வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: 2019-10-06
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Saturday, October 12, 2019

பின்னம்பூண்டியில் (எலப்பாக்கம்) நேற்று இரவு காவல் ஆய்வாளர் ஆய்வு | The Police Inspector Inspecting at Pinnampoondi Village

காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் வட்டம், அச்சிறுப்பாக்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதி பின்னம்பூண்டி கிராமம். இப்பகுதியில் நேற்று இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தத காவல் ஆய்வாளர் திரு. டி.எஸ்.சரவணன் மற்றும் சக காவலர்கள் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த அதிநவீன சி.சி.டி.வி கேமராவினை (CCTV Camera) ஆய்வு செய்தனர்.



பின்னப்பூண்டி, எலப்பாக்கம் போன்ற கிராமங்களில் ஏற்கெனவே சில குற்றச்சம்பவங்கள் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, மேலும் அதுபோன்ற கொள்ளைச்சம்பவங்களோ அல்லது பிற குற்றச்சம்பவங்களோ மீண்டும் நடைபெறாமல் இருக்க காவல் ஆய்வாளர் அவர்கள் பொதுமக்களுடன் இணைந்து சி.சி.டி.வி கேமராவினை (CCTV Camera) நிறுவி பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளார்.


இரவு ரோந்துப்பணி மற்றும் சி.சி.டி.வி கேமரா (CCTV Camera) மூலம் ஆய்வு என பொதுமக்களின் பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்தும் காவல் ஆய்வாளர் திரு.டி.எஸ்.சரவணன் அவர்களுக்கு பொதுமக்கள் பாராட்டுகளை தெரிவித்துவருகின்றனர்.

Thursday, October 10, 2019

மதுராந்தகம் வட்டம் விண்ணம்பூண்டி விவசாயியிடம் லஞ்சம் பெற்று சிக்கிக் கொண்ட சர்வேயர் | Land Surveyar arrested when getting Bribery from Former

காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் வட்டம், அச்சிறுபாக்கம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட விண்ணம்பூண்டி கிராமத்தைச் சார்ந்தவர் விவசாயி செல்லப்பன். இவர் தனது நிலத்திற்கு பட்டா மாற்றம் செய்ய விண்ணப்பித்திருந்தார்.







இந்நிலையில் பட்டா மாற்றம் செய்ய ஒரத்தி நில அளவையர் (Surveyor) ராஜகுரு மற்றும் உதவியாளர் (Assistant) திருப்பதி ஆகியோர் 25 ஆயிரம் ரூபாய் லஞ்சமாக கேட்டுள்ளனர். இந்த லஞ்ச பணத்தை அளிக்க இயலாத விவசாயி செல்லப்பன் என்பவர் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் கொடுத்தார்.


பின்னர் லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அறிவுறுத்தலின் பேரில் இரசாயனம் தடவிய பணத்தை விவசாயி செல்லப்பன் என்பவர் நில அளவையர் மற்றும் உதவியாளரிடம் அளித்தபோது, அங்கு மறைந்து நோட்டமிட்டுக் கொண்டிருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் ராஜகுரு மற்றும் திருப்பதி ஆகியோரை நேற்று (09.10.2019) கைது செய்தனர். மேலும் இதில் உயர் அதிகாரிகளின் தலையீடுகள் ஏதேனும் உள்ளதா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tuesday, October 08, 2019

ப.சிதம்பர பரிதாபங்கள்: ஒரு வேளை உணவை மூணு வேளைக்கு சாப்பிடுகிறார்! எட்டு கிலோ குறைந்தார். P. Chithambaram is losing his weight to 70kg

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் 'ஹெச்.பி.எஃப்' எனும் பெயரில் ஒரு அரசு நிறுவனம் இருந்தது. ஹிந்துஸ்தான் போட்டோ ஃபிலிம்ஸ் என்பதே இது. 


நம் தேசத்தின் மருத்துவமனைகள் உள்ளிட்ட இடங்களில் எக்ஸ் ரே உள்ளிட்டவைகளுக்கான ஃபிலிமை தயாரித்த நிறுவனம். இந்த நிறுவனத்தை நேரடியாகவும், மறைமுகமாகவும் நம்பி ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் இருந்தனர். 

அவர்களின் குடும்பத்தையும் சேர்த்தால் சில ஆயிரக்கணக்கான மக்கள் பிழைத்தனர். இந்த நிறுவனத்தில் கட்டமைப்பு வசதிகளுக்காக சில ஆயிரம் கோடிகளை அரசு முதலீடு செய்து, சூப்பர் ஸ்பெஷல் மெஷிஇதைன்களை வாங்கி வைத்துள்ளது. ஆனால் கடந்த சில வருடங்களுக்கு முன் இந்நிறுவனத்தின் உற்பத்தி படிப்படியாக நிறுத்தப்பட்டு, கடந்த ஆண்டு ஒரேடியாக மூடப்பட்டுவிட்டது.

உள்நாட்டிலேயே இப்படியொரு சூப்பர் நிறுவனம் இருக்கையில், வெளிநாட்டின் சில குறிப்பிட்ட நிறுவனங்களிடமிருந்து நாம் ஃபிலிமை வாங்கிக் கொண்டிருக்கிறோம். இதனால் பல கோடி ஏழைகள் எக்ஸ்ரே மருத்துவ செலவுக்காக தங்கள் சக்தியை மீறி செலவு செய்கின்றனர்.
இதை ஏன் இங்கே சொல்கிறோம் என்றால்.....இந்த 'HPF' நிறுவனம் முடங்கியதன் பின்னணியில் ப.சிதம்பரம் மற்றும் அவரது குடும்பத்தினரின் கைகள் சுட்டிக்காட்டப்படுகிறது அழுத்தமாக. சில கார்ப்பரேட் நிறுவனங்களுக்காக ப.சிதம்பரத்தின் வட்டாரம், இந்த அரசு தொழிற்சாலைக்கு இப்படியொரு நிற்கதி நிலையை கொண்டுவந்துவிட்டார், அதை நம்பி இருந்த குடும்பங்கள் இன்று நடுத்தெருவில் நிற்கின்றன. 

ரெண்டு வேளை சோறு கூட அவர்களில் பலருக்கு உறுதியில்லை! என்று குமுறுகிறார்கள். இந்த நிலையில், ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் கைதாகி, சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறையின் ஏக கெடுபிடியில், திகார் சிறையிலிருக்கும் ப.சிதம்பரம் பெரும் துயரத்தில் இருக்கிறாராம். ஒரு அரசன் போல் வாழ்ந்து பழகிவிட்ட அவரால் சிறையின் அவஸ்தை வாழ்க்கையை சகிக்க முடியவில்லையாம். அதில் உச்ச கொடுமை, உணவு சிக்கல்தான்.

சிறைக்குள் வரும்போது 78 கிலோ எடை இருந்தவர், எட்டு கிலோ இழந்து இப்போது எழுபது கிலோதான் இருக்கிறாராம். வட இந்திய சிறை உணவுகள் அவருக்கு ஒத்து வராததால் வீட்டு உணவை எடுத்துக் கொள்ள உத்தரவிடும்படி நீதிமன்றத்தை அவரது குடும்பம் அணுகியது. இதற்கு சி.பி.ஐ.யும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.
எனவே வீட்டில் சமைக்கப்பட்ட உணவை ஒரு வேளை மட்டும் வழங்கிடலாம்! என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து பொடியுடன் இட்லி, சாம்பார் சாதம், தயிர்சாதம், ரசம் சாதம், தோசை, ஆப்பம், இடியாப்பம் என்று எளிதாக செரிமானமாகும் உணவுகளாக கொடுக்கப்படுகின்றனவாம்.

ஒரு வேளை மட்டுமே வீட்டிலிருந்து வரும் உணவை, மூன்று வேளைக்கும் பிரித்து வைத்து உண்கிறாராம் சிதம்பரம். மூன்று வேளையும் மூன்று ரகங்களில் விதவிதமாய் உண்டு பழகிய நாக்கின் நிலையை பாருங்கள்.

விதி வலியதுதானே!

Sunday, October 06, 2019

ஆபாச பேச்சு நடிகை நிலானிக்கு மிரட்டல் விடுத்தவர் கைது | Man arrested for threatening Actress Nilani

சின்னத்திரை நடிகை நிலானியை செல்போனில் ஆபாசமாக பேசி மிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது செய்தனர். மதுரவாயல் அடுத்த அஷ்டலட்சுமி நகர் இரண்டாவது மெயின் ரோட்டில் வாடகை வீட்டில் வசிப்பவர் சின்னத்திரை நடிகை நிலானி.



இவர், கணவரை பிரிந்து இரண்டு குழந்தைகளுடன் வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்திற்கு எதிராக நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தை போலீஸ் உடையில் ஆடியோ வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். பின்பு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.


இந்நிலையில் இவரது காதலர் காந்தி லலித்குமார், தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி தொல்லை கொடுப்பதாக புகார் தெரிவித்து இருந்தார்.இதற்கிடையே  காதலருடன் ஏற்பட்ட தகராறில்   பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டு காந்தி லலித்குமார் தற்கொலை செய்து கொண்டார். காதலரின் சாவுக்கு நிலானி காரணம் என புகார் செய்யப்பட்டதை தொடர்ந்து அவர் கொசு மருந்து குடித்து தற்கொலைக்கு முயற்சித்தார். அப்போது அவரது நண்பர் காப்பாற்றினார்.


கொசு மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்ற போது அவருக்கு உதவிய  அவரது நண்பர் காட்பாடியை சேர்ந்த மஞ்சுநாதன் செல்போனில் ஆபாசமாக பேசி மிரட்டல் விடுத்ததாக நிலானி புகார் கொடுத்தார். அதன்படி, போரூர் போலீசார் மஞ்சு நாதனை கைது செய்துள்ளனர்.