வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: 2019-01-13
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Tuesday, January 22, 2019

ஒரே நேரத்தில் 5 பேருக்கு மட்டுமே ஃபார்வர்ட்... வாட்ஸ் அப்பில் மாற்றம்

ஒரு செய்தியை ஒரே நேரத்தில் 5 பேருக்கு மட்டுமே 'ஃபார்வர்ட்' செய்ய முடிகின்ற வகையில் வாட்ஸ் அப் நிறுவனம் மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது. 


கடந்த ஆண்டு ஜூலை மாதம், இந்தியாவில் அறிமுகமான இந்த கட்டுப்பாடு மூலம், வதந்திகள் ஓரளவு குறைந்தது.
(தொடர்ச்சி கீழே...)
 இதையும் படிக்கலாமே !!!


வதந்தி, போலிச் செய்திகளால் ஏற்படும் வன்முறைகளை தடுக்கப்பட வேண்டும் என்ற, இந்திய அரசின் உத்தரவை அடுத்து, வாட்ஸ் அப் நிறுவனம், ஒரே நேரத்தில் 5 பேருக்கு மட்டுமே ஃபார்வர்ட் செய்யும், கட்டுப்பாடு விதித்தது.

ஒரு மெசேஜ் எங்கிருந்து வருகிறது, யார் அனுப்புகிறார்கள், பரப்புகிறார்கள் என்பதைக் கண்காணிக்கும் முறையை வகுத்து வருவதாகவும் வாட்ஸ் அப் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. தற்போது, இந்தக் கட்டுப்பாடு உலக அளவில் அனைத்து நாட்டிலும், அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் 20 கோடி பேருக்கு மேல் வாட்ஸ்-அப் பயன்படுத்தி வருகின்றனர். உலக அளவில் 150 கோடி பயனாளிகள் உள்ளனர்.

கை வேறு, கால் வேறு.. குப்பைத் தொட்டியில் பெண் உடல்..

கைகள் தனியாக, கால்கள் தனியாக என கனக்கச்சிதமாக பார்சல் செய்யப்பட்ட இளம்பெண்ணின் உடலை குப்பை மேட்டில் பார்த்து அதிர்ச்சியில் உறைந்தனர் மாநகராட்சி ஊழியர்கள்!! 


பெருங்குடியில் மிகப்பெரிய குப்பை கிடங்கு உள்ளது. இங்குதான் பாதி சென்னையின் ஒட்டுமொத்த குப்பையும் கொட்டப்படும். இப்படி கோடம்பாக்கம் பகுதியிலிருந்து வந்து கொட்டப்பட்ட குப்பையில்தான் வித்தியாசமான பார்சல்கள் இருந்ததை மாநகராட்சி ஊழியர்கள் பார்த்து சந்தேகப்பட்டனர்.
(தொடர்ச்சி கீழே...)
 இதையும் படிக்கலாமே !!!


துண்டாக பார்சல்  

அருகில் சென்று பார்த்தபோதுதான் தெரிந்தது, அது பெண்ணின் உடல் என்பதும், கை, கால்கள் துண்டு துண்டாக வெட்டப்பட்டு பார்சலாகி வந்தது என்பதும். ஆனால் உடலை மட்டும் காணவில்லை. அதிர்ச்சி அடைந்த மாநகராட்சி ஊழியர்கள் உடனடியாக பள்ளிக்கரணை போலீசாருக்கு தகவல் அளித்தனர்.


பச்சை குத்தப்பட்டுள்ளது 

விரைந்து வந்த போலீசாரும் இதுகுறித்து விசாரணையில் இறங்கினார். கொலை செய்யப்பட்ட பெண் கோடம்பாக்கம் பகுதியை சேர்ந்தவரா? அல்லது வேறு பகுதியை சேர்ந்தவரா என உடடினயாக தெரியவில்லை. கொலை செய்யப்பட்ட பெண்ணுக்கு 30 வயதிருக்கும் என கூறப்படுகிறது. அவரது கையில் 2 இடங்களில் டாட்டூ எனப்படும் பச்சை குத்தப்பட்டுள்ளது.


பலாத்காரம்  

அதாவது வலது கையில் பட்டாம்பூச்சி மற்றும் டிராகன் படம் பச்சை குத்தப்பட்டுள்ளது. கால்களில் மெட்டி இருக்கிறது. வசதியான வீட்டு பெண்ணாக இருக்கலாம் என தெரிகிறது. பார்சலில் உடல் பாகங்கள் இருந்தாலும், நேற்று அல்லது நேற்று முன்தினம்தான் கொலை நடந்திருக்கும் என சொல்லப்படுகிறது. ஆனால் பலாத்காரம் செய்துதான் இந்த கொலை நடந்திருக்க நிறையவே வாய்ப்பு உள்ளதாக போலீசார் கருதுகிறார்கள்.


கைரேகைகள் 

இப்போதைக்கு கால், கை மட்டும் கிடைத்துள்ளதால், கையிலுள்ள ரேகை எடுத்து பார்த்து, ஆதாருடன் பொருத்தி பார்த்தால்தான் கொலை செய்யப்பட்ட பெண் யார் என்பதும், எதற்காக கொலை செய்யப்பட்டார் என்பதும் தெரியவரும். அது சம்பந்தமான முயற்சியில் போலீசார் இறங்கி வருவதுடன், பெண்ணின் உடல் எங்கே உள்ளது என்றும் தேடி வருகிறார்கள்.

200 ஆடுகள் பிரியாணிக்கு ரெடியா இருக்கு... வந்து சேருங்க மக்கா! எங்கே தெரியுமா?

200 ஆடுகள் பிரியாணிக்கு ரெடியா இருக்கு... எங்கே தெரியுமா? கோயில் பிரசாதத்துக்குதான்!! பொதுவாக ஒரு விசேஷம் என்றால் கிடா வெட்டி விருந்து வைப்பார்கள். 


ஆனால் கோயில் பிரசாதமாக பிரியாணியை தருவார்களா? என்பதுதான் பலரின் கேள்வியாக உள்ளது. மதுரை மாவட்டம், திருமங்கலம் தாலுகாவில் உள்ள கிராமம்தான் வடக்கம்பட்டி. இந்த கிராமத்தில் உள்ள முனிஸ்வரன் கோயிலில் ஆண்டுதோறும் ஜனவரி 25-ம் தேதி திருவிழா நடக்கும்.
 (தொடர்ச்சி கீழே...)
 இதையும் படிக்கலாமே !!!


ஆடுகள், கோழிகள்  

அப்போது காலையில் பக்தர்கள் பால் குடம் எடுத்து ஊர்வலமாக வருவார்கள். பிறகு முனியப்பசாமிக்கு பாலை ஊற்றி அபிஷேகம் செய்வர். அதன்பின்னர் நேர்த்திக் கடனாக ஆடு, கோழிகளை ஊர்வலமாக கொண்டு வந்து கோயிலுக்குள் விடுவார்கள். அந்த ஆடு, கோழிகள் எல்லாம் இரவு நேரத்தில் வெட்டப்பட்டு பிரியாணி தயார் ஆகும்.


மட்டன் பிரியாணி  

இந்தக் கோயிலில் மட்டும்தான் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் மட்டுமின்றி, திருவிழா அன்று சாலையில் செல்லும் அனைவருக்கும் மட்டன் பிரியாணி பிரசாதமாக தரப்படும். இந்த திருவிழா 3 நாட்கள் நடக்கும்.


பிரசாதம்  

எப்போதும் 2 ஆயிரம் கிலோ அரிசி போட்டு, 200 ஆடுகளை வெட்டி பிரியாணி தயார் ஆகும். இந்த பிரியாணி இரவு பகலாக சமைப்பார்கள். விடிகாலை 4 மணிக்கு மணக்க மணக்க முனீஸ்வரனுக்கு பிரியாணியை படைத்துவிட்டு, அதன்பிறகு பக்தர்களுக்கு பிரசாதமாக தருவார்கள்.


2000 கிலோ அரிசி  

காலை நேரத்தில் பிரியாணியை பெரும்பாலும் மக்களுக்கு சாப்பிட்டு பழக்கமில்லை என்றாலும், பிரசாதம் என்பதால் யார் வேண்டுமானாலும், எவ்வளவு வேண்டுமானாலும், சாப்பிடுவார்கள். பலர் வீட்டிலிருந்து பாத்திரங்களை எடுத்து வந்து பிரியாணியை வாங்கி செல்வார்கள். அதன்படி வருகிற 25-ம் தேதி திருவிழாவுக்காக 2000 கிலோ அரிசியில் 200 ஆடுகளை வெட்டி போட்டு பிரியாணி செய்ய போகிறார்கள்.


முனியாண்டி விலாஸ்  

இந்த கோயிலில் பிரியாணியை பிரசாதமாக வழங்க காரணம், முனியாண்டி ஸ்வாமியே ஒரு பிரியர்தானாம். இந்த கிராமத்து முனியாண்டிதான் "மதுரை முனியாண்டி விலாஸ்" என்ற பெயரில் தமிழகம் முழுவதும் பட்டி தொட்டிகளில் பிரபலமாகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜித்து விளையாட்டு காட்டி மற்றவர்களை பயமுறுத்தி சிரிக்கும் விஜய் மகன்

ஜங்ஷனை அடுத்து விஜய்யின் மகன் இயக்கி நடித்துள்ள சிரி குறும்படம் தளபதி ரசிகர்களை கவர்ந்துள்ளது. 


விஜய்யின் மகனுக்கு படங்களை இயக்குவதில் ஆர்வம் உள்ளது. அதன் முதல் கட்டமாக அவர் குறும்படங்களை இயக்கி நடித்தும் வருகிறார். அவர் இயக்கி நடித்த ஜங்ஷன் குறும்படம் வெளியானது. இந்நிலையில் சிரி என்கிற குறும்படம் வெளியாகியுள்ளது.
 (தொடர்ச்சி கீழே...)
 இதையும் படிக்கலாமே !!!

ஜேசன் சஞ்சய் தனது போனை கையில் எடுத்து தான் 10 நிமிடங்கள் யார் கண்ணுக்கும் தெரியாமல் இருக்க முடியுமா என்று ஜேசன் சிரியிடம்(Siri) கேட்கிறார். அதன் பிறகு அவர் பள்ளிக்குள் சென்றபோது அவர் யார் கண்ணுக்கும் தெரியவில்லை. அதனால் அவர் கதவை திறந்தபோது அதை பார்த்த சக மாணவர்கள் பேயோ என்று நினைத்து பயப்படுகிறார்கள்.


உருவம் 

சக மாணவர்கள் மிரள்வதை பார்த்து ஜேசனுக்கு முதலில் ஒன்றும் புரியவில்லை. பின்னர் கண்ணாடி முன்பு நின்றபோது தான் அவரின் உருவம் அதில் தெரியாததை பார்த்து அவர் அதிர்ச்சி அல்ல மகிழ்ச்சி அடைகிறார். அதன் பிறகு சக மாணவர்களை பயமுறுத்தி விளையாடுகிறார்.


ஆசிரியர்  

சக மாணவர்களை பயமுறுத்திக் கொண்டிருந்தபோது ஒரு ஐடியா வந்து வகுப்பறைக்குள் சென்று விடைத்தாளில் மதிப்பெண்களை மாற்றுகிறார். அப்பொழுது அங்கு வரும் ஆசிரியரிடம் கையும் களவுமாக மாட்டுகிறார். அவர் சிரியிடம் கேட்ட 10 நிமிடங்கள் முடிந்ததை அவர் உணராமல் ஆசிரியரிடம் வசமாக மாட்டுகிறார்.


தமிழ் 

ஜங்ஷன் குறும்படத்தில் ஆங்கிலத்தில் அதிக அளவில் பேசினார்கள். சிரி குறும்படம் முழுக்க ஆங்கிலத்தில் தான் உள்ளது. ஜேசன் சர்வதேச அளவில் தனது குறும்படங்கள் கவனிக்கப்பட வேண்டும் என்று நினைத்து இப்படி செய்கிறார் போன்று. சிரி குறும்படம் ஜேசனை சுற்றியே நகர்கிறது.

Monday, January 21, 2019

புதுப் பொலிவு பெறும் அங்கன்வாடிகள்.. எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் தொடக்கம்..!

தமிழகத்தில் அரசு அங்கன்வாடி பள்ளிகலில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் இன்று தொடங்கி வைக்கப்பட்டன. தமிழக கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்களை எடப்பாடி பழனிச்சாமி அரசு செய்து வருகிறது.


குறிப்பாக பள்ளிக் கல்வித்துறையில் பல மாற்றங்களை கொண்டு வந்தவண்ணம் உள்ளனர். அதில் ஒரு கட்டமாக இன்று அரசு அங்கன்வாடி பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் தொடங்கி வைக்கப்பட்டன.
(தொடர்ச்சி கீழே...)
 இதையும் படிக்கலாமே !!!

தற்போது தனியார் நர்சரிப் பள்ளிகளில்தான் எல்கேஜி, யுகேஜி என் ப்ரீகேஜி வகுப்புகள் கூட உள்ளன. இந்த நிலையில் தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசுப் பள்ளிகளையும் மாற்றும் வகையில் கிண்டர்கார்டன் வகுப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளது தமிழக அரசு. 

சென்னை எழும்பூரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் முதல் முறையாக பள்ளி கல்வித்துறை சமூகநலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை ஒருங்கிணைப்புடன் அரசு பள்ளிகளில் எல்கேஜி மற்றும் யுகேஜி வகுப்புகள் துவக்க விழா நடைபெற்றது. இந்த நிகழ்வில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பள்ளி கல்விதுறை அமைச்சர் செங்கோட்டையன், சமூகநலம் மற்றும் சத்துணவு துறை அமைச்சர் சரோஜா மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், விளம்பரம் மற்றும் செய்து தொடர்புதுறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, கலந்து கொண்டு இத்திட்டத்தை துவக்கி வைத்தனர். 

இந்த நிகழ்வில் பள்ளி மாணவ மாணவியர்கள், மற்றும் ஆசிரிய பெருமக்கள் கலந்துகொண்டனர். தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களில் அங்கன்வாடி மையங்களில் பள்ளிக்கல்வித்துறை சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை ஒருங்கிணைப்புடன் அரசு பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் நடத்தப்பட உள்ளது. 2381 அங்கன்வாடி மையங்களில் துவங்கப்பட்ட உள்ள எல்கேஜி மற்றும் யுகேஜி வகுப்புக்கள் மூலம் 52,932 குழந்தைகள் பயன்பெறுவார்கள். நிகழ்ச்சியில் மாணவ மாணவர்களுக்கு பள்ளி சீருடை, பாட புத்தகம் ஆகிய கல்வி உபகரணங்களை முதல்வர் வழங்கினர்.

குளிச்சிட்டீங்களா.. ராத்திரி பங்களாவுக்கு வாங்க.. காஞ்சிபுரத்தை உலுக்கிய பலே சாமியார்

"குளிச்சிட்டு நகைகளை போட்டுக்குங்க.. அந்த பாழடைந்த பங்களாவுக்கு நடுராத்திரி வந்து கண்ணை மூடி சாமி கும்பிடுங்கள்... உங்களுக்கு குழந்தை பிறக்கும்" என்று டுபாக்கூர் சாமியார் சொன்னதை நம்பிய தம்பதிகளின் செய்திதான் இது. 


மதுராந்தகம் அடுத்துள்ள ஊர் புதூர் கிராமம். இங்கு வசித்து வரும் தம்பதி பிரபாகரன்-ஜானகி. பிரபாகரன் பெயின்டராக வேலை பார்க்கிறார். 
 (தொடர்ச்சி கீழே...)
 இதையும் படிக்கலாமே !!!

இவர்களுக்கு கல்யாணமாகி 3 வருடங்கள் ஆகியும் குழந்தை இல்லை. அதனால் பலரிடம் தங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லை என்று சொல்லி வருத்தப்பட்டனர். அப்போது, காஞ்சிபுரம் அடுத்த தாமரைத் தாங்கல் பகுதியில் பாபு என்ற சாமியாரை சென்று பார்க்குமாறு ஒருசிலர் சொன்னார்கள். அதை நம்பி மனைவியை அழைத்துகொண்டு சாமியாரை சந்தித்தார் பிரபாகரன்.


குழந்தை வரம் 

அப்போது சாமியார், "பவுர்ணமி அன்று யாகம் நடத்த வேண்டும். தம்பதி இருவரும் குளித்துவிட்டு, நகைகளை அணிந்து கொண்டு யாகத்துக்கு தயாராக வேண்டும். இரண்டு பேர் தவிர இந்த யாகத்தில் வேறு யாரும் இருக்க கூடாது. அந்த விசேஷ யாகம் நடத்திவிட்டால் குழந்தை வரம் கிடைக்கும் என்றார்.


புதிய வீடு 

இதை நம்பி பிரபாகரனும், ஜானகியும் குளித்துவிட்டு, நகைகளை முழுக்க அணிந்துகொண்டு, ராத்திரி 11 மணிக்கு பாபுவை பார்க்க சென்றனர். அப்போது ஒதுக்குப்புறமாக கட்டப்பட்டு வரும் ஒரு புதிய வீட்டுக்கு இருவரையும் அழைத்து சென்றார்.


10 சவரன் நகை  

பிறகு கண்ணை மூடிக் கொண்டு சாமி கும்பிடுங்கள் என்றதும், தம்பதியும் பயபக்தியுடன் கண்களை மூடி கும்பிட ஆரம்பித்தனர். அப்போது பாபு, திடீரென்று ஒரு பெரிய கல்லை கொண்டு வந்து பிரபாகரனையும், ஜானகியையும் பலமாக தாக்க ஆரம்பித்தார். இதில் நிலைகுலைந்து விழுந்தபோது, கழுத்தில் கிடந்த 10 பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு எஸ்கேப் ஆனார் டுபாக்கூர் பாபு.


வழக்கு பதிவு 

இதையடுத்து படுகாயமடைந்த தம்பதி கூச்சல் போடவும், அந்த பகுதி மக்கள் விரைந்து வந்து மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது சம்பந்தமாக போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பியோடிய சாமியார் பாபுவை தேடி வருகிறார்கள்.

விஸ்வாசம் அஜீத்தை மிஞ்சிய தந்தை... குழந்தைகளுக்காக என்ன செய்தார் என தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்

குழந்தைகள் மீது மிகுந்த பாசம் கொண்ட தந்தை ஒருவர், விஸ்வாசம் அஜீத்தைய மிஞ்சியுள்ளார். 


தன் குழந்தைகளுக்காக அவர் என்ன செய்தார்? என தெரிந்தால் நீங்கள் ஆச்சரியப்படக்கூடும்.
(தொடர்ச்சி கீழே...)
 இதையும் படிக்கலாமே !!!

குழந்தைகளின் முதல் ஹீரோ பெற்றோர்கள்தான். தங்களது பெற்றோர்களை பின்பற்றிதான் குழந்தைகள் வளர்கின்றனர். எனவே குழந்தைகளை மகிழ்ச்சியாக வைத்து கொள்வதற்காக பெற்றோர்கள் எதை வேண்டுமானாலும் செய்வார்கள்.


இதில், ஒரு சில பெற்றோர்கள் செய்யும் செயல்கள் உலகின் கவனத்தை வெகுவாக ஈர்த்து விடுகின்றன. இந்த வகையில் அருண்குமார் புருஷோத்தமன் என்பவர் தனது குழந்தைகளின் மகிழ்ச்சிக்காக செய்த செயல் தற்போது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளதுடன், அவருக்கு பாராட்டுக்களையும் பெற்று தந்துள்ளது.


கடவுளின் சொந்த தேசமாக வர்ணிக்கப்படும் கேரள மாநிலத்தை சேர்ந்தவர்தான் அருண்குமார் புருஷோத்தமன். இவர் அங்குள்ள இடுக்கி மாவட்டத்தில், ஆண் செவிலியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் என 2 குழந்தைகள் உள்ளனர்.
தனது குழந்தைகள் மீது அருண்குமார் புருஷோத்தமன் மிகுந்த பாசம் கொண்டவர். எனவே குழந்தைகளின் மகிழ்ச்சிக்காக ஏதாவது ஒன்றை வித்தியாசமாக செய்ய வேண்டும் என நீண்ட நாட்களாக யோசித்து கொண்டே இருந்தார்.




அப்போது குழந்தைகள் ஓட்டுவதற்காக மினி ஆட்டோ ரிக்ஸா ஒன்றை உருவாக்கி கொடுத்தால் என்ன? என்ற சிந்தனை அவருக்குள் உதித்தது. யோசனையுடன் நின்று விடாமல், மினி ஆட்டோ ரிக்ஸாவை உருவாக்கும் பணியில் உடனடியாக களமிறங்கினார் அருண்குமார் புருஷோத்தமன்.
தன் வழக்கமான பணிகளுக்கு மத்தியிலும், அவ்வப்போது கிடைக்கும் நேரத்தை ஒதுக்கி, மினி ஆட்டோ ரிக்ஸாவை உருவாக்கும் பணியில் அருண்குமார் புருஷோத்தமன் ஈடுபட்டு வந்தார். இதன்படி சுமார் 7.5 மாதங்கள் அவர் மிக கடுமையாக உழைத்தார்.


இதன் விளைவாக, ஆச்சரியம் அளிக்கும் வகையிலான வசதிகளுடன் கூடிய மினி ஆட்டோ ரிக்ஸாவை அவர் உருவாக்கி விட்டார். இது பார்ப்பதற்கு அப்படியே வழக்கமான பஜாஜ் ஆர்இ ஆட்டோவை (Bajaj RE Auto) போலவே உள்ளது.
தற்போது அருண்குமார் புருஷோத்தமனின் குழந்தைகள், தங்கள் தந்தை உருவாக்கி கொடுத்த மினி ஆட்டோ ரிக்ஸாவை ஓட்டி விளையாடி கொண்டிருக்கின்றனர். இந்த மினி ஆட்டோ ரிக்ஸாவில் இடம்பெற்றிருக்கும் வசதிகள் அசத்தலாக உள்ளன.


இந்த மினி ஆட்டோ ரிக்ஸாவில், லைட், ஹாரன், இன்டிகேட்டர், வைப்பர்கள் ஆகியவற்றுக்கு தனித்தனியே ஸ்விட்ச்கள் இடம்பெற்றுள்ளன. இதுதவிர மொபைல் சார்ஜ் ஏற்றிக்கொள்ளும் வசதியும் உள்ளது. ஸ்பீக்கர்களுடன் மியூசிக் சிஸ்டமும் இடம்பெற்றிருப்பது கூடுதல் சிறப்பு.
ஆனால் இது வழக்கமான பெட்ரோல் மற்றும் டீசல் ஆட்டோக்களை போல் கிடையாது. இது முழுக்க முழுக்க மின்சாரத்தால் இயங்க கூடிய மினி ஆட்டோ ரிக்ஸா ஆகும். இதில், 24 வோல்ட் டிசி எலெக்ட்ரிக் மோட்டார் 
(24V DC Electric Motor) பொருத்தப்பட்டுள்ளது.
ஆட்டோவின் பின்பகுதியில் இடம்பெற்றுள்ள இரண்டு 12 வோல்ட் பேட்டரிகளில் (12V Batteries) இருந்து இந்த மோட்டாருக்கு பவர் கிடைக்கிறது. அருண்குமார் புருஷோத்தமன் உருவாக்கியுள்ள மினி ஆட்டோ ரிக்ஸாவின் மொத்த எடை 60 கிலோ மட்டுமே. ஆனால் இதில் 150 கிலோ வரையிலான எடையை ஏற்றி செல்ல முடியும்.



மினி ஆட்டோ ரிக்ஸாவில் முதலுதவி பெட்டி ஒன்றையும் அருண்குமார் புருஷோத்தமன் வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இதனை உருவாக்க செலவிடப்பட்ட மொத்த தொகை எவ்வளவு? என்ற தகவல் மட்டும் வெளியாகவில்லை.
தற்போது கேரள மாநிலத்தை கடந்து நாடு முழுவதும் பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ள இந்த மினி ஆட்டோ ரிக்ஸாவை, அருண்குமார் புருஷோத்தமனின் குழந்தைகள் இருவரும் மகிழ்ச்சியுடன் ஓட்டி விளையாடி கொண்டிருக்கின்றனர். இது பார்ப்பதற்கே கண்கொள்ளா காட்சியாக இருக்கிறது.


பொங்கலுக்கு வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கும் விஸ்வாசம் படத்தில், மகள் மீது மிகுந்த பாசம் கொண்ட கதாபாத்திரத்தில் தல அஜீத் நடித்துள்ளார். ஆனால் நிஜ வாழ்க்கையில் அப்படி வாழ்ந்து வருகிறார் அருண்குமார் புருஷோத்தமன்.
குழந்தைகள் மீது கொண்ட பாசத்திற்காக, பல்வேறு சிறப்பம்சங்களுடன் கூடிய மினி ஆட்டோ ரிக்ஸாவை, கடும் சிரமங்களுக்கு இடையே உருவாக்கிய அருண்குமார் புருஷோத்தமனுக்கும், அவரது மனைவிக்கும் தற்போது பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. இந்த பணியில், அருண்குமார் புருஷோத்தமனின் மனைவியுடைய பங்களிப்பும் குறிப்பிடத்தக்கது.

கோவில் நுழைவாயிலை மிதித்தால் என்ன அர்த்தம்? அதையே தாண்டினால் என்ன அர்த்தம்?

கோவிலுக்குள் நுழைகின்ற பொழுது, சிலருக்கு நுழைவு வாயில் படியை ஏறி மிதித்து சென்று தான் பழக்கம். சிலரைப் பார்த்திருப்போம். 

அகலமான படியாக இருந்தாலும் அதைக் கஷ்டப்பட்டு தாண்டி தான் செல்வார்கள். இது பற்றி சாஸ்திரங்களும் பெரியவர்களும் என்ன சொல்கிறார்? ஏறிச் செல்வது சரியா தாண்டிச் செல்வது சரியா என்று பார்ப்போம்.
(தொடர்ச்சி கீழே...)
 இதையும் படிக்கலாமே !!!


கோவில்

கோயிலின் நுழைவாயிலில் குறுக்காக இருக்கிற முதல் படிக்கட்டின் மேல் ஏறி நிற்கக் கூடாது. தாண்டி தான் செல்ல வேண்டும். அதாவது கோவிலுக்குள் நுழைவதற்கு முன்னால் ஆறோ குளமோ இருந்தாலும் சரி, அல்லது வெளியில் நிச்சயம் தண்ணீர் குழாய் இருக்கும். அதில் கால், பாதங்களைக் கழுவி விட்டு தான் கோவிலுக்குள் நுழைய வேண்டும். கை மற்றும் கால்களைக் கழுவிய பின்னர், சில துளிகள் தண்ணீரை எடுத்து தலையில் சுற்றித் தெளித்துக் கொள்ளுங்கள்.


துவார பாலகர்  

இப்போது தான் கடவுளை வணங்குவதற்கு நம்முடைய உடலைத் தயார்ப் படுத்திக் கொண்டிருக்கிறோம். அடுத்ததாக, கோவிலுக்குள் நுழைவதற்கு முன்பே, கோவில் கோபுரத்தையும் அவற்றில் உள்ள கலசங்களையும் பார்த்து முதலில் வணங்கிக் கொள்ள வேண்டும். அதன்பின்னர், வாயிலில் காவலுக்கான நின்று கொண்டிருக்கிற துவார பாலகர்களை வணங்கி, அவர்களிடம் உள்ளே செல்வதற்கு அனுமதி வாங்கிக் கொண்டு, உள்ளே செல்ல வேண்டும்.


நுழைவாயில் 

அப்படி அனுமதி வாங்கிக் கொண்டு உள்ளே செல்லுகிற போது, இருக்கின்ற நுழைவாயில் படியைக் கடக்க வேண்டும். அந்த படியை தாண்டிச் செல்கின்ற பொழுது, நாள் கொண்டு வந்திருக்கும் பாவங்கள், எதிர்மறை எண்ணங்கள், மனதுக்குள் இருக்கும் கவலைகள், வினையான காரியங்கள், ஆகிய கெட்ட விஷயங்கள் எல்லாவற்றையும் இங்கேயே விட்டுவிட்டு, கோவிலுக்குள் வெறும் சாதாரண மனிதனாக, எந்த எண்ண ஓட்டங்களும் இல்லாமல் தெளிவான நீரோடை போல தான் வருகின்றேன் என்று மனதில் நினைத்துக் கொண்டே அந்த படியைத் தாண்டிச் செல்ல வேண்டும்.


நேர்மறை எண்ணங்கள் 

அதேசமயம் அந்த படிக்கட்டுக்களின் மேல் ஏறி, மிதித்து உள்ளே செல்கிறீர்கள் என்றால், மனதுக்குள் இருக்கும் அத்தனை எதிர்மறை எண்ணங்களையும் மனதுக்குள் சுமந்து கொண்டே தான் கோவிலுக்குள் வருகிறேன் என்று அர்த்தம். இறைவன் குடியிருக்கும் கோவில் என்பது, நாள் முழுவதும் கூறப்படுகின்ற மந்திரங்களினாலும் நாதஸ்வரம், கெட்டி மேளங்கள் போன்ற மங்களகரமான இசையினாலும் முழுக்க முழுக்க நேர்மறை அதிர்வுகளால் நிரம்பியிருக்கும். அதனாலேயே அந்த நுழைவு வாயிலைத் தாண்டிச் செல்ல வேண்டும் என்பது தான் ஐதீகம்.

என் மகனை அடிச்சே கொன்னுட்டேன்.. போலீஸை அதிர வைத்த மாரியம்மாள்..

ஓவராக குடித்து விட்டு ஆட்டம் போட்ட மகனை விறகு கட்டையாலேயே விரட்டி விரட்டி அடித்து கொன்றுள்ளார் பெற்ற தாய் மாரியம்மாள். 




இந்த சம்பவம் கும்பகோணத்தில் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. கும்பகோணம் அருகே வேப்பத்தூர் பெரியார் நகரைச் சேர்ந்தவர் மாரியம்மாள். இவரது மகன் கருப்பையன். 
(தொடர்ச்சி கீழே...)
 இதையும் படிக்கலாமே !!!

40 வயதாகிறது. கல்யாணமாகி 2 குழந்தைகளும் உண்டு. ஆனால் எப்பவுமே தண்ணி அடித்துவிட்டு வீட்டில் இருப்பவர்களை அடித்து நொறுக்குவதுதான் இவரது தினசரி பொழப்பே. இதனால் இவரது தொல்லை தாங்காமல் செய்து வந்த அட்டூழியங்களை அனைவரும் பொறுத்து கொண்டு வந்தனர்.


2 குழந்தைகள் 

ஒரு கட்டத்தில் கருப்பையனிடம் அடி தாங்க முடியாத மனைவி தன் குழந்தைகளை மாமியாரிடமே விட்டுவிட்டு அம்மா வீட்டுக்கு கோபித்து கொண்டு போய்விட்டார். இதனால் 2 குழந்தைகளையும் மாரியம்மாள்தான் கவனித்து வந்தார்.


விறகு கட்டை

இந்நிலையில் நேற்று ராத்திரியும் ஃபுல் போதையில் கருப்பையன் வீட்டிற்குள் நுழைந்து வழக்கம்போல் தகராறில் ஈடுபட்டார். பிறகு மாரியம்மாளை அடிக்கவும் ஆரம்பித்துவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த மாரியம்மாள் பக்கத்தில் கிடந்த கட்டையை எடுத்து கருப்பையனை சரமாரியாக விளாசினார்.


உயிரிழந்தார் 

இவ்வளவு நாள் இருந்த ஆத்திரத்தை எல்லாம் விறகு கட்டையாலேயே விரட்டி விரட்டி அடித்தார். இதில் பலத்த காயமடைந்த கருப்பையன் சிறிது நேரத்தில் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.


சரணடைந்தார்  

இதனைத்தொடர்ந்து இன்று காலை மாரியம்மாள் திருவிடைமருதூர் போலீஸ் ஸ்டேஷன் சென்றார். "என் மகனை அடித்தே கொன்றுவிட்டேன்" என்று சொல்லி சரணடைந்தார். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் கருப்பையா உடலை கைப்பற்றி தொடர் விசாரணையை நடத்தி வருகிறார்கள்.

சசிகலா ஷாப்பிங் சென்றது உண்மையா? திடுக்கிடும் அறிக்கை

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள சசிகலா ஷாப்பிங் சென்றது உண்மையா என்பது குறித்த திடுக்கிடும் தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது. 

பெங்களூர் சிறையில் சசிகலா சொகுசாக இருந்தது தொடர்பாக பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. கடந்த ஆண்டு கர்நாடக சிறைத்துறை டி.ஐ.ஜி-யாக இருந்த ரூபா, சசிகலா பெங்களூரில் சிறையில் சொகுசாக இருக்கிறார் என்று குற்றஞ்சாட்டியிருந்தார். 
 (தொடர்ச்சி கீழே...)
 இதையும் படிக்கலாமே !!!

இதற்காக ரூ.2 கோடி லஞ்சம் வாங்கப்பட்டுள்ளது என்றும், சிறைத்துறை டி.ஜி.பி. சத்திய நாராயணராவ் மீதும் அவர் குற்றம்சாட்டினார். இதன்பின் இதை விசாரிக்க குழு அமைக்கப்பட்டது. ஐஏஎஸ் அதிகாரி வினய்குமார் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இந்த குழு தாக்கல் செய்ய அறிக்கையின் விவரங்கள் தற்போது வெளியாகி உள்ளது.


புகார் உண்மை  

அதன்படி புகார் கூறிய டிஐஜி ரூபாவின் குற்றச்சாட்டில் உண்மை இருப்பதாக விசாரணை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. சசிகலாவிற்கு சிறையில் கூடுதல் வசதிகள் அளிக்கப்பட்டது உண்மைதான். ஆடை மற்றும் பார்வையாளர் சந்திக்கும் விவகாரத்திலும் நிறைய விதிகள் மீறப்பட்டுள்ளது. முக்கியமாக அடிக்கடி நிறைய பார்வையாளர்கள் வந்து சென்று இருப்பதாக கூறப்பட்டுள்ளது.


விளக்கம்  

அதேபோல் சிறையில் சசிகலா, இளவரசி இருவரும் சாதாரண உடையில் இருந்தனர் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது. சிசிடிவி காட்சியில் இருப்பது போல இவர்கள் வெளியே சென்று வந்திருக்க வாய்ப்புள்ளது என்றும் கூறப்பட்டு உள்ளது. கையில் இருக்கும் பையை வைத்து இவர்கள் வெளியே சென்று இருக்கிறார்கள் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


சிறைத்துறை விளக்கம்  

இதற்கு சிறைத்துறை அளித்த விளக்கமும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. சிறைத்துறையின் கூற்றுப்படி, சசிகலா தன்னை சந்திக்க வந்தவர்களை பார்க்கவே சென்றார். அதுதான் சிசிடிவியில் பதிவாகி உள்ளது. அவர்கள் கொடுத்த உணவுதான் கையில் உள்ள பை என்றுள்ளனர்.


என்ன பதில்

இந்த நிலையில் இதை விசாரணை ஆணையம் மறுத்துள்ளது. பார்வையாளர் சந்தித்த நேரமும், சிசிடிவி வீடியோ நேரமும் ஒரே நேரம் கிடையாது என்று விசாரணை ஆணையம் கூறியுள்ளது. இவர்கள் அந்த நேரத்தில் பார்வையாளர்களை சந்திக்கவில்லை என்றும் விசாரணை குழு தெரிவித்துள்ளது, இதனால் சசிகலா ஷாப்பிங் சென்று இருக்கவே அதிக வாய்ப்புள்ளது என்று கூறியுள்ளனர்.