Run World Media: 06/27/19

உங்கள் இமெயிலை உள்ளிடுங்கள்-உங்கள் Inboxல் Confirm செய்யுங்கள் நமது செய்தி உடனுக்குடன் வந்து சேரும்

எங்களது பிற செய்திகளை இங்கு தேடவும்

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Thursday, June 27, 2019

கட்டிய தாலியை அறுத்தெறிந்த ஈஸ்வரி.. அடுத்த நிமிடமே காதலனை கைப்பிடித்து அதிரடி!

தாலி கட்டின உடனேயே அதனை அறுத்து எறிந்துவிட்டு, தனக்கு பிடிச்ச காதலனை கல்யாணம் செய்து கொண்டுள்ளார் ஈஸ்வரி! திருவண்ணாமலை மாவட்டம், கொடையம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த குமார் என்பவர் ஈஸ்வரி என்ற பெண்ணை காதலித்தார். ஈஸ்வரி அதே ஊரை சேர்ந்த பெண்தான். 5 வருடங்களுக்கும் மேலாக இவர்கள் காதலித்து வந்தனர்.

இருவரும் வேறு வேறு சாதி.. வழக்கமான எதிர்ப்பு வீட்டிலிருந்து கிளம்பியது. இதனால் ஈஸ்வரிக்கு அவரது வீட்டில் கட்டாய திருமணம் செய்து வைத்தனர்.
 ஆனால் ஈஸ்வரி, கட்டாய தாலியை அறுத்து எறிந்துவிட்டு, காதலன் குமாரை அழைத்து கொண்டு, ஆரணியில் உள்ள பதிவாளர் அலுவலகத்தில் பதிவு திருமணம் செய்து கொண்டார். உடனடியாக சென்னைக்கும் குடியேறினார்.


இந்த விஷயம் ஈஸ்வரி வீட்டுக்கு தெரிந்ததையடுத்து ஆத்திரமடைந்த அவர்கள், குமாரின் பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்ததுடன், குமாரின் குடும்பத்தாரையும் ஊருக்குள் சேர்க்கக்கூடாது என்று ஒதுக்கி வைத்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

இதைதவிர ஒரு லட்சம் ரூபாய் அந்த குடும்பத்தினருக்கு அபராதமும் விதித்தார்களாம். எனவே, ஊருக்குள் செல்ல கிராமத்தினர் விதித்த தடையை நீக்க வேண்டும் என்றும், திருமணமான தங்களுக்கு உரிய பாதுகாப்பு வேண்டும் என்றும், திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர், மாவட்ட எஸ்பியிடம் மணமக்களே நேரடியாக புகார் அளித்துள்ளனர். 
கட்டாய தாலியை அறுத்து எறிந்துவிட்டு, இளம்பெண் ஒருவர் சாதி மறுப்பு திருமணம் செய்த கொண்ட சம்பவம் பெரிய வரவேற்பை பெற்றுவருகிறது.குடிகாரனால் உயிரிழந்த மனைவி.. விபத்து நடந்த இடத்திலேயே அடக்கம் செய்த ரமேஷ்.. மூடப்பட்டது மதுக்கடை

மனைவி உயிரிழக்கக் காரணமான டாஸ்மாக் கடையை போராடி மூட வைத்ததுடன், அவரது உடலை, விபத்து நடந்த இடத்திற்கு அருகிலேயே கணவன் புதைத்த சம்பவம் நம்மை புரட்டி போட்டுள்ளது.

 கோவையை அடுத்த கணுவாய்ப் பகுதியைச் சேர்ந்தவர்தான் ரமேஷ். இவர் ஒரு டாக்டர். இயற்கை ஆர்வலரும்கூட. சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக பல காரியங்களை முன்னெடுத்து செய்து வருபவர்.
 இவருக்கு ஷோபனா என்ற மனைவி, சாந்திதேவி என்ற மகள் உள்ளனர். மகள் ஆனைகட்டியில் 11-ம் வகுப்பு படிக்கிறார். இவரை ஸ்கூலிலிருந்து தினமும் அழைத்து வருவது ஷோபனாதானாம்.


உயிரிழந்தார்
அப்படித்தான் வண்டியில் உட்காரவைத்து மகளை அழைத்து வந்தபோது, தாறுமாறாக வந்த பைக் ஒன்று ஷோபனாவின் ஸ்கூட்டரில் மோதியது. இந்த பயங்கர மோதலில் ஷோபனா சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். சாந்திதேவி பலத்த அடியோடு உயிருக்குப் போராடினார்.


கதறினார் 
பைக்கில் வந்த பாலாஜி என்பவர் ஃபுல் போதையில் வண்டியை ஓட்டிவந்து இப்படி மோதி விபத்தை ஏற்படுத்தியதாக தெரிகிறது. விரைந்து வந்த போலீசார், இந்த விபத்து குறித்து உடனடியாக ரமேஷூக்கு தகவல் சொன்னார்கள். கண்ணெதிரே ரத்த வெள்ளத்தில் மனைவி பிணமாகவும், மகள் உயிருக்குப் போராடியதையும் கண்டு ரமேஷ் கதறினார்.


டாஸ்மாக் 
உடனடியாக மகளை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பினார். ஷோபனாவின் உடலை கட்டிப்பிடித்து கதறி அழுதார். மனைவியின் சடலத்தை நடுரோட்டில் வைத்து, டாஸ்மாக்கை மூடுங்கள் என்று ஆவேச போராட்டம் நடத்த துவங்கிவிட்டார்.

 அவருக்கு ஆதரவாக பழங்குடியின மக்களும் போராட்டத்தில் இறங்கி விட்டனர். இதனால் விஷயம் பெரிசானது. "மதுவால் இனியொரு குடும்பம் பாதிக்கப்படக் கூடாது. உடனடியாக மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்' என்று ஆவேசமாக சொன்னார் சீமான். இதையேதான் டாக்டர் ராமதாசும் அறிக்கை மூலம் வலியுறுத்தினார்.


சமரசம் 
விரைந்து வந்த போலீஸ் அதிகாரிகள் ரமேஷிடம் சமரசம் பேசினர். ஆனால் ரமேஷின் உறுதியை பார்த்து மிரண்ட அதிகாரிகள் கடையை அங்கிருந்து மாற்றுவதாக எழுத்து பூர்வமாக எழுதி தந்தார்கள்.
 இதையடுத்து சொன்னபடியே குறிப்பிட்ட மதுக்கடை மூடப்பட்டது. சோபனாவின் உடல் போஸ்ட் மார்ட்டம் செய்து, ரமேஷிடம் ஒப்படைக்கப்பட்டது. 
நல்லடக்கம் 
மனைவியின் சடலத்தை பெற்றுக் கொண்ட ரமேஷ், விபத்து நடந்த இடத்திற்கு அருகிலேயே உள்ள மயானத்தில் பழங்குடியின முறைப்படி அடக்கம் செய்தார். தண்ணி அடித்துவிட்டு வண்டியை ஓட்டி, இனி யார் உயிரையும் பறித்துவிடக்கூடாது என்பதற்கான அடையாளமாகத்தான் ஷோபனாவின் நல்லடக்கத்தை நடத்தி உள்ளார் ரமேஷ்.

கோரிக்கை 
 நம்மில், எத்தனை பேருக்கு ரமேஷின் இந்த மனநிலையும், அந்த மனநிலையின்போது வெளிப்படுத்தும் நிலைப்பாட்டின் உறுதியும் இருக்கும் என்று தெரியாது. ஆனால் இனி ஒரு உசுரு இப்படி அநியாயமாக போய்விடக்கூடாது என்பதுதான் அனைவரின் எதிர்பார்ப்பும்!


பத்துமாத குழந்தையின் தாய் மீது ஆசை... மறுத்த பெண்ணை துப்பாக்கியால் சுட்ட வெறியன்

உலகம் முழுவதும் நடக்கும் கொலைகளுக்குக் காரணம் மண்ணாசை பொன்னாசையும், பெண்ணாசையும் தான் சமீபகாலமாக கள்ளக்காதல் கொலைகள் அதிகரித்து வருகின்றன.
கலிபோர்னியாவில் காம ஆசைக்கு ஆட்பட்ட ஒருவன், பத்து மாத குழந்தைக்கு தாயான பெண்ணை தவறான உறவுக்கு அழைத்திருக்கிறான். தவறான ஆசைக்கு மறுத்த அந்த பெண்ணை துப்பாக்கியால் சுட்டிருக்கிறான். இதில் அந்த பச்சிளம் குழந்தை படுகாயம் அடைந்துள்ளது.

துப்பாக்கியால் சுட்ட அந்த படுபாதகனின் பெயர் மார்கோஸ் எசார்டி என்பதாகும். பாதிக்கப்பட்ட அந்த பெண்ணின் பெயர் டெஸிரி மேனாக். 18 வயதான அந்த இளம் பெண் கடந்த வாரம் தனது பத்துமாத குழந்தையோடு பிறந்தநாள் பார்ட்டிக்கு சென்றிருந்தார்.


அங்கே நண்பர்களுடன் மார்கோஸ் எசார்டியும் வந்திருந்தான். டெஸிரியை பார்த்த உடன் அவள் மீது ஆசைப்பட்டு கையை பிடித்து இழுத்தான். அவனது தொடுகை டெஸிரிக்கு அருவெறுப்பாக இருக்கவே கையை உதறிக்கொண்டு அவனைப் பிடித்து திட்டினாள். 

ஆனாலும் விடாத எசார்ட்டி தகாத முறையில் நடந்து கொண்டான். வலுக்கட்டாயமாக இழுத்து அணைக்க முயற்சி செய்தான். அவனை தள்ளிவிட்டு விட்டு தனது குழந்தையோடு நண்பரின் காரில் ஏறி புறப்பட்டாள். அந்த காரை பின்தொடர்ந்து சென்ற எசார்ட்டி தன்னிடம் இருந்த துப்பாக்கியால் சுட்டான். 
இதில் துப்பாக்கிக்குண்டு காருக்குள் இருந்த பத்துமாத குழந்தையின் மீது பாய்ந்தது. கார் டிரைவர் வேகமாக காரை ஓட்டிக்கொண்டு அருகில் இருந்த மருத்துவமனைக்கு சென்று குழந்தையை சிகிச்சைக்காக அனுமதித்தார்.
குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு தலையில் பாய்ந்திருந்த துப்பாக்கிக் குண்டு அகற்றப்பட்டது என்றாலும் அந்த பச்சிளம் குழந்தை உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறது. குழந்தை மீது துப்பாக்கிச்சூடு நடந்த அந்த வெறியன் கொஞ்சம் கூட குற்ற உணர்ச்சியின்றி மீது பார்ட்டியில் பங்கேற்கச் சென்று விட்டான்.
 துப்பாக்கிச்சூடு சம்பவம் பற்றி அந்த பெண் அளித்த புகாரின் பேரில் கலிபோர்னியா மாகாண போலீசார் எசார்ட்டி மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Featured Post

ரத்தம் சொட்ட சொட்ட.. மனைவியின் தலையுடன் தெருவில் நடந்து சென்ற இளைஞர்..

பட்டபகலில் மனைவியின் தலையை வெட்டி, ரத்தம் சொட்ட சொட்ட.. கையில் வைத்து கொண்டு தெருவில் நடந்து சென்ற இளைஞரை கண்டு பொதுமக்கள் அலறி அடி...

நமது சேனலில் வீடியோக்களை காண்க

சமூக சீரழிவு செய்திகள்