Run World Media: 01/29/19

எங்களது பிற செய்திகளை இங்கு தேடவும்

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Tuesday, January 29, 2019

வேலைவாய்ப்பு - மெட்ரோ ரெயில்வேயில் வேலை. விண்ணப்பிக்க கடைசி நாள் 2-2-2019

மெட்ரோ ரெயில் நிறுவனங்களில் ஒன்று பெங்களூரு மெட்ரோ.சுருக்கமாக பி.எம்.ஆர்.சி.எல். என அழைக்கப்படும் இந்த நிறுவனம் தற்போது ஜூனியா் என்ஜினீயா், செக்சன் என்ஜினீயர் மற்றும் மெயின்டனர் போன்ற பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. 
  (தொடர்ச்சி கீழே...)
 இதையும் படிக்கலாமே !!!

மொத்தம் 174 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
இதில் மெயின்டனர் பணிக்கு 134 இடங்களும், ஜூனியர் என்ஜினீயர் பணிக்கு 21 இடங்களும், செக்சன் என்ஜினீயர் பணிக்கு 19 இடங்களும் உள்ளன.
10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் 2 ஆண்டு ஐ.டி.ஐ. படித்தவர்கள் மெயின்டனர் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். 3 ஆண்டுகள் கொண்ட டிப்ளமோ என்ஜினீயரிங் படித்தவர்கள் ஜூ‌னியர் என்ஜினீயர் பணிக்கும், என்ஜினீயரிங் பட்டப்படிப்பு படித்தவர்கள் செக்சன் என்ஜினீயர் பணிகளுக்கும் விண்ணப்பிக்கலாம்.
35 வயதுக்கு உட்பட்ட பொது பிரிவினர் விண்ணப்பிக்கலாம். மாற்றுத்திறனாளிகள், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் ஓ.பி.சி. பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படுகிறது.

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். 2-2-2019-ந் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும். இது பற்றிய விரிவான விவரங்களை http://bmrc.co.in/ என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.

குரூப்-1 தேர்வுக்கு விண்ணப்பித்து விட்டீர்களா? விண்ணப்பிக்க கடைசி நாள் 31-01-2019

தமிழக அரசுப்பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி. அமைப்பு, பல்வேறு அரசுத் துறைகளுக்கு தேவைப்படும் இளநிலை உதவியாளர் முதல் உதவி கலெக்டர் வரை பல்வேறு பணிகளுக்கான காலியிடங்களை தேர்வு மூலம் நிரப்பி வருகிறது.

இவற்றில் பெரும்பாலானவர்கள் எழுதும் தேர்வுகளாக குரூப்-4 மற்றும் குரூப்-2 தேர்வுகள் விளங்குகின்றன. பல்வேறு துறைகளில் ஏராளமான காலியிடங்கள் இந்த தேர்வுகள் மூலம் நிரப்பப்படுவது இதற்கு முக்கிய காரணமாகும். 
 (தொடர்ச்சி கீழே...)
 இதையும் படிக்கலாமே !!!

அதே வேளையில் டி.என்.பி. எஸ்.சி. நடத்தும் முக்கிய தேர்வுகளில் ஒன்று குரூப்-1 தேர்வு. தமிழக அரசின் உயர் பதவி களுக்கான தேர்வாக இது விளங்குகிறது.
இந்த தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் உதவி கலெக்டர், போலீஸ் துணை சூப்பிரண்டு, வணிகவரி உதவி ஆணையர், மாவட்ட பதிவாளர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் போன்ற தமிழக அரசின் உயர் பதவிகளில் பணியமர்த்தப்படுகிறார்கள். முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்காணல் என 3 கட்ட தேர்வுகளாக இந்தத் தேர்வு நடைமுறை பின்பற்றப்படுகிறது. பட்டதாரிகள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க முடியும். உடற்தகுதியும் குறிப்பிட்ட அளவில் இருக்க வேண்டும்.
தற்போது குரூப்-1 பணிகளுக்கு 139 பேரை தேர்வு செய்ய அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஒவ்வொரு பதவிக்கும் உள்ள பணியிடங்கள் எண்ணிக்கையை முழுமையான விளம்பர அறிவிப்பில் பார்க்கலாம். வருகிற 31-ந் தேதி வரை இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க அவகாசம் உள்ளது. இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
சமூகத்தில் சிறந்த மதிப்பும், நல்ல ஊதியமும் பெற்றுத்தரும் குரூப்-1 பணியை பெறுவதில் இளைஞர்கள் மத்தியில் பெருங் கனவு உள்ளது. உங்கள் லட்சியத்தை வென்றுமுடிக்க நீங்கள் பின்பற்ற வேண்டிய சில வெற்றி நடைமுறைகளை இங்கே பார்க்கலாம்...
விண்ணப்பதாரர்கள் தேர்வுக்கான பாடத்திட்டங்கள் பற்றியும், தேர்வு முறை பற்றியும் முதலில் தெளிவாக அறிந்து கொண்டு தயாராக வேண்டும்.

குரூப்-1 தேர்வின் முதல்நிலைத் தேர்வு 300 மதிப்பெண்களுக்கு நடத்தப்படுகிறது. இதில் 200 கேள்விகள் கேட்கப்படும். தேர்வு பட்டப் படிப்பு தரத்தில் இருப்பதால் பள்ளிப் கல்லூரி பாடத்திட்டங்களுடன் பொதுவான தகவல் திரட்டுடன் தயாராவது நல்ல பலன் தரும்.
வினாக்களை ரீசனிங், குவான்டிடேடிவ், ஜெனரல் ஸ்டடி என 3 வகையாக பிரிக்கலாம். ஜெனரல் ஸ்டடியில் பாடத்திட்டங்கள் சார்ந்து மட்டுமல்லாமல், பொது அரசியல், நடப்பு நிகழ்வுகள், கலாச்சாரம், பொருளாதாரம் என எந்தத்துறை சார்ந்த கேள்வியும் கேட்கப்படலாம். எனவே அதற்கேற்ப பரந்த தயாரிப்புகள் தேவை.

ரீசனிங் மற்றும் குவான்டிடேடிவ் பகுதி வினாக்கள் பெரும்பாலும் கணிதம் மற்றும் சூழல் சார்ந்ததாக இருக்கும். விதவிதமான மாதிரிகளுக்கு விடைகண்டறிந்து பயிற்சி பெறுவது, எளிதில் விடையளிக்கவும், அதிக மதிப்பெண் பெறவும் துணை செய்யும்.
மெயின் தேர்வு தாள்-1, தாள் 2, தாள் 3 என பிரித்து நடத்தப்படுகிறது. இது தலா 300 மதிப்பெண்களுக்கு நடைபெறும். நேர்காணல் 120 மதிப்பெண்களுக்கு நடத்தப்படுகிறது.

மெயின் தேர்வில் வரலாறு, அரசியல், அறிவியல் மற்றும் பொது அறிவு, நடப்பு நிகழ்வு பகுதியில் நுட்பமான கேள்விகளும், கட்டுரை எழுதும் பகுதியும் இடம் பெறும். நேர்காணலில் மேலாண்மைப் பண்புகள் சோதிக்கப்படும்.
தேர்வுக்கான பாடத்திட்டங்கள் டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தில் (www.tnpsc.gov.in) பி.டி.எப். கோப்பாக வெளியிடப்பட்டிருக்கிறது. அதை பதிவிறக்கம் செய்து படிப்பது நல்ல பலன் தரும்.

குரூப்-1 பாடத்திட்டங்கள் தொடர்பான புத்தகங்களையும் வாங்கிப்படித்து திறமையை வளர்த்துக் கொள்ளலாம்.

முந்தைய ஆண்டுகளில் நடந்த தேர்வுகளின் வினாக்களை நன்கு பயிற்சி செய்வது சிறந்த பலன் தரும்.
பாடங்களை திரும்பத் திரும்ப படிப்பதுடன், தொடர்முயற்சி செய்வது அதிக மதிப்பெண் பெற்று வெயிட்டேஜ் முறையில் முன்னணி பெற துணை செய்யும்.

மத்திய அரசின் சிவில் சர்வீஸ் தேர்வு போல குறிப்பிட்ட முறைக்குமேல் எழுத முடியாது என்ற கட்டாயம் இல்லை என்பதால் வயதுவரம்பு இருக்கும் வரை மீண்டும் மீண்டும் தேர்வு எழுதி வெற்றி பெற முயற்சி செய்யலாம்.

பல வழிகளில் தகவல்களை திரட்டுதல், புரிந்து படித்தல், கடினமான வினாக்களுக்கு எளிய வழிகளில் தீர்வு காணும் முறை, படித்ததை நினைவில் ஏற்றுதல், விடா முயற்சியுடன் படித்தல், மனதில் பாரம் ஏற்றாமல் மனஅழுத்தம் குறைத்து, போதிய ஓய்வு எடுத்து படித்தல், குழுவாக முயற்சி செய்தல், தகுந்த பயிற்சியாளர், உதவியாளரின் ஆலோசனைப்படி நடத்தல் என திட்டமிட்ட முயற்சி உங்களுக்கு வெற்றிக் கனியை எளிதாக பறிக்க உதவியாக இருக்கும். வெற்றி பெற வாழ்த்துக்கள்.

வேலைவாய்ப்பு - அனல்மின் நிறுவனத்தில் என்ஜினீயர்களுக்கு வேலை - 207 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். விண்ணப்பிக்க கடைசி நாள் ஜனவரி 31

அனல்மின் நிறுவனத்தில் ‘கேட்’ தேர்வு அடிப்படையில் என்ஜினீயர்களுக்கான பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. மொத்தம் 207 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
தேசிய அனல்மின் நிறுவனம் சுருக்கமாக என்.டி.பி.சி. என அழைக்கப்படுகிறது. தற்போது இந்த நிறுவனத்தில் எக்சிகியூட்டிவ் டிரெயினி-2019 பணியிடங்களை கேட் 2019 தேர்வின் அடிப்படையில் நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. 
 (தொடர்ச்சி கீழே...)
 இதையும் படிக்கலாமே !!!

மொத்தம் 207 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். என்ஜினீயரிங் பிரிவு வாரியாக பணியிடங்கள் விவரம் : எலக்ட்ரிக்கல் - 47, மெக்கானிக்கல் - 95, எலக்ட்ரானிக்ஸ் - 25, இன்ஸ்ட்ருமென்டேசன் - 25, மைனிங் - 15.
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்ப்போம்...

வயது வரம்பு

விண்ணப்பதாரர்கள் 31-1-2019-ந் தேதியில் 27 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும்.

கல்வித்தகுதி

எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல், எலக்ட்ரானிக்ஸ், இண்டஸ்ட்ரியல் என்ஜினீயரிங், புரொடக்சன், தெர்மல், மெக்கானிக்கல் அண்ட் ஆட்டோமேசன், பவர் என்ஜினீயரிங், இன்ஸ்ட்ருமென்டேசன், எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ், பவர் சிஸ்டம்ஸ், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் இன்ஸ்ட்ருமென்டேசன், மைன் என்ஜினீயரிங் உள்ளிட்ட பிரிவுகளில் என்ஜினீயரிங் பட்டப்படிப்பு படித்து, கேட் 2019 தேர்வு எழுதுபவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செய்யும் முறை

கேட் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வுக்கு அனுமதிக்கப்படுவார்கள். ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்காணல் நடத்தப்பட்டு தகுதியானவர்கள் பணி நியமனம் செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசிநாள் ஜனவரி 31-ந் தேதியாகும்.

வேலைவாய்ப்பு - ரெயில்பெட்டி தொழிற்சாலையில் அப்ரண்டிஸ் வேலை - 220 பேருக்கு வாய்ப்பு

சென்னை ஐ.சி.எப்.-ல் ரெயில்பெட்டி தொழிற்சாலை செயல்படுகிறது.
தற்போது இந்த நிறுவனத்தில் பட்டதாரி மற்றும் டிப்ளமோ என்ஜினீயர்களை பயிற்சிப் பணியில் சேர்க்க விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. 


மொத்தம் 220 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதில் பட்டதாரிகளுக்கு 100 இடங்களும், டிப்ளமோ என்ஜினீயர்களுக்கு 120 இடங்களும் உள்ளன. 
 (தொடர்ச்சி கீழே...)
 இதையும் படிக்கலாமே !!!

எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு 30 இடங்களும், மெக்கானிக்கல் என்ஜினீயரிங் பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு 70 இடங்களும் உள்ளன. 
டிப்ளமோ பிரிவில் எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் படித்தவர்களுக்கு 40 இடங்களும், மெக்கானிக்கல் படித்தவர்களுக்கு 80 இடங்களும் உள்ளன.
அப்ரண்டிஷிப் விதிமுறைக்கு உட்பட்ட வயது வரம்புடையவர்கள் பயிற்சி யில் சேர்க்கப்படுவார்கள். விண்ணப்பதாரர் குறிப்பிட்ட உடல் தகுதி பெற்றிருக்க வேண்டும்.
விருப்பமுள்ளவர்கள் http://www.mhrdnats.gov.in/ என்ற இணையதளத்திற்குச் சென்று தங்கள் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும். தேவையான சான்றுகளை பதிவேற்றம் செய்ய வேண்டும். பிப்ரவரி 6-ந் தேதிக்குள் விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும். தகுதியான விண்ணப்பதாரர்களின் பட்டியல் என்ற இணையதளத்தில் 28-2-2019-ந் தேதி வெளியிடப்படும்.

வேலைவாய்ப்பு - துணை ராணுவத்தில் 429 பணியிடங்கள். விண்ணப்பிக்க கடைசிநாள் 20-2-2019

துணை ராணுவ படையில் 429 ஹெட்கான்ஸ்டபிள் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இது பற்றிய விவரம் வருமாறு:-
மத்திய தொழிற்சாலைகள் பாதுகாப்பு படை சுருக்கமாக சி.ஐ.எஸ்.எப். என அழைக்கப்படுகிறது. துணை ராணுவ படைப்பிரிவுகளில் ஒன்றான இந்த பிரிவில் தற்போது ஹெட்கான்ஸ்டபிள் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.
 (தொடர்ச்சி கீழே...)
 இதையும் படிக்கலாமே !!!

மொத்தம் 429 போ் தேர்வு செய்யப்படுகிறார்கள். நேரடி சேர்க்கையின் மூலம் 328 ஆண்களும், 37 பெண்களும் சேர்க்கப்படுகிறார்கள். 64 பணியிடங்கள் எல்.டி.சி.இ. (துறையினருக்கான போட்டி) இடங்களாகும்.
இந்த பணியில் சேர விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை பார்க்கலாம்...

வயது வரம்பு

விண்ணப்பதாரர்கள் 20-2-2019-ந் தேதியில் 18 வயது பூர்த்தி அடைந்தவர்களாகவும், 25 வயதுக்கு உட்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும்.

கல்வித்தகுதி

பிளஸ்-2 மற்றும் இன்டர்மீடியட் படித்தவர்கள் இந்த பணியில் சேர விண்ணப்பிக்கலாம்.

கட்டணம்

பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவினர் ரூ.100 செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பெண் விண்ணப்பதாரர்கள் இந்த கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.

உடல்தகுதி

விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் ஆண்கள் 165 செ.மீ. உயரமும், பெண்கள் 155 செ.மீ. உயரமும் இருக்க வேண்டும். வயது மற்றும் உயரத்திற்கேற்ற எடையளவு, கண்பார்வைத்திறன் பரிசோதிக்கப்படும். குறிப்பிட்ட பிரிவினருக்கும், பெண்களுக்கும் உயரம் மற்றும் மார்பளவு உள்ளிட்டவற்றில் சில விதிவிலக்குகள் அனுமதிக்கப்படுகிறது.


தேர்வு செய்யும் முறை

எழுத்துத் தேர்வு மற்றும் உடல்தகுதி, மருத்துவ பரிசோதனை ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் சேர்க்கப்படுகிறார்கள்.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசிநாள் 20-2-2019-ந் தேதியாகும்.

வேலைவாய்ப்பு - ராணுவத்தில் சட்டம் படித்தவர்கள் சேரலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி 14-2-2019

ராணுவத்தில் ‘ஜேக் என்ட்ரி ஸ்கீம் (JAG 23-வது பேட்ஜ்) என்ற பயிற்சி சேர்க்கையின்படி சட்டப்படிப்பு படித்த பட்டதாரிகள் ராணுவத்தில் சேர்க்கப்பட்டு வருகிறார்கள். 

தற்போதைய 23-வது சேர்க்கையில் 7 ஆண்களும், 7 பெண்களும் சேர்க்கப்படுகிறார்கள்.
 (தொடர்ச்சி கீழே...)
 இதையும் படிக்கலாமே !!!


இதில் சேர விரும்பபுபவர்கள் 1-7-2019 தேதியில் 21 முதல் 27 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். 

எல்.எல்.பி. சட்டப்படிப்பை 55 சதவீத மதிப்பெண்களுடன் நிறைவு செய்தவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள். இவர்கள் பார் கவுன்சிலில் பெயரை பதிவு செய்திருக்க வேண்டும்.
நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விருப்பம் உள்ளவர்கள் https://joinindianarmy.nic.in என்ற இணைய தளம் வழியாக 14-2-2019-ந் தேதிக்குள் விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம்.பிரதமர் மோடி ரெயில் நிலையத்தில் நிற்கும் ஓவியம் ரூ. 5 லட்சத்திற்கு ஏலம்

பிரதமர் மோடி ரெயில் நிலையத்தில் நிற்கும் ஓவியம் ரூ. 5 லட்சத்திற்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடிக்கு தலைவர்கள் வழங்கிய பரிசு பொருட்கள் ஏலம் விடப்படுகிறது. இதுகுறித்து மத்திய கலாச்சார துறை அமைச்சர் மகேஷ் சர்மா பேசுகையில், பிரதமர் நரேந்திர மோடிக்கு அளிக்கப்பட்ட பரிசு பொருட்கள் டெல்லி தேசிய அருங்காட்சியகத்தில் ஞாயிறு, திங்கள்கிழமை ஏலம் விடப்படுகிறது. 
 (தொடர்ச்சி கீழே...)
 இதையும் படிக்கலாமே !!!

ஓவியங்கள், சிற்பங்கள், இசைக் கருவிகள், சால்வைகள் என சுமார் 1,900 பொருட்கள் ஏலத்தில் விடப்படும். இந்த ஏலத்தின் மூலம் கிடைக்கும் தொகை கங்கை நதி தூய்மை திட்டத்துக்கு வழங்கப்படும் என்றார். 
நாட்டின் பல்வேறு தனிநபர்கள் மற்றும் அமைப்புகள் சார்பில் பிரதமர் மோடிக்கு அளிக்கப்பட்ட ஓவியங்கள், சிற்பங்கள், சால்வைகள், தலைப்பாகைகள், நினைவுப் பொருட்கள் உள்ளிட்ட பொருட்களும் ஏலம் விடப்படுகிறது.
டெல்லியில் உள்ள நேஷனல் கேலரி ஆஃப் மாடர்ன் ஆர்ட்ஸ் மையத்தில் ஜனவரி 27, 28 ஆகிய நாட்களில் நேரடியாக இந்த பொருட்கள் ஏலம் விடப்படும் என்றும்  ஜனவரி 29 (இன்று) முதல் 30-ம் தேதி வரை மின்னணு முறையில் இ-ஏலம் விடப்படுகிறது எனவும் அறிவிக்கப்பட்டது. ஆன்லைன் மூலம் ஏலம் எடுக்க விரும்புபவர்கள்  என்ற இணையதளத்தில் முழு விபரங்களை காணலாம். நேரடியான ஏலம் முறையில் இரண்டு நாட்களில் 270 பொருட்கள் விற்பனை ஆகியுள்ளது.
ஏலத்தில் பிரதமர் மோடி ரெயில் நிலையத்தில் நிற்கும் ஓவியமும், மரத்தாலான பைக்கும் அதிக விலைக்கு ஏலம் போனது. ஓவியத்திற்கு ரூ. 50 ஆயிரம் என்றும் பைக்கிற்கு ரூ. 40 ஆயிரம் எனவும் அடிப்படை விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இறுதியில் இரண்டும் அதிகப்பட்சமாக ரூ. 5 லட்சத்திற்கு விற்பனையாகியது. இ-ஏலம் முறையில் ஏலம் தொடர்ந்து விடப்பட்டு வருகிறது.

பொங்கல் பரிசு 1000ரூபாயை திருப்பி கொடுத்த நபர் -பொங்கல் பரிசாக ரேஷன் கார்டு வைத்துள்ளவர்களுக்கு ரூ1000 தமிழக அரசு வழங்கியது .இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம்  நடந்துவந்த நிலையில் அந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக வந்த காஞ்சிபுரத்தை சேர்ந்த ரவி என்ற நபர் அரசு கொடுத்த பொங்கல் பரிசு 1000ரூபாயை திருப்பிகொடுத்து தனது எதிற்ப்பை தெரிவித்துள்ளார் .


மேலும் கடந்த பல ஆண்டுகளாக பாலாற்றில் தடுப்பனை கட்ட கோரிக்கை வைத்தபோது அதற்கு நிதியில்லை என்று கூறிய தமிழக அரசு, பொங்கல் பரிசாக ரூ.2548 கோடி வழங்கியதற்கு கண்டனம் தெரிவித்தே ரூ.1000 மற்றும் பொங்கல் பரிசை திருப்பி தந்ததாக ரவி தெரிவித்தார்.


Featured Post

ரத்தம் சொட்ட சொட்ட.. மனைவியின் தலையுடன் தெருவில் நடந்து சென்ற இளைஞர்..

பட்டபகலில் மனைவியின் தலையை வெட்டி, ரத்தம் சொட்ட சொட்ட.. கையில் வைத்து கொண்டு தெருவில் நடந்து சென்ற இளைஞரை கண்டு பொதுமக்கள் அலறி அடி...

நமது சேனலில் வீடியோக்களை காண்க

சமூக சீரழிவு செய்திகள்