வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: பாலியல் பலாத்காரத்தில் இருந்து தப்பிக்க மாடியில் இருந்து குதித்த மாணவி
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Saturday, October 20, 2018

பாலியல் பலாத்காரத்தில் இருந்து தப்பிக்க மாடியில் இருந்து குதித்த மாணவிபாலியல் பலாத்காரத்தில் இருந்து தப்பிக்க மாடியில் இருந்து குதித்த மாணவி சுயநினைவை இழந்து, கோமா நிலையில் உள்ளார். 


பீகார் மாநிலம் சந்தர் பகுதியை சேர்ந்த சிறுமி ஒருவர் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். இவருடைய தோழியும், சக மாணவியுமான சோனம் என்பவர் அந்த மாணவியை தனக்கு தெரிந்தவர் வீட்டிற்கு அழைத்துச்சென்றுள்ளார். அங்கு தன்னைப்போன்று சில மாணவிகள் இருப்பதாகவும், அவர்களுடன் சேர்ந்து துர்கா பூஜை நடத்தலாம் என்றும் பொய் கூறி சோனம் கூட்டிச்சென்றுள்ளார். ஆனால் அங்கு சென்றதும் சில இளைஞர்கள் குடித்துவிட்டு இருப்பதை கண்ட மாணவி, அங்கிருந்து திரும்பிச்செல்ல முயன்றுள்ளார். (தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!

அப்போது அந்த இளைஞர்கள் மாணவிக்கு கட்டாயமாக மதுவைக்கொடுத்து குடிக்க வைத்துள்ளனர். அவர் குடிக்க மறுக்கவே கட்டாயமாக வாயில் ஊற்றியுள்ளனர். பின்னர் அந்த மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த மாணவி, அங்கிருந்து தப்ப முயன்றுள்ளார். இளைஞர்கள் வெளியே செல்லும் வழியை மறிக்க, கட்டத்தின் மாடிக்கு மாணவி சென்றுள்ளார். அங்கும் அந்த இளைஞர்கள் வந்து பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்ததால், வேறு வழியின்றி அந்த மாணவி அங்கிருந்து தாவிக்குதித்துள்ளார்.


கீழே விழுந்த மாணவி, அந்த வழியாக செல்லும் மின்கம்பியில் உரசி தூக்கி வீசப்பட்டார். இதனால் படுகாயமடைந்த அவரை, அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் மாணவி சுயநினைவை இழந்து, கோமா நிலைக்கு சென்றுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர், மாணவியின் தோழி மற்றும் 2 இளைஞர்களை கைது செய்துள்ளனர். மேலும் மாணவிக்கு நினைவு திரும்பியதும் அவரிடம் வாக்குமூலம் பெறுவதற்காக காவல்துறையினர் காத்திருக்கின்றனர்.

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


No comments:

Post a Comment