என்ற பெண்ணிற்கும் கடந்த 15 வருடங்களுக்கு முன்பு திருமணமாகி உள்ளது. இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் சுடலையாண்டி லாரி ஓட்டுநராக பணிபுரிவதால் அடிக்கடி வெளியூர் சென்று வருவது வழக்கம் இந்நிலையில் ஜெயலட்சுமிக்கு அதே பகுதியை சேர்ந்த வேறு ஒரு நபருக்கும் தொடர்பு இருப்பதாக சந்தேகமடைந்து சுடலையாண்டி சில வருடங்களாக பிரிந்து வாழ்ந்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று மதியம் வீட்டில் சாப்பிட்டு கொண்டிருந்த ஜெயலட்சுமியின் வீட்டிற்கு வந்து தகராறில் ஈடுபட்டுள்ளார். தகராறு வாக்குவாதமாக முற்றிய நிலையில் ஜெயலட்சுமியை அருகில் கிடந்த கிரிக்கெட் மட்டையால் ஓங்கி அடித்துள்ளார். இதில் ஜெய லட்சுமி சம்பவ இடத்தில மயங்கினார். மேலும் ஆத்திரம் தீராமல் தேங்காய் துருவியை எடுத்து ஜெயலட்சுமி மண்டையில் பலமாக சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே ஜெயலட்சுமி துடிதுடித்து உயிரிழந்தார்.

இந்நிலையில் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் ஓடி வரவும் சுடலையாண்டி தப்பி ஓடினார். பின்னர் பழவூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். பழவூர் போலீசார் சுடலையாண்டியை கைது செய்தனர். மேலும் சம்பவ இடத்திற்கு வள்ளியூர் ஏ.எஸ்.பி சமய் சிங் மீனா நேரில் வந்து விசாரணை மேற்கொண்டார்.

மேலும் இரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்த ஜெயலெட்சுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பழவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நடத்தையில் சந்தேகப்பட்டு கணவனே மனைவியை அடித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

📮டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews

திருநெல்வேலி மாவட்ட செய்திகள் 


முந்தைய திருநெல்வேலி மாவட்ட செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்

சமீபத்திய செய்திகள் 
சமூக சீரழிவு செய்திகள்

முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும் 

ஆன்மீக செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

வேலைவாய்ப்பு செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

சினிமா செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

தலைப்பு வாரியாக செய்திகள்

Friday, December 17, 2021

நெல்லையில் உயிரிழந்த மாணவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் நிவாரணம்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு.!

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் பொருட்காட்சி திடல் அருகே டவுன் சாப்டர் என்ற தனியார் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த மேல்நிலைப்பள்ளியில் உள்ள கழிவறைச்சுவர் இன்று திடீரென இடிந்து விழுந்தது.


இதில், கழிவறைச்சுவர் அருகே நின்றுகொண்டிருந்த 2 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 3 மாணவர்கள் படுகாயமங்களுடன் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒரு மாணவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான். இதனால், பள்ளியில் கழிவறை சுவர் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்த மாணவர்களின் எண்ணிக்கை 3 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் நெல்லை பள்ளி சுவர் இடிந்து விழுந்த உயிரிழந்த மாணவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின், உயிரிழந்த மாணவர்களின் குடும்பங்களுக்கு தலா 10 லட்சமும், காயமுற்ற நான்கு மாணவர்களுக்கு தலா 3 லட்சமும் முதல்வர் பொதுநிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே பள்ளி கழிவறை சுற்றுச்சுவர் இடிந்து 3 மாணவர்கள் உயிரிழந்த விவகாரத்தில் பள்ளி தலைமைதலைமை ஆசிரியர் ஞானசெல்வி மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்து
விசாரணை நடத்தி வருகின்றனர்.

டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews


சமீபத்திய செய்திகள் 

நெல்லை பள்ளி விபத்து தொடர்பாக விசாரிக்க உயர்மட்ட குழு அமைக்கப்படும்: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் | Thirunelveli School Compound Wall accident Investigation Team Vil Ambu News

நெல்லை பள்ளி விபத்து தொடர்பாக விசாரிக்க குழு அமைக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.


திருநெல்வேலி சாஃப்டர் மேல்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை காலை 11 மணியளவில் இடைவேளையின்போது மாணவர்கள் சிறுநீர் கழிக்கச் சென்றபோது, கழிப்பறை கட்டடத்தின் முன்பக்க சுவர் இடிந்து விழுந்ததில் 7 மாணவர்கள் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர். இதில் 3 மாணவர்கள் உயிரிழந்தனர். காயமடைந்த 4 மாணவர்கள் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அவர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. அவர்கள் 4 பேரும் நலமாக உள்ளனர். இதுகுறித்து தஞ்சையில் பள்ளிக்கல்வித்துறை அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறுகையில், பள்ளியின் கழிவறை சுவர் இடிந்து 3 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் துரதிர்ஷ்டவசமானது. நெல்லை பள்ளி விபத்து தொடர்பாக விசாரிக்க குழு அமைக்கப்படும். கட்டட விபத்து தொடர்பாக பள்ளி நிர்வாகத்திடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.

இதுபோன்ற விபத்துக்கள் இனி நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் பள்ளி கட்டடங்களின் உறுதித்தன்மை பற்றி உடனடியாக ஆய்வு நடத்தப்படும் என்றார்.

டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews


சமீபத்திய செய்திகள் 

Sunday, April 11, 2021

முன்னாள் காதலனை கொலை செய்ய +2 மாணவி செய்த அதிர்ச்சி காரியம்..! | +2 Girl Killing his lover | Vil Ambu News | Tamil Latest News

நெல்லையை சேர்ந்த பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் மாணவி முன்னாள் காதலனை கொல்வதற்காக கூலி படையை ஏவி விட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை களக்காடு அருகேவுள்ள பணக்குடி புஷ்பவனம் என்கிற கிராமத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் மாணவி, தன்னுடன் படிக்கும் விக்னேஷ் என்கிற மாணவனை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் மாணவிக்கு வேறொரு மாணவனுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் விக்னேஷனை உதாசீனப்படுத்தி வந்துள்ளார்.

மாணவியின் நடவடிக்கையால் அதிருப்தி அடைந்த காதலன் விக்னேஷ், மாணவியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை காட்டி அவரை மிரட்டியதோடு, வீட்டிலும் சொல்லிவிடுவேன் என கூறியுள்ளார்இதனால் ஆத்திரமடைந்த மாணவி முன்னாள் காதலன் விக்னேஷனை கொலை செய்ய கூலிப்படையினர் உதவியை நாடியுள்ளார்.

ஆசை வார்த்தைகள் கூறி விக்னேஷனை பெத்தானியா மலைப்பகுதிக்கு மாணவி அழைத்து வந்துள்ளார். அங்கே திடீரென கூலிப்படையினர் வந்துள்ளனர். மேலும் வெடிகுண்டு, அரிவாள், கத்தி உள்ளிட்ட பொருட்களை காட்டி கூலிப்படையினர் விக்னேஷை மிரட்டி மாணவியை தொந்தரவு செய்யாமல் விட்டுவிடும்படி கூறியுள்ளனர். அப்போதைக்கு அவர்கள் சொல்வதை கேட்பது போல நடித்த விக்னேஷ உடனடியாக அங்கிருந்து ஓடி வந்துவிட்டார்.

மேலும் இந்த விவகாரம் தொடர்பாக மாணவி மற்றும் தன்னை மிரட்டிய கூலிப்படையினர் மீது விக்னேஷ் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். விக்னேஷ் தெரிவித்த தகவலின்படி சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறை மலைப்பகுதியில் பதுங்கியிருந்த கூலிப்படையினர் 4 பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். தப்பியோடிய மாணவியை போலீசார் தேடி வருகின்றனர்.


Sunday, March 31, 2019

கிராம நிர்வாக அலுவலகர்களை கிழித்து தொங்கவிட்ட கலெக்டர்; வைரலாகும் ஆடியோ பதிவு!!



முறையாக அலுவலகங்களில் இல்லாத கிராம நிர்வாக அலுவலகர்களை திருநெல்வேலி கலெக்டர் திட்டும் ஆடியோ பதிவி வைரலாகி வருகிறது.
மத்திய அரசு விவசாயிகளுக்கு 6000 ரூபாய் வழங்கப்படும் என பட்ஜெட்டில் அறிவித்திருந்தது.


அதற்கான விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை கிராம நிர்வாக அலுவலகர்களிடம் ஒப்படைக்க வேண்டும்.
இந்நிலையில் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை கொடுக்க சென்றால் அலுவலகத்தில் கிராம நிர்வாக அலுவலர்களே இல்லை என திருநெல்வேலியை சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.


இந்த விஷயம் கலெக்டர் ஷில்பா பிரபாகர் சதீஷின் கவனத்திற்கு செல்லவே, உடனடியாக ஒரு ஆடியோ பதிவை விஏஓக்களுக்கு அனுப்பினார். அதில் விண்ணப்பங்களை வாங்க கூட உங்களால் முடியாதா? நான் ஒவ்வொரு கிராமமாக இதுகுறித்து சோதனை செய்ய வருவேன். ஒருவேளை நீங்கள் அலுவலகங்களில் இல்லை என்றால் உடனடியாக நீங்கள் சஸ்பெண்ட் செய்யப்படுவீர்கள் என அதிரடியாக பேசியுள்ளார்.


அவர் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் ஆடியோ பதிவு வைரலாகி வருகிறது. மேலும் அந்த கலெக்டருக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் இருக்கிறது. இது திருநெல்வேலியில் மட்டுமல்ல பெரும்பாலான இடங்களில் இதே கொடுமை தான் நடக்கிறது. அவர்கள் என்னவோ எஜமானர்கள் மாதிரியும், நாம் என்னவோ வேலையாட்கள் மாதிரியும் சீன் போடுவார்கள்.