வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: 7 லட்சம் டிப்ஸ் கொடுத்து பார்த்து இருக்கீங்களா? கீழே பாருங்க
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Tuesday, October 23, 2018

7 லட்சம் டிப்ஸ் கொடுத்து பார்த்து இருக்கீங்களா? கீழே பாருங்க



அமெரிக்காவை சேர்ந்த நபர் ஒருவர் ஹோட்டலில் வெறும் தண்ணீர் குடித்துவிட்டு 7 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் டிப்ஸ் கொடுத்து இருக்கிறார். அமெரிக்காவின் சவுத் கரோலினாவின் கிரீன்வைல் நகரத்தில் உள்ளது சப் டாக்ஸ் ஹோட்டல். மிகவும் பிரபலமான இந்த ஹோட்டலில்தான் இந்த சம்பவம் நடந்து இருக்கிறது.
  அங்கு தண்ணீர் குடிக்க வந்த நபர் ஒருவர் அங்கு வேலை பார்க்கும் பணிப்பெண்ணிற்கு ரூபாய் 7 லட்சத்து 30 ஆயிரம் டிப்ஸ் கொடுத்து இருக்கிறார். இது பெரிய ஆச்சர்யத்தை பலருக்கு ஏற்படுத்தி உள்ளது.
(தொடர்ச்சி கீழே...) 

இதையும் படிக்கலாமே !!!


எவ்வளவு டிப்ஸ்
 அலைனா கஸ்டர் என்று பணிப்பெண்தான் இந்த பணத்தை பெறுபவர். அங்கு வந்த நபர் இரண்டு கிளாஸ் தண்ணீர் கேட்டு இருக்கிறார். அதை குடித்துவிட்டு தண்ணீர் மிகவும் அருமையாக உள்ளது என்றுள்ளார். அதன்பின் டிப்ஸ் வைக்கும் தட்டில் ரூபாய் 7 லட்சத்தி 30 ஆயிரத்தை வைத்துவிட்டு சென்றுள்ளார்.

யார் கொடுத்தது
 மிஸ்டர் பீஸ்ட் என்ற நபர்தான் இந்த பணத்தை கொடுத்தது. இவர் ஒரு யூ டியூப் பிரபலம். மிஸ்டர் பீஸ்ட் என்ற பெயரில் இவர் யூ டியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். இவருக்கு 90 லட்சம் சந்தாதாரர்கள் இருக்கிறார்கள்.



ஏன் இப்படி
 யாருக்காவது உதவ வேண்டும் என்று இதை செய்ததாக கூறியுள்ளார். மேலும் ஒருவருக்கு உதவும் போது அவர்கள் எப்படி சந்தோசபடுகிறார்கள் என்று பார்க்க ஆசைப்பட்டு இப்படி செய்ததாக அவர் கூறியுள்ளார். அந்த பணத்தை எடுத்த போது அலைனாவின் முகம் எப்படி மாறியது என்பதை இவரின் ஆட்கள் தூரத்தில் இருந்து வீடியோ எடுத்துள்ளனர்.


பிரித்துக் கொள்ள போகிறார்கள் 
 ஆனால் இதற்கு அடுத்து நடந்ததுதான் மிகவும் ஆச்சர்யம். அலைனா கஸ்டர் அந்த பணத்தை மொத்தமாக எடுத்துக் கொள்ள போவதில்லையாம். அங்கு பணி செய்யும் சக பணியாளர்களுக்கும் அதை கொடுக்க போவதாக அவர் கூறியுள்ளார். இந்த வீடியோ இணையம் முழுக்க வைரலாகி உள்ளது.


அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


No comments:

Post a Comment