வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: இறந்த மகனுக்கு கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய பெற்றோர்.. இன்னொரு மகனை கொன்று தற்கொலை
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Saturday, October 20, 2018

இறந்த மகனுக்கு கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய பெற்றோர்.. இன்னொரு மகனை கொன்று தற்கொலைஇறந்து போன மகனை மறக்கவும் முடியாமல், வாழவும் முடியாமல் தவித்து வந்த பெற்றவர்கள் இறுதியாக தங்கள் முடிவை தேடி கொண்டார்கள். குடியாத்தம் அடுத்த அம்மணாங்குப்பம் கிராமத்தை சேர்ந்த தம்பதி திருவேங்கடம் - பரிமளா. இவர்களுக்கு 7 வயதில் நிகேஷ் மற்றும் 3 வயதில் நிகில் என்ற 2 மகன்கள். செய்வது கூலி வேலை என்றாலும் திருவேங்கடம் தன் மகன்கள் மீது அளவுக்கு மீறி பாசம் வைத்திருந்தார்.

இதில், நிகேஷ் மூளைக்காய்ச்சல் ஏற்பட்டு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு உயிரிழந்து விட்டான். மகன் இறந்ததிலிருந்தே தம்பதி இருவரும் அதிர்ச்சி, சோகத்திலிருந்து மீளவே இல்லை. எப்போதும் அழுதவாறே இருந்துள்ளனர்.
(தொடர்ச்சி கீழே...)    
 
இதையும் படிக்கலாமே !!!
நிகேஷ் பிறந்தநாள்
 அக்கம் பக்கத்தினர், உறவினர்கள் எவ்வளவோ ஆறுதல் சொல்லியும் அவர்களை பழைய மாதிரி மீட்க முடியவில்லை. வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடந்தனர். இந்நிலையில், இரு தினங்களுக்கு இருவரும் சுறுசுறுப்பாக நடமாட தொடங்கினார்கள். நேற்று முன்தினம் நிகேஷூக்கு 8-வது பிறந்த நாள். மகன் இல்லையென்றாலும், அவனது பிறந்த நாளை கொண்டாட பெற்றோர் முடிவெடுத்தனர்.


அதிர்ந்தனர் 
 ஒவ்வொரு வருடமும் நிகேஷ் பிறந்த நாள் எப்படி கொண்டாடப்படுமோ அதுபோலவே இந்த முறையும் ஏற்பாடுகள் தயாரானது. அவனுக்கு பிடித்த கேக் ஆர்டர் செய்யப்பட்டு, அவனது பெயரும் பொறிக்கப்பட்டு வாங்கிவரப்பட்டது. நிகேஷுக்கு பிறந்த நாள் நிகழ்ச்சி என்று அனைவரையும் பெற்றோர் கூப்பிட்டார்கள். இறந்துபோன நிகேஷூக்கு பிறந்த நாள் கொண்டாட்டமா? என்று அனைவருமே அதிர்ந்தனர்.


நினைவுகளை பகிர்ந்தனர் 
 இருந்தாலும், நிகேஷ் அனைவருடனும் நன்றாக பழகியவன், அனைவருக்குமே பிரியமானவன் என்பதாலும் 3 மாதங்களாக நொந்துபோய் இருக்கும் பெற்றோர் கூப்பிட்டதாலும், தெரிந்தவர்கள், நண்பர்கள், அக்கம்பக்கத்தினர் என ஏராளமானோர் பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டனர். கலந்து கொண்ட அனைவருமே நிகேஷை பற்றி பேச ஆரம்பித்தனர். எல்லோருமே தங்களுடனான நினைவுகளை நிகழ்ச்சியில் பகிர்ந்து கொண்டனர். பிறகு கேக் வெட்டி அனைவருக்கும் தரப்பட்டது. எல்லோரும் சாப்பிட்டு கிளம்பிவிட்டார்கள்.


ஆளுக்கு ஒரு கயிறு
 இதன்பிறகு நிகேஷின் நினைவுகள் மேலும் பெற்றோரை அழுத்தியது. அதனால் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ளலாம் என முடிவெடுத்தனர். அதன்படி, வீட்டை தாளிட்டு கொண்டனர். 3 வயது மகன் நிகிலை ஹாலுக்கு அழைத்து சென்று அவனை தூக்கில் மாட்டி கொலை செய்தனர். பிறகு ஆளுக்கு ஒரு தூக்கில் தனித்தனியாக தற்கொலை செய்து கொண்டு தொங்கினர். பிறந்த நாள் கொண்டாடியவர்கள் வெளிக்கதவை மறுநாள் காலை திறக்காததால் அருகில் இருந்தோருக்கு சந்தேகம் வந்தது.


விசாரணை 
அதனால் குடியாத்தம் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் இருதயராஜ் மற்றும் போலீசார் விரைந்து வந்து பார்த்தபோது, 3 சடலங்கள் தூக்கில் தொங்கியது தெரிந்ததும் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கேக், இனிப்பு அனைவருக்கும் வழங்கிய தம்பதி இப்படி குடும்பத்தோடு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


No comments:

Post a Comment