Run World Media: 11/14/18

உங்கள் இமெயிலை உள்ளிடுங்கள்-உங்கள் Inboxல் Confirm செய்யுங்கள் நமது செய்தி உடனுக்குடன் வந்து சேரும்

எங்களது பிற செய்திகளை இங்கு தேடவும்

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Wednesday, November 14, 2018

டெல்லி மாணவியின் ஓவியம் கூகுள் டூடுள் - ல்குழந்தைகள் தினத்தையொட்டி மும்பை பள்ளி மாணவி வரைந்த ஓவியத்தை கொண்டு கூகுள் தனது டூடுள் பக்கத்தை உருவாக்கி உள்ளது.

நாட்டின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவுக்கு இன்று பிறந்த தினமாகும். ஜவஹர்லால் நேருவின் பிறந்த தினம் குழந்தைகள் தினமாகவும் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் இந்தியா முழுவதும் உள்ள பள்ளி மாணவர்களின் சிந்தனை மற்றும் படைப்பு திறனை ஊக்குவிக்கும் வகையில் கூகுள் நிறுவனம் சமீபத்தில் ’டூடுள்ஃபார் கூகுள்’  என்ற போட்டியை நடத்தியது.
(தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!

இந்த போட்டியில் நாடு முழுவதிலும் இருந்து சுமார் 75,000-க்கும் மேற்பட்ட பள்ளி குழந்தைகள் பங்கேற்றனர். இந்த போட்டிக்கான தலைப்பு என்னை ஊக்குவிப்பது எது? என்ற தலைப்பு கொடுக்கப்பட்டது. 
 
அதில் மும்பையை சேர்ந்த பிங்ளா என்ற மாணவி தீட்டிய ஓவியம் டூடுளாக தேர்வு செய்யப்பட்டது. இந்த போட்டியில் வெற்றியடைந்த மும்பை மாணவி வரைந்த டூடுள்தான் இன்றைய தினத்தில் கூகுள் டூடுளாக வைக்கப்பட்டுள்ளது.
இந்த டூடுளில்‘ஒரு மாணவி விண்வெளியை டெலஸ்கோப்பில் பார்ப்பதாகவும், அந்த விண்வெளி பரந்து காணப்படுவதாக அந்த ஓவியம் வரையப்பட்டுள்ளது.
இந்த டூடுளை மும்பையை சேர்ந்த பிங்ளா ராகுல் மோர் என்ற மாணவி வரைந்துள்ளார்.

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts

12 வயசு மாமா.. 2 வயசு மருமகன்.. நைஸாக வந்த பெண்.. அடுத்து நடந்தது என்ன?2 வயது மருமகனை கடத்த வந்த பெண், காப்பாற்றிய 12 வயசு மாமா

12 வயசு மாமாவின் வீர செயல்தான் இந்த செய்தி!! ஆம்.. இந்த மாமா 2 வயசு குழந்தையையே காப்பாற்றி இருக்கிறார் என்றால் பார்த்து கொள்ளுங்களேன்!! மகாராஷ்டிராவில் மும்ப்ரா என்ற இடம் உள்ளது. இங்கு வீடு ஒன்றில் ஒரு கல்யாணம் நடந்து கொண்டிருந்தது. வெளியில் பந்தல், உள்ளிட்ட அலங்காரங்கள், தோரணங்கள் என அந்த தெருவே கலர்ஃபுல்லாக இருந்தது. கல்யாணம் முடிந்து எல்லாரும் சாப்பிட்டனர். அப்போது வீட்டுக்கு வெளியில் 2 வயது ஆண் குழந்தையை வைத்து 2 பேர் விளையாடி கொண்டிருந்தனர். அதில் ஒருவர் அந்த குழந்தையின் அண்ணன், இன்னொருவர் மாமா. அண்ணனுக்கு வயது 10, மாமாவுக்கு வயது 12.

12 வயது மாமா 
3 பேரும் விளையாடி கொண்டிருந்தபோது, பெரியவர்கள் யாரும் அங்கே இல்லை. அந்த நேரம் பார்த்து ஒருபெண் அங்கு வந்து விளையாடுவதை பார்த்து கொண்டே இருந்தார். பிறகு 2 வயது ஆண் குழந்தை சற்று தூரமாக நடக்க ஆரம்பித்ததும், நைசாக குழந்தையிடம் பேசி கடத்த முயன்றார். இதை 12 வயது மாமா பார்த்துவிட்டார்.


தம்பிக்கு சாக்லட்
 அந்த பெண்ணிடம் ஓடிச்சென்ற மாமா, "குழந்தையை எங்க தூக்கிட்டு போறீங்க?" என்றகேட்டார். இப்படி ஒரு கேள்வியை அந்த பெண் எதிர்பார்க்கவில்லை. அதனால், "தம்பிக்கு சாக்லட் வாங்கி தர போகிறேன்" என்றார். இதைக் கேட்டதும் மாமாவுக்கு சந்தேகம் வந்துவிட்டது. யார் சாக்லட் கொடுத்தாலும் வாங்க கூடாது என்று வீட்டில் பெற்றவர்கள் ஏற்கனவே சொன்னது ஞாபகத்துக்கு வந்துவிட்டது.
(தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!

விரட்ட துவங்கினர்
அதனால் குழந்தையின் அண்ணனிடம் சென்று, சாக்லட் சமாச்சாரத்தை சொன்னார். உடனே அண்ணனும் அந்த பெண்ணை விரட்டி வந்து "என் தம்பியை எங்க தூக்கிட்டு போறீங்க?" என்று மாமா கேட்ட கேள்வியை கேட்டார். இதனால் உஷாராகிவிட்ட அந்த பெண், குழந்தையை தூக்கிக் கொண்டு ஓடினார். இதை பார்த்ததும் மாமாவும் அண்ணனும் அந்த பெண்ணை விரட்ட ஆரம்பித்திருக்கிறார்கள்.2 வயது தம்பி மீட்பு 
இதில், கடைசி வரை அண்ணன் அந்த பெண்மணியை விடவே இல்லை. கிட்டத்தட்ட 8 நிமிடம் துரத்தி ஓடியிருக்கிறார். பின்னர் ஓட முடியவில்லையோ, அல்லது என்ன காரணமோ தெரியவில்லை, அந்த பெண் குழந்தையை விட்டுவிட்டு அந்த பெண் ஓடிவிட்டார். பிறகு அண்ணன் தன் தம்பியை தூக்கிக் கொண்டு வீட்டுக்கு வந்தார்.

சாக்லட் பெண்  
இந்த காட்சிகள் அனைத்தும் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. இதை வைத்து அந்த சாக்லட் பெண்ணை போலீசார் தேடி வருகிறார்கள். குழந்தை அண்ணன் மீட்டாலும், அதற்கு முக்கிய காரணமாக இருந்த நம்ம மாமாவுக்கு குடும்பத்தினர் நிறைய முத்தங்களை தந்தார்கள்!!

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts

எஸ்எஸ்எல்சி, பிளஸ் 1, பிளஸ் 2 அரையாண்டு தேர்வு அட்டவணை இதோ!2018-19ம் கல்வியாண்டுக்கான எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணை பள்ளிக்கல்வித்துறையால் வெளியிடப்பட்டுள்ளது. அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், மெட்ரிகுலேசன், ஆங்கிலோ இந்தியன், ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகள், சிறப்பு பள்ளிகளுக்கான எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகளுக்கு அரையாண்டு தேர்வு அட்டவணை வெளியிடப்படுகிறது. இதில் எந்தவித மாற்றம் இன்றி தேர்வுகள் நடத்தப்பட வேண்டும். எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 அரையாண்டு தேர்வு டிசம்பர் 10ம் தேதி தொடங்கி 22ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது.


எஸ்.எஸ்.எல்.சி.  
10ம் தேதி (திங்கட்கிழமை) - தமிழ் முதல் தாள்

11ம் தேதி (செவ்வாய்க்கிழமை) - தமிழ் இரண்டாம் தாள்

13ம் தேதி (வியாழக்கிழமை) - ஆங்கிலம் முதல் தாள்

14ம் தேதி (வெள்ளிக்கிழமை) - ஆங்கிலம் இரண்டாம் தாள்

17ம் தேதி (திங்கட்கிழமை) - கணிதம்

18ம் தேதி (செவ்வாய்க்கிழமை) - விருப்ப பாடம்

 19ம் தேதி (புதன்கிழமை) - அறிவியல்

 22ம் தேதி (சனிக்கிழமை) - சமூக அறிவியல் 

பிளஸ்-1 
10ம் தேதி (திங்கட்கிழமை) - தமிழ்
11ம் தேதி (செவ்வாய்க்கிழமை) - ஆங்கிலம்

12ம் தேதி (புதன்கிழமை) - தகவல் தொடர்பு ஆங்கிலம், நெறிமுறைகள் மற்றும் இந்திய கலாசாரம், கணினி அறிவியல், கம்ப்யூட்டர் அப்ளிகேஷன், உயிரி வேதியியல், சிறப்பு மொழி (தமிழ்), மனை அறிவியல், அரசியல் அறிவியல், புள்ளியியல்.

 14ம் தேதி (வெள்ளிக்கிழமை) - கணிதம், விலங்கியல், வணிகவியல், மைக்ரோபயாலஜி, நியூட்ரிசன் அண்ட் டைட்டிக்ஸ், ஜவுளி மற்றும் ஆடை வடிவமைப்பு, உணவு சேவை மேலாண்மை, வேளாண்மை அறிவியல், நர்சிங் (பொது), நர்சிங் (தொழிற்கல்வி).

 17ம் தேதி (திங்கட்கிழமை)  இயற்பியல், பொருளியல், கம்ப்யூட்டர் டெக்னாலஜி. 19ம் தேதி (புதன்கிழமை) - உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம் மற்றும் புள்ளியியல், அடிப்படை எலக்ட்ரிக்கல் என்ஜினீயரிங், அடிப்படை எலக்ட்ரானிக் என்ஜினீயரிங், அடிப்படை சிவில் என்ஜினீயரிங், அடிப்படை ஆட்டோ மொபைல் என்ஜினீயரிங், அடிப்படை மெக்கானிக்கல் என்ஜினீயரிங், அலுவலக மேலாண்மை மற்றும் செக்கரட்டரிஷிப், டெக்ஸ்டைல் டெக்னாலஜி.

22ம் தேதி (சனிக்கிழமை) - வேதியியல், கணக்குபதிவியல், புவியியல்.
(தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!

 பிளஸ்-2  
10ம் தேதி (திங்கட்கிழமை) - தமிழ்
11ம் தேதி (செவ்வாய்க்கிழமை) - ஆங்கிலம்
12ம் தேதி (புதன்கிழமை) - தகவல்தொடர்பு ஆங்கிலம், இந்திய கலாசாரம், கணினி அறிவியல், உயிரி வேதியியல், சிறப்பு மொழி (தமிழ்), மனை அறிவியல், அரசியல் அறிவியல், புள்ளியியல்.
14ம் தேதி (வெள்ளிக்கிழமை) - கணிதம், வணிகவியல், மைக்ரோபயாலஜி, விலங்கியல், நியூட்ரிசியன் அண்ட் டைட்டிக்ஸ், டெக்ஸ்டைல்ஸ் டிசைனிங், உணவு மேலாண்மை மற்றும் குழந்தைகள் பராமரிப்பு, வேளாண்மை நடைமுறைகள், நர்சிங் (தொழிற்கல்வி), நர்சிங் (பொது).
17ம் தேதி (திங்கட்கிழமை) - இயற்பியல், பொருளியல், ஜெனரல் மெஷினிஸ்ட், எலக்ட்ரானிக்ஸ் உபகரணங்கள், சிவில் வரைவாளர், எலக்ட்ரிக்கல் மெஷின்ஸ் மற்றும் அப்ளையன்சஸ், ஆட்டோ மெக்கானிக், டெக்ஸ்டைல் டெக்னாலஜி.
19ம் தேதி (புதன்கிழமை) - உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம், அலுவலக மேலாண்மை, கணக்கு பதிவியல் மற்றும் தணிக்கை கோட்பாடு.
22ம் தேதி (சனிக்கிழமை) - வேதியியல், கணக்கு பதிவியல், புவியியல்.
இந்த தேர்வுகள் அனைத்தும், காலை 10 மணிக்கு தொடங்கும். 10 மணியில் இருந்து 10.10 மணி வரை வினாத்தாளை படிப்பதற்கும், 10.10 மணி முதல் 10.15 மணி வரை விடைத்தாளின் முதல் பக்கத்தை நிரப்புவதற்கும், 10.15 மணி முதல் 12.45 மணி வரை தேர்வு எழுதுவதற்கும் ஒதுக்கப்பட்டு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.


அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


சிவப்பு அழகு கிரீம்களுக்கு செக்..!மத்திய அரசின் புதிய திட்டம்..!சிகப்பு அழகு கிரீம் தயாரிப்பவர்கள் ராஜ்ஜியம் விரைவில் முடிவிற்கு வருகிறது. மோடி தலைமையிலான மத்திய அரசு, பல விதிமுறைகளை இந்த நிறுவனங்களுக்கு எதிராக கொண்டு வர உள்ளது. எந்த ஒரு மருந்து சீட்டும் இல்லாமல் இந்த கிரீம்களை வாங்குவதைத் தடுக்க வழிவகுத்துவருகிறது. அரசுக்கு இந்த கிரீம்கள் மூலம் ஏற்படும் பக்க விளைவுகள் பற்றி எச்சரிக்கை மணி வந்துள்ளது. கிரீம்களில் பல ஊக்க மருந்துகள் மற்றும் ரசாயனங்கள் கலக்கப்படுகிறது. இதனால் இதை நீண்ட நாட்கள் பயன்படுத்தினால் நிறையச் சரும பிரச்சனைகள் வரும். அரசின் அறிக்கை படி இனி மருந்து சிட்டு இல்லாமல் எந்த ஒரு கடையிலும் சிவப்பு அழகு கிரீம்களை வாங்க முடியாது.


மருத்துவரின் அறிவுரை
 இது நடைமுறைக்கு வந்தால் இனி எந்தஒரு காஸ்மெட்டிக், மளிகை சாமான் கடை, மருந்தகம் மற்றும் மால்களில் மருத்துவரின் அறிவுரை இல்லாமல் சிவப்பு அழகு கிரீம்கள் வாங்கமுடியாது.
(தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!

பக்க விளைவுகள்
அரசின் அறிக்கை நுகர்வோர் மற்றும் மருத்துவ மையங்களின் கருத்தின் பெயரிலேயே தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் இந்தியன் அஸோஸியேஷன் ஆப் டெர்மடோலோஜிஸ்ட், வேனெரேயோலோஜிஸ்ட்ஸ் மற்றும் லெப்ரோலோஜிஸ்ட்ஸ் (IADVL)-ல் அடங்கும். இந்த அமைப்புகள் சிகப்பு அழகு கிரீம்களினால் பல பக்க விளைவுகள் வரும் எனக் குறிப்பித்துள்ளனர். அதில் சில முக்கியமானவை- சருமத்தில் சிவப்பு படலங்கள், சரும வீக்கம், அரிப்பு, சீரற்ற சருமம், மிகவும் இருண்ட அல்லது ஒளியான சருமம், ரத்த குழாய்கள் தென்படுவது மற்றும் தழும்புகள்.


மத்திய சுகாதார
அமைச்சகம் ட்ராக்ஸ் மற்றும் காஸ்மெட்டிக் சட்டம் 1945-இன் படி மத்திய சுகாதார அமைச்சகம் குடிமக்கள் மற்றும் அந்நிறுவனத்தின் பங்குதாரர்களிடம் கருத்துக்களைக் கேட்டுள்ளது. அரசின் அறிக்கையில் hydroquinone உள்ள அல்லது hydroquinone இல்லாத ஊக்கங்கள், பிளீச்சிங் பொருள் மற்றும் tretinoin இருக்கும் கிரீம்களை மருத்துவ சீட்டு இருந்தாலும் மற்றுமே வாங்கமுடியும்.

கரும் புள்ளிகளை நீக்கும் 
மேலும் ஒரு மருத்துவர் குறுக்கையில் பெரும்பாலும் இந்த கிரீம்கள் சருமத்தில் உள்ள கரும் புள்ளிகளை நீக்கும் என மக்களை நம்பவைத்து விற்கப்படுகின்றனர். இப்படிப் பட்ட கிரீம்கள் மக்களுக்கு எளிதில் கிடைக்கிறது ஆனால் அவர்கள் மருத்துவரிடம் இது அவர்களுக்கு ஏற்றது தான என்று கூட கேட்பதில்லை. கவனக்குறைவினால் அவர்கள் சருமத்திற்கு தான் ஆபத்து ஆகிறது. முக்கியமாக அதில் கலக்கப்படும் ரசாயனங்களால் அவர்கள் சருமத்திற்கு எரிச்சலூட்டும் அதுவும் சூரியஒளியில் செல்லும்போது.

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


நானும் பொங்கலுக்கு வரேன்- ரஜினி, அஜித்துடன் மோதும் சிம்பு: என்ன நடக்கப் போகுதோ?இந்த பொங்கல் சுவாரஸ்யமான பொங்கலாக இருக்கப் போகிறது. சிவா இயக்கத்தில் அஜித் நடித்துள்ள விஸ்வாசம் படம் தீபாவளிக்கு வரும் என்று கூறி ஒரு வழியாக பொங்கலுக்கு ரிலீஸ் செய்கிறார்கள். இந்த பொங்கல் தல பொங்கல் என்று அஜித் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். இந்நிலையில் இது தல பொங்கல் மட்டும் அல்ல தலைவர் பொங்கலும் கூட என்று பேட்ட வந்துள்ளது.

அஜித் 
பொங்கல் பண்டிகைக்கு அஜித்தின் விஸ்வாசம் மட்டும் தான் வெளியாகும் என்று நினைத்த நிலையில் ரஜினியின் பேட்ட படத்தை வெளியிடுகிறது சன் பிக்சர்ஸ். பேட்ட பொங்கலுக்கு வருகிறார் பராக், பராக் என்று தற்போதே விளம்பரத்தை துவங்கிவிட்டது.
(தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!

நானும் வரேன் 
அஜித், ரஜினி படங்கள் மட்டும் அல்ல சுந்தர் சி இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் வந்தா ராஜாவாதான் வருவேன் படமும் பொங்கலுக்கு ரிலீஸாகும் என்று கூறப்படுகிறது. லைகா நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்தில் கேத்ரீன் தெரசா, மேகா ஆகாஷ், மகத், ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு உள்ளிட்டோர் நடிக்கிறார்கள்.


படங்கள் 
அஜித், ரஜினி, சிம்பு படங்கள் ஒரே நேரத்தில் ரிலீஸானால் மூன்று பேருக்கும் அதிக அளவில் தியேட்டர்கள் கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும் மூன்று படங்களும் ஒன்றாக வெளியாவதால் வசூல் நிச்சயம் பாதிக்கப்படும். இந்த 3 பட ரிலீஸால் தியேட்டர் உரிமையாளர்களும், வினியோகஸ்தர்களும் தான் கவலை அடைவார்கள்.

பார்க்கலாம் 
ஓபனிங் கிங்கான அஜித், ரஜினியுடன் சிம்பு மோதுகிறார். மூன்று படங்களில் எது அதிகம் வசூல் செய்யும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். ஒரு வேளை சிம்பு படம் பொங்கலுக்கு வராதோ என்று நினைக்க வேண்டாம். பொங்கலுக்கு வருகிறோம் என்று சிம்புவே தெரிவித்துவிட்டார்.

அதிகம் படிக்கப்பட்டவை : Popular PostsFeatured Post

ரத்தம் சொட்ட சொட்ட.. மனைவியின் தலையுடன் தெருவில் நடந்து சென்ற இளைஞர்..

பட்டபகலில் மனைவியின் தலையை வெட்டி, ரத்தம் சொட்ட சொட்ட.. கையில் வைத்து கொண்டு தெருவில் நடந்து சென்ற இளைஞரை கண்டு பொதுமக்கள் அலறி அடி...

நமது சேனலில் வீடியோக்களை காண்க

சமூக சீரழிவு செய்திகள்