எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...
For Advertisement
விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...
மத்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் டி.டி.ஹெச். மற்றும்
கேபிள் பயனர்கள் அவரவர் விரும்பிய சேனல்களை தேர்வு செய்ய புதிய செயலியை
வெளியிட்டுள்ளது.

மத்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் டி.டி.ஹெச்.
மற்றும் கேபிள் பயனர்கள் அவரவர் விரும்பும் சேனல்களை தேர்வு செய்ய புதிய
செயலியை அறிமுகம் செய்துள்ளது. புதிய செயலியை கொண்டு பயனர்கள் அவரவர்
விரும்பும் சேனல்களை தேர்வு செய்து, அவற்றுக்கான கட்டணத்தை அறிந்துகொள்ள
முடியும்.
டிராய் உருவாக்கி இருக்கும் பிரத்யேக
வலைதளத்தில் ஐந்து வழிமுறைகளை கடந்து, அவரவர் விரும்பும் சேனல்களை தேர்வு
செய்து கொள்ளலாம். இந்த சேவையை கொண்டு விரும்பிய சேனல்களை தேர்வு செய்வதோடு
அவற்றுக்கான கட்டணங்களையும் அறிந்து கொள்ள முடியும்.
புதிய
வலைதளத்தில் விரும்பிய சேனல்களை தேர்வு செய்ய வாடிக்கையாளர்கள் தங்களது
பெயர், வசிக்கும் மாநிலம், விரும்பும் சேனல் வகை அதன் பின் திரையில்
சேனல்கள் பட்டியலிடப்பட்டு இருக்கும். பயனர்கள் அவரவர் விரும்பும் சேனல்களை
தேர்வு செய்து மாதாந்திர கட்டணத்தை நிர்ணயித்துக் கொள்ளலாம்.
விரும்பிய சேனல்களை தேர்வு செய்த பின் அதற்கான கட்டணத்தில் இலவச
சேனல்கள், கட்டண சேனல்கள், கட்டண சேனல்களுக்கு நீங்கள் செலுத்தும் கட்டணம்,
ஜி.எஸ்.டி. வரி மற்றும் டி.டி.ஹெச். சேவை வழங்கும் நிறுவனத்திற்கு நீங்கள்
செலுத்த வேண்டிய நெட்வொர்க் கட்டணம் உள்ளிட்டவை தனித்தனியே
பட்டியலிடப்பட்டிருக்கும்.
இவற்றின் கீழ்
மொத்தமாக மாதாந்திர அடிப்படையில் நீங்கள் செலுத்த வேண்டிய தொகை
இடம்பெற்றிருக்கும். புதிய விதிமுறையின் படி இலவச சேனல்களை கட்டாயம் வாங்க
வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. சேனல் செலக்டர் வலைதளத்தில் ஹெச்.டி. மற்றும்
எஸ்.டி. சேனல்களை, சேனல் வகைகள், ஒளிபரப்பும் நிறுவனம் மற்றும் மொழி
உள்ளிட்டவற்றை தேர்வு செய்யலாம்.
புதிய
விதிமுறைகளின் படி இலவச சேனல்களுக்கான கட்டணம் ரூ.130 (வரி உள்ளிட்டவற்றை
சேர்த்து ரூ.153.40) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து
வாடிக்கையளர்கள் தேர்வு செய்யும் சேனல்களுக்கு தனியே கட்டணம் செலுத்த
வேண்டும்.
இங்கிலாந்தை சேர்ந்த பிரபலம் விக்டோரியா பெக்காம் தனது சொந்த ரத்தத்தினாலான
கிரீமை பயன்படுத்துகிறார் என்ற செய்தி பெரும் ஆச்சரியத்தை
ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்து கால்பந்து அணியின் முன்னாள் கேப்டன் டேவிட் பெக்காமின்
மனைவியும், பிரபல மாடல் அழகியுமான விக்டோரியா பெக்காம் (44 வயது) தன்
ரத்தத்தினால் தயாரிக்கப்பட்ட கிரீமை தன் முகத்திற்கு பயன்படுத்துவதாக தனது
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்து உள்ளார்.
லண்டனை சேர்ந்த மருத்துவர் பார்பரா ஸ்டர்ம்,
பிரபலங்களுக்கான ‘வேம்பையர் பேசியல்’ ( Vampire Facial) முறையை
அறிமுகப்படுத்தியுள்ளார். அந்த வித்தியாசமான முறையில் பேசியல் செய்து கொள்ள
முடிவு செய்த விக்டோரியா, தன் ரத்தத்தினாலான பிரத்யேக கிரீமை அந்த
மருத்துவரை வைத்து உருவாக்கி அதனை பயன்படுத்தி வருகிறார்.
வயதாவதால்
ஏற்படும் மாற்றத்தை தடுப்பதற்காக அவரது சொந்த ரத்த அணுக்களை எடுத்து மிக
பிரத்யேகமாக தயாரித்துள்ளார் அந்த மருத்துவர். 1200 யூரோக்கள் (இந்திய
மதிப்பில் சுமார் 97 ஆயிரம் ரூபாய்) மதிப்புள்ள கிரீமை முகத்திற்கு
பயன்படுத்தும்போது, தன் முகம் மிகவும் பொலிவுடன் இருப்பதாகவும், இதனால்
மிகவும் புத்துணர்ச்சியுடன் இருப்பதாக விக்டோரியா பெக்காம் கூறியுள்ளார்.
திருமணம் செய்யும்படி வற்புறுத்திய கள்ளக்காதலியை கொன்று உடலை எரித்தவரை போலீசார் கைது செய்தனர்.
ஆமதாபாத் நெடுஞ்சாலையில் பயந்தர் காட்டுப்பகுதியில் கடந்த சில
தினங்களுக்கு முன் பாதி எரிந்த நிலையில் பெண்ணின் உடல் மீட்கப்பட்டது.
பிரேத பரிசோதனையில் அந்த பெண் கல்லால் தாக்கி கொலை செய்து, பின்னர் தீ
வைத்து எரிக்கப்பட்டது தெரியவந்தது. இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு
செய்து விசாரித்தனர்.
(தொடர்ச்சி கீழே...)
இதில், கொலையுண்ட பெண் பால்கர் மாவட்டம் நாலச்சோப்ராவை சேர்ந்த
நிர்மலா(வயது47) என்பது தெரியவந்தது. அவரது செல்போனுக்கு அதே பகுதியை
சேர்ந்த அப்ரார் முகமது ஆலம் சேக்(40) என்பவர் அடிக்கடி போன் செய்து
பேசியிருந்தது கண்டறியப்பட்டது.
இதையடுத்து போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தினார்கள். இதில், அவர்
தான் நிர்மலாவை கொலை செய்து உடலை எரித்தது தெரியவந்தது. இந்த கொலை தொடர்பாக
கீழ்க்கண்ட தகவல்கள் தெரியவந்தன.
நிர்மலாவுக்கும், முகமது ஆலம் சேக்கிற்கும் ஒரு வருடமாக கள்ளத்தொடர்பு
இருந்து வந்துள்ளது. இதனால் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி அப்ரார்
முகமது ஆலம் சேக்கிடம், நிர்மலா வற்புறுத்தி வந்தார். ஆனால் நிர்மலாவை
திருமணம் செய்து கொள்வதில் அவருக்கு விருப்பம் இல்லை.
இந்தநிலையில் திருமணம் செய்துகொள்ளும் படி தொடர்ந்து தொல்லை கொடுத்து
வந்ததால், ஆத்திரம் அடைந்த அவர் நிர்மலாவை தீர்த்து கட்ட முடிவு செய்தார்.
அதன்படி அவர் சம்பவத்தன்று திருமணம் தொடர்பாக பேசுவதற்காக மும்பை- ஆமதாபாத்
நெடுஞ்சாலை பகுதிக்கு நிர்மலாவை அழைத்து உள்ளார். அங்கு வந்ததும்
நிர்மலாவை அவர் கல்லால் தாக்கி கொலை செய்துள்ளார்.
பின்னர் அவரது உடலுக்கு தீ வைத்துவிட்டு ஓடிவிட்டார் என்பது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அப்ரார் முகமது ஆலம் சேக்கை கைது செய்தனர்.
நெல்லை மாவட்டம், மேலச்செவலில் குடும்ப தகராறு காரணமாக மகன்களே தந்தை
மற்றும் அவரது நண்பர் ஆகிய இருவரை வெட்டிக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை
ஏற்படுத்தி இருக்கிறது.
நெல்லை மாவட்டம், மேலச்செவல் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்லக்குட்டி.
இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த செல்விக்கும் திருமணமாகி குழந்தைகள்
இருக்கிறது.
ஆனால் குடும்பத் தகராறு காரணமாக செல்வி குழந்தைகளுடன் கடந்த 15
ஆண்டுகளாக உள்ளூரில் உள்ள தந்தை வீட்டில் வசித்து வந்தார்.
ஆனால் தொடக்கம் முதலே தனது மனைவியை தன்னோடு சேர்த்து வைக்க வேண்டும் என்று
செல்லக்குட்டி, தனது மாமனார் மாடக்கண்ணு வீட்டிற்கு சென்று தகராறு செய்து
வருவது வழக்கமாக இருந்திருக்கிறது. இதே பிரச்சனைக்காக தனது மாமனாரை கொலை
செய்ய முயன்றதாகவும் செல்லக்குட்டி மீது ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட வழக்கு
நிலுவையில் இருக்கிறது.
மதுபோதையில்
இந்தப் பிரச்சனையில் செல்லக்குட்டியின் நண்பர் சுப்பு குட்டியும் இணைந்து
செயல்பட்டு வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று மாலை வழக்கமாக செல்ல
குட்டியும், சுப்புக்குட்டியும் இணைந்து குடிபோதையில் சென்று மாடக்கண்ணு
வீட்டில் தகராறு செய்து இருக்கின்றனர்.
அரிவாள் வெட்டு
அப்போது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மாடக்கண்ணுவை தாக்கி
இருக்கின்றனர். இந்த நிலையில் வேலைக்கு சென்று வீடு திரும்பிய
செல்லகுட்டியின் மகன்கள் இருவரும் சம்பவம் அறிந்து மற்றும் சிலருடன்
சேர்ந்து செல்ல குட்டி மற்றும் சுப்புக் குட்டியை அரிவாளால்
தாக்கியுள்ளனர்.
பலி
இந்த நிலையில் நேற்று இரவே சுப்புக்குட்டி மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு
மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை
பலனின்றி உயிரிழந்தார். அதே போன்று செல்லக்குட்டி அரிவாளால் தாக்கப்பட்ட
நிலையில் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.
மருத்துவக் கல்லூரி
இந்த நிலையில் இன்று காலை சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர்
செல்லக்குட்டியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு
மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
காவல் துறை
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சேரன்மகாதேவி உதவி காவல் கண்காணிப்பாளர்
ஆசை ராவத் விசாரணை மேற்கொண்டு வருகிறார். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக
செல்லக்குட்டியின் மகன்கள் இருவர் உட்பட சிலரை பிடித்து காவல் துறையினர்
விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஒரு செய்தியை ஒரே நேரத்தில் 5 பேருக்கு மட்டுமே 'ஃபார்வர்ட்' செய்ய
முடிகின்ற வகையில் வாட்ஸ் அப் நிறுவனம் மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது.
கடந்த ஆண்டு ஜூலை மாதம், இந்தியாவில் அறிமுகமான இந்த கட்டுப்பாடு மூலம்,
வதந்திகள் ஓரளவு குறைந்தது.
(தொடர்ச்சி கீழே...)
வதந்தி, போலிச் செய்திகளால் ஏற்படும் வன்முறைகளை தடுக்கப்பட வேண்டும்
என்ற, இந்திய அரசின் உத்தரவை அடுத்து, வாட்ஸ் அப் நிறுவனம், ஒரே நேரத்தில் 5
பேருக்கு மட்டுமே ஃபார்வர்ட் செய்யும், கட்டுப்பாடு விதித்தது.
ஒரு மெசேஜ் எங்கிருந்து வருகிறது, யார் அனுப்புகிறார்கள், பரப்புகிறார்கள்
என்பதைக் கண்காணிக்கும் முறையை வகுத்து வருவதாகவும் வாட்ஸ் அப் நிறுவனம்
விளக்கம் அளித்துள்ளது.
தற்போது, இந்தக் கட்டுப்பாடு உலக அளவில் அனைத்து நாட்டிலும்,
அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் 20 கோடி பேருக்கு மேல் வாட்ஸ்-அப்
பயன்படுத்தி வருகின்றனர். உலக அளவில் 150 கோடி பயனாளிகள் உள்ளனர்.
கைகள் தனியாக, கால்கள் தனியாக என கனக்கச்சிதமாக பார்சல் செய்யப்பட்ட
இளம்பெண்ணின் உடலை குப்பை மேட்டில் பார்த்து அதிர்ச்சியில் உறைந்தனர்
மாநகராட்சி ஊழியர்கள்!!
பெருங்குடியில் மிகப்பெரிய குப்பை கிடங்கு உள்ளது. இங்குதான் பாதி
சென்னையின் ஒட்டுமொத்த குப்பையும் கொட்டப்படும்.
இப்படி கோடம்பாக்கம் பகுதியிலிருந்து வந்து கொட்டப்பட்ட குப்பையில்தான்
வித்தியாசமான பார்சல்கள் இருந்ததை மாநகராட்சி ஊழியர்கள் பார்த்து
சந்தேகப்பட்டனர்.
(தொடர்ச்சி கீழே...)
துண்டாக பார்சல்
அருகில் சென்று பார்த்தபோதுதான் தெரிந்தது, அது பெண்ணின் உடல் என்பதும்,
கை, கால்கள் துண்டு துண்டாக வெட்டப்பட்டு பார்சலாகி வந்தது என்பதும். ஆனால்
உடலை மட்டும் காணவில்லை. அதிர்ச்சி அடைந்த மாநகராட்சி ஊழியர்கள் உடனடியாக
பள்ளிக்கரணை போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
பச்சை குத்தப்பட்டுள்ளது
விரைந்து வந்த போலீசாரும் இதுகுறித்து விசாரணையில் இறங்கினார். கொலை
செய்யப்பட்ட பெண் கோடம்பாக்கம் பகுதியை சேர்ந்தவரா? அல்லது வேறு பகுதியை
சேர்ந்தவரா என உடடினயாக தெரியவில்லை. கொலை செய்யப்பட்ட பெண்ணுக்கு 30
வயதிருக்கும் என கூறப்படுகிறது. அவரது கையில் 2 இடங்களில் டாட்டூ எனப்படும்
பச்சை குத்தப்பட்டுள்ளது.
பலாத்காரம்
அதாவது வலது கையில் பட்டாம்பூச்சி மற்றும் டிராகன் படம் பச்சை
குத்தப்பட்டுள்ளது. கால்களில் மெட்டி இருக்கிறது. வசதியான வீட்டு பெண்ணாக
இருக்கலாம் என தெரிகிறது. பார்சலில் உடல் பாகங்கள் இருந்தாலும், நேற்று
அல்லது நேற்று முன்தினம்தான் கொலை நடந்திருக்கும் என சொல்லப்படுகிறது.
ஆனால் பலாத்காரம் செய்துதான் இந்த கொலை நடந்திருக்க நிறையவே வாய்ப்பு
உள்ளதாக போலீசார் கருதுகிறார்கள்.
கைரேகைகள்
இப்போதைக்கு கால், கை மட்டும் கிடைத்துள்ளதால், கையிலுள்ள ரேகை எடுத்து
பார்த்து, ஆதாருடன் பொருத்தி பார்த்தால்தான் கொலை செய்யப்பட்ட பெண் யார்
என்பதும், எதற்காக கொலை செய்யப்பட்டார் என்பதும் தெரியவரும். அது
சம்பந்தமான முயற்சியில் போலீசார் இறங்கி வருவதுடன், பெண்ணின் உடல் எங்கே
உள்ளது என்றும் தேடி வருகிறார்கள்.
200 ஆடுகள் பிரியாணிக்கு ரெடியா இருக்கு... எங்கே தெரியுமா? கோயில்
பிரசாதத்துக்குதான்!!
பொதுவாக ஒரு விசேஷம் என்றால் கிடா வெட்டி விருந்து வைப்பார்கள்.
ஆனால்
கோயில் பிரசாதமாக பிரியாணியை தருவார்களா? என்பதுதான் பலரின் கேள்வியாக
உள்ளது.
மதுரை மாவட்டம், திருமங்கலம் தாலுகாவில் உள்ள கிராமம்தான் வடக்கம்பட்டி.
இந்த கிராமத்தில் உள்ள முனிஸ்வரன் கோயிலில் ஆண்டுதோறும் ஜனவரி 25-ம் தேதி
திருவிழா நடக்கும்.
(தொடர்ச்சி கீழே...)
ஆடுகள், கோழிகள்
அப்போது காலையில் பக்தர்கள் பால் குடம் எடுத்து ஊர்வலமாக வருவார்கள். பிறகு
முனியப்பசாமிக்கு பாலை ஊற்றி அபிஷேகம் செய்வர். அதன்பின்னர் நேர்த்திக்
கடனாக ஆடு, கோழிகளை ஊர்வலமாக கொண்டு வந்து கோயிலுக்குள் விடுவார்கள். அந்த
ஆடு, கோழிகள் எல்லாம் இரவு நேரத்தில் வெட்டப்பட்டு பிரியாணி தயார் ஆகும்.
மட்டன் பிரியாணி
இந்தக் கோயிலில் மட்டும்தான் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள்
மட்டுமின்றி, திருவிழா அன்று சாலையில் செல்லும் அனைவருக்கும் மட்டன்
பிரியாணி பிரசாதமாக தரப்படும். இந்த திருவிழா 3 நாட்கள் நடக்கும்.
பிரசாதம்
எப்போதும் 2 ஆயிரம் கிலோ அரிசி போட்டு, 200 ஆடுகளை வெட்டி பிரியாணி தயார்
ஆகும். இந்த பிரியாணி இரவு பகலாக சமைப்பார்கள். விடிகாலை 4 மணிக்கு மணக்க
மணக்க முனீஸ்வரனுக்கு பிரியாணியை படைத்துவிட்டு, அதன்பிறகு பக்தர்களுக்கு
பிரசாதமாக தருவார்கள்.
2000 கிலோ அரிசி
காலை நேரத்தில் பிரியாணியை பெரும்பாலும் மக்களுக்கு சாப்பிட்டு பழக்கமில்லை
என்றாலும், பிரசாதம் என்பதால் யார் வேண்டுமானாலும், எவ்வளவு
வேண்டுமானாலும், சாப்பிடுவார்கள். பலர் வீட்டிலிருந்து பாத்திரங்களை
எடுத்து வந்து பிரியாணியை வாங்கி செல்வார்கள். அதன்படி வருகிற 25-ம் தேதி
திருவிழாவுக்காக 2000 கிலோ அரிசியில் 200 ஆடுகளை வெட்டி போட்டு பிரியாணி
செய்ய போகிறார்கள்.
முனியாண்டி விலாஸ்
இந்த கோயிலில் பிரியாணியை பிரசாதமாக வழங்க காரணம், முனியாண்டி ஸ்வாமியே ஒரு
பிரியர்தானாம். இந்த கிராமத்து முனியாண்டிதான் "மதுரை முனியாண்டி விலாஸ்"
என்ற பெயரில் தமிழகம் முழுவதும் பட்டி தொட்டிகளில் பிரபலமாகி உள்ளார்
என்பது குறிப்பிடத்தக்கது.