வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Thursday, November 22, 2018

கஜாவை தொடர்ந்து கஜஶ்ரீ - கேள்விப்பட்டீர்களா.....?



கஜா புயலின் போது நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டார்ச் லைட் வெளிச்சத்தில் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு கஜஸ்ரீ என பெயரிடப்பட்டுள்ளது.

கடந்த நவம்பர் 15-ஆம் தேதி நாகையில் கஜா புயல் வேதாரண்யம் அருகே கரையை கடந்தது. அப்போது தஞ்சை, நாகை, புதுக்கோட்டை, திண்டுக்கல். கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதில் பலர் வீடு, கால்நடைகள், வாழ்வாதாரம் ஆகியவற்றை இழந்தனர். இந்நிலையில் நாகையில் கஜா புயலின்போது ஆரம்ப சுகாதார நிலையத்தில் டார்ச் வெளிச்சத்தில் பெண்ணுக்கு பிரசவம் நடைபெற்றது.


தேவூர் அரசு 
நாகை மாவட்டம் தெற்களத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ். இவரது மனைவி மஞ்சுளா. இவர் கஜா புயலின்போது கடந்த வியாழக்கிழமை தேவூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்க்கப்பட்டார். (தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!

மழை நீர் 
கஜா புயலின் போது பிறந்ததால் அக்குழந்தைக்கு கஜஸ்ரீ என பெயரிடப்பட்டுள்ளது. இதுகுறித்து மஞ்சுளா கூறுகையில் மருத்துவமனையில் என்னை சேர்த்தனர். அப்போது கனமழை பெய்தது. மருத்துவமனையில் ஜன்னல் வழியாக மழைநீர் புகுந்தது.
 
நண்பன்  
அப்போது கரென்ட்டும் இல்லை. இதனால் டார்ச் லைட்டை அடித்து மருத்துவர்கள் பிரசவம் பார்த்தனர் என்றார் மஞ்சுளா. இவர்களுக்கு 2 வயதில் கனிஷ்கா என்ற குழந்தை உள்ளது. விஜய் நடிப்பில் வெளிவந்த நண்பன் படத்திலும் இதுபோன்ற ஒரு காட்சி வைக்கப்பட்டிருந்தது.
பிரசவ வலி 
அதிலும் இரவு நேரத்தில் மழை பெய்யும் போது ஒரு கர்ப்பிணிக்கு பிரசவ வலி ஏற்படும். மழையால் மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டிருக்கும். அந்த பெண்ணுக்கு விஜய் பிரசவம் பார்ப்பது போன்ற காட்சி படமாக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts

நமது வீட்டில் நடக்கும் ஒவ்வொரு விஷேசத்திற்கும் தேங்காய் கொண்டு சாமிக்கு பூஜை செய்வது என்பது ஒரு சம்பிரதாய சடங்காகும். அப்படி ..

ஊனமுடன் வளர்ந்த சிசு - வேதனையில் கர்ப்பிணி தூக்கிட்டுத் தற்கொலை.. வளைகாப்புக்கு முதல் நாள்!



கருவில் குழந்தை ஊனம் என தெரிந்ததால் கர்ப்பிணி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அவருக்கு இன்று வளைகாப்பு நடைபெற இருந்த நிலையில் இந்த சோக சம்பவம் நடந்தேறியுள்ளது. 

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள நீர்குந்தி கிராமத்தைச் சேர்ந்தவர் சீனிவாசன். இவருடைய மனைவி சங்கீதா (20). இவர்களுக்கு கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது.



ஸ்கேன் பரிசோதனை 
சங்கீதா 9 மாத கர்ப்பிணியாக இருந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அவருக்கு ஸ்கேன் பரிசோதனை செய்யப்பட்டது. (தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!

வளைகாப்பு  
அப்போது அவரது கருவில் இருந்த குழந்தை ஊனமாக இருந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனால் சங்கீதா மனமுடைந்து காணப்பட்டார். இந்நிலையில் அவருக்கு இன்று வளைகாப்பு நடைபெற இருந்தது.


இறப்பு
வீட்டில் யாரும் இல்லாத நிலையில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை பார்த்த அவரது குடும்பத்தினர் சங்கீதாவை மீட்டு பென்னாகரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சங்கீதா இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

விசாரணை  
இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. சங்கீதாவுக்கு திருமணமாகி ஓராண்டே ஆவதால் இதுதொடர்பாக உதவி ஆட்சியர் விசாரணை நடத்தி வருகிறார். இன்று வளைகாப்பு நடைபெற இருந்த நிலையில் சங்கீதா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts



முன்னாள் காதலரை கொன்று உடலை வெட்டி பிரியாணி போட்டு பிறருக்கு கொடுத்த பெண்



முன்னாள் காதலரை கொன்று பிரியாணி போட்டு பிறருக்கு கொடுத்த பெண் அபுதாபி: அபுதாபியில் பெண் ஒருவர் தனது முன்னாள் காதலரை கொலை செய்து அவரின் உடலை சமைத்து கட்டுமானப் பணி செய்யும் ஆட்களுக்கு கொடுத்துள்ளார்.
மொராக்கோவை சேர்ந்த 30 வயது பெண் அபுதாபியில் வசித்து வருகிறார். அவர் 20களில் இருக்கும் நபர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். அந்த நபருக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு ஏற்படவே இவரை பிரிந்துவிட்டார்.


இந்த காரணத்தால் ஆத்திரம் அடைந்த அந்த பெண் அவரை கொலை செய்து உடலை துண்டு போட்டு அரிசி, கறியுடன் சேர்த்து பிரியாணி சமைத்து கட்டுமானப் பணி செய்து வரும் பாகிஸ்தானியர்களுக்கு விருந்தாக அளித்துவிட்டார். (தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!
தாங்கள் சாப்பிடுவது மனித கறி என்று தெரியாமல் அவர்களும் சாப்பிட்டுள்ளனர். மீதமுள்ள கறியை அவர் நாய்க்கு போட்டுள்ளார். இந்த சம்பவம் நடந்து சில மாதங்கள் ஆகிவிட்டது. ஆனால் இது குறித்து தற்போது தான் தெரிய வந்துள்ளது
 
கொலை செய்யப்பட்ட நபரை தேடிக் கொண்டு அந்த நபரின் சகோதரர் மொராக்கோ பெண்ணின் வீட்டிற்கு சென்றுள்ளார். சமையல் அறையில் இருந்த பாத்திரம் ஒன்றில் மனித பல் இருப்பதை பார்த்து சந்தேகம் ஏற்பட்டு அவர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வந்து விசாரித்தபோது தான் தனது முன்னாள் காதலரை பழி வாங்க அவரை கொலை செய்ததை அந்த பெண் ஒப்புக் கொண்டார். அந்த பெண்ணும், கொலை செய்யப்பட்ட நபரும் 7 ஆண்டுகளாக திருமணம் செய்து கொள்ளாமல் லிவ் இன் முறைப்படி ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் தான் அந்த நபர் மொராக்கோவை சேர்ந்த வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்ய திட்டமிட்டார் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


சற்றுமுன் இந்திய வானிலை மையம் விடுத்த எச்சரிக்கை! சென்னைக்கு வரப்போகும் ஆபத்து!!



வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வலுப்பெற்றுள்ளதால், சென்னையில் இன்று முதல் அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை பெய்யும் என இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.


இது தொடர்பாக இந்திய வானிலை மையம் கூறியதாவது, வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு பகுதியானது தாழ்வு மண்டலமாக மாறுகிறது. இதனால் சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்கள் மற்றும் டெல்டா பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை பெய்யும். மேலும், காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் மேலும் வலுப்பெற உள்ளதால் தமிழகம் மற்றும் புதுவையில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.


இந்நிலையில் தற்போது சென்னையில் சென்னை, அம்பத்தூர், அண்ணாநகர், வில்லிவாக்கம், வடபழனி, கோயம்பேடு, மயிலாப்பூர், சேப்பாக்கம், திருவான்மியூர், மீனம்பாக்கம் தாம்பரம், பெருங்குடி, போரூர் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்து வருகிறது.


அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


கோவிலில் தேங்காய் உடைக்கும் போது அழுகி இருந்தால் என்ன அர்த்தம்?



நமது வீட்டில் நடக்கும் ஒவ்வொரு விஷேசத்திற்கும் தேங்காய் கொண்டு சாமிக்கு பூஜை செய்வது என்பது ஒரு சம்பிரதாய சடங்காகும்.



அப்படி இருக்கும் போது நமது வீட்டில் அல்லது கோவில் பூஜைக்கு பயன்படுத்தும் தேங்காய் அழுகிய நிலையில் இருந்தால் அதற்கு என்ன அர்த்தம் என்று தெரிந்து கொள்ளுங்கள்.

தேங்காய் அழுகி இருந்தால் என்ன அர்த்தம்?

தேங்காயில் இருக்கும் மூன்று கண்களில் முதல் கண் பிரம்மன், இரண்டாம் கண் லஷ்மி, மூன்றாம் கண் சிவன் என்று போற்றப் படுகிறது.


அப்படி இருக்கும் தேங்காயை நாம் பயன்படுத்தும் போது, அது அழுகி இருப்பது, கோணலாக உடைவது, சிதறு தேங்காய் உடைக்கும் போது சுக்கு நூறாக உடைவது, தேங்காயில் பூ வருவது இது போன்ற அனைத்து விஷயத்திற்கும் நன்மை மற்றும் தீமைக்கான சகுனங்கள் உண்டு.
அந்த வகையில் தேங்காய் உடைக்கும் போது, அது அழுகிய நிலையில் இருந்தால், அவர்களுக்கு அது ஏமாற்றம் மற்றும் கலக்கத்தை கொடுத்து, மனதில் குழப்பத்தை அளிப்பதால், இதை நாம் அபசகுனமாக நினைக்கிறோம்.


ஆனால், உண்மையில் நாம் உடைக்கும் தேங்காய் அழுகி இருந்தால், அது நல்ல அறிகுறி என்றும். அவர்களை அண்டி இருக்கும் தீய சக்திகள், பீடை, கண்திருஷ்டி போன்றவை அகன்று போகிறது, எனவே இது ஒரு நல்ல அறிகுறி தான் என்று கூறப்படுகிறது.
நாம் உடைக்கும் தேங்காய் கொப்பரையாக இருந்தால், அவர்களின் வீட்டில் சுப காரியங்கள் நடக்க வாய்ப்புகள் உள்ளது என்று அர்த்தமாகும்.
நாம் உடைக்கும் தேங்காயில் பூ இருந்தால், அது நமக்கு பணவரவு, நல்ல லாபம், எதிர்பாராத நல்ல விஷயங்கள் போன்றவை நடக்கும் என்பதை குறிக்கும் ஒரு நல்ல சகுனமாக கருதப்படுகிறது.


அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts