வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: வெளிச்சத்தில் தூங்குபவரா நீங்கள் உங்களுக்கு புற்றுநோய் ஏற்பட வாய்ப்புள்ளது
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Friday, October 19, 2018

வெளிச்சத்தில் தூங்குபவரா நீங்கள் உங்களுக்கு புற்றுநோய் ஏற்பட வாய்ப்புள்ளது



தூக்கம் என்பது அனைவருக்கும் பிடித்தமான, அவசியமான ஒன்றாகும். நாள் முழுவதும் செய்த வேலைக்கு தேவையான ஓய்வும், அடுத்தநாள் வேலை செய்வதற்கு தேவையான ஆற்றலையும் வழங்குவது நிம்மதியான தூக்கம்தான். ஆனால் இந்த தூக்கம் கூட உங்கள் ஆரோக்கியத்தில் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தும்.

நீங்கள் தூங்கும் நிலைகள், தூங்கும் நேரம் என அனைத்தும் உங்கள் ஆரோக்கியத்தில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். அனைத்திற்கும் மேலாக நீங்கள் இருளில் தூங்குகிறீர்களா அல்லது வெளிச்சத்தில் தூங்குகிறீர்களா என்பது கூட உங்கள் ஆரோக்கியத்தை தீர்மானிக்கும். இந்த பதிவில் எப்படி தூங்குவது நல்லது என்பதை பார்க்கலாம்.(தொடர்ச்சி கீழே...)  


இதையும் படிக்கலாமே !!!


இருட்டில் தூங்குவதால் ஏற்படும் நன்மைகள் மெலடோனின் சுரப்பு முழுவதும் இருளான அறையில் தூங்குவது உங்கள் உடலில் தூங்கும்போது மெலோடினின் சுரப்பை அதிகரிக்கும். இந்த மெலோடினின் நிம்மதியான தூக்கத்தை வழங்குவதோடு புற்றுநோய்க்கு எதிராகவும் செயல்படக்கூடியது.



மூளை ஆரோக்கியம் மெலோடினின் சுரப்பு அதிகமாக இருக்கும்போது அது மூளையில் இருக்கும் பைனல் சுரப்பியை வலுவாக்கும், இது உங்கள் மூளையை கூர்மையாக செயல்பட உதவுகிறது. மேலும் மெலோடினின் மார்பக புற்றுநோய், அல்சைமர் மற்றும் இன்சோம்னியா போன்ற நோய்கள் ஏற்படுவதில் இருந்து தடுக்கிறது. உடைகள் இருளில் தூங்கும்போது தளர்வான ஆடைகளை அணிந்துகொண்டு தூங்குவது சிறந்தது. இது உங்கள் உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவுகிறது. இறுக்கமான ஆடைகள் உங்கள் உடலில் மெலோடினின் சுரப்பை குறைக்கும்.



வெளிச்சம் ஒருவேளை உங்கள் வீட்டில் குழந்தைகள் இருந்தாலோ அவர்கள் இருளை கண்டு பயபடுபவர்களாக இருந்தால் அவர்களுக்கு மட்டும் வேண்டுமென்றால் ஒரு சிறிய சிவப்பு விளக்கை எரிய விடுங்கள். மற்ற நிற விளக்குகளை காட்டிலும் சிவப்பு நிற விளக்கால் ஏற்படும் பாதிப்புகள் குறைவாக இருக்கும்.


வெளிச்சத்தில் தூங்குவதால் ஏற்படும் பிரச்சினைகள் ஹார்மோன்கள் சமநிலையின்மை ஒருவேளை நீங்கள் தொலைக்காட்சி வெளிச்சத்திற்கு அருகில் தூங்கினாலோ அல்லது வேறு வெளிச்சத்தில் தூங்கினாலோ அது பல பிரச்சினைகளை ஏற்படுத்தும். தொலைகாட்சி, செல்போன் என எந்த வெளிச்சத்தில் தூங்கினாலும் அவை வெளியிடும் புறஊதா கதிர்கள் உங்கள் உடலில் மேலோட்டினின் ஹார்மோன் சுரப்பில் பாதிப்பை ஏற்படுத்தும். இயற்கையான வெளிச்சத்தில் தூங்குவது உங்கள் உடலுக்கு நன்மையாக இருக்கலாம், ஆனால் செயற்கை வெளிச்சம் உங்கள் ஹார்மோன் சமநிலையை ஏற்படுத்தும்.


இதய பாதிப்புகள் வெளிச்சத்தில் தூங்குவது ஹார்மோன்கள் சமநிலையின்மையை மற்றும் ஏற்படுத்தாமல் இதய பாதிப்புகளையும் ஏற்படுத்தலாம். சமீபத்திய ஆய்வின்படி வெளிச்சத்தில் தூங்குவது இருட்டில் தூங்குவது போன்று அமைதியான தூக்கமாக இருக்காது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே இதுபோன்று ஓய்வின்றி தூங்குவது இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும். இதனால் இதய பாதிப்புகள் ஏற்படலாம்.


மனஅழுத்தம் பயம் காரணமாக வெளிச்சத்திலோ அல்லது விளக்கிற்கு அருகிலோ தூங்குவது உங்கள் மனஅழுத்தத்தை குறைக்கும் என்று நீங்கள் நினைத்தால் அது தவறு. வெளிச்சத்தில் தூங்குவது உங்கள் தூக்கத்தின் தரத்தை பாதிக்கும். இது மூளையில் பாதிப்பை ஏற்படுத்தும். இது உணர்ச்சிகளை கட்டுப்படுத்தும் மூளையின் அமைப்பில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும் வெளிச்சத்தில் தூங்குவது புற்றுநோயை ஏற்படுத்தக்கூடும் என்ற அதிர்ச்சிகரமான தகவல் சமீபத்தில் மருத்துவர்களால் கண்டறியப்பட்டுள்ளது.


அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


No comments:

Post a Comment