வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: யப்பா சாமிகளா.. டி20 போட்டினா 20 ஓவர் ஆடணும்.. 2 ஓவர்ல முடிச்சுட்டு போறது நியாயமா?
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Thursday, October 11, 2018

யப்பா சாமிகளா.. டி20 போட்டினா 20 ஓவர் ஆடணும்.. 2 ஓவர்ல முடிச்சுட்டு போறது நியாயமா?ஐசிசி நடத்தும் உலக டி20 கோப்பை தொடருக்கான தகுதி சுற்றுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் ஆசிய நாடுகளுக்கான "பி" பிரிவு போட்டிகளில் சீனா, மியான்மர் ஆகிய நாடுகள் மிக மிக சொற்ப ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து வருவது பெரும் அவல நகைச்சுவையாக உள்ளது. அதிலும் சமீபத்தில் நடந்த போட்டியில் இரண்டு அணிகளும் மிக சொற்ப ரன்களில் வெளியேற, எதிரணிகள் 2 ஓவர்கள் முடிவுக்குள் வெற்றி இலக்கை எட்டியுள்ளன.


மியான்மர் செய்த காமெடி மியான்மர், மலேசியா இடையே நடந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய மியான்மர் அணியில் ஏழு பேட்ஸ்மேன்கள் ரன் ஏதும் அடிக்காமல் வெளியேறினர். மியான்மர் அணி 10.1 ஓவர்களில் 9 ரன்களுக்கு 8 விக்கெட்கள் இழந்தது. அப்போது மழை வந்ததை அடுத்து ஆட்டம் டக் வொர்த் லீவிஸ் முறைப்படி மாற்றப்பட்டது (ஸ்ஸ்ஸ்ப்ப்பா.. முடியல).
(தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!

மலேசியா செய்த பயங்கர காமெடி
 டக் வொர்த் லீவிஸ் முறைப்படி வெற்றிக்கு 8 ஓவர்களில் 6 ரன்கள் எடுத்தால் மட்டும் போதும் என்ற நிலையில், மலேசியா அணியின் துவக்க பேட்ஸ்மேன்கள் இருவரும் ரன் ஏதும் அடிக்காமல் தாங்கள் சந்தித்த முதல் பந்திலேயே வெளியேறி அதிர்ச்சி அளித்தனர். எனினும், அடுத்து வந்த பேட்ஸ்மேன்கள் சுஹான் அழகரத்தினம் மற்றும் முனியாண்டி (அட.. நம்ம மலேசிய தமிழர்கள் தான் போல..) "நிலைத்து நின்று" மலேசிய அணியின் வெற்றியை 1.4 ஓவர்களில் உறுதி செய்தனர். 10 பந்துகளில் வெற்றி இலக்கை எட்டிய மலேசியா, மியான்மரை வீழ்த்தியது. மலேசிய அணியில் எராளமான, மலேசிய தமிழர்கள் மற்றும் இந்தியாவை பூர்விகமாக கொண்டவர்கள் தான் அதிகம் இடம் பெற்றுள்ளனர்.சீனா - நேபாளம் போட்டி
 மற்றொரு போட்டியில் சீனா - நேபாள அணிகள் மோதின. நேபாள அணி ஓரளவு முதிர்ச்சியான கிரிக்கெட் விளையாடி வருகிறது. சீனாவோ இன்னும் முதல் அடியை கூட எடுத்து வைக்கவில்லை. அக்டோபர் 10 அன்று நடந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சீனா 13 ஓவர்கள் தடுமாறி களத்தில் நின்று 26 ரன்கள் மட்டுமே எடுத்தது. சீனா அணியின் எட்டு பேட்ஸ்மேன்கள் "0" எடுத்து வெளியேறினர்.


2 ஓவர் கூட தாங்காத சீனா 
 27 ரன்கள் இலக்கை துரத்திய நேபாளம் 11 பந்துகளில் வெற்றியை எட்டியது. துவக்க வீரர்களே வெற்றியை பெற்றுக் கொடுத்து விட்டனர். சீனா இரண்டு ஓவர்கள் வரை கூட கட்டுக்கோப்பாக பந்து வீச முடியாத மோசமான நிலையில் இருந்தது. எனக்கு ஒரு சந்தேகம்... நிறைய சாதனை பண்ணலாமேன்னு வெஸ்ட் இண்டீஸ் தொடர் முடிஞ்ச உடனே சீனா, மியான்மர் கூட இந்தியா விளையாடுமோ?


அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


No comments:

Post a Comment