Run World Media: 01/30/19

உங்கள் இமெயிலை உள்ளிடுங்கள்-உங்கள் Inboxல் Confirm செய்யுங்கள் நமது செய்தி உடனுக்குடன் வந்து சேரும்

எங்களது பிற செய்திகளை இங்கு தேடவும்

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Wednesday, January 30, 2019

தாய் வீட்டிலிருந்து 10 நிமிடம் லேட்டாக வந்த மனைவியை விவாகரத்து செய்த கணவர்.. இதெல்லாம் ரொம்ப ஓவர்!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் 10 நிமிடங்கள் தாமதமாக வந்த மனைவியை கணவர் விவாகரத்து செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
முத்தலாகிற்கு எதிராக லோக்சபையில் கடந்த டிசம்பர் 27-ஆம் தேதி மசோதா நிறைவேற்றப்பட்டது. அதன்படி முத்தலாக் கூறுவது தண்டனைக்குரிய குற்றமாகும். 
 (தொடர்ச்சி கீழே...)
 இதையும் படிக்கலாமே !!!

அவ்வாறு கூறும் கணவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில் எட்டாவில் பெண் ஒருவர் தாய் வீட்டிற்கு சென்றிருந்தார். உடல் நிலை பாதிக்கப்பட்ட பாட்டியை நலம் விசாரிக்க சென்றிருந்த அவரை காணாமல் கணவர் போன் செய்துள்ளார்.உத்தரவு  

அப்போது தாய் வீட்டில் இருப்பதாக கூறிய மனைவியை இன்னும் அரை மணி நேரத்தில் இங்கு வர வேண்டும் என கணவர் உத்தரவிட்டதற்கு அவரும் சரி என அடித்து பிடித்து கிளம்பினார்.


பெண் அதிர்ச்சி 

அப்படியும் 10 நிமிடங்கள் தாமதமாகிவிட்டது. இதனால் ஆத்திரமடைந்த கணவர், மனைவியின் சகோதரருக்கு போன் செய்து முத்தலாக் என கூறிவிட்டு இணைப்பை துண்டித்துள்ளார். இதனால் அந்த பெண் அதிர்ச்சி அடைந்தார்.


சிசு கலைந்தது 

இதுகுறித்து அந்த பெண் கூறுகையில் திருமணத்தின் போது எனது பெற்றோர் அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாததால் என் கணவர் வீட்டார் என்னை பலமுறை தாக்கியுள்ளனர். இது போல் என்னை அடித்ததால் எனது வயிற்றில் வளர்ந்த சிசு கலைந்து விட்டது.


அரசுக்கு கோரிக்கை 

எனது குடும்பம் வறுமையில் வாடுவதால் கணவர் வீட்டு கோரிக்கைகளை நிறைவேற்ற இயலாது. இந்த ஆத்திரத்தில் வெறும் 10 நிமிடம் தாமதமாக வந்த என்னை என் கணவர் விவாகரத்து செய்து விட்டார். இந்த விவகாரத்தில் அரசு எனக்கு உதவ வேண்டும்.


கண்ணீர் விட்ட பெண் 

எனக்கு நீதி வழங்க வேண்டியது மத்திய அரசின் கடமையாகும். இல்லாவிட்டால் எனக்கு தற்கொலை செய்து கொள்வதை தவிர வேறு வழியில்லை என அந்த பெண் கண்ணீர் மல்க கூறியுள்ளார்.

அரசு ஆஸ்பத்திரிகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு பரிசு பெட்டக திட்டம்

மராட்டியத்தில் அரசு ஆஸ்பத்திரிகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு பரிசு பெட்டகம் வழங்கும் திட்டத்தை மந்திரி பங்கஜா முண்டே தொடங்கி வைத்தார்.

மராட்டியத்தில் குழந்தைகள் இறப்பு விகிதத்தை குறைக்கும் வகையில் அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிறக்கும் குழந்தைகளுக்கு பரிசு பெட்டகம் வழங்க மாநில அரசு முடிவு செய்தது.
(தொடர்ச்சி கீழே...)
 இதையும் படிக்கலாமே !!!

இந்த திட்டத்தை நேற்று பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை மந்திரி பங்கஜா முண்டே தொடங்கி வைத்தார். பின்னர் அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

அரசு மருத்துவமனைகளில் முதல் குழந்தையை பெற்றெடுக்கும் பெண்களுக்கு இந்த குழந்தைகள் நல பரிசு பெட்டகம் வழங்கப்படும். இந்த திட்டத்திற்காக அரசு ரூ.20 கோடி ஒதுக்கியுள்ளது. ஆனால் மேலும் நிதி தேவைப்படும் பட்சத்தில் அதிகமாக ஒதுக்கீடு செய்யப்படும்.

மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஆண்டுதோறும் கிட்டத்தட்ட 10 லட்சம் பிரசவங்கள் நடக்கின்றன. இதில் 4 லட்சம் பெண்களுக்கு இது முதல் பிரசவமாகும். இந்த 4 லட்சம் பேருக்கும் குழந்தைகள் நல பரிசு பெட்டகம் கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த பரிசு பெட்டகத்தில் குழந்தைகளின் உடைகள், பிளாஸ்டிக் டைபர், மெத்தை, துண்டு, தெர்மோமீட்டர், மசாஜ் எண்ணெய், கொசு வலை, போர்வை, பிளாஸ்டிக் தரைவிரிப்பு, சாம்பு, பொம்மை, நகவெட்டி மற்றும் சாக்ஸ் ஆகியவை அடங்கியிருக்கும். இந்த பரிசு பெட்டகம் ஒன்றின் மதிப்பு ரூ.2 ஆயிரம் ஆகும்.

ஏற்கனவே தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் இந்த திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 

Featured Post

ரத்தம் சொட்ட சொட்ட.. மனைவியின் தலையுடன் தெருவில் நடந்து சென்ற இளைஞர்..

பட்டபகலில் மனைவியின் தலையை வெட்டி, ரத்தம் சொட்ட சொட்ட.. கையில் வைத்து கொண்டு தெருவில் நடந்து சென்ற இளைஞரை கண்டு பொதுமக்கள் அலறி அடி...

நமது சேனலில் வீடியோக்களை காண்க

சமூக சீரழிவு செய்திகள்