வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: 2021-04-04
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Friday, April 16, 2021

[சற்றுமுன்] லாரி ஏறி பெண் பலி | செய்யூரில் சாலை மறியல் | Cheyyur Lorry Accident | Vil Ambu News Tamil Latest News

செங்கல்பட்டு மாவட்டம், செய்யூரில் மண் லாரி ஏறி இறங்கியதில் மேற்கு செய்யூர் பகுதியைச் சேர்ந்த லட்சுமி(35) என்பவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்.


இதனால் அப்பகுதி மக்கள் சாலை  மறியலில் ஈடுபட்டு கொண்டிருக்கின்றனர்.  உடல் நசுங்கி இறந்த தாயின் உடலை பார்த்து  கதறி அழும் பிள்ளைகளைக் கண்டு  அப்பகுதி மக்கள் சோகத்தில் ஆழ்ந்தனர். 

மேற்கு செய்யூர் அரசு பள்ளி  வழியாக மணல் ஏற்றிக்கொண்டு அதிவேகத்தில் சென்ற லாரி, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து எதிர்பாராத விதமாக  சாலை ஓரத்தில் நடந்து சென்ற லட்சுமி என்பவரின் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி அவர் பலியானார்.பின்னர் வருவாய் கோட்டாட்சியர் மற்றும் செய்யூர் காவல் துறையினர் சம்பவ இடத்தற்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் சமாதானம் பேசினார்கள். 

இதனை கண்டித்து அப்பகுதி மக்கள் லட்சுமி மரணத்திற்கு நீதி வேண்டும் என்று கோரி  சாலையை மறித்து போராட்டத்தில்  ஈடுபட்டுள்ளனர்.

Wednesday, April 14, 2021

இனி முகக்கவசம் அணிந்து வந்தால் மட்டுமே ரேஷன் பொருட்கள்! | Wearing Face mask is mandatory at Fair price shop | Vil Ambu News | Tamil Latest News

கொரோனா தொற்று பரவலை தடுக்கும் நடவடிக்கையாக முகக்கவசம் அணிந்து வந்தால் மட்டுமே இனி ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. பல பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் இந்த நடவடிக்கை அமல்படுத்தப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பைத் தடுக்கவும் கட்டுப்படுத்தவும் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக பொதுமக்கள் கட்டாயம் முக்கவசம் அணிய வேண்டும், தனிநபர் இடை வெளி கடைபிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளதுடன், 55வயதுக்கு மேற்பட்டோர் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளது.

இந்த நிலையில், விருதுநகர் மாவட்டத்தில் மாவட்டம் முழுவதும் கலெக்டர் ரா.கண்ணன் உத்தரவின்பேரில் கொரோனா பாதிப்பைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளையும் அனைவரும் தடுப்பு ஊசி போட வேண்டும் என்பதை வலியுறுத்தியும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன அதைத்தொடர்ந்து, கொரோனா பாதிப்பு தடுப்பது தொடர்பான ரேஷன் கடை ஊழியர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் திருவில்லிபுத்தூர் தாலுகா அலுவலகத்தில் வட்ட வழங்கல் அதிகாரி கோதண்டராமன் தலைமையில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் திருவில்லிபுத்தூர் பகுதியில் உள்ள 76 ரேஷன் கடைகளைச் சேர்ந்த சுமார் 52 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பங்கேற்றனர். இதில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டன. அதில் ரேஷன் கடைக்குப் பொருட்கள் வாங்க வருபவர்கள் மாஸ்க் அணிந்து இருந்தால் மட்டுமே பொருட்கள் வழங்க வேண்டும் அல்லது அவர்களை மாஸ்க் அணிந்து வரச் சொல்ல வேண்டும். 

அதே போல் அனைத்து குடும்ப அட்டைதாரர்கள் பொருட்களை வாங்கும்போது குடும்ப உறுப்பினர்கள் ஒருவரின் கைரேகை பதித்து பொருட்கள் வழங்க வேண்டும் என்றும், வயது முதிர்ந்தவர்கள் ரேஷன் பொருட்களை வாங்க வரும்போது அவர்களுடைய ரேகைப் பதிவு ஆகா விட்டால் கூட பதிவேடு மூலம் கையெழுத்து பெற்று ரேஷன் பொருட்கள் வழங்கப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

Tuesday, April 13, 2021

சீமான், தினகரன், கமல் போடும் கணக்கு இதுதான்! | தேர்தலுக்கு பிந்தைய நிலவரம் | Seeman, Kamalhasan, TTV Dinakaran Calculation after Election | Vil Ambu News | Tamil Latest News

தேர்தலுக்கு பின் நாம் தமிழர், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகள் என்ன மனநிலையில் உள்ளன என்பது இதோ...!

2021 சட்டமன்றத் தேர்தலில் ஐந்து முனைப் போட்டி நிலவியது. திமுக, அதிமுக என இரு பிரதான கட்சிகளின் தலைமையில் அமைந்த கூட்டணிக்கு இடையேதான் போட்டி என்றாலும் சீமான், தினகரன், கமல்ஹாசன் ஆகியோர் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டுள்ளனர் என்பதை தேர்தலுக்கு பிந்தைய நிலவரம் கூறுகிறது.

சீமான் தொடர்ந்து தனியாகவே களம் கண்டு வருகிறார். முதல் சட்டமன்ற பொதுத் தேர்தலை சந்திக்கும் மக்கள் நீதி மய்யமும், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகமும் கூட்டணி அமைத்து போட்டியிட்ட நிலையில் நாம் தமிழர் கட்சி 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டுள்ளது.

தமிழகம் முழுக்கவே இளம் வாக்காளர்கள் கணிசமாக சீமான் பக்கம் சாய்ந்துள்ளதாக கூறுகின்றனர். இந்த முறை நாம் தமிழர் கட்சி சட்ட மன்ற உறுப்பினர்களைப் பெறாவிட்டாலும் 40 தொகுதிகளில் 40 ஆயிரம் வாக்குகள் வரை பெறுவோம் என்று நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
 

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் தினகரன் எஸ்டிபிஐ, தேமுதிக, ஓவைசி கட்சி ஆகியோருடன் கூட்டணி அமைத்தார். இருப்பினும் தினகரன் வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை, கணிசமான வாக்குகள் பெறக் கூடிய தொகுதிகள் எவை என தரம் பிரித்துள்ளார்

அந்த வகையில் கோவில்பட்டி, பாபநாசம், பாப்பிரெட்டிபட்டி, திருப்பரங்குன்றம், முதுகுளத்தூர், குன்னூர், பொள்ளாச்சி, காரைக்குடி, உசிலம்பட்டி, திருவாடானை ஆகிய 10 தொகுதிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதிகளை தினகரன் தரப்பு அதிகம் எதிர்பார்க்கிறது என்கிறார்கள்.

அதேபோல் கமல்ஹாசன் முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டுள்ள மக்கள் நீதி மய்யம் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது என்பது குறித்து அக்கட்சியும் தகவல்களைப் பெற்று வருகிறது. கமல்ஹாசன் நகர்ப்புறங்களில் உள்ள இளம் வாக்காளர்கள், மாற்று அணியை எதிர்பார்க்கும் நகர்ப்புறங்களைச் சார்ந்தோரிடம் வாக்குகளைப் பெறுவார் என கூறுகிறார்கள்.

ஆனால் கிராமப்புறத்தில் கமல்ஹாசனுக்கு வாக்குகள் இல்லை என்கின்றனர். அதனாலே அவர் பல இடங்களில் பிரச்சாரத்தையும் தவிர்த்துவிட்டு கோவையில் மட்டும் அதிக கவனம் செலுத்தினார். இதனால் கோவை தெற்கு உறுதியாக தங்களுக்கு கிடைக்கும் என்றும், மேலும் கோவையைச் சுற்றியுள்ள சில தொகுதிகள் சென்னையில் மயிலாப்பூர், மதுரவாயல் ஆகிய தொகுதிகளில் இரண்டாம் இடத்துக்கு வருவோம் என கூறுகின்றனர்.


திடீர்னு உங்க வாய்ல இந்த மாதிரி பிரச்சனைலாம் வருதா? அப்ப அது கொரோனாவா இருக்கலாம்...| Corona Precaution News | Vil Ambu News | Tamil Latest News

ஒரு வருட காலமாக கொரோனா வைரஸ் உலகையே ஆட்டிப் படைத்து வருகிறது. இதன் பிடியில் இருந்து தப்பிக்க நாமும் பலவாறு முயற்சித்து வருகிறோம். கொரோனா வைரஸ் பரவ தொடங்கிய காலத்தில், இதன் அறிகுறிகளாக காய்ச்சல், வறட்டு இருமல், மூச்சுத் திணறல் போன்றவை கூறப்பட்டு வந்தன. நாளடைவில் இந்த நோய்த்தொற்றின் அறிகுறி பட்டியல் நீண்டு கொண்டே போனது. அதில் வாசனை மற்றும் சுவை உணர்வை இழப்பது கொரோனா வைரஸின் மிகவும் உறுதியான அறிகுறிகளாக இருந்தன. மேலும் முழுமையாக குணமடைய வாரங்கள் ஆகலாம் என்றும் கூறப்பட்டன.

ஆய்வுகளின் படி, சுமார் 60%-க்கும் மேற்பட்ட கோவிட் வழக்குகளில் இந்த அறிகுறிகள் காணப்பட்டதாக கூறப்படுகிறது. இருந்தாலும், SARS-COV-2 வைரஸ் இப்படி மட்டும் உங்கள் சுவைமொட்டுகளை பாதிப்பதில்லை. இது பல வழிகளில் வாய் ஆரோக்கியத்தைப் பாதிக்கின்றன. இப்போது இதுக்குறித்து தான் விரிவாக பார்க்கப் போகிறோம்.

ஆய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்டவை 
நேச்சர் மெடிசின் என்ற அறிவியல் இதழில் வெளியிடப்பட்டுள்ள தேசிய சுகாதார நிறுவனம் (என்ஐஎச்) நடத்திய புதிய ஆய்வின்படி, கோவிட் பாதிக்கப்பட்டவர்களில் கிட்டத்தட்ட பாதி பேர் நோய்த்தொற்றின் போது வாய்வழி அறிகுறிகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும் கொரோனாவின் குறிப்பிட்ட சில அறிகுறிகள் மட்டுமே காணக்கூடியதாக இருப்பதால், வல்லுநர்கள் தற்போது ஏராளமான வாய்வழி அறிகுறிகளானது தொற்று ஏற்பட்ட சில நாட்களுக்கு முன்பே வரக்கூடும் என்று சுட்டிக்காட்டுகின்றனர்.
 
வாய்வழி கோவிட் அறிகுறிகளின் பரவலுக்கு முக்கிய காரணம் என்ன? உடலைத் தாக்கிய வைரஸ் உடலினுள் பெருக்கமடைந்து தாக்க ஆரம்பிக்கும் போது தான் பெரும்பாலான அறிகுறிகள் ஏற்படுகின்றன. SARS-COV-2 வைரஸை ஏற்படுத்தும் கோவிட்-19 நேரடியாக பற்குழியை உண்டாக்குகிறது மற்றும் திசுக்களை தன்னைத் தானே தாக்க வைக்கிறது என்பதற்கு தற்போதைய ஆதாரங்கள் எதுவும் இல்லை. ஆனால் இந்த வைரஸ் பரவலுக்குப் பின்னிருக்கும் முக்கியமான காரணமாக நம்பப்படுவது, இருமுவது , பேசுவது அல்லது வெறுமனே சுவாசிப்பது ஆகும்.

வாய்வழி அறிகுறிகள் 
கொரோனா நோற்த்தொற்றுடன் தொடர்புடைய வாய்வழி அறிகுறிகள் அறிகுறியற்ற வழக்குகளிலும் அல்லது மிதமான நிகழ்வுகளிலும் காணப்படலாம் என்று NIH ஆய்வு கண்டறிந்துள்ளது. கொரோனா வைரஸ் பற்குழிகள் மற்றும் வாய் திசுக்களில் தங்கி இருப்பதால், தற்போது கோவிட்-19-ன் வேகமான பரவலுக்கு முக்கிய பங்காற்றுவதாக விஞ்ஞானிகள் கருதுகிறார்கள். அதுவும் அறிகுறியற்றவர்கள் மற்றவர்களுடன் பேசும் போது, பற்குழிகள் மற்றும் வாய் திசுக்களில் தங்கியுள்ள அந்த வைரஸ் பேசுவது அல்லது சுவாசிப்பதன் மூலம் நோய்ப் பெருக்கத்தைத் தூண்டக்கூடும். இருப்பினும் கோவிட்-19 இன் வாய்வழி வெளிப்பாடுகள் குறித்து இன்னும் நிறைய ஆராய்ச்சி தேவைப்பட்டாலும், சுவை இழப்பதை தவிர்த்து, கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் பின்வரும் அறிகுறிகளை ஆரம்ப நாட்களில் அனுபவித்ததாக குறிப்பிட்டுள்ளனர். கீழே அந்த வாய்வழி அறிகுறிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

வாய் வறட்சி 
பொதுவாக வாய் வறட்சி நிறைய வைரஸ் தொற்றுகள், ஆட்டோ இம்யூன் கோளாறுகளுடன் இணைப்பட்டுள்ளன. தற்போது கோவிட்-19 உடன் இணைக்கப்பட்டுள்ளது. வாய் வறட்சி என்பது வாயில் போதுமான எச்சில் உற்பத்தி செய்ய முடியாத நிலை ஆகும். வாயில் போதுமான எச்சில் உற்பத்தி செய்யப்பட்டால், அது வாயை ஈரப்பதத்துடன் வைத்திருப்பதோடு, செரிமானத்திற்கு உதவுகிறது மற்றும் மிக முக்கியமாக மோசமான பாக்டீரியா மற்றும் பிற நோய்க்கிருமிகளுக்கு எதிராக வாயைப் பாதுகாக்கிறது. வாய் வறண்டு இருந்தால், அது வாயில் உள்ள எச்சிலை சிறிது தடிமனாக்குகிறது. வாய் வறட்சியின் பொதுவான அறிகுறி வாய் துர்நாற்றம் வீசுவது ஆகும். மேலும் இது உணவு மெல்லுதல், பேசுவதில் சிரமத்தை தூண்டலாம் மற்றும் வாயின் மேல் பகுதியில் கடுமையான எரிச்சலை உண்டாக்கலாம். இதுப்போன்ற அறிகுறிகளை நீங்கள் அனுபவித்தால், உடனே கொரோனா சோதனையை மேற்கொள்ள வேண்டும்.

வாய் புண்கள் 
கோவிட்-19 போன்ற வைரஸ் தொற்றுக்கு ஆளாகும் போது, பெரும்பாலானோர் பொதுவாக அனுபவிக்கும் உணர்வுகளில் ஒன்று வைரஸ் தசை நார்கள் மற்றும் உறுப்பின் சுவர் பகுதியை தாக்கும் போது புண்/அழற்சியை உண்டாக்கும். இம்மாதிரியான அழற்சி நாக்கு மற்றும் ஈறு பகுதிகளில் புண்கள், வலிமிக்க புடைப்புகள் போன்ற வடிவங்களில் தோன்றும். சிலருக்கு வாயில் வைரஸ் தொற்று ஏற்பட்டால், அது வாய் புண்கள், எரிச்சல் மற்றும் அழற்சி வடிவத்தில் வாயின் ஆரோக்கியத்தைத் தாக்கும்.

கோவிட் நாக்கு 
கோவிட் நாக்கு என்பது தற்போது அதிகம் விவாதிக்கப்பட்ட கொரோனா தொற்றின் அறிகுறியாகும். அதற்கான காரணங்கள் குறித்து சரியாக தெரியவில்லை என்றாலும், SARS-COV-2 போன்ற வைரஸ் நிச்சயமாக நாக்கை பாதிக்கும். பல கொரோனா வழக்குகளின் ஆய்வுகளின் படி, கோவிட் நாக்கை அனுபவிப்பது மிகவும் கடினமானதாக இருக்கும். ஏனெனில் இதைக் கொண்ட நோயாளிகளின் நாக்கின் மேற்பரப்பில் கடுமையான எரிச்சல் உணர்வுடன், வீக்கத்தையும் அனுபவிப்பார்கள். சில மருத்துவர்கள் கோவிட் நாக்கு, கோவிட் உடன் தொடர்புபடுத்தியிருக்கும் தோல் வெடிப்புகளுடன் இணைக்கப்படலாம் என்பதையும் ஒப்புக் கொள்கிறார்கள்.
 
நாவின் நிறம் அல்லது உணர்வு மாற்றங்கள் 
கொரோனா நோய்த்தொற்றால் சந்திக்கும் மற்றொரு வாய்வழி பிரச்சனை தான், நாக்கின் நிறம் மற்றும் வடிவத்தில் மாற்றம் ஏற்படுவது. பல் துவாரங்களுக்கு அருகில் உள்ள நாக்கில் எரிச்சல், வீக்கம் மற்றும் நோய்க்கிருமியின் பெருக்கம் ஆகியவை நாக்கை வித்தியாசமாக உணர வைக்கக்கூடும். இப்பிரச்சனையால் வாயில் கடுமையான எரிச்சல் ஏற்படக்கூடும். முக்கியமாக உங்கள் நாக்கின் நிறம் அசாதாரண சிவப்பு நிறத்தில் மாறி, வெள்ளைத் திட்டுக்கள் அல்லது அடர் நிறத்தில் மாறி காணப்படும்.

புறக்கணிக்கக்கூடாத அறிகுறிகள் வாய் மற்றும் நாக்கில் ஏற்படும் மாற்றங்கள் தற்போது கோவிட்-19 இன் முக்கியமான அறிகுறிகளாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள். இருப்பினும், கொரோனா வைரஸின் மாறிவரும் நடத்தை மற்றும் வழக்குகளின் எண்ணிக்கை அதிகரிப்பால், தற்போது எந்த ஒரு திடீர் மற்றும் அசாதாரண அறிகுறிகளும் சரிபார்க்கப்பட வேண்டியது அவசியம். ஆரம்பத்திலேயே கொரோனாவைக் கண்டறிந்தால், எளிதில் சிகிச்சை பெற்று குணமாவதோடு, மற்றவர்களுக்கும் கொரோனா பரவுவதைத் தடுக்கலாம் அல்லவா? எனவே கவனமாக இருங்கள்.

Sunday, April 11, 2021

மாணவி தற்கொலை..! மதுரையில் சோகம்...! நடந்தது என்ன...? | Madurai Student Suside | Vil Ambu News | Tamil Latest News

பேஷன் டெக்னாலஜி படிப்பதற்காக வங்கிக் கடனுக்கு காத்திருந்த மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை தெப்பக்குளம் மேட்டுத் தெருவைச் சேர்ந்தவர் தாரணி (19). இவர் பிளஸ் 2 படித்துள்ளார். சட்டம் பயில விண்ணப்பித்து இடம் கிடைக்காததால் சென்னை மயிலாப்பூரில் உள்ள ஐகேட் என்ற பேஷன் டெக்னாலஜி கல்வி நிறுவனத்தில் படிக்க விண்ணப்பித்திருந்தார். கல்விக் கட்டணம் 6 லட்சம் கேட்டதாக தெரிகிறது. இதனால் வங்கிக் கடனுக்கு விண்ணப்பிக்க தாரணி முடிவு செய்தார். கல்லூரி நிர்வாகமும் அதற்கான சான்றிதழை தாரணிக்கு அனுப்பியது.

தாரணி வீட்டில் 
அதனடிப்படையில் அந்தக் கல்வி நிறுவனத்தில் சேர்வதற்காக தாரணி 30 ஆயிரம் ரூபாய் சேர்க்கைக் கட்டணம் செலுத்தியுள்ளார். மேலும் வங்கிகளில் கல்விக் கடன் பெற வேண்டும் என கூறி அவ்வப்போது தாரணி வீட்டிலிருந்து பெற்றோரிடம் பணம் வாங்கியுள்ளார்.
தாய் 
அவ்வாறு அவர் மொத்தமாக ரூ 1.04 லட்சம் பணத்தை பெற்றுள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை அன்று அவரது தாயிடம் மேலும் 23 ஆயிரம் பணம் வேண்டும் என கேட்டுள்ளார். அந்த பணத்தை அனுப்பினார் தாரணி. இந்த நிலையில் தாரணியின் தாய் செல்வராணி வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்க வெளியே சென்றார்.

இளம் பெண் தற்கொலை 
சிறிது நேரம் கழித்து திரும்பி வந்து பார்த்த போது தாரணி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து போலீஸாருக்கு செல்வராணி தகவல் கொடுத்துள்ளார். மதுரை தெப்பக்குளம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பகீர் கிளப்பும் எஸ்எம்எஸ் 
தாரணியின் செல்போனை கைப்பற்றிய போலீஸார் அதில் கடைசியாக வந்த அழைப்புகளை ஆய்வு செய்து வருகிறார்கள். தாரணியின் செல்போனுக்கு கடைசியாக வந்த எஸ்எம்எஸ்ஸில் தனியார் பைனான்ஸ் நிறுவனத்தின் பெயரில் ரூ 26 ஆயிரம் செலுத்தும்படி குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த நிறுவனத்திடம் தான் தாரணி ஒரு லட்சத்தை இழந்தாரா? அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ள காரணம் என்ன என போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

முன்னாள் காதலனை கொலை செய்ய +2 மாணவி செய்த அதிர்ச்சி காரியம்..! | +2 Girl Killing his lover | Vil Ambu News | Tamil Latest News

நெல்லையை சேர்ந்த பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் மாணவி முன்னாள் காதலனை கொல்வதற்காக கூலி படையை ஏவி விட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை களக்காடு அருகேவுள்ள பணக்குடி புஷ்பவனம் என்கிற கிராமத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் மாணவி, தன்னுடன் படிக்கும் விக்னேஷ் என்கிற மாணவனை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் மாணவிக்கு வேறொரு மாணவனுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் விக்னேஷனை உதாசீனப்படுத்தி வந்துள்ளார்.

மாணவியின் நடவடிக்கையால் அதிருப்தி அடைந்த காதலன் விக்னேஷ், மாணவியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை காட்டி அவரை மிரட்டியதோடு, வீட்டிலும் சொல்லிவிடுவேன் என கூறியுள்ளார்இதனால் ஆத்திரமடைந்த மாணவி முன்னாள் காதலன் விக்னேஷனை கொலை செய்ய கூலிப்படையினர் உதவியை நாடியுள்ளார்.

ஆசை வார்த்தைகள் கூறி விக்னேஷனை பெத்தானியா மலைப்பகுதிக்கு மாணவி அழைத்து வந்துள்ளார். அங்கே திடீரென கூலிப்படையினர் வந்துள்ளனர். மேலும் வெடிகுண்டு, அரிவாள், கத்தி உள்ளிட்ட பொருட்களை காட்டி கூலிப்படையினர் விக்னேஷை மிரட்டி மாணவியை தொந்தரவு செய்யாமல் விட்டுவிடும்படி கூறியுள்ளனர். அப்போதைக்கு அவர்கள் சொல்வதை கேட்பது போல நடித்த விக்னேஷ உடனடியாக அங்கிருந்து ஓடி வந்துவிட்டார்.

மேலும் இந்த விவகாரம் தொடர்பாக மாணவி மற்றும் தன்னை மிரட்டிய கூலிப்படையினர் மீது விக்னேஷ் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். விக்னேஷ் தெரிவித்த தகவலின்படி சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறை மலைப்பகுதியில் பதுங்கியிருந்த கூலிப்படையினர் 4 பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். தப்பியோடிய மாணவியை போலீசார் தேடி வருகின்றனர்.


Saturday, April 10, 2021

பிளஸ் 2 மார்க் பயன்படாது: மத்திய பல்கலைக்கழக இளங்கலை படிப்புக்கும் பொது நுழைவுத் தேர்வு | Enterance Exam After 12th Standard | Vil Ambu News

12-ம் வகுப்பு மாணவர்கள் பல்கலைகழகங்களில் பட்டப்படிப்பில் சேருவதற்கு நுழைவுத்தேர்வு நடத்தப்படும் என்று 41 மத்திய பல்கலைகழகங்கள் அறிவித்துள்ளது.


இந்தியாவில் முதல்முறையாக பல்கலைகழகங்களில் சேரும் மாணவர்களுக்கு 12-ம் வகுப்பு மதிப்பெண் கருத்தில் எடுத்துக்கொள்ளப்படாது என்றும், அவர்களுக்கு பல்கலைகழக நுழைவுத்தேர்வு நடத்தப்படும் என்று 41 மத்திய பல்கலைக்கழகங்கள் சார்பில் அறிவிக்கப்பட்டு்ள்ளது

மேலும் மத்திய பல்கலைக்கழகங்களின் இந்த பொது நுழைவுத் தேர்வை (CUCET) நடத்துவதற்கான திட்டம் உடனடியாக இறுதி செய்யப்பட்டு, இந்த தேர்வுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் வசதி செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான அறிவிப்பு இந்த மாத இறுதியில் கல்வி அமைச்சகம் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கபடும் நிலையில், இந்த திட்டம் தொடர்பான பரிந்துரை செய்ய அமைக்கப்பட்ட ஏழுபேர் கொண்ட யுஜிசி உறுப்பினர்கள் குழு கடந்த, 2020 டிசம்பரில் தனது அறிக்கையை சமர்ப்பித்தது. இந்த அறிக்கையில், இளங்கலை, முதுகலை மற்றும் பி.எச்.டி., சேர்க்கைக்கானஉயர்தர திறனாய்வு சோதனைக்கான முறைகளை பரிந்துரைத்தது.

இதன்படி ஜூன் மாத இறுதிக்குள் மத்திய பல்கலைக்கழகங்களுக்கான முதல் பொதுவான நுழைவுத் தேர்வு நடைபெறும் என்றும், வரவிருக்கும் கல்வியாண்டில் இருந்து மத்திய பல்கலைக்கழகங்களில் உள்ள அனைத்து பட்டபடிப்பு சேர்க்கைக்கு மத்திய பல்கலைக்கழகங்களின் பொது நுழைவுத் தேர்வு (CUCET) அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்றும், பரிந்துரைக்கப்பட்டுள்ளது

மேலும் இந்த தேர்வு ஆண்டுக்கு இரண்டு முறையாவது நடத்தப்பட வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் பரிந்துரைத்துள்ளது. இதில் இந்த ஆண்டு பொதுவான நுழைவுத்தேர்வு இளங்கலை படிப்புகளில் சேருவதற்கு மட்டுமே இருக்கும் என்றும், இந்த தேர்வு ஒரு முறை மட்டுமே நடத்தப்படும் என்றும் அமைச்சின் உயர்கல்வித்துறை செயலாளர் அமித் கரே கடந்த மாதம் தெரிவித்திருந்தார்.

மேலும் சென்ரல் யூனிவர்சிட்டி காமன் என்ரன்ஸ் டெஸ்ட் (CUCET) என்பது புதிய தேசிய கல்வி கொள்கை 2020 -ன் ஒரு பகுதியாகும். இது தேசிய சோதனை நிறுவனம் (என்.டி.) நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களில் சேருவதற்கான நுழைவுத் தேர்வை எளிதாக்கும் என்று கூறுகிறது.

மேலும் இந்நிறுவனம் அமெரிக்காவில் SAT தேர்வு போன்ற உயர்தர பொது திறனாய்வு டெஸ்ட் நடத்துவதற்கு இந்த நிறுவனம் பணிபுரிகிறது. இந்த தேர்வு மூலம் மாணவர்கள், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம், பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் மற்றும் டெல்லி பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல மத்திய பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிக்க உதவும் என்று குழுவின் அறிக்கை கூறியுள்ளது.

மேலும் முதல் CUCET ஜூன் மாத இறுதியில் நடத்தப்பட வாய்ப்புள்ளது. இந்த தேர்வு முடிவு ஜூலை மாதத்தில் முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பரிந்துரை குழுவின் உறுப்பினர்கள் கூறுகையில், CUCET இரண்டு பகுதிகளைக் கொண்டிருக்கும்: இதில் பிரிவு A என்பது வாசிப்பு புரிதல், வாய்மொழி திறன், அளவு பகுத்தறிவு, பகுப்பாய்வு பகுத்தறிவு, பொது விழிப்புணர்வு மற்றும் தகவல் தொழில்நுட்பம் தொடர்பான 50 கேள்விகளின் திறனாய்வு சோதனையாக இருக்கும். தொடர்ந்து பிரிவு B இல் 50 டொமைன் சார்ந்த கேள்விகள் இருக்கும்.

இதில் கணினி அடிப்படையிலான இருமொழி (இந்தி மற்றும் ஆங்கிலம்) தேர்வு மூன்று மணி நேரம் நீடிக்கும். இந்த CUCET தேர்வில் குறைந்தபட்சம் 50% மதிப்பெண் பெற வேண்டும். இருப்பினும், ஒட்டுமொத்த மதிப்பெண்ணைப் பயன்படுத்துவதா அல்லது பகுதி A மற்றும் பகுதி B க்கு வெவ்வேறு வெயிட்டேஜ் கொடுப்பதா என்பதை பல்கலைக்கழகங்கள் தீர்மானிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.