வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: ஆன்லைன் ஒருதலைக்காதல் : 6276 கிலோமீட்டர் தாண்டி சென்று சிறுமியை கொலை செய்த சிறுவன்
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Tuesday, October 23, 2018

ஆன்லைன் ஒருதலைக்காதல் : 6276 கிலோமீட்டர் தாண்டி சென்று சிறுமியை கொலை செய்த சிறுவன்ரஷ்யாவில் 6276 கிலோமீட்டர் தாண்டி பயணம் செய்த சிறுவன், ஆன்லைன் தோழி தன்னுடைய காதலை ஏற்க மறுத்ததால் அவரை கொலை செய்துள்ள கொடூர சம்பவம் நடந்துள்ளது. 

 
ரஷ்யாவின்  ஹபரோவ்ஸ்கவ்வை சேர்ந்த 16 வயது சிறுவனான கிரில் வொல்ஸ்கி,  6276 கிலோமீட்டர் தொலைவு உள்ள  மாஸ்கோவை சேர்ந்த கிறிஸ்டினா   என்ற சிறுமியுடன்  ஆன்லைன் மூலம்  பழகி உள்ளார். நாளடைவில் நட்பு காதலாக மாறியுள்ளது. அடிக்கடி வீடியோ கால் மூலம் இருவரும் பேசியுள்ளனர். அப்போது ஒருமுறை கிரில் அம்மா, என்னுடைய மகன் உன்னை திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறான் என கிறிஸ்டினாவிடம் கூறியுள்ளார். ஆனால் கிறிஸ்டி அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.  (தொடர்ச்சி கீழே...) 

இதையும் படிக்கலாமே !!!

இதனையடுத்து கிரில் தான் சேர்த்து வைத்திருந்த பணத்தை கொண்டு, ஹபரோவ்ஸ்க்கோவில் இருந்து 3900 மைல்கள் தாண்டி மாஸ்கோவிற்கு தன்னுடைய காதலியை பார்க்க சென்றுள்ளார். அங்கு, நானும் என்னுடைய அம்மாவும் ஒரு திருமணத்திற்காக வந்திருக்கிறோம் என கிறிஸ்டினாவிடம் கூறியுள்ளான்.


அதனை நம்பி சிறுவன் தங்கியிருந்த அறைக்கு கிறிஸ்டினாவும் சென்றுள்ளார். அங்கு கத்தியை கொண்டு கிறிஸ்டினாவை சிறுவன் கொடூரமாக குத்தி கொலை செய்துள்ளான். பின்னர் யாரும் கண்டுபிடித்து விட கூடாது என்பதற்காக அவருடைய உடலை கழிவு நீர் கால்வாயில் மூழ்கடித்துள்ளான்.


கடந்த ஆகஸ்டு 26-ம் தேதியன்று கிறிஸ்டினா காணாமல் போனதாக அவருடைய பெற்றோர் போலீசில் புகார் கொடுத்திருந்தனர். கடந்த 2 மாதங்களாக தீவிர விசாரணை மேற்கொண்டு வந்த போலீசார் தற்போது குற்றவாளி கிரில்லை கைது செய்துள்ளனர்.

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


No comments:

Post a Comment