வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Wednesday, September 30, 2020

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவமனையில் நடைபெற்ற உலக இருதய தின சிறப்பு முகாம் | World Heart Day 2020 at Melmaruvathur Hospital | Vil Ambu News

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவமனையில் செப்டம்பர் 29 உலக இருதய தினத்தை முன்னிட்டு சிறப்பு இருதய பரிசோதனை முகாமினை ஆதிபராசக்தி குழும துணைத்தலைவர் லட்சுமி பங்காரு துவக்கி வைத்தார்.

முகாமினை துவக்கி வைத்து பேசிய திருமதி அம்மா லட்சுமி பங்காரு, “தற்போதைய சூழலில் நம்மிடம் சொல்லிக் கொள்ளாமல் வருவதில் முதலிடம் நம் உடல்நல பிரச்சனைகள் தான் எனவும், சாதாரண காய்ச்சல் தலைவலி, இரும்பல், ஜலதோஷம் போன்றவைகளை விட மிக கொடிய நோய் இருதய நோய் எனவும், மனித உறுப்புகளிலேயே தலைசிறந்ததும், மிகவும் நுட்பமானதும், நம் உயிரோட்டத்தினை உறுதி செய்யக் கூடியதும் இருதயம் தான் எனவும், அதனை பேணிக்காப்பதில் நமது பங்கினை அதிகம் செலுத்த வேண்டும் எனவும்” கூறினார்.

உலக இருதய தினத்தை முன்னிட்டு ஏழை எளிய மக்கள் பலனடையும் வகையில் ரூ.750/- மதிப்புள்ள இருதய பரிசோதனையை ரூ.99/-க்கு அளித்து சாதாரண மக்களும் தங்கள் இதயத்தை பேணிக்காக்க வழிவகை செய்ய இந்த திட்டத்தினை விரும்பி துவங்கி வைத்ததாக அவர் தெரிவித்தார். இந்த இருதய தின சிறப்பு முகாம் துவக்க விழாவில் வெண்புறாக்களை பறக்கவிட்டும், இதய வடிவிலான பலூன்களை வானத்தில் பறக்கவிட்டும் நமது இருதயத்தை காப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.


ஆதிபராசக்தி மருத்துவமனையில் உலகத்தரம் வாய்ந்த அதிநவீன கருவிகளுடன் கூடிய இருதயவியல் பிரிவு 24 மணி நேரமும் திறமை வாய்ந்த மருத்துவர்களின் பங்களிப்புடன் செயல்பட்டுவருவதாக தெரிவித்தார். மேலும், இருதயம் தொடர்பான விழிப்புணர்வினை ஏற்படுத்தவும், பரிசோதனை செய்யவும் மருத்துவமனையின் சுற்றுவட்டார கிராமப்புறப் பகுதிகளில் வருகின்ற டிசம்பர் மாத இறுதி வரை மொபைல் கிளினிக் செயல்படும் எனவும், கிராமப்புற மக்கள் இதன் மூலம் எளிதில் பயனடையளாம் எனவும் தெரிவிக்கப்பட்டது.

கொரோனா காலகட்டத்தில் மருத்துவமனைக்கு வரும் அனைத்து நோயாளிகளுக்கும் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டு, முகக்கவசம் அளிக்கப்பட்டு சானிடைசர் கொண்டு கைகளை சுத்தம் செய்ய அறிவுறுத்தப்படுகிறது என ஆதிபராசக்தி மருத்துவமனை குழுமத்தின் இயக்குநர் டாக்டர். த.ரமேஷ் தெரிவித்தார். இந்த முகாம் துவக்க விழாவில் 100-க்கும் மேற்பட்ட இளைஞர்கள், பொதுமக்கள், புறநோயாளிகள் என ஏராளமானோர் சமூக இடைவெளியுடன் கலந்து கொண்டனர்.

இந்த விழிப்புணர்வு மற்றும் பரிசோதனை முகாமில் ஆதிபராசக்தி மருத்துவமனையின் இருதய சிகிச்சை நிபுணர் டாக்டர்.பத்ரீ நாராயணன் மற்றும் டாக்டர் ஹரிஹரன், தலைமை நிர்வாக அதிகாரி டி.என்.சேகர் ஆகியோர் கலந்துகொண்டனர். 


Sunday, September 27, 2020

எல்.எண்டத்தூரில் நடைபெற்ற இணையவழி தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சி | DMK Online Membership Card Function at L.Endathur | Vil Ambu News

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம் எல்.எண்டத்தூரில் 100-க்கும் மேற்பட்டோர் ஒரே நாளில் இணையவழி உறுப்பினராக தி.மு.க-வில் இணைந்தனர்.


காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்.எல்.ஏ மற்றும் மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் சு.புகழேந்தி முன்னிலையில் 100-க்கும் மேற்பட்டடோர் 24.09.2020 அன்று தி.மு.க-வில் இணையவழி உறுப்பினராக இணைந்தனர். 


அச்சிறுபாக்கம் வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் தம்பு தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய அவைத்தலைவர் சிவபெருமான் உள்ளிட்ட ஒன்றிய கழக நிர்வாகிகள் வேதாச்சலம், அசோகன், தீணன், சீனிவாசன், லெனின், மாவட்ட துணை அமைப்பாளர்கள் கலியுக கண்ணதாசன், பிரபாகரன், முன்னாள் ஒன்றிய குழுத் தலைவர் டி.ஆர்.நாராயணன், எல்.எண்டத்தூர் ஊராட்சி செயலாளர் பாண்டுரங்கன், உள்ளிட்டோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.


புதியதாக தி.மு.க-வில் இணைந்த உறுப்பினர்கள் அனைவருக்கும் “எல்லோரும் நம்முடன்” என்ற வாசகம் அடங்கிய டி-சர்ட், தொப்பி, இணையவழி உறுப்பினர் சேர்க்கைக்கான அடையாள அட்டை ஆகியவை வழங்கப்பட்டு கட்சியின் நெறிமுறைகள் குறித்த அறிவுரைகளை மாவட்ட செயலாளரும், மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினரும் வழங்கினர்.


தி.மு.க-வில் புதியதாக இணைந்த உறுப்பினர்கள் கழக முன்னோடிகளுடன் இணைந்து தமிழகத்தின் அடுத்த ஆட்சி தி.மு.க ஆட்சிதான் எனவும், அடுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின்தான் எனவும் சபதத்தினை எடுத்து அதற்கான அனைத்து களப்பணிகளையும் சிறப்பாக மேற்கொள்வோம் என கோஷமிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Friday, September 25, 2020

உத்திரமேரூர் வட்டத்தில் உயிர் பவுண்டேஷன் மற்றும் சைட்டல் குழுமம் மூலம் 130 குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட நிவாரணப் பொருட்கள் | Uyir Foundation and Sitel Group Giving Corona Relief at Uthiramerur Taluk

காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் வட்டத்தில் மேலும் 3 கிராமங்களுக்கு உயிர் பவுண்டேஷன் மூலமாக கொரோனா நிவாரண உதவிப் பொருட்கள் 20.09.2020 அன்று வழங்கப்பட்டது.   

புத்தளி, இருமரம், கருவேப்பம்பூண்டி ஆகிய கிராமங்களில் சுமார் 130 குடும்பத்தினர்களுக்கு சென்னை தரமணி சைட்டல் குழுமம் (SITEL GROUP) மற்றும் சென்னை சேலையூரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டுவரும் உயிர் பவுண்டேஷன் மூலமாக அரிசி, மளிகைப் பொருட்கள் அடங்கிய நிவாரண பொருட்கள் உயிர் பவுண்டேஷனின் நிறுவனர் சி.சி.ஷெலின் ரூபன் மற்றும் மேலாளர் கிறிஸ்டினா ஜஸ்டின் ஆகியோர் தலைமையில், திட்ட ஒருங்கினைப்பாளர் அரங்கநாதன் முன்னிலையில் வழங்கப்பட்டது. சைட்டல் நிறுவனத்தின் மனிதவள இயக்குநர் கல்பக், கள இயக்குநர் சுரேஷ் மற்றும் மனிதவள மேலாளர் மேரி ஆகியோர் ஏற்பாட்டில் இந்த நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது.

பொதுமக்கள் சமூக இடைவெளிவிட்டு நிவாரணப் பொருட்களை பெற்றுச் சென்றதோடு சைட்டல் குழுமம் மற்றும் உயிர் பவுண்டேஷனுக்கு தங்களது நன்றிகளை தெரிவித்தனர். உத்திரமேரூர் வட்டத்தில் கொரோனா ஊரடங்கு காலத்தில் பலகட்டங்களாக இந்த தொண்டு நிறுவனம் பல்வேறு கிராமங்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.





 

Sunday, August 23, 2020

தனியார் பள்ளியில் இலவச கல்வி அட்மிஷன் ஓப்பன் | TNRTE 2020-21 | Vil Ambu News


பள்ளி மாணவர்களுக்கு தரமான கல்வியை வழங்குவதற்காக அரசு பள்ளிகளும் தற்போது அதிக முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. மேலும், தனியார் பள்ளிகளிலும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் 25% இட ஒதுக்கீடு செய்து ஆண்டுதோறும் இலவச கல்வியை வழங்கி வருகிறது. 
இதனடிப்படையில் 2020-21-ம் ஆண்டிற்கான கட்டாய கல்வி சட்டம் (RTE – Rights to Education) திட்டத்தில் தங்கள் குழந்தைகளை சேர்ப்பதற்கான விண்ணப்பம் ஆன்லைன் முறையில் வருகின்ற 27.08.2020 காலை 10.00 மணி முதல் துவங்க உள்ளது. இதற்கான இணையதளம் rte.tnschools.gov.in. இதற்கு மாணவரின் புகைப்படம், ஆதார் அட்டை, பிறப்புச் சான்றிதழ், சாதி, வருமானம், இருப்பிடச் சான்றிதழ்கள், பெற்றோரின் ஆதார் அட்டை போன்றவை அவசியம்.
மாணவர்களின் வீட்டு முகவரியிலிருந்து 2 கி.மீ தொலைவில் உள்ள தனியார் பள்ளிகளிலோ அல்லது அருகில் உள்ள தனியார் பள்ளிகளிலோ ஜியோடேகிங் முறையில் சேர்க்கை  விண்ணப்பிக்கப்படும்.
தங்கள் வீட்டு விலாசத்திலிருந்து வேறு மாவட்ட பள்ளிகளில் சேர்க்கை செய்ய இயலாது என குறிப்பிடப்பட்டுள்ளது. மாணவர் சேர்க்கை விண்ணப்பத்திற்கான கடைசி தேதி இதுவரை அறிவிக்கப்படவில்லை.



Saturday, August 22, 2020

உத்திரமேரூர் வட்டத்தில் உயிர் பவுண்டேஷன் மூலம் மேலும் 6 கிராமங்களில் வழங்கப்பட்ட நிவாரணப் பொருட்கள் | Uyir Foudation giving Corona Relief at Uthiramerur Taluk


காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் வட்டத்தில் மேலும் 6 கிராமங்களுக்கு உயிர் பவுண்டேஷன் மூலமாக கொரோனா நிவாரண உதவிப் பொருட்கள் 22.08.2020 அன்று வழங்கப்பட்டது.
மணல்மேடு, ஒழுகரை, தளவாரம்பூண்டி, மருத்துவம்பாடி, மருதம், வினோபா நகர் ஆகிய கிராமங்களில் கொரோனா தடுப்பு ஊரடங்கு உத்தரவினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள 300 குடும்பத்தினர்களுக்கு சென்னை சேலையூரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டுவரும் உயிர் பவுண்டேஷன் மூலமாக அதன் நிறுவனர் சி.சி.ஷெலின் ரூபன் மற்றும் மேலாளர் கிறிஸ்டினா ஜஸ்டின் ஆகியோர் தலைமையில், திட்ட ஒருங்கினைப்பாளர் அரங்கநாதன் முன்னிலையில் வழங்கப்பட்டது.
பொதுமக்கள் சமூக இடைவெளிவிட்டு நிவாரணப் பொருட்களை பெற்றுச் சென்றதோடு உயிர் பவுண்டேஷனுக்கு தங்களது நன்றிகளை தெரிவித்தனர். ஏற்கெனவே, உத்திரமேரூர் வட்டத்தில் இந்த தொண்டு நிறுவனம் பல்வேறு கிராமங்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Saturday, August 01, 2020

இனி 1000 அபராதம் | எதற்கு...? | 1000 rupees penalty for using less quality helmets

இந்தியாவில் இரு சக்கர வாகனங்களில் ஏற்படும் சாலையில் விபத்து குறித்து அரசாங்கம் ஒரு புதிய விதியை செயல்படுத்தப் முடிவெடுத்துள்ளது. 


காவல் துறை விதிக்கும் அபாரதத்துக்கு பயந்து மக்கள் தலையில் மலிவான மற்றும் உள்ளூர் தலைக்கவசங்களை அணிந்துகொண்டு பயணம் செய்து வருகிறார்கள்.


இதன் காரணமாக விபத்தில் தலை உடைந்து, தலையில் ஆழமான காயம் காரணமாக மனிதனின் உயிருக்கு ஆபத்தான நிலையில் தள்ளப்படுகிறார்கள் சிலர் மரணமடைந்து உள்ளனர்.

ஒவ்வொரு நாளும் தரமில்லாத ஹெல்மெட் மற்றும் ஹெல்மெட் இல்லாமல் வாகனத்தில் செல்பவர்கள் 28 பைக் சாலை விபத்துக்களில் பலியாகின்றனர்.

Local, unbranded தலைக்கவசங்களைப் பயன்படுத்துவதை தடுக்க நடவடிக்கை எடுத்துள்ளது.

புதிய சட்டத்தின்படி, உள்ளூர் ஹெல்மெட் அணிந்து வாகனம் ஓட்டுபவருக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.
இது தவிர, உள்ளூர் தரமில்லாத உத்தரவாதம் இல்லாத ஹெல்மெட் தயாரிப்பவர்களுக்கு இரண்டு லட்சம் ரூபாய் அபராதமும் சிறை தண்டனையும் வழங்கப்படும்.

பைக் ஓட்டுநர்களுக்கு பாதுகாப்பான ஹெல்மெட் வழங்குவதற்காக சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் இதை முதல் முறையாக BSI பட்டியலில் சேர்த்துள்ளது. ஜூலை 30 ம் தேதி வெளியிடப்பட்ட அறிவிப்பில் சாலை பாதுகாப்பு அமைச்சகம் பரிந்துரைகளையும் கோரியுள்ளது.

இதை விதி 30 நாட்களுக்குப் பிறகு இந்த புதிய விதி நடைமுறைக்கு வரும். புதிய விதி நடைமுறைக்கு வந்த பிறகு, ஹெல்மெட் உற்பத்தி நிறுவனங்கள் BSI சான்றளிக்கப்பட்ட தலைக்கவசங்களை மட்டுமே தயாரித்து விற்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய தரத்தில், ஹெல்மட்டின் எடை ஒன்றரை கிலோவிலிருந்து ஒரு கிலோ 200 கிராம் வரை குறைக்கப்பட்டுள்ளது. பிஐஎஸ் அல்லாத ஹெல்மெட் உற்பத்தி குற்றமாகக் கருதப்படும் என அறிக்கையில் தெரிவித்துள்ளது.

30 மணி நேரத் தளர்வில்லா முழு ஊரடங்கு | விவரம் உள்ளே | 30 hours full Lock down Sunday | Vil Ambu News

இன்றிரவு 12 மணி முதல் திங்கட்கிழமை காலை 6 மணி வரை 30 மணி நேரத் தளர்வில்லா முழு ஊரடங்கு அமலாகிறது.




மருத்துவம் சார்ந்த காரணங்கள் தவிர வேறு எதற்கும் பொதுமக்கள் வெளியில் வரக்கூடாது எனப் போக்குவரத்து காவல்துறை எச்சரித்துள்ளது.
சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை இன்று வெளியிட்டுள்ள எச்சரிக்கை அறிவிப்பு:

''சென்னை பெருநகரக் காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஆகஸ்டு 01 (இன்று) இரவு 12 மணி முதல் ஆகஸ்டு 03 (திங்கட்கிழமை) காலை 6 மணி வரை தமிழக அரசு எந்தவிதத் தளர்வும் இன்றி முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது.


அதன்படி ஆகஸ்டு 02 (ஞாயிற்றுக்கிழமை) அன்று பால் விநியோகம், மருத்துவமனைகள், மருந்துக் கடைகள், மருத்துவமனை ஊர்திகள், அவசர மற்றும் அமரர் ஊர்திகள் தவிர எந்தவிதமான செயல்பாடுகளுக்கும் அனுமதி கிடையாது.

அநாவசியமாக வீட்டை விட்டு வெளியே வருவதையும், தெருக்களில் சமூக இடைவெளியின்றி கூட்டமாகக் கூடி நிற்பதையும் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. அவசர மருத்துவத் தேவைகளுக்கு மட்டுமே தனியார் வாகன உபயோகம் அனுமதிக்கப்படுகிறது.


இதைத் தவிர வேறு எந்தவித வாகனங்களுக்கும் அனுமதி இல்லை.
மீறிவரும் வாகனங்கள் மீது குற்றவியல் நடைமுறைப் பிரிவு 144-ன் படி வழக்குப்பதிவு செய்யப்பட்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் எனத் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. இதற்காக நகரம் முழுவதும் 193 சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு இருக்கின்றன.

இது தொடர்பாக சந்தேகங்கள் இருப்பின் போக்குவரத்து காவல் கட்டுப்பாட்டு அறை எண்கள் 044-23452330/ 044-23452362 அல்லது 90031 30103 எனும் எண்களைத் தொடர்பு கொண்டு விளக்கம் பெற்றுக்கொள்ளலாம்'.
இவ்வாறு சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.