வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: 2018-11-25
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Sunday, December 02, 2018

குளத்தில் குளித்த 4 சிறார்கள் பலி.. அக்கா- தம்பிகள்!



திண்டிவனம் அருகே குளத்தில் குளித்த 4 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இவர்கள் 4 பேரும் அக்கா - தம்பிகள் என்பது மேலும் சோகத்தை கூட்டியுள்ளது.


திண்டிவனம் அருகே உள்ளது தளவாதி என்ற கிராமம். இங்கு வசித்து வருபவர் பாஸ்கர். இவரது மகள் அபிராமி. அங்குள்ள பள்ளி ஒன்றில் அபிராமி பிளஸ் 2 படித்து வருகிறார்.
 

இவர் தனது தம்பி திருமுருகனை அழைத்து கொண்டு குளித்தில் குளிக்க சென்றார். அப்போது முனுசாமி என்பவரின் மகள் அஸ்வினியும் அவரது தம்பி ஆகாஷூம் குளிக்க உடன் வந்தார்கள். அஸ்வினிக்கு வயது 15, ஆகாஷுக்கு வயது 9 ஆகிறது. 2 அக்கா, 2 தம்பிகள் ஒன்றாக சேர்ந்து குளிக்க தொடங்கினார்கள். (தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!

அப்போது 4 மாணவர்களுமே குளத்தில் மூழ்கி திடீரென மாயமானார்கள். குளிக்க வந்த பிள்ளைகள் இன்னும் வீட்டுக்கு வரவில்லையே என்று குளத்துக்கு வந்து பார்த்தால் அவர்களை காணவில்லை. இதனால் குளத்தில் மூழ்கியிருக்கலாம் என 4 போரையும் தேடும் பணி தீவிரமாக நடைபெற்றது
 

நீண்ட நேரத்துக்கு பின்பு 4 பேரும் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டனர். குளத்தில் நிறைய சேர் இருந்ததால், பிள்ளைகள் சிக்கி கொண்டுள்ளார்கள். இதனால் ஒருவரையொருவர் காப்பாற்றிக் கொள்ளவும் முடியவில்லை என கூறப்படுகிறது.
அக்கா-தம்பிகளான இந்த 4 மாணவர்களும் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சி கலந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts



‘குட்டி யானை’ யை தள்ளு.. தள்ளு.. தள்ளு.. உதவி கேட்கப் போய் போலீசிடம் சிக்கிய ‘மங்குனி’த் திருடன்!



திருடிய வாகனத்தை ஸ்டார்ட் செய்ய உதவி கேட்டபோது, திருடன் ஒருவன் கையும் களவுமாக போலீசில் சிக்கிய சம்பவம் சென்னையில் நடந்துள்ளது. 

சென்னையை அடுத்த புழல் மத்திய சிறையில் காவலர்களாக பணிபுரிபவர்கள் செல்வமாணிக்கம் மற்றும் மதன் குமார். இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் புழல் சிறையின் வெளிக்காவல் பணியில் ஈடுபட்டிருந்தனர்.


தேனீர் அருந்துவதற்காக இருவரும் சிறைக்கு எதிர்புறம் உள்ள டீக்கடைக்கு சென்றனர். அப்போது அங்கு டாடா ஏஸ் (குட்டி யானை) ஒன்று வந்து நின்றது. 
  (தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!
அதில் இருந்து இறங்கிய நபர், வண்டி ஸ்டார்ட் ஆகாததால், வாகனத்தை தள்ளிவிடுமாறு செல்வமாணிக்கத்தையும், மதன்குமாரையும் கேட்டுள்ளான். 
காவலர்கள் இருவரும் வாகனத்தின் அருகே சென்று தள்ள முற்பட்டபோது, அதில் சாவி இல்லாததும், முன்பக்க ஜன்னல் கண்ணாடி உடைந்திருப்பதையும் பார்த்து சந்தேகமடைந்தனர்.
 
இதையடுத்து, அந்த வாகனத்தில் எழுதப்பட்டிருந்த செல்போன் நம்பருக்கு போன் செய்த போது, நேற்றிரவு அந்த வாகனம் திருடப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, வாகனத்தை எடுத்து வந்த நபரை போலீசார் இருவரும் மடக்கிப் பிடித்தனர். விசாரித்ததில், வாகனத்தை திருடிய நபர் 27 வயதான பாலகிருஷ்ணன் என்பதும், அவன் மீது கொலை முயற்சி உள்பட ஏற்கனவே பல வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து, பாலகிருஷ்ணனை கைது செய்து புழல் சிறைச்சாலை காவல் நிலையத்தில் அவர்கள் ஒப்படைத்தனர்.

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts

ரூம் எடுத்தோம்.. ஜாலியாக இருந்தோம்.. விஷம் கலந்த ஜூஸ் கொடுத்தேன்.. HL Enjoyment

ரூம் எடுத்தோம்.. ஜாலியாக இருந்தோம்.. விஷம் கலந்த ஜூஸ் கொடுத்தேன்..



"ரூம் எடுத்தோம்.. ஜாலியாக இருந்தோம்.. விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து லில்லிபாயை கொலை செய்தேன்" என்று இளைஞர் போலீசில் தெரிவித்துள்ளார். 

மொபைலுக்கு ரீ-சார்ஜ் செய்ய போன இடத்தில் கள்ளக்காதல் ஏற்பட்டு, பின்னாடி கொலை வரை கொண்டுவந்து விட்டு விடும் என்று லில்லிபாய்க்கு தெரியாது. குமரி மாவட்டம் சேக்கல் பகுதியை சேர்ந்த தம்பதி ராஜேந்திரன் - லில்லிபாய். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். ராஜேந்திரன் ஒரு கூலி தொழிலாளி. லில்லிபலாய் குலசேகரம் பகுதியில் ஒரு ஜவுளி கடையில் வேலை பார்த்து வந்தார்.


கால்வாயில் பிணம் கடந்த 19-ந் தேதி காலையில் வழக்கம்போல் வேலைக்கு சென்றவர் ராத்திரி ஆகியும் வீடு திரும்பவில்லை. அதனால் அவரை தேடி வந்தனர். ஆனால் மறுநாளே செட்டிசார்விளையில் சிற்றார்பட்டணம் கால்வாயில் லில்லிபாய் பிணமாக மிதந்தார். உடனடியாக திருவட்டார் போலீசார், தகவலறிந்து விசாரணையை மேற்கொண்டனர். அப்போதுதான் இது கள்ளக்காதல் விவகாரம் என தெரியவந்தது.


செல்போன் ரீ சார்ஜ் இது சம்பந்தமாக ராஜேஷ்குமார் என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் கூறியதாவது: "நான் லில்லிபாய் வீட்டுக்கு பக்கத்தில்தான் வசித்து வருகிறேன். குலசேகரம் அருகே ஒரு செல்போன் கடை நடத்தி வருகிறேன். அந்த கடையிலேயே ஒரு ஸ்டுடியோவும் வைத்துள்ளேன். செல்போன் கடைக்கு ரீசார்ஜ் செய்ய வந்தார் லில்லிபாய். அப்போதுதான் எங்களுக்குள் கள்ளக்காதல் பற்றிக் கொண்டது. நிறைய ஊர்களுக்கு போனோம்... ஜாலியாக இருந்தோம்.


விரிவுபடுத்தினேன் எனக்கு பிசினசில் அடிக்கடி நஷ்டம் ஏற்பட்டது. அப்போதெல்லாம் லில்லிபாய்தான் எனக்கு பணம், நகை என்று கொடுத்து உதவி செய்தார். அதுவும் இல்லாமல் என் கடையை விரிவுபடுத்த எனக்கு ஆசை. அதற்காக லில்லிபாயிடம் அடிக்கடி நானாகவே பண உதவி கேட்டு வாங்கினேன். (தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!
காரில் அழைத்து சென்றேன் இதுவரை 7 சவரன் தாலி சங்கிலி, 1 பவுன் காப்பு வாங்கி அடகு வைத்தேன். நகையை திருப்பி தருமாறு லில்லிபாய் நச்சரித்து கொண்டே இருந்தார். ஆனால் ஏற்கனவே நஷ்டத்தில் இருந்ததால் அந்த நகையை என்னால் தரமுடியவில்லை. அதனால்தான் அவரை கொலை செய்ய முடிவு செய்தேன். சமாதானம் செய்வதுபோல அவரை காரில் கன்னியாகுமரிக்கு அழைத்து சென்றேன்.


கொலை செய்தேன் ரூம் எடுத்தேன். அங்கே நான் தண்ணியடித்தேன். லில்லிபாய்க்கு கூல்டிரிங்ஸில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்தேன். பிறகு கால்வாயில் வீசிவிட்டேன். யாருக்கும் எதுவும் தெரியாதது போல இருந்து கொண்டேன். அவரது இறுதிசடங்கு நிகழ்ச்சிக்கு கூட போய் கொஞ்ச நேரம் நின்றுவிட்டு வந்தேன்" என்றார். 


சிறுவனின் தந்தை இதனிடையே ராஜேஷ்குமார் லில்லிபாயை கொலை செய்து கால்வாயில் வீசும்போது, அவருடைய செல்போனை துப்பட்டாவில் சுற்றி வீசியிருக்கிறார். இந்த செல்போனை கால்வாயில் குளிக்க போன ஒரு சிறுவன் பார்த்து எடுத்திருக்கிறான். அதை கொண்டு போய் அவனது அப்பாவிடம் கொடுக்க, அவரும் அந்த செல்போனை பயன்படுத்தி வந்துள்ளார். லில்லிபாய் செல்போனை ஆராய தொடங்கும்போது இந்த விவரம் போலீசாருக்கு தெரியவந்தது. தற்போது தொடர் விசாரணை நடைபெறுகிறது.

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


டிபன் ரெடி.. ஜனவரி முதல் பள்ளிகளில் காலை உணவு திட்டம்... அமைச்சர் மணிகண்டன் அதிரடி HL Breakfast

டிபன் ரெடி.. ஜனவரி முதல் பள்ளிகளில் காலை உணவு திட்டம்... அமைச்சர் மணிகண்டன் அதிரடி



2019 ஜனவரி மாதம் முதல் பள்ளிகளில் காலை உணவு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டன் தெரிவித்துள்ளார். 1954-ல் தமிழக முதல்வராக காமராஜர் தேர்ந்தெடுக்கப்பட்ட போது, மாணவர்கள் படிக்க வேண்டும்.

என்று மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்தார். அதனால், பள்ளிக்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. அதே நேரம், பள்ளிகளின்  (தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!
எண்ணிக்கையும் அதிகமானது. அதன் பின்னர் வந்த எம்ஜிஆர் உட்பட அனைத்து முதல்வர்களும் மதிய உணவு திட்டத்தை சிறப்பாக முன்னுக்கு கொண்டு சென்றனர்.


இந்தநிலையில், ராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூர் அரசு பள்ளியில், இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டன், அரசின் திட்டங்களை ஏளனப்படுத்தி, வியாபார நோக்கத்திற்காக எடுக்கப்படும் படங்களை யாரும் கவனத்தில் கொள்ள வேண்டியதில்லை என்று கூறினார். 

மேலும், பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு திட்டம் போன்று, 2019 ஜனவரி மாதம் முதல் காலை உணவு வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். மேலும் இதனால் மாணவர்கள் பள்ளிக்கு வரும் எண்ணிக்கை அதிகம் ஆகும். இதுகுறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி விரைவில் அறிவிப்பு வெளியிடுவார் என்று கூறினார்.

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts

ஆவடி அருகே, கணவன்-மனைவி கொலை: தலைமறைவான ஆந்திர வாலிபர் குறித்து பரபரப்பு தகவல்கள் HL Avadi Murder

ஆவடி அருகே, கணவன்-மனைவி கொலை: தலைமறைவான ஆந்திர வாலிபர் குறித்து பரபரப்பு தகவல்கள்



ஆவடி அருகே கணவன்-மனைவி கொலை வழக்கில் தலைமறைவாக உள்ள ஆந்திராவை சேர்ந்த சுரேஷ்குமார், ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் 20-க்கும் மேற்பட்ட கொள்ளை வழக்குகளில் தொடர்புடையவர் என்பது தெரியவந்து உள்ளது.
 

ஆவடியை அடுத்த சேக்காடு அய்யப்பன் நகர் மெயின் ரோட்டை சேர்ந்தவர் ஜெகதீசன் (வயது 67). இவருடைய 2-வது மனைவி விலாசினி (58). இருவரும் சென்னையில் உள்ள தமிழக அரசு அச்சகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள். பண்ணை வீட்டில் தனியாக வசித்து வந்த கணவன்-மனைவி இருவரும் கடந்த மாதம் 27-ந் தேதி வீட்டில் கொலை செய்யப்பட்டு கிடந்தனர். மர்மநபர்கள், இரும்பு குழாயால் இருவரின் தலையிலும் தாக்கி கொன்றுவிட்டு, வீட்டில் இருந்த நகை, பணத்தை கொள்ளையடித்து சென்று இருப்பது தெரிந்தது. (தொடர்ச்சி கீழே...)

இதையும் படிக்கலாமே !!!



இவர்களுக்கு உதவியாக ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த சுரேஷ்குமார் (28), தனது மனைவி லட்சுமி (22), மகன் சதீஷ் (3) ஆகியோருடன் அங்கேயே தங்கி இருந்தார். கொலை சம்பவத்துக்கு பிறகு சுரேஷ்குமார் குடும்பத்துடன் தலைமறைவாகிவிட்டார்.
எனவே அவர்தான் இந்த கொலை மற்றும் கொள்ளையில் ஈடுபட்டு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். கொலையாளியை பிடிக்க 4 தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. அவர்கள், ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம், விஜயவாடா மற்றும் சென்னை உள்ளிட்ட பகுதிகளில் தேடி வருகின்றனர்.  இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக மேலும் பல பரபரப்பான தகவல்களை தனிப்படை போலீசார் வெளியிட்டனர். இதுபற்றி போலீசார் கூறியதாவது:-


சுரேஷ்குமாரின் செல்போன் எண்ணை ஆய்வு செய்ததில், ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் பகுதியில் உள்ள வயதான தனது வளர்ப்பு தாயுடன் அவர் அடிக்கடி பேசி இருப்பது தெரிந்தது. இதனால் சுரேஷ்குமார் ஆந்திராவைச் சேர்ந்தவர் என்பது உறுதியானது. விசாகப்பட்டினம் சென்றுள்ள தனிப்படை போலீசார் அங்கு அவரைப்பற்றி விசாரித்தனர். அதில் சுரேஷ்குமார் மீது ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் பகுதியில் 20-க்கும் மேற்பட்ட கொள்ளை வழக்குகள் உள்ளது. 11-07-2017 அன்று ஒரு வழக்கு சம்பந்தமாக விசாகப்பட்டினம் போலீசார், அங்குள்ள கோர்ட்டுக்கு சுரேஷ்குமாரை அழைத்து வரும்போது அவருடன் பாதுகாப்புக்காக சென்ற போலீசாரை தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.


அன்றில் இருந்து சுரேஷ்குமாரை விசாகப்பட்டினம் போலீசார் தேடி வருகின்றனர். அங்கிருந்து தலைமறைவான சுரேஷ்குமார், சென்னையை அடுத்த ஆவடி பகுதியில் வாடகை வீட்டில் தங்கி கூலி வேலை செய்து வந்தார்.

அதன்பிறகுதான் ஜெகதீசன் வீட்டில் வந்து தங்கினார். அப்போது இருவரும் தனியாக இருப்பதை சாதகமாக்கிக்கொண்டு கணவன்-மனைவியை அடித்துக்கொலை செய்து விட்டு கொள்ளையில் ஈடுபட்டு உள்ளது விசாரணையில் தெரியவந்து உள்ளது.

இவ்வாறு தனிப்படை போலீசார் தெரிவித்தனர்.

இந்த நிலையில் தலைமறைவாக உள்ள சுரேஷ்குமாரின் புகைப்படங்களை தனிப்படை போலீசார் வெளியிட்டு உள்ளனர்.


சுரேஷ்குமார் ஆந்திர மாநிலத்தில் தலைமறைவாக உள்ளாரா? அல்லது சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பதுங்கி உள்ளாரா? என தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். அவரை பிடித்தால்தான், இரட்டை கொலை, கொள்ளைக்கான காரணம் என்ன? எவ்வளவு கொள்ளை போனது என்பது போன்ற விவரங்கள் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.
 

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


கூடா நட்புக்கு இடையூறு: கணவனை ஆண் நண்பர் மூலம் கொன்று புதைத்த மனைவி: இரண்டு ஆண்டுகளுக்குப் பின் சிக்கினார் HL Wrong Wife

கூடா நட்புக்கு இடையூறு: கணவனை ஆண் நண்பர் மூலம் கொன்று புதைத்த மனைவி: இரண்டு ஆண்டுகளுக்குப் பின் சிக்கினார்



தனது தவறான தொடர்புக்கு கணவர் இடையூறாக இருந்ததால் தனது ஆண் நண்பர் மூலம் கணவரை கடத்திக் கொலை செய்த மனைவி இரண்டு ஆண்டுகளுக்கு பின் சிக்கினார். வழக்கில் கணவரைக் கொன்று புதைத்த இடத்தில் சில எலும்புக்கூடுகளைக் கைப்பற்றிய போலீஸார் மனைவி உட்பட 5 பேரைக் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டம் பள்ளத்துப்பட்டி பகுதியில் சத்திரம் புளியங்குளம் கிராமத்தில் வசித்தவர் இளையராஜா (35). வெளிநாட்டில் கொத்தனாராக வேலை பார்த்து வந்தார். இவரது சகோதரி  மகள் முத்துவை  கடந்த 11 ஆண்டுகளுக்கு முன் மணந்தார்.


இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இளையராஜா 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை வெளிநாட்டிலிருந்து வந்து இரண்டு மாதம் தங்கிச் செல்வார். இந்நிலையில் வழக்கம்போல் கடந்த 2016-ம் ஆண்டு ஊருக்கு வந்த இளையராஜா திடீரென காணாமல் போனார். தனது கணவரை எங்கு தேடியும் கிடைக்கவில்லை என கண்ணீரும் கம்பலையுமாக மனைவி முத்து காரியாப்பட்டி போலீஸில் புகார் அளித்தார். கணவர் காணாமல் போய் 20 நாட்கள் கழித்து அவர் போலீஸில் புகார் அளித்தது போலீஸுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. (தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!


ஆனாலும் முத்துவின் கண்ணீர் போலீஸாரை நம்ப வைத்தது. முத்துவின் புகாரை ஏற்று அவரது கணவரை பல இடங்களிலும் போலீஸார் தேடினர். இளையராஜாவின் புகைப்படத்தை அனைத்து காவல் நிலையங்களுக்கும் அனுப்பி விவரம் கேட்டனர். ஆனாலும் எந்தத் தடயமும் கிடைக்கவில்லை.
இளையராஜா என்ன ஆனார் என்றே தெரியவில்லை. போலீஸாரும் அடுத்த பணியை பார்க்கத் தொடங்கினர். இந்நிலையில் ஓராண்டு ஓடி அடுத்த ஆண்டும் வந்தது. வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லை.
கடந்த சில மாதங்களுக்கு முன் இளையராஜாவின் மனைவி முத்து ஸ்டேஷனுக்கு வந்து, ''என் கணவர் நிலை என்ன ஆனது, அவர் காணாமல் போய் இரண்டு ஆண்டுகள் ஆகப் போகிறது, அப்படியே கிடப்பில் போட்டுவிட்டீர்கள்,  நான் மனித உரிமை ஆணையம் போகப்போகிறேன், கோர்ட்டுக்குப் போகிறேன்'' என்று கண்ணைக் கசக்கியுள்ளார்.
போலீஸாருக்கு தர்மசங்கடமாகப் போக, ''நீங்க போங்க எப்படியும் மேலதிகாரிகளிடம் பேசி வேறு எதுவும் செய்யமுடியுமா என்று பார்க்கிறோம்'' என்று சமாதானப்படுத்தி அனுப்பியுள்ளனர்.


வழக்கை தூசி தட்டிய போலீஸாருக்கு வேறொரு சுவாரஸ்யமான விஷயம் சிக்கியது. போலீஸ் ஸ்டேஷனில் தகராறு செய்த இளையராஜாவின் மனைவி முத்து மணிகண்டன் என்பவரின் கால் டாக்ஸியில் அமர்ந்து செல்வதை வழக்கு சம்பந்தப்பட்ட போலீஸார் பார்த்துள்ளனர். ஏற்கெனவே முத்து மீது சந்தேகத்திலிருந்த போலீஸார் அவரது செல்போன் பேச்சுகளைக் கண்காணித்தனர். அப்போது அவர்களுக்கு திடுக்கிடும் தகவல் கிடைத்தது. இளையராஜாவின் வீட்டுக்கு அருகில் வசிக்கும் கால் டாக்ஸி ஓட்டுநர் மணிகண்டனுடன் போனில் அதிக நேரத்தைச் செலவிடுவதைக் கண்டுபிடித்தனர். மணிகண்டனுடன் முத்துவுக்கு கூடா நட்பு இருப்பதையும் போலீஸார் கண்டுபிடித்தனர். இதையடுத்து மணிகண்டனைத் தூக்கிய போலீஸார் இளையராஜாவின் மனைவியுடன் உனக்கு என்ன தொடர்பு இளையராஜா எங்கே, அவரை என்ன செய்தாய் என்று போலீஸ் பாணியில் விசாரிக்க, இளையராஜா உண்மையை ஒப்புக்கொண்டார். அவர் சொன்ன தகவல் போலீஸாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


''எனக்கு சொந்த ஊர் கம்பாளி. அங்கிருந்து கால் டாக்ஸி ஓட்டும் வேலைக்கு வருவது சிரமமாக இருந்ததால் காரியப்பட்டியில் இளையராஜா வீட்டுக்கு அருகில் வாடகைக்கு வீடு எடுத்தேன். இளையராஜா துபாயில் இருந்ததா ஆண்டுக்கு 2 மாதங்கள் மட்டுமே ஊரில் இருப்பார்.
இதில் ஆரம்பத்தில் லேசாகப் பார்ப்பது புன்னகைப்பது என்று முத்துவுடன் ஆரம்பித்த பழக்கம் செல்போன் நம்பரைப் பரிமாறிக்கொண்டு வளர்ந்தது. பின்னர் அடிக்கடி பேசி, அதுவே கூடா நட்பாக மாறியது. எனது காரில் இருவரும் ஊர் சுற்றினோம். இந்தத் தகவல் அரசல்புரசலாக இளையராஜா காதுக்குச் செல்ல அவர் ஊர் திரும்பினார். முத்துவை அழைத்துக் கண்டித்தார். கடுமையாகத் திட்டிய அவர் இனி வெளியூர் செல்லப் போவதில்லை என முடிவெடுத்தார். இது எங்கள் பழக்கத்துக்கு இடையூறாக இருந்ததால் அவரைக் கொன்றால்தான் சந்தோஷமாக இருக்க முடியும் என முடிவு கட்டினோம்.


இதற்கு என் நண்பர்கள் முத்துக்கருப்பன், கருப்பசாமி உடன் சேர்ந்துகொண்டு கொலைத்திட்டம் வகுத்தோம். செப்டம்பர் 15-ம் தேதி வீட்டிலிருந்து வெளியில் வந்த இளையராஜாவை இரும்புக் கம்பியால் தாக்கிக் கொன்றோம். பின்னர் எனது நண்பர்கள் துணையுடன் இளையராஜாவின் உடலை எனது சொந்த ஊரான கம்பாளி கிராமத்திற்கு கொண்டு சென்று காட்டுப்பகுதியில் புதைத்தோம். இதற்கு இன்னொரு நண்பர் திருக்கல்யாணி என்பவர் உதவினார். அவர் புதைத்த உடலை நாய், நரிகள் தோண்டாமல் இருக்க மருந்து கொடுத்து உதவினார். பின்னர் நாங்கள் அனைவரும் கலைந்து சென்றுவிட்டோம். இரண்டு ஆண்டுகள் ஜாலியாக ஓடியது. முத்து சும்மா இருக்காமல் ஸ்டேஷனுக்கு வந்து கணவர் பற்றி கேட்டதிலிருந்து பிரச்சினை ஆரம்பமானதை நானும் கண்டுபிடித்தேன்.
 

போலீஸார் ரகசியமாக எங்களைக் கண்காணிப்பதை தெரிந்து முத்து என்னிடம் சொல்ல, மீண்டும் நான் காட்டுப்பகுதிக்குச் சென்று ஒரே தடயமான இளையராஜாவின் உடலைத் தோண்டி எலும்புக்கூட்டை எடுத்து வைகை ஆற்றில் போட்டுவிட்டேன், ஆனாலும் செல்போன் பேச்சு எங்களைச் சிக்க வைத்துவிட்டது'' என மணிகண்டன் ஒப்புக்கொண்டார்.
இதைத் தொடர்ந்து முத்துவைப் பிடறியில் தட்டி கைது செய்த போலீஸார் அவரிடமும் வாக்குமூலம் பெற்றனர். மணிகண்டனின் கார் கைப்பற்றப்பட்டது.


அவரது நண்பர்கள் முத்துக்கருப்பன், கருப்பசாமி, திருக்கல்யாணி ஆகியோரையும் போலீஸார் கைது செய்தனர். வைகை ஆற்றில் எலும்புகளைப் புதைத்தேன் என்று மணிகண்டன் கூறினாலும் புதைத்த இடத்துக்கு அழைத்துச் சென்ற போலீஸார் அங்கு தோண்டிப் பார்த்தபோது மிச்சசொச்ச எலும்புத்துண்டுகள், முடிக்கற்றைகள் கிடைத்தன. அனைத்தையும் வீடியோ எடுத்த போலீஸார் தடயங்களைச் சேகரித்தனர்.
ஆற்றில் போட்ட எலும்புத்துண்டுகளையும் சேகரிக்கும் முயற்சியில் இறங்கியுள்ள போலீஸார், கிடைத்த எலும்புத்துண்டுகளை டிஎன்ஏ பரிசோதனை மூலம் இளையராஜாவுடையது என்று நிரூபித்தால் வழக்கை எளிதாக முடித்துவிடுவோம் என்று தெரிவித்துள்ளனர்.
கணவனைக் கொன்று புதைத்து அனைத்து உண்மைகளையும் அதனுடன் புதைத்து அழுத்தமாக இருந்த முத்துவை உறவினர்கள் திட்டித் தீர்க்கின்றனர்.


அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts