வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: Tamil Latest News
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...
Showing posts with label Tamil Latest News. Show all posts
Showing posts with label Tamil Latest News. Show all posts

Sunday, October 11, 2026

வணக்கம் சென்னை.! உற்சாகமாக வந்த மோடிஜி | PM Modiji Chennai Visit

வணக்கம் சென்னை.! உற்சாகமாக வந்த மோடிஜி | PM Modiji Chennai Visit



#வணக்கம்_சென்னை #மோடிஜி #பிரதமர்மோடி #சென்னை #தமிழ்நாடு #மோடிவருகை #சென்னைநிகழ்வு #தமிழகஅரசியல் #இந்தியஅரசியல் #தமிழ்செய்திகள் #VanakkamChennai #ModiJi #PMModi #NarendraModi #Chennai #TamilNadu #ModiInChennai #ChennaiUpdates #IndianPolitics #TamilNews #LatestNews #ViralReels #TrendingReels #YouTubeShorts #Shorts

வெற்றி பயணம் | Vetripayanam Scheme in TVK Government

வெற்றி பயணம் #tvkgovernment #tvk #VetriPayanam #cmvijay #publicreaction




மதுராந்தகத்தில் கிடைத்த வெற்றி போங்கு வெற்றி..! பா.ம.க-வோட செட்டிங் போட்டுக் கிடைத்த வெற்றி..!

மதுராந்தகத்தில் கிடைத்த வெற்றி போங்கு வெற்றி..! பா.ம.க-வோட செட்டிங் போட்டுக் கிடைத்த வெற்றி..!

Madurantakam & Dharapuram TVK win is based on PMK support #tvk #pmk #byelection2026 #maduranthakam #savukkushankar




எங்களைவிட அவங்களெல்லாம் முக்கியமா..? நாங்க ஓட்டு போட்டுத்தானே அவங்களெல்லாம் வந்திருக்காங்க..?

எங்களைவிட அவங்களெல்லாம் முக்கியமா..? நாங்க ஓட்டு போட்டுத்தானே அவங்களெல்லாம் வந்திருக்காங்க..?



Saturday, September 20, 2025

தமிழில் 100 மதிப்பெண்கள் பெறும் மாணவர்களுக்கு ரூ.10,000 வழங்கப்படும்! - அமைச்சர் அன்பில் மகேஸ்.!

பொதுத் தேர்வில் தமிழில் 100 மதிப்பெண்கள் எடுக்கும் மாணவர்களுக்கு  ரூ.10,000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவித்துள்ளார்.



சென்னையில் பள்ளிக் கல்வித் துறை சார்பில் நடைபெறும் முப்பெரும் விழாவில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் அன்பில் மகேஸ், "பள்ளிக்கல்வித் துறை தன்னுடைய இலக்கை தாண்டி உழைத்து வருகிறது. பள்ளிக்கல்வித் துறை கட்டடங்கள் சாதியை ஒழிக்கும் கட்டடங்கள்.

அன்புக் கரங்கள் மூலம் பல சிறப்பான திட்டங்கள் தமிழகத்தில் செயல்படுத்தப்படுகின்றன. 2,715 பட்டதாரி ஆசிரியர்கள் எங்களது பள்ளிக்கல்வித் துறை குடும்பத்தில் இணைந்துள்ளனர். கல்வி, சுகாதாரத்தை இரு கண்களாக கருதி முதல்வர் செயல்படுத்தி வருகிறார்.

பொதுத் தேர்வில் தமிழில் 100 மதிப்பெண்கள் எடுக்கும் மாணவர்களுக்கு ரூ.10,000 ஊக்கத்தொகை வழங்கப்படும்.

ஆசிரியர்களே 6 மாதத்தில் உங்களுக்கு பொதுத் தேர்வு வந்துவிடும். எங்களுக்கு பொதுத் தேர்தல் வந்துவிடும். நீங்களும் வெற்றி பெற வேண்டும், நாங்களும் வெற்றி பெற வேண்டும்.

நான் அரசியல் பேசவில்லை. அறிவு சார்ந்த விஷயத்தை கொண்டு செல்வதற்காகவே இங்கு பேசுகிறேன்" என்று தெரிவித்தார்.

Sunday, June 04, 2023

முதல்வர் ஸ்டாலின் உருவப்படம் மூலம் வரையப்பட்ட கருணாநிதி ஓவியம்: பழநி ஓவிய ஆசிரியர் அசத்தல்..!

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 100-வது பிறந்த நாளையொட்டி, அவரது ஓவியத்தை முதல்வர் மு.க.ஸ்டாலினின் உருவப்படத்தை வைத்து வரைந்து பழநி ஓவிய ஆசிரியர் அசத்தியுள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம், பழநி அருகேயுள்ள குபேரபட்டினத்தைச் சேர்ந்தவர் பா.அன்புசெல்வன். இவர், சத்திரப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் பகுதிநேர ஓவிய ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். இவர், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 100-வது பிறந்த நாளையொட்டி, முதல்வர் ஸ்டாலினின் சிறிய அளவிலான 2 ஆயிரம் உருவப் படங்களை கொண்டு பெரிய அளவில் கருணாநிதியின் ஓவியத்தை வரைந்துள்ளார். 


📮டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews

திண்டுக்கல் மாவட்ட செய்திகள் 


திண்டுக்கல் மாவட்டத்தின் முந்தைய செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்

 
சமீபத்திய செய்திகள் 
         
சமூக சீரழிவு செய்திகள்

முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும் 

 

ஆன்மீக செய்திகள் 


   

 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

வேலைவாய்ப்பு செய்திகள் 


   

 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

சினிமா செய்திகள் 


 

 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

தலைப்பு வாரியாக செய்திகள்

Wednesday, December 15, 2021

நினைத்ததை, நினைத்த உடனேயே சாதிக்க வேண்டுமா? இந்த மந்திரத்தை உச்சரித்தால் போதுமே! | Vil Ambu News | வில் அம்பு செய்திகள்

மனிதர்களாகப் பிறந்தவர்கள் ஒவ்வொருவருக்குமே ஒவ்வொரு குணம் இருக்கும். சிலர், சில பொருட்களின் மீது ஆசைப்பட்டாலும், அதை உடனே அடைய வேண்டும் என்று எண்ண மாட்டார்கள்? ‘நமக்கு நேரம் காலம் வரும் வரை காத்திருக்க வேண்டும்’ என்ற எண்ணம் அவர்களது மனதில் தோன்றும். சிலருக்கு தான் நினைத்ததை உடனே நிறைவேற்றிக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். அதாவது, அடுத்தவர்கள் உடுத்தியிருக்கும் உடை, ஆபரணம் அடுத்தவர்கள் உபயோகப்படுத்தும் பொருள், இப்படி என்று வரிசையாக பார்ப்பதை எல்லாம் வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைப்பவர்கள், ஒரு ராகம்.


நினைத்ததை, நினைத்த உடன், சாதிக்கணும் என்று குணம் கொண்டவர்கள் இவர்கள். சிலருக்கு, நிலம், வீடு, வாகனம் இவைகளை வாங்கி, சொத்து சேர்க்க வேண்டும் என்ற பெரிய எண்ணம் இருக்கும். எப்படி இருந்தாலும் ஆசை ஆசை தானே! நீங்கள் விரும்பிய, ஆசைப்பட்ட பொருளை விரைவாக வாங்க வேண்டும் என்றால், என்ன செய்ய வேண்டும்? எந்த மந்திரத்தை உச்சரிக்க வேண்டும்? என்ன பரிகாரம் செய்ய வேண்டும்? என்பதைப் பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.


முதலில் நீங்கள் எதை விரும்புகிறீர்களோ, அதை நேர்வழியில் அடைய வேண்டும் என்ற மனப்பான்மை உங்களது மனதில் தோன்ற வேண்டும். அடைய வேண்டும் என்பதற்காக, எந்த ஒரு குறிக்கோளையும் குறுக்குவழியில் சென்று அடையக்கூடாது, என்பது குறிப்பிடத்தக்க ஒன்று. இதை முதலில் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். இதோடு சேர்த்து தினந்தோறும் நீங்கள் செய்யும் இறைவழிபாடும் உங்களுக்கு உறுதுணையாக இருக்கும்.

உங்கள் மனதில் எதை அடைய வேண்டும் என்று நினைத்துக்கொண்டு, குறிக்கோள் வைத்து இருக்கிறீர்களோ, அதை நினைத்து பின்வரும் மந்திரத்தை தினந்தோறும் காலை வேளையில் உச்சரிக்க வேண்டும். நினைத்ததை நினைத்த மார்க்கத்தில், உங்கள் கையில் கொண்டு வந்து சேர்க்க மந்திரங்கள் ஒன்றும் மாயாஜால வித்தைகள் அல்ல என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். இந்த மந்திரத்தை தினம்தோறும் உச்சரியுங்கள்! விடா முயற்சியோடு, நீங்கள் விரும்பியதை அடைய, விடாமல் முயற்சி செய்யுங்கள். நீங்கள் விரும்பியது உங்களுக்கு மூன்றில் இருந்து ஆறு மாதங்களுக்குள் நிச்சயம் கிடைக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. உங்களுக்கான மந்திரம் இதோ!

ஓம் கிலி சிங் – ஓம் ரீங் அங் 

ஓம் ஸ்ரீ கிலி – ஓம் கிலி சங் 

ஓம் ரீங் கிலி – ஓம் ஸ்ரீ ரீம் 

ஓம் ரீங் அம் – ஓம் கிலி அங்!


இந்த மந்திரத்தை காலை சூரிய உதயத்திற்கு முன்பு, 27 முறை உச்சரிக்க வேண்டும். தொடர்ந்து 48 நாட்கள் உச்சரித்துப் பாருங்கள்! உங்கள் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் ஏற்படுவதை உணர முடியும். எந்த ஒரு பரிகாரத்தையும், மந்திரத்தையும் செய்த உடனே பலன் தர வேண்டும் என்று நினைப்பது மிகவும் தவறான ஒன்று என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். சிலபேர், சொத்துக்கள் வாங்குவதற்கு கையில் பணத்தைத் தயாராக வைத்திருப்பார்கள். ஆனால், நேரம் காலம் கூடி வராது. கையில் இருக்கும் பணம் வீண் விரயம் ஆகும் அளவிற்கு பிரச்சனைகள் கூட வரும். இப்படிப்பட்ட பிரச்சனை உங்களுக்கு இருந்தால், உங்கள் கையில் இருக்கும் பணம் வீண் விரயம் ஆகாமல் சொத்துக்களாக மாற வேண்டும் என்றால், அதற்கான ஒரு வழிபாடும் உள்ளது.

மகாவிஷ்ணு வழிபாடு அது. இந்த வழிபாட்டினை திருவோண நட்சத்திரத்தன்று செய்வது மிகவும் சிறப்பு. திருவோண நட்சத்திரத்தன்று, மகாவிஷ்ணுவுக்கு, காலை நேரத்தில் துவரம் பருப்பும், நெய்யும் சேர்த்து பருப்பு சாத நெய்வேதியம் தயார் செய்து, விஷ்ணு பகவானுக்கு படைத்து, துளசி மாலை அணிவித்து மனதார வேண்டிக் கொண்டு வந்தீர்கள் என்றால், கூடிய விரைவில் உங்களுக்கு சொத்து வாங்கும் யோகம் கிடைக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. நம்பிக்கையோடு செய்து பாருங்கள். நம்பிக்கையோடு செய்யும் பரிகாரம் எதுவாக இருந்தாலும் அதற்கு கைமேல் பலன் உண்டு என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவை நிறைவு செய்து கொள்ளலாம்.

Related News:

📮மார்கழி மாதம் விரதம் இருங்க.. திருமண தடை நீங்கிடும்.!!

டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews


சமீபத்திய செய்திகள் 

Monday, December 13, 2021

திங்கட்கிழமை இதைச் செய்து வந்தா, நினைத்த காரியம் நிறைவேறும்!! | Do it on Monday for Good in Life | வில் அம்பு செய்திகள் | Vil Ambu News

ஒவ்வொரு திங்கட்கிழமையும் மறந்துடாம இதை கடைப்பிடித்து வாருங்க… அதன் பிறகு உங்கள் பிரார்த்தனைக்கான பலனை நீங்களே உணர்வீங்க!


திங்கட்கிழமை அம்பாளின் வழிபாட்டுக்கு உகந்த தினம் மட்டுமல்லாமல் சந்திரனின் வழிபாட்டுக்கும் மிகவும் உகந்த தினம். அதனால் திங்கட்கிழமைகளில் சந்திரனுக்குரிய இந்த மந்திரத்தை ஒவ்வொரு வாரமும் மறக்காமல் 11 முறை ஜெபித்து வந்தால் நினைத்த காரியம் உடனடியாக நிறைவேறும்.

திங்கட்கிழமைகளில் மட்டுமல்லாமல் பெளர்ணமி, வளர்பிறை தினங்கள், மூன்றாம் பிறை போன்ற சந்திரனுக்கு விசேஷமான தினங்களிலும் சொல்லி வரலாம். அப்படி தொடர்ந்து வழிபட்டு வந்தால் சந்திரனுக்குரிய தோஷங்கள் எல்லாம் விலகி ஓடும்.




திங்கட்கிழமைகளில் சொல்ல வேண்டிய சந்திரன் ஸ்லோகம்

சந்திரன்
'பத்ம த்வாஜய வித்மஹே
ஹேம ரூபாய தீமஹி
ஸ்ரீ வேங்கடலாசலபதி தந்நஸ் ஸோம ப்ரசோதயாத்'


இந்த மந்திரத்தை, ஒவ்வொரு திங்கட்கிழமையும் கை, கால் சுத்தப்படுத்திக் கொண்டு, பூஜையறையில் மாலை நேரத்தில் தீபம் ஏற்றி,வானில் சந்திரனைப் பார்த்து விட்டு, பின்னர் உச்சரிக்க வேண்டும். மந்திரத்தை உச்சரிக்கும் முன்பாக அகல் விளக்கில் தீபம் ஏற்றி, அந்த தீபத்தை நெல் பரப்பி அதன்மீது வைக்க வேண்டும். பின்னர் வெண்பொங்கல் நைவேத்தியம் படைத்து, 108 எண்ணிக்கையில் மல்லிகை பூவைக் கொண்டு வடமேற்கு திசை நோக்கி அமர்ந்து, சந்திரனுக்குரிய காயத்ரி மந்திரத்தைச் சொல்லி வழிபாடு செய்ய வேண்டும். இதனால் அற்புதமான பலன்கள் கிடைக்கும்.

ஒவ்வொருவருக்குமே அவரவர் ஜாதகத்தில் தாய் ஸ்தானத்திற்குரியவர் சந்திரன். எனவே தாயின் சாபம் பெற்றவர்கள், தாயை நல்ல முறையில் பேணி பாதுகாக்காதவர்கள், அவசியம் சோமவாரம் எனப்படும் திங்கட்கிழமையில் விரதம் இருந்து சந்திரனை வழிபடுவது நல்ல பலன்களை அள்ளித்தரும்.

டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews


சமீபத்திய செய்திகள் 

Sunday, April 11, 2021

முன்னாள் காதலனை கொலை செய்ய +2 மாணவி செய்த அதிர்ச்சி காரியம்..! | +2 Girl Killing his lover | Vil Ambu News | Tamil Latest News

நெல்லையை சேர்ந்த பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் மாணவி முன்னாள் காதலனை கொல்வதற்காக கூலி படையை ஏவி விட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை களக்காடு அருகேவுள்ள பணக்குடி புஷ்பவனம் என்கிற கிராமத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் மாணவி, தன்னுடன் படிக்கும் விக்னேஷ் என்கிற மாணவனை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் மாணவிக்கு வேறொரு மாணவனுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் விக்னேஷனை உதாசீனப்படுத்தி வந்துள்ளார்.

மாணவியின் நடவடிக்கையால் அதிருப்தி அடைந்த காதலன் விக்னேஷ், மாணவியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை காட்டி அவரை மிரட்டியதோடு, வீட்டிலும் சொல்லிவிடுவேன் என கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மாணவி முன்னாள் காதலன் விக்னேஷனை கொலை செய்ய கூலிப்படையினர் உதவியை நாடியுள்ளார்.

ஆசை வார்த்தைகள் கூறி விக்னேஷனை பெத்தானியா மலைப்பகுதிக்கு மாணவி அழைத்து வந்துள்ளார். அங்கே திடீரென கூலிப்படையினர் வந்துள்ளனர். மேலும் வெடிகுண்டு, அரிவாள், கத்தி உள்ளிட்ட பொருட்களை காட்டி கூலிப்படையினர் விக்னேஷை மிரட்டி மாணவியை தொந்தரவு செய்யாமல் விட்டுவிடும்படி கூறியுள்ளனர். அப்போதைக்கு அவர்கள் சொல்வதை கேட்பது போல நடித்த விக்னேஷ உடனடியாக அங்கிருந்து ஓடி வந்துவிட்டார்.

மேலும் இந்த விவகாரம் தொடர்பாக மாணவி மற்றும் தன்னை மிரட்டிய கூலிப்படையினர் மீது விக்னேஷ் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். விக்னேஷ் தெரிவித்த தகவலின்படி சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறை மலைப்பகுதியில் பதுங்கியிருந்த கூலிப்படையினர் 4 பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். தப்பியோடிய மாணவியை போலீசார் தேடி வருகின்றனர்.