வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: 2020-03-29
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Tuesday, April 07, 2020

வெங்கடேசபுரத்தில் திருவேற்காடு ஐயப்பசுவாமிகள் 113-வது அவதாரத் திருநாளையொட்டி வழங்கப்பட்ட அன்னதானம் | Venkatesapuram Annadhanam News


செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், அச்சிறுபாக்கத்தை அடுத்த வெங்கடேசபுரத்தில் அன்னதான சிவம் ஶ்ரீலஶ்ரீ ஐயப்ப சுவாமிகள் அவர்களின் 113-வது அவதாரத் திருநாளையொட்டி அவரது பக்த கோடிகள் இணைந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினர்.
மேலும், சிறுக்கரனையில் வசிக்கும் நரிக்குறவர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த அன்னதான ஏற்பாடுகளை லயன் முருகன், கண்ணன், வழக்கறிஞர் செய்யூர் ஜெயச்சந்திரன் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர். 

மேலும் தற்போது கொரோனா தொடர்பான கட்டுப்பாடுகள் உள்ள காரணத்தினால் உரிய அனுமதியுடன் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை மேற்கொண்டு இந்த அன்னதான நிகழ்வை மேற்கொண்டனர்.
இந்த நிகழ்வில், வி.டி.ஆர்.வி. எழில், அண்ணாமலை நாயக்கர், ஏழுமலை நாயக்கர், விநாயகம், நாகராஜ், தங்கராஜ், ஆனந்தன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
மேலும், இன்று துவங்கிய இந்த அன்னதான நிகழ்வானது வரக்கூடிய காலங்களில் மாதந்தோறும் பௌர்ணமி நாட்களில் தொடரும் என பக்தர்கள் குழு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

சலூன் கடைக்கு சீல் வைத்த மதுராந்தகம் கோட்டாட்சியர் | Saloon Shop Sealed by RDO in Madurantakakam


செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் நகர்பகுதியில் உள்ள முடி திருத்தும் கடையில் கொரோனா அச்சிறுத்தலை பொறுத்படுத்தாமல் கடையின் உள்ளே 10 நபர்களும், கடைக்கு வெளியே 5 நபர்களும் அமர்ந்து இருந்தனர். 
எவரும் முகக்கவசம் அணியவில்லை மற்றும் சமூக இடைவெளியும் விடவில்லை. எனவே, பொதுமக்கள் நலன் கருதி அந்தப் பகுதியில் ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டிருந்த மதுராந்தகம் வருவாய் கோட்டாட்சியர் லட்சுமிபிரியா அந்த சலூன் கடைக்கு சீல் வைத்துள்ளார்.


இந்த தருணத்தில் சீல் வைத்த கடையினை மூன்று மாதங்களுக்கு திறக்க இயலாது என்பது அரசின் உத்தரவு என்பது குறிப்பிடத்தக்கது. 

ஆனைக்குன்னம் இளைஞர்கள் வழங்கிய கபசூரண குடிநீர் | Kabasurana Kudineer given by Anaikunnam Youth


செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், அச்சிறுபாக்கம் ஒன்றியத்திற்குட்பட்ட ஆனைக்குன்னம் கிராமத்தில் 06.04.2020 அன்று இளைஞர்கள் மூலமாக கபசூரண குடிநீர் கிராம மக்களுக்கு வழங்கப்பட்டது.


 
ஒரு நபருக்கு சுமார் 20 முதல் 50 மி.லி கபசூரண குடிநீரை வயதிற்கேற்ப பிரித்து வழங்கினர். 
கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த ஏற்பாடுகளை கிராம இளைஞர்கள் மேற்கொண்டதை பொதுமக்கள் பாராட்டினர். 
 

 


Monday, April 06, 2020

அச்சிறுபாக்கத்தில் கபசூரண குடிநீர் வழங்கிய சமூக ஆர்வலர் | Kabasurana Water for Corona Precaution


செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், அச்சிறுபாக்கம் பேரூராட்சியில் சமூக ஆர்வலர் நீலமேகன் பொதுமக்கள் கபசூரண குடிநீர் வழங்கினார்.
இந்நிலையில் சமூக ஆர்வலர் நீலமேகன் கூறுகையில் கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டுவரும் அச்சிறுபாக்கம் பேரூராட்சி சுகாதாரப் பணியாளர்களுக்கும் கபசூரண குடிநீர் வழங்கி கொரோனா தடுப்பு பணிகளில் தனது பங்களிப்பை அளிப்பதாக தெரிவித்தார்.