வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: சும்மா நொய் நொய்ன்னா என்ன பண்ண.. அதான் இப்படி செஞ்சுட்டேன்.. லொள்ளு பிடிச்ச லுலு..!
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Thursday, October 11, 2018

சும்மா நொய் நொய்ன்னா என்ன பண்ண.. அதான் இப்படி செஞ்சுட்டேன்.. லொள்ளு பிடிச்ச லுலு..!உகாண்டா: எனக்கு கல்யாணம் பண்ணிக்கிறதே பிடிக்கலைன்னு சொல்லியாச்சு... சும்மா நொய்... நொய்...ன்னு தொந்தரவு பண்ணா என்ன செய்யது? அதான் இப்படி பண்ண வேண்டியதா போச்சு" என்கிறார் லுலு!! யார் இந்த லுலு?? என்னதான் பிரச்சனை இவருக்கு??

உகாண்டாவை சேர்ந்தவர்தான் இந்த லுலு ஜெமிமா. ஆக்ஸ்போர்டு பல்லைக் கழக மாணவி. இவருக்கு 32 வயசு ஆகிவிட்டது. ஆனால் கல்யாணம் ஆகவில்லை. வீட்டில் எவ்வளவோ சொல்லி பார்த்தும், தனக்கு கல்யாணம் பிடிக்கவில்லை என்று சொல்லிக் கொண்டே இருந்தார். அது மட்டும் இல்லை, வளர்ந்து வரும் குடியரசு நாடுகளில் கல்யாணம் என்பது ஒவ்வொரு குடிமகனுக்கும் முக்கியமான ஒன்று. அதாவது தலையாய கடமை என்று கூட சொல்லலாம்.
(தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!

இப்பவே 32 வயசு
 அதனால் லுலுவின் பெற்றோர் கல்யாணத்தை பண்ணி பார்க்க ரொம்பவே ஆசைப்பட்டார்கள். "எனக்கு இப்பவே 32 வயசு ஆயிடுச்சு. இப்ப போய் எனக்கு மாப்பிள்ளை கிடைக்குமா? இதனால நிறைய சிக்கல் வரும். அது மட்டும் இல்லை, பணப்பிரச்சனை வேற எனக்கு நிறைய இருக்கு... அதனாலதான் இந்த முடிவை எடுத்துட்டேன்" என்றார்.பெற்றோர் ஷாக்
 அப்படி என்ன முடிவு லுலு எடுத்தார் தெரியுமா? தன்னுடைய 32 பிறந்த நாள் அன்னைக்கு பக்கா மணப்பெண் போலவே டிரஸ் அணிந்து கொண்டு தனக்குத்தானே கல்யாணம் செய்துக்கிட்டார். இந்த கல்யாணத்துக்கு பெற்றோர் யாருமே வரவில்லை. தான் தன்னையே சுயமாகவே கல்யாணம் செய்துக்கிட்ட விஷயத்தை பெற்றோருக்கு போன் பண்ணி சொன்னால் லுலு. இதனை கேட்டு பெற்றோர் உட்பட எல்லோருமே ஷாக் ஆகி விட்டனர்.


வைரல் புகைப்படம் 
 லுலு கல்யாணமும், மணப்பெண் அலங்கார போட்டோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது. லுலுவின் இந்த காரியத்துக்கு பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர். லுலு ஒரு துணிச்சலான பெண்... வெளிப்படையான பெண்... பொதுப்படையான எண்ணங்களை உடைத்தெறிய முன்வந்துள்ள பெண்.. என்றெல்லாம் ஆதரவு வார்த்தைகள் இணையத்தில் பரவி வருகிறது.


நானே கணவன்-மனைவி
 "என்னம்மா லுலு..உன் கல்யாணத்தை பத்தி என்ன நினைக்கிறே?" என்று கேட்டால், "என்னை நன்றாக பார்த்து கொள்ளும், கவனித்து கொள்ளும், அக்கறையான ஒருவரைதான் நான் கல்யாணம் செய்துருக்கிறேன். அதனால எனக்கு கவலை இல்லை. இன்னையில இருந்து நான் கல்யாணம் ஆனவள். நான்தான் மாப்பிள்ளை, நான்தான் பொண்ணு!! நானே மனைவி... நானே கணவன்!!" என்கிறார் லுலு. சரி.. சரி... வாழ்த்துக்கள் மணம(க்)களே!! எல்லாம் சரி.. "மத்ததெல்லாம்" எப்படி சாத்தியமாகும்.. லுலுவே இதற்கும் ஏதாவது பதில் வைத்திருப்பார்!


அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


No comments:

Post a Comment