Run World Media: 09/30/18

உங்கள் இமெயிலை உள்ளிடுங்கள்-உங்கள் Inboxல் Confirm செய்யுங்கள் நமது செய்தி உடனுக்குடன் வந்து சேரும்

எங்களது பிற செய்திகளை இங்கு தேடவும்

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Sunday, September 30, 2018

ஹீரோ முன் ஆடைகளை களைந்து நடனமாட கூறினார்கள் – தனுஸ்ரீ தத்தாதமிழில் ‘தீராத விளையாட்டு பிள்ளை’ படத்தில் கதாநாயகியாக நடித்தவர் தனுஸ்ரீ தத்தா. இவர் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் பேசும்போது இந்தி நடிகர் நானா படேகர் மற்றும் நடன இயக்குனர் கணேஷ் ஆச்சாரியா ஆகியோர் மீது பாலியல் புகார் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

அவர் கூறும்போது, ‘‘2008–ம் ஆண்டு ஹார்ன் ஓகே ப்ளீஸ் என்ற படத்தில் நடித்தபோது நானா படேகர் எனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். அதை வெளியே சொல்லக்கூடாது என்று அவரது ஆதரவாளர்கள் என்னை மிரட்டினார்கள். என் குடும்பத்தினருடன் சென்றபோது தாக்கினார்கள்.
நானா படேகர் பெண்களை மதிப்பது இல்லை. சில நடிகைகளை அடித்து இருக்கிறார். என்னைப்போல் பல புதுமுக நடிகைகள் இதுபோன்ற தொல்லைகளை சந்தித்துக்கொண்டு பொறுமையாக இருக்கிறார்கள்’’ என்றார். ரஜினிகாந்த் போன்ற பெரிய நடிகர்கள் தங்கள் படங்களில் நானா படேகரை நடிக்க வைக்கக்கூடாது என்றும் தெரிவித்தார்.

இதனை ‘ஹார்ன் ஓகே ப்ளீஸ்’ படத்தில் நடன இயக்குனராக பணியாற்றியவரும், தமிழில் ஜீவாவின் ரவுத்திரம் படத்தில் நடித்தவருமான கணேஷ் ஆச்சாரியா மறுத்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று டிஎன்ஏ பத்திரிகைக்கு பேட்டி அளித்தார். அப்போது தனுஸ்ரீ தனது முதல் படமான ‘சாக்லேட்: டீப் டார்க் சீக்ரெட்ஸ்’ (2005) பிரத்தியேகமாக பேசினார். அந்த படத்தில் அவருடன் அனில் கபூர், சுனில் ஷெட்டி, இர்பான் கான், இம்ரான் ஹஷ்மி ஆகியோரும் நடித்து இருந்தனர். தனுஸ்ரீ படப்பிடிப்பின் போது எனக்கு நடந்த மிகவும் விரும்பத்தகாத சம்பவத்தை பகிர்ந்து கொண்டார்.

அவர் கூறியதாவது:-
இயக்குனர் (விவேக் அக்னிஹோத்ரி) வெளிப்படையாக என்னிடம் கேட்டார். உனது ஆடைகளை களைந்து நடனம் ஆடு (‘கப்டே உத்தர் கே நாச்சோ) என என்னிடம் கூறினார். நான் கலங்கி போனேன், ஆனால் இர்பான் ஜென்டில்மேன் அவர் உடனடியாக இயக்குனரை நிறுத்துமாறு கூறினார். இயக்குனர் எப்படி நடந்துகொள்வார் என்பது அவருக்குத் தெரியும் என்றும் அவருக்கு யாரும் அறிவுரை கூற தேவையில்லை என்றும் கூறினார். சுனில் ஷெட்டியும் டைரக்டரிடம் இதற்கு கண்டனம் தெரிவித்தார்.
அந்த இயக்குனர் இர்பானுக்கு சாதாகமாக செயல்பட கூறினார். இது ஒரு நடிகரின் குளோசப் ஷாட். இது என் ஷாட் கூட இல்லை. நான் கூட ஷாட்டில் இருக்க போவதில்லை. அப்போது தான் நடிகருக்கு எதிரில் ஆடைகளை களைந்து நடனமாட கூறினார். அந்த ஆண் நடிகர் இயக்குனரிடம் ‘அவளது உடம்பையும் நடனத்தையும் காணவேண்டிய அவசியம் தேவை இல்லை என கூறவேண்டி இருந்தது, இது தான் இர்ஃபான் கான். நான் உண்மையில் அவரை பாராட்டினேன் அது அவரது குளோசப் ஷாட். நான் பிரேமில் இல்லை.

அவருக்கு குளோசப் ஷாட்டில் முகபாவம் வர நான் அவர் முன் ஆடைகளை களைந்து நடனமாட கூறினார். இதனால் தான் நான் அதிர்ச்சி அடைந்தேன். நடிகர் திகிலடைந்தார். இயக்குனரிடம், ‘நீங்கள் என்ன பேசுகிறீர்கள்? நான் என் குளோசப் முகபாவத்தை காட்டுகிறேன். அது எனது நடிப்பு என கூறினார். சுனில் ஷெட்டியும் இது குறித்து பேசினார். தொழிலில் நல்லவர்கள் இருக்கிறார்கள். இர்பான் கான் மற்றும் சுனில் ஷெட்டி ஆகியோர் எனக்காக பேசினர் என கூறினார்.


Popular Posts

10 வயது சிறுமிக்கு ரத்த வியர்வைகிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி அருகே கூலி தொழிலாளியின் மகளுக்கு வியர்வையாக ரத்தும் வெளியேறுவதால் பெற்றோர்கள் செய்வதறியாமல் திகைத்து வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கங்கோஜிகொத்தூர் ஊராட்சியில் உள்ள கிராமம் ஜெகநாதபுரம். 


 

 இந்த கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளிகளான நாகராஜ் & லட்சுமிதேவி தம்பதியினருக்கு அர்ச்சனா(10), தர்ஷணி(8), பல்லவி(5) என மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர். மூத்த மகளான அர்ச்சனா, அதே கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் அர்ச்சனாவிற்கு கடந்த ஜூலை மாதம் முதல் திடீரென மூக்கில் இருந்து ஒரே நாளில் அதிக அளவு ரத்தம் வெளியேறியுள்ளது. 

இதற்காக கிருஷ்ணகிரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் கிசிச்சை பெற்றார். இதையடுத்து அடுத்தடுத்து சில நாட்களில் உடலில் வியர்வை வெளியேறுவது போல், கண்கள், மூக்கு, காது, கைகள் உள்ளிட்ட உடலில் பல்வேறு இடங்களில் இருந்து ரத்தம் வெளியேறியுள்ளது.
இதையடுத்து அர்ச்சனாவின் பெற்றோர்கள், ஓசூர், ஆந்திரா மாநிலம் குப்பம், கர்நாடகா மாநிலம் பெங்களூர் போன்ற இடங்களில் உள்ள புகழ்பெற்ற தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். 


 

 அங்கு சிறுமியை பரிசோதனை செய்த மருத்துவர்கள், ரத்தத்தில் எவ்வித பாதிப்பும் இல்லை என்று கூறியுள்ளனர். ஆனாலும் தொடர்ந்து சிறுமி அர்ச்சனாவில் உடலில் இருந்து ரத்தம் வெளியேறுவதை பார்த்த பெற்றோர்கள் நேற்று முன்தினம் கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த வாராந்திர மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில், கலெக்டர் பிரபாகரிடம், தன் மகளை அழைத்து சென்று, நிலமையை விளக்கி கூறி உதவி செய்யுமாறு மனு அளித்தனர். உடனடியாக சிறுமியை கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் குழந்தைகள் நலப்பிரிவில் அனுமதித்து உரிய சிகிச்சை அளிக்க கலெக்டர் உத்தரவிட்டார். 


 

 இதனையடுத்து அர்ச்சனாவை கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவரை டாக்டர்கள் பல்வேறு பரிசோதனை செய்து, சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர்.
இது குறித்து சிறுமி அர்ச்சனாவின் தந்தை நாகராஜ் கூறுகையில், அர்ச்சனாவிற்கு உடலில் வியர்வை தண்ணீர் வருவது போல் ரத்தம் வருவதை கண்டு, பல தனியார் மருத்துவமனைகளில் பரிசோதனை செய்தும் எவ்வித முன்னேற்றமும் இல்லை. இதுவரை ஒரு லட்சத்து 30 ஆயிரம் வரை கடன் வாங்கி செலவு செய்துள்ளேன். அன்றாடம் கூலி வேலை செய்து 3 பெண் குழந்தைகளை வளர்க்க முடியாமல் சிரமம் அடைந்துள்ளேன். தற்போது, அர்ச்சனாவின் மருத்துவ செலவிற்கு போதிய வசதி இல்லை என்பதாலேயே கலெக்டரிடம் அழைத்து வந்தேன் என வேதனையுடன் கூறினார்.


 

 இது குறித்து மாவட்ட நலப்பணிகள் இணை இயக்குநர் டாக்டர். அசோக்குமார், குழந்தைகள் நல சிறப்பு மருத்துவர்கள் செல்வி, மது ஆகியோர் கூறுகையில், சிறுமி அர்ச்சனா கடந்த திங்கட் கிழமை முதல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். 4 முறை உடலில் ரத்தம் வெளியேறியது. பல்வேறு ரத்த பரிசோதனைகள் செய்யப்பட்டு வந்த அறிக்கையில், ரத்தத்தில் எந்த பாதிப்பும் இல்லை என தெரியவந்துள்ளது. சிறுமிக்கு ஏற்பட்டுள்ள இவ்வகை பாதிப்பு மருத்துவத்துறையில் அரிதாக காணப்படும். த்ரோபாஸ்டினியா எனப்படும் ரத்த ஒழுங்கின்மையின் காரணமாக ஏற்படும் ரத்தப்போக்காக இருக்ககூடும் என்கிற சந்தேகம் உள்ளது. இது குறித்து ஆய்வுகள் மேற்கொள்ள சிறுமியை, சென்னையில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் சிகிச்சைக்கு பரிந்துரை செய்ய உள்ளோம். அங்கு, குருதியியல் வல்லுநர்கள், சிறுமி உடலில் உள்ள ரத்தத்தின் இயற்கை மற்றும் அதன் நோய்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டு சிகிச்சை அளிப்பார்கள். சிறுமியின் உடலில் ரத்தம் வெளியேறினாலும், ரத்த அளவு சீராக, நலமுடன் உள்ளார். இவ்வாறு அவர்கள் கூறினர். 

 இது குறித்து மாவட்ட கலெக்டர் டாக்டர் பிரபாகர் கூறுகையில், சிறுமிக்கு ரத்த தட்டணுக்களில் பாதிப்பு உள்ளதா என்பது குறித்து மருத்துவக்குழுவினர் கண்காணித்து வருகின்றனர். இது ஒரு அரிய நோயாகும். உயர்தர சிகிச்சையளிக்க, முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் சிறப்பு அனுமதி பெற்று, சிறுமிக்கு தேவையான உதவிகளும் அரசு மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

சின்னத்திரையில் சூரிஒரு காலத்தில் சின்னத்திரையில் இருந்து சினிமாவிற்கு வரும் நடிகர் நடிகைகளுக்கு வரவேற்பு இல்லாமல் இருந்து வந்தது. ஆனால் சமீபகாலமாக சினிமா நடிகர், நடிகைகளே சின்னத்திரையில் தோன்ற ஆசைப்படும் அளவுக்கு சின்னத்திரை பிரபலமாகி விட்டது.அதனால் தான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தோன்றிய கமல்ஹாசன், சினிமாவில் கிடைத்ததை விட பெரிய புகழ் சின்னத்திரையில் தனக்கு கிடைத்ததாக சொன்னார். அவரைத்தொடர்ந்து விஷாலும் சின்னத்திரைக்கு வருகிறார்.
இந்நிலையில், தமிழ் சினிமாவில் பிசியான காமெடியனாக நடித்து வரும் சூரியும், தற்போது கலர்ஸ் தமிழ் சேனலுக்காக உருவாகி வரும் திருமணம் என்ற தொடரில் நடித்துள்ளார். ஆனால், அவர் சீரியலின் கேரக்டராக தோன்றவில்லை. திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி விட்டு செல்பி எடுத்துக்கொள்வது போன்று ஒரு சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.
இதே கலர்ஸ் சேனலில் நடிகர் ஆர்யா, எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற நிகழ்ச்சியில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

ஊழியர்களுக்கு கார் பரிசு வைர வியாபாரி அசத்தல்


சூரத் குஜராத் மாநிலம், சூரத்தை சேர்ந்த வைர வியாபாரி ஒருவர், தன் நிறுவனத்தில், 25 ஆண்டுகளாக பணிபுரியும் மூன்று ஊழியர்களுக்கு, 'மெர்சிடிஸ் பென்ஸ்' என்ற சொகுசு காரை பரிசாக அளித்துள்ளார்.குஜராத்தில், முதல்வர் விஜய் ரூபானி தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள சூரத்தில், வைர வியாபாரம் செய்து வருபவர், சாவ்ஜி டொலாக்கியா.
இவரது வைர நிறுவனத்தின் ஆண்டு வருமானம், 6,000 கோடி ரூபாய். இவர், தன் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு, ஒவ்வொரு ஆண்டும், வீடு, கார், தங்க நகை போன்றவற்றை பரிசாக வழங்கி, ஊக்குவித்து வருகிறார்.இந்த ஆண்டு, தன் நிறுவனத்தில், 25 ஆண்டுகளாக பணிபுரியும் மூன்று ஊழியர்களை பாராட்டி, ஒரு கோடி ரூபாய் விலையுள்ள, 'மெர்சிடிஸ் பென்ஸ்' என்ற சொகுசு காரை பரிசளித்துள்ளார்.இது குறித்து, சாவ்ஜி கூறியதாவது:


என் நிறுவனத்தில், 13 - 15 வயதில் வேலைக்கு சேர்ந்த இவர்கள் மூவரும், வைர கற்களை பிரிப்பது, செதுக்குவது போன்ற அடிப்படை வேலைகளை கற்று, படிப்படியாக முன்னேறி, இன்று முக்கிய பொறுப்பில் உள்ளனர்.இவர்களின் பணி மற்றும் நேர்மையை பாராட்டி, கார்களை பரிசளித்துள்ளேன்; இது மற்ற ஊழியர்களையும் ஊக்குவிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

இன்னும் அவ வயசுக்குகூட வரலம்மா... அதுக்குள்ள! - தேனி சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்தேனி அல்லிநகரத்தைச் சேர்ந்தவர் ராஜா. இவருடைய 11 வயது மகள் ராகவி. கடந்த செவ்வாய்க்கிழமை வீட்டில் தூக்குமாட்டி தற்கொலை செய்துகொண்டார். இதையடுத்து தன் மகளின் இறப்பில் சந்தேகம் இருப்பதாகச் சொல்லி, அவர் உடலை வாங்க மாட்டோம் என்று மூன்று நாள்களாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள் ராகவியின் உறவினர்கள். ராகவிக்கு ஆதரவாகப் பலரும் சமூக வலைதளங்களில் குரல் கொடுத்த வண்ணம் இருக்கிறார்கள். பலரும் தங்களுடைய இரங்கல்களை ராகவியின் குடும்பத்தினரிடம் கூறி வருகிறார்கள். ராகவியின் அம்மாவிடம் பேசினோம். 


 

 ''நாங்க பட்டியலினச் சமூகத்தைச் சேர்ந்தவங்கம்மா. நானும் என் வீட்டுக்காரரும் கூலி வேலைக்குப் போய் சம்பாதிக்கிறோம். எங்களுக்கு மூணு பொண்ணுங்க. என் முதல் பொண்ணைக் கட்டிக் கொடுத்துட்டேன். ரெண்டாவது பொண்ணுதான் ராகவி. என் பொண்ணுக்கு 11 வயசாகுதுங்க. இந்தப் புள்ள ஏழாவது படிச்சிட்டு இருந்துச்சு. கடைசி புள்ள 5 வது படிக்குது.


 

 காலையில புள்ளைங்களுக்கு சாப்பாடு கொடுத்து பள்ளிக் கூடத்துக்கு அனுப்பிட்டுதான் நானும் என் வீட்டுக்காரரும் வேலைக்குப் போவோம். இப்போ புள்ளைங்களுக்கு கால்பரீட்சை லீவு விட்டிருக்காங்க. அதனால, புள்ளைங்களை வீட்டுல விட்டுட்டு நானும், என் வீட்டுக்காரரும் வேலைக்குப் போயிட்டோம். அன்னைக்கு காலையில புள்ளைங்களுக்கு சாப்பாடு கொடுத்துட்டு வீட்டுக்குள்ளேயே பார்த்து சூதானமா இருக்கணும் புள்ளைங்களான்னு சொல்லிட்டுத்தான்மா வேலைக்குக் கிளம்புனேன். மத்தியானம் புள்ளைங்களுக்கு சாப்பாடு போட்டுக் கொடுக்க வீட்டுக்கு வந்தேன். புள்ளைங்களுக்கு சோறு போட்டுக் கொடுத்துட்டு கொஞ்சம் துணியை அலசிட்டு இருந்தேன். 
'அம்மா உனக்கு நேரம் ஆயிடுச்சுல... நீ வேலைக்குப் போ... மீதத் துணியை நான் அலசிடுறேன்'ன்னு என் தங்க மக சொன்னாளே..! நானும் சரிம்மான்னு சொல்லிட்டுக் கிளம்புனேனே..! ஐந்தரை மணிக்கு என் கடைசி பொண்ணு... நான் குடியிருக்கிற வீட்டு ஓனர்கூட ஓடியாந்தா. அக்கா செத்துப்போச்சுனு என் கடைசி பொண்ணு கதறி அழுதுச்சு. அதைக் கேட்டதும் என் நெஞ்சே வெடிச்சிருச்சு. இதுவரைக்கும் எங்கள எதிர்த்து எதுவுமே செய்ய மாட்டா. சொன்னதைக் கேட்டுப்பா, கொடுக்கிறத வாங்கிப்பா. என் கையால போட்ட சோறு செமிக்கிறதுக்குள்ள என் புள்ளையே போயிட்டாளே'' என்றவர் சற்று நிதானித்து, ``நாங்க காம்பவுண்டு வீட்டுலதான் குடியிருக்கோம். எங்க ஹவுஸ் ஓனருடைய பையன் எப்போ பார்த்தாலும் எங்க வீட்டுக்கிட்டேயே சுத்திட்டு இருப்பான். 


 

 தண்ணீ அடிச்சிட்டு வந்து எங்க வீட்டுக்குப் பக்கத்துலேயே நின்னுட்டு இருப்பான்மா. அவன் மேலதான் எங்களுக்கு சந்தேகமா இருக்கு. அவன்தான் என் புள்ளையை என்னமோ பண்ணியிருக்கான். இல்லாட்டி என் பொண்ணு தூக்குலாம் மாட்டியிருக்க மாட்டா. இறந்தப்ப அவளோட கால்ல காம்பஸ் வைச்சு குத்தின காயம் இருக்கு, உதடு வீங்கிப்போய் இருந்தது. 


கேட்டா எறும்பு கடிச்சதா சொல்றாங்க... போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்டைகூட காட்ட மாட்டேங்கிறாங்க. என்னால தாங்க முடியலம்மா. அந்தப் பையனை போலீஸ்காரங்க கைது பண்ணிட்டதா சொல்றாங்க. ஆனா, எங்க கண்ணுல காட்டல. போராட்டம் பண்ற எங்ககிட்ட உடனே பொணத்த வாங்கு, இல்லாட்டி நாங்களே எரிச்சிடுவோம்னு போலீஸ் பயமுறுத்துது. உண்மையில என் பொண்ணு வயசுக்குகூட வரலமா. அவள இந்த நிலைமைக்கு கொண்டு வந்தவங்களுக்குக் கண்டிப்பா தண்டனை கிடைக்கும். கிடைக்கும்தானம்மா... மனசாட்சினு ஒண்ணு இருக்குல்ல'' என்று உரக்க அழுகிறார்.


இது தொடர்பாக சம்பந்தப்பட்ட ஹவுஸ் ஓனர் தரப்பில் விளக்கம் அளிக்க முன்வந்தால், பரீசிலனைக்குப் பிறகு அதையும் பதிவுசெய்ய தயாராக உள்ளோம். உண்மை விரைவில் வெளியே வரவேண்டும்!

தினம் ஒரு நாலடியார் அர்த்தத்துடன் - Daily one Naaladiyar with meaning - 5

தினம் ஒரு நாலடியார்


பாடல் - 5.
என்னானும் ஒன்றுதம் கையுறப் பெற்றக்கால்
பின்னாவ தென்று பிடித்திரா - முன்னே
கொடுத்தார் உயப்போவர் கோடில்தீக் கூற்றம்
கொடுத்தாறு செல்லும் சுரம்.

அர்த்தம் :
ஏதாகிலும் ஒரு பொருள் தமது கையில் சேரப் பெற்றால், முதுமைக் காலத்தில் பயன்படும் என்று அதனைப் பிடித்து வைத்திராமல் அப்பொருள் அழிவதற்கு முன்பே அறம் செய்தவர்கள் தனது தொழிலில் தவறாத கொடிய எமன், பாசக் கயிற்றால் கட்டியிழுத்துச் செல்லும் பாலை வழியினின்றும், தப்பிச் செல்வர். (அறம் செய்பவர் நரகம் புகார்; துறக்கம் எய்துவர் என்பது கருத்து.)

தினம் ஒரு திருக்குறள் அர்த்தத்துடன் - Daily one Thirukkural with meaning -5

 தினம் ஒரு குறள் :


குறள் - 5:

இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.


 அர்த்தம் :

கடவுளின் உண்மைப் புகழை விரும்பி அன்பு செலுத்துகின்றவரிடம் அறியாமையால் விளையும் இருவகை வினையும் சேர்வதில்லை. 

Featured Post

ரத்தம் சொட்ட சொட்ட.. மனைவியின் தலையுடன் தெருவில் நடந்து சென்ற இளைஞர்..

பட்டபகலில் மனைவியின் தலையை வெட்டி, ரத்தம் சொட்ட சொட்ட.. கையில் வைத்து கொண்டு தெருவில் நடந்து சென்ற இளைஞரை கண்டு பொதுமக்கள் அலறி அடி...

நமது சேனலில் வீடியோக்களை காண்க

சமூக சீரழிவு செய்திகள்