வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: April 2020
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Thursday, April 30, 2020

பெரும்பேர்கண்டிகையில் தி.மு.க. சார்பாக வழங்கப்பட்ட கொரோனா நிவாரண உதவிகள் | DMK Corona Relief in Perumbergandigai

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், அச்சிறுபாக்கம் ஒன்றியத்திற்குட்பட்ட பெரும்பேர்கண்டிகை ஆதிதிராவிடர் குடியிருப்புப் பகுதியில் வசிக்கும் 70 நலிவடைந்த குடும்பத்தினர்களுக்கு தி.மு.க சார்பாக அரிசி மற்றும் காய்கறிகள் அடங்கிய தொகுப்பானது கொரோனா நிவாரண உதவியாக மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் சு.புகழேந்தி தலைமையில் வழங்கப்பட்டது.


கொரோனா ஊரடங்கு உத்தரவினால் வேலைக்கு செல்ல இயலாமல் கடும் பொருளாதார நெருக்கடியிலும், அத்தியாவசிய தேவைகளைக்கூட பூர்த்தி செய்ய இயலாத நிலையில் இருந்த இந்த பகுதியைச் சார்ந்த மக்கள் “ஒன்றிணைவோம் வா” எண்ணிற்கு தொடர்பு கொண்டதன்பேரில் ஒன்றிய செயலாளர் கே.கண்ணன், அவைத்தலைவர் என்.வீரராகவன், மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு அமைப்பாளர் ஜி.சிவக்குமார், ஆதிதிராவிடர் நலக்குழு ஒன்றிய அமைப்பாளர் டி.லட்சுமணன், ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் கே.ராம், மாவட்ட பிரதிநிதி ஜெ.பார்த்தசாரதி, ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் ஆர்.இராஜசேகர் ஆகியோர் முன்னிலையில் கொரோனா நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது.


இந்த நிகழ்வின்போது, டி.நடராஜ், எல்.இராஜேந்திரன், இ.கார்த்திகேயன், ஜெ.துரைகனேஷ், எம்.சிவனேசன், கே.ஜெகநாதன், எம்.ரவி ஆகிய தி.மு.க. நிர்வாகிகள் உடனிருந்தனர்.

விஜய் மக்கள் இயக்கம் திருக்கழுக்குன்றம் ஒன்றிய மற்றும் நகர இளைஞரணி சார்பில் வரையப்பட்ட கொரோனா ஓவியம் | Corona drawing by Vijay Makkal iyakkam Thirukazhukundram

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் பேருந்து நிலையம் அருகே பொது மக்களுக்கு கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் வைரஸின் உருவத்தை விஜய் மக்கள் இயக்கம் திருக்கழுக்குன்றம் ஒன்றிய மற்றும் நகர இளைஞரணி சார்பில் ஓவியமாக வரைந்து அதில் விழித்திரு தனித்திரு வீட்டிலிரு எனும் வாசகத்தை வரைந்து உள்ளனர்.



கொரோனா வைரஸ் தடுப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கிலும், தேவையற்று வாகனங்களில் சுற்றும் பொதுமக்கள் கொரோனா வைரஸின் தீவிரத்தை உணரவேண்டும் என்ற நோக்கத்திலும் விஜய் மக்கள் இயக்க திருக்கழுக்குன்றம் ஒன்றிய,நகர  இளைஞரணி பொறுப்பாளர்கள் இந்த ஓவியம் வரையப்பட்டதாக கூறினர். மேலும், இந்த செயலுக்கு விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை சமூக ஆர்வலர்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

Wednesday, April 29, 2020

மாமல்லபுரத்தில் ஷேர் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு அ.தி.மு.க சார்பில் வழங்கப்பட்ட கொரோனா நிவாரணம் | Corona Relief Given to Share Auto Drivers by ADMK

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் ஷேர் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு அத்தியாவசிய பொருட்களான அரிசி, பருப்பு, காய்கறிகள் உள்ளிட்டவைகளை  அ.தி.மு.க. மத்திய மாவட்ட செயலாளர் திருக்கழுக்குன்றம் எஸ்.ஆறுமுகம் ஆலோசனையின் பேரில் மத்திய மாவட்ட வர்த்தக பிரிவு செயலாளர் மாமல்லபுரம் ஜி.ராகவன் வழங்கினார். 


இந்த நிகழ்வில் நகர செயலாளர் மாமல்லபுரம் கணேசன், உமாபதி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

புதுபட்டினத்தில் தூய்மை பணியாளர்களுக்கு மாமல்லபுரம் ஏ எஸ் பி. அரிசி வழங்கி,கொரோனா நிவாரணம் | Mahabalipuram ASP Giving Corona Relief to Sanitary Workers

செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கம் அடுத்த புதுப்பட்டினம் ஊராட்சியில் 50 தூய்மை பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். ஊராட்சி பகுதியின் கிராமங்களில் கிருமி நாசினி தெளிப்பு உள்ளிட்ட பல்வேறு தூய்மை பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.


இவர்களுக்கு, புதுபட்டினம் ஆர்.எம்.ஐ  நகர் பகுதியை  சேர்ந்த தன்னார்வலர் சிவகுமார்  சோபியா தம்பதியர்  இணைந்து தலா 10 கிலோ அரிசி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. 
இதில், மாமல்லபுரம் ஏ.எஸ்.பி. சுந்தரவதனம், கனரா வங்கி முதன்மை மேலாளர் ஜெயேந்திரன், காவல் ஆய்வாளர் ஜோசப்செல்வராஜ், ஊராட்சி செயலாளர் நீலகண்டன், கல்பாக்கம் எலெக்ட்ரிக் ஒப்பந்ததாரர் சங்க தலைவர்  இரவி, சமூக ஆர்வலர்கள்  முரளி, கண்ணன்  உள்ளிட்டோர் பங்கேற்று மேற்கண்ட பகுதி தூய்மை பணியாளர்களுக்கு அரசி பைகளை வழங்கினர். 
மேலும், தூய்மை  பணியாளர்கள் பணிகளின் போதும், பணி முடித்து வீடு திரும்பியதும் தங்களை எவ்வாறு தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டும் என ஏ.எஸ்.பி. அறிவுரைகளை வழங்கினார்.

திருக்கழுக்குன்றத்தில் ஒளி, ஒலி அமைப்பு தொழிலாளர்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கிய மத்திய மாவட்ட அ.தி.மு.க. | Corona Relief Given by ADMK for Sound service Work Related People

செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம்  பகுதியில் உள்ள ஒளி, ஒலி அமைப்பின் தொழிலாளர்கள் குடும்பத்தினருக்கு அரிசி, பருப்பு, காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை அதிமுக மத்திய மாவட்ட செயலாளர் திருக்கழுக்குன்றம் எஸ் ஆறுமுகம், திருக்கழுக்குன்றம் காவல் ஆய்வாளர் முனிசேகர்  முன்னிலையில் வழங்கினார்.


இந்த நிகழ்வில் தமிழ்நாடு ஒளி, ஒலி  தொழிலாளர்கள் நல சங்க மாநில பொதுக்குழு உறுப்பினர் திருக்கழுக்குன்றம் விநாயகம்  ஒன்றிய பொறுப்பாளர்கள் வேலு, சுரேஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர், இறுதியில் அனைவருக்கும் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.